07.02.18- தமிழர்களின் பூர்வீகமான கல்முனையைக் காப்பாற்றவேண்டுமானால் அனைத்துதமிழர்களும் த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டும்..

posted Feb 7, 2018, 12:28 PM by Habithas Nadaraja   [ updated Feb 7, 2018, 12:30 PM ]
தமிழர்களின் பூர்வீகமான கல்முனையைக் காப்பாற்றவேண்டுமானால் அனைத்துதமிழர்களும் த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டும்!நேற்று கல்முனையில் த.தே.கூ. ஹென்றிமகேந்திரன் ராஜன் வேண்டுகோள்!

தமிழர்களின் பூர்வீகமான பிரதேசமான  கல்முனையைக் காப்பாற்றவேண்டுமானால் அனைத்துதமிழர்களும் சகலபேதங்களையும் மறந்த  த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டும்!இவ்வாறு கல்முனை மாகநரசபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புசார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெலோ உபமுதல்வர்  ஹென்றிமகேந்திரன் மற்றும் வேட்பாளர் பிரபல சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன்  தேர்தல் பரப்புரையில் பேசுகையில் குறிப்பிட்டார்கள்.

இரட்டை அங்கத்தவர் வட்டாரமாகிய கல்முனை 12இல் த.தே.கூட்டமைப்பு சார்பில் சந்திரசேகரம் ராஜன் கே.சிவலிங்கம் ஆகிய இருவேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பரப்புரை நேற்று இடம்பெற்ற  வேட்பாளர் கு.ஏகாம்பரம் தலைமையில் நடைபெற்றது. 

அங்கு ராஜன் அவர்கள் மேலும் பேசுகையில்:

கல்முனைக்க வியாபாரத்திற்கு வந்தவர்கள் கல்முனையை அபகரிக்கவிடமுடியாது.
கல்முனை மாநகரசபைத் தேர்தலில் குறிப்பாக 12ஆம் வட்டாரத்தில் தமிழ்மக்கள் வாக்களிக்கத்தவறினால் தமிழ்ப்பிரதிநிதித்துவம் பறிபோவது மட்டுமல்லாது பாரம்பரிய தாயகபூமியையும் இழக்கவேண்டிவரும்.

நாம் அனைவரும் திரண்டுவந்து வீட்டுக்கு வாக்களிக்கவேண்டும். இன்றேல் எம்மீதான தேவையற்ற திணிப்புகள் பாரபட்சங்கள் தொடரும். பிறகு உங்களுக்காக எம்மால் குரல் கொடுக்கமுடியாத துரதிஸ்டநிலை உருவாகும்.
கல்முனை மாநகரசபையில் 71வீத முஸ்லிம்களும் 29வீத தமிழ்மக்களும் வாழந்துவருகின்றனர். ஆனால் நிலப்பரப்பைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் 60வீத நிலபப்பரப்பிலும் முஸ்லிம்கள் 40வீத நிலப்பரப்பிலும் வாழ்ந்துவருவதை அறிவீர்கள்.
கடந்தகாலங்களில் பிரிந்துநின்று தமிழினம் பட்ட வேதனைகள் துன்பங்களை நாமறிவோம். எனவே இனியாவது உணர்ந்து நமது இருப்பைக்காப்பாற்ற சிந்தித்து செயற்படவேண்டும். 

கல்முனை தனியார் பஸ்நிலையத்தை மூடி அங்கு தனியார் வங்கியை அமைக்க கல்முனைத்தமிழர்களின் எவ்வித சம்மதமுமில்லாமல் அன்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் தமிழர்களின் காணி ஒருவகையில் அபகரிக்கப்பட்டுள்ளது. இதனை நாம் வந்து மீளப்பெறவேண்டுமானால் ஆதரவளியுங்கள்.நகரஅபிவிருத்தி என்றபோர்வையில் தமிழர்களின் காணி பறிபோவதையோ இருப்பை இழப்பதையோ   நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். எனவே தயவுசெய்து தமிழ்மக்கள் உணர்ந்து தமிழ்மண்காப்பாற்ற வாக்களியுங்கள். என்றனர்.

காரைதீவு   நிருபர் 







Comments