13.12.19- இன்றைய ராசி பலன்..(13.12.2019)

posted by Habithas Nadarajaமேஷம்: எந்த விஷயத்திலும் தன்னிச்சையாக முடிவெடுத்து சிறப்பாக செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகன பழுதை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களுக்கு நெருக்கமாவார். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.
ரிஷபம்:கடந்த இரண்டு, மூன்று நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த விஷயங்கள் உடனே முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சி தங்கும் நாள்.


மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். கணவன், மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச்செல்லும். உடல் நலம் பாதிக்கும்.  உத்தியோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். விளைந்து கொடுக்க வேண்டிய நாள்.கடகம்:வேலையை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்சினைகள் வந்து செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.சிம்மம்:எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். சுற்றத்தார் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புதிய சூட்சமங்களை கற்று கொள்வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் சிறப்பான நாள்.கன்னி:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியமும், திறமையும் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் உண்டாகும். உதவிகள் கிட்டும் நாள்.துலாம்: கடந்த இரண்டு மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள்  பிறக்கும்.  வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.விருச்சிகம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் பணிப்போர் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.தனுசு:சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.மகரம்:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்குகள் சாதகமாக மாறும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் திறமையைக் கண்டு வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.கும்பம்:வருமானத்திற்கு தேவையான புதிய திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.நண்பர்கள் சாதகமாக செயல்படுவார்கள். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதுமை படைக்கும் நாள்.


                                        
மீனம்:எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப்போனாலும், எதிர் பாராத விஷயங்கள் இன்று முடியும். தாயாருடன் மனகசப்புகள் ஏற்படும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிக்க வேண்டியது  இருக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

12.12.19- இன்றைய ராசி பலன்..(12.12.2019)

posted Dec 11, 2019, 7:36 PM by Habithas Nadarajaமேஷம்: தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர் உதவி கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். வெற்றி கிட்டும் நாள்.ரிஷபம்:கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். அழகும் இளமையும் கூடும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். புதியவரின் நட்பால்  உற்சாகம் அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதியபாதை தெரியும் நாள்.


மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் மற்றவரை அனுசரித்துப் போங்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். லேசாக தலை வலிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள், தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


கடகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல்கள் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால், அரவணைத்துப் போங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.   உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம்.சிம்மம்:ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சுற்றத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். வியாபாரத்தில், வாடிக் கையாளரின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.கன்னி:சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உங்களால் வளர்ச்சிய டைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.துலாம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களில் ஆதரவு கிடைக்கும்.  உத்தியோகத்தில், திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.விருச்சிகம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்து சொன்னால், கோபப்படாதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள்.


தனுசு:உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கப்பலமாக இருப்பார்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.


மகரம்:வரவேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில், சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.கும்பம்:குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து, சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.


                                        
மீனம்:பழைய பிரச்னைகளுக்கு சுமுகமாக தீர்வுக் காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பணப்பற்றாக் குறையால், கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புது வேலை அமையும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

11.12.19- இன்றைய ராசி பலன்..(11.12.2019)

posted Dec 10, 2019, 8:14 PM by Habithas Nadarajaமேஷம்: கணவன் மனைவிக்குள், அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த உரிமையைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.ரிஷபம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால், விமர்சனங்களுக்கும், கேலி பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும், மற்றவர்களிடம் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச்சுவையாக சொல்லக்கூடிய விஷயங்கள் கூட சீரியசாக வாய்ப்பு இருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


மிதுனம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டியது வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வாகனத்தில் அடிக்கடி தொந்தரவு ஏற்படும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளைத்தாண்டி முன்னேறும் நாள்.


கடகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அனைத்துக் காரியங்களிலும் வெற்றியடைவீர்கள். பெற்றோர் நண்பர்களின் விருப் பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கிய உறவுகளுக்காக மற்றவரின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின், எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.


சிம்மம்:உங்களின் அணுகு முறையை மற்றவரின் வசதிக் கேற்ப மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.கன்னி:கணவன் மனைவிக்குள் அன்னோயம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தி யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.துலாம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சிறுசிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். நயமாக பேசுபவர்களை நம்ப வேண்டாம். உத்தி யோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


விருச்சிகம்:கடினமான காரியங்களையும், எளிதாக முடிப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும் . வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


தனுசு:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத தனவரவு உண்டு. உறவினர்கள் , நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி, மூத்த அதிகாரி சில பொறுப்புக்களை ஒப்படைப்பார். அமைதியான நாள்.மகரம்:குடும்பத்தில் உங்கள் கைஓங்கும். சிக்கனமாக செலவுசெய்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.கும்பம்:எதிர்ப்புக்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமை யும். கலைப்பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரரின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


                                        
மீனம்:குடும்பத்தாருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள் வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவதும், விற்பதும் லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். நயமாக பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக முடிவெடுக்கும் நாள்.

10.12.19- இன்றைய ராசி பலன்..(10.12.2019)

posted Dec 9, 2019, 5:56 PM by Habithas Nadarajaமேஷம்: கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். விலகி நின்றவர்கள், விரும்பி வருவார்கள். வராதுஎன்று இருந்த பணம் கைக்குவரும். புதிய எண்ணங்கள் பிறக்கும். விருந் தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதியசரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.
ரிஷபம்:ராசிக்குள் சந்திரன் நுழைவதால், சிக்கலான, சவாலான, காரியங்களை எல்லாம்கையில் எடுத்துக் கொண்டிருக் காதீர்கள். குடும்பத்தினைரப்பற்றி யாரிடமும், குறைவாகப் பேச வேண்டாம். மற்றவர் விஷயத்தில் அனாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுக்காதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக் கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

மிதுனம்: மறைமுக விமர்சனமும், தாழ்வு மனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளிடம் கடிந்துக் கொள்ளாதீர்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவுத் தரும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண் டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


கடகம்: சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். விரும்பியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் புதிய இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.


சிம்மம்:கோபத்தை கட்டுப்படுத்தி,வாழ்வில் உயர்வதற்கான வழியைப்பற்றி யோசிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத் தில் உங்களை நம்பி, சில முக்கிய பொறுப்புக்களை உயரதிகாரி ஒப்படைப்பார். வியாபாரத் தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.கன்னி:குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கனிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். மனசாட்சிப்படி செயல்பட வேண் டிய நாள்.துலாம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் வெறுப்பாகப் பேசுவீர்கள். குடும்பத் தாரின் விருப்பங்களை நிறை வேற்ற போராட வேண்டி இருக்கும். அடுத்தவரை குறைக்கூறுவதை நிறுத்துங் கள். விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண் டாம். சிறு சிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண் டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.


விருச்சிகம்:தன் பலம், பல வீனத்தை உணர்வீர்கள். சகோதரவகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின், எண் ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதுசலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


தனுசு:பண வரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.மகரம்:வருங்காலத்திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளை களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டா கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண் டாகும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.


கும்பம்:பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடன் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களின் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


                                        
மீனம்:துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் சாதகமாக அமையும். செலவுகளை குறைக்கத் திட்டமிடுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்பீர்கள். வெற்றி பெறும் நாள்

07.12.19- இன்றைய ராசி பலன்..(07.12.2019)

posted Dec 6, 2019, 7:45 PM by Habithas Nadarajaமேஷம்: கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். மற்றவர்களை நம்பி சாட்சி கையெழுத்திட வேண்டாம். தேவை யற்ற வீண் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரம் சுமாராக  இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீண் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும் நாள்.


ரிஷபம்:குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். உறவுகளால் ஆதாயம் உண்டு. மற்றவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.மிதுனம்:  எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள்  உங்கள்  வேலையைப் பகிர்ந்து கொள்வார்கள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் வெற்றி அடையும் உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். இனிமையான நாள்.கடகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். மற்றவர்களால் உங் களுக்கு ஆதாயம் உண்டாகும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந் தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். நல்ல மாற்றங்கள் நிறைந்த நாள்.சிம்மம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படுவதை விட்டு அறிவு பூர்வமாக செயல் படுவது நல்லது. உங்கள் பலம், பலவீனத்தை அறிந்து செயல்படுவது, உங்களுக்கு சாதகமான பலனைத் தரும். வியாபாரம் மந்தமாக இருக்கும்.பொறுமை தேவைப்படும் நாள்.கன்னி:குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். மனைவி வழியில் ஆதரவு உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வீட்டின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். நன்மை நடக்கும் நாள்.
துலாம்:உங்கள் பேச்சால் அனைவரையும், வசீகரிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை, மற்றவரிடம் சொல்லி மகிழ்வீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒரு உறவைச் சந்திப்பீர்கள்.உத்தியோகத்தில் சவாலான விஷயங்களை சாதாரணமாக முடித்துப் புகழ் பெறுவீர்கள். அமோகமான நாள்.


விருச்சிகம்:உங்கள் வருங்காலத்திற்கு தேவைகளை யோசித்து அதன்படி செயல்படுவீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். பழைய கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள்.


தனுசு:சின்ன சின்ன எதிர்ப்புக்களையும், தடைகளையும் தாண்டிமுன்னேறுவீர்கள். வீடு , வாகனப்பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் உங்கள் பணிகளை முடிக்கப் போராடவேண்டி இருக்கும். போராடி வெற்றி பெறும் நாள்.மகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு உரிய அங்கிகாரம் கிடைக்கும்.கும்பம்:குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையும், மகிழ்ச்சியும் ஏற்படும். பழைய பிரச்சினையை, சுமுகமாக தீர்க்க வழிகளைக் காண்பீர்கள். புனிதஆலயங்களைத் தரிசிப்பீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். நிம்மதி கிட்டும் நாள்.


                                        
மீனம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால், சாதாரணமாக முடிக்க வேண்டிய வேலைகளைக் கூட, போராடி முடிக்க வேண்டி இருக்கும். உங்களின் சிந்தனையை பண்படுத்திக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் பெறப் போராடுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். பக்குவமாகச் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

06.12.19- இன்றைய ராசி பலன்..(06.12.2019)

posted Dec 5, 2019, 5:57 PM by Habithas Nadarajaமேஷம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளவேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்து செல்லும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.ரிஷபம்:எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள், பெற்றோர்கள் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து, புகழ் கிடைக்கும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடையே மதிப்பு அதிகரிக்கும். சிறப்பான நாள்.


மிதுனம்:  எதையும் சமாளிக்கும் சாமர்த்தியமும், ஆற்றலும் ஏற்படும். பிள்ளைகளின், தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல அபிப்ராயம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உதவிகள் கிட்டும் நாள்.


கடகம்:குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள், குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.  தெளிவான முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும்.சிம்மம்:சந்திராஷ்டமம் தொடர்வதால், புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் பிரச்சினைகள் உருவாகும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில், உயரதிகாரிகளுடன் பிரச்சினைகள் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.கன்னி:சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது சலுகைகளை, அனுபவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.துலாம்:குடும்பத்தினர், மற்றும் உறவினர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.விருச்சிகம்:வருங்காலத்தை கருத்தில் கொண்டு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள், மற்றும் அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் தேடி வரும். நன்மை நடக்கும் நாள்.தனுசு:எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப்போனாலும், எதிர்பாராத ஒருவேலை முடியும். தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில், சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.மகரம்: துணிச்சலாகவும், தைரியமாகவும் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு நெருக்கமாவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.கும்பம்:இது வரை கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஆதரவு  கிட்டும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி தங்கும் நாள்.


                                        
மீனம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால், மனதில் இனம் புரியாத பயம் வந்துபோகும். கணவன் மனைவிக்குள் பிணக்குகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் வீண் மன உலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகள் தாமதமாகும். வளைந்து கொடுக்க  வேண்டிய நாள்.

05.12.19- இன்றைய ராசி பலன்..(05.12.2019)

posted Dec 4, 2019, 5:51 PM by Habithas Nadarajaமேஷம்: எடுத்த காரியங்களை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.ரிஷபம்:நண்பர்கள், உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். வீட்டிற்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.


மிதுனம்: கொடுத்த வாக்கை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த பந்தங்கள் சிலர் உங்கள் உதவியை கேட்டு வருவார்கள். உங்களால் வளர்ச்சி அடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதனை படைக்கும் நாள்.கடகம்:கடந்த இரண்டு  நாட்களாக. குடும்பத்திலும் வெளியிலும் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். நீண்ட  பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும். தடைப்பட்ட காரியங்கள் முடியும் நாள்.சிம்மம்:சந்திராஷ்டமம் தொடர்வதால், தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல், குழம்புவீர்கள்.  உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில், சக ஊழியர்களுடன், கருத்து வேறுபாடுகள், வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.கன்னி:உங்களுடைய திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வாகன பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உங்களைத் தேடி புதிய பொறுப்புகள் வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.துலாம்:நீண்ட, நாட்களாக வரவேண்டிய பணம்கைக்கு வந்து சேரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில், சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துப் புகழ் பெறுவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


விருச்சிகம்:பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஆடம் பரமான செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிக ரிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த் தனை களை நிறைவேற்றுவீர்கள். கூட்டாளிகள் ஆதரவு கிடைக்கும்.உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். நன்மை நடக்கும் நாள்.தனுசு:சின்ன, சின்ன பிரச்சினைகளையும் சுமுகமாகத் தீர்த்திட எண்ணி செயல்படுவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பணப்பற்றாக்குறை இரு ந்தாலும், சமாளிக்க கூடிய திறன் உங்களிடம் இருக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் பிரச்சினையை தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தடைகளை படிக்கற்கள் ஆக்கும் நாள்.


மகரம்:தீர்க்கமாக சிந்தித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பும் கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சியால் லாபம் பெருகும். வெற்றி கிட்டும் நாள்.கும்பம்:கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் விலகும்.தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும்.  வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.


                                        
மீனம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால், எந்தக் காரியம் எடுத்தாலும், அலைச்சலும், போராட்டங்களும். இருக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கோபத்தால் பிரச்சினைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், மாற்றிக் கொள்வது நல்லது. நேர்மறை சிந்தனை தேவைப்படும் நாள்.

04.12.19- இன்றைய ராசி பலன்..(04.12.2019)

posted Dec 3, 2019, 5:38 PM by Habithas Nadarajaமேஷம்: சவாலான விஷயங்களையும், சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோர், மற்றும் உற்றார், உறவினர்களின் ஆதரவுக் கிடைக்கும். மற்றவர்களுக்காகச் சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். நல்ல செய்திகள் கிடைக்கும்.  வியாபாரத்தில் புதியஇடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தி யோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும் நாள்.


ரிஷபம்:பழைய பிரச்சினைகளை மறந்து வாழ்க்கை முன்னேற்றத் திற்காக யோசிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்களை நம்பி உயரதிகாரிகள் சில முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். சாதனைப் படைக்கும் நாள்.மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சிப்படி செயல்படும்  நாள்.


கடகம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வேண்டாவெறுப்பாகப் பேசுவீர்கள். அடுத்தவரைக் குறைகூறுவதை நிறுத்துங்கள் உங்களைப் பற்றி விமர்சனங்கள் ஏதேனும் வந்தால் அஞ்ச வேண்டாம். சின்ன சின்ன பிரச்சினைகளும், அவமானங்களும் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் மற்றவர்களை  நம்ப வேண்டாம் வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.


சிம்மம்:தனது பலம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப உங்களை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டாகும். திருமணப்பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். மனைவி உங்களுக்குப் பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.


கன்னி:வழக்குகள் சாதமாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களால் ஆதாயம் ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவரின் அறிமுகம் கிடைக்கும்;பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் பலமடங்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.துலாம்:எதிர்காலத்திற்குத் தேவையானதை யோசித்து அதன்படி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி பெருகும். வெளிவட்டாரத்தில் நல்ல அனுபவங்கள் உண்டாகும். நட்பு வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள்.உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.


விருச்சிகம்:சிறு வயது நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடன் பிரச்சினைகளைத் தீர்க்க சரியான வழியை யோசிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாகும் நாள்.தனுசு:தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுத்து அதன் படிசெயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்குச் சாதகமாகஇருப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். தொலைத் தொடர்பால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புக்களை ஏற்பீர்கள் . வெற்றி பெறும் நாள்.


மகரம்:கணவன்,மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். விலகி நின்ற உறவுகள் விரும்பி வருவார்கள். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் கைக்கு வந்துசேரும். புதிய எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத் தில் புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.கும்பம்:இராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்து கொண்டு இருக்காதீர்கள். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும்  குறைவாகப் பேசவேண்டாம். மற்றவர்விஷயத்தில் தேவை இல்லாமல் தலையிடுவதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விழிப்புணர்வு. தேவைப்படும் நாள்.

                                        
மீனம்:மறைமுக விமர்சனங்கள், தாழ்வு மனப்பான்மை வந்துச் செல்லும். பிள்ளைகளிடம் கனிவாகப்  பேசுங்கள். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம். விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் ஏற்படும் நாள்.

03.12.19- இன்றைய ராசி பலன்..(03.12.2019)

posted Dec 2, 2019, 5:35 PM by Habithas Nadarajaமேஷம்: உங்கள் தவறுகளைத்திருத்தி வெற்றிகரமாக செயல் படுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மற்றவர்களால் நீங்கள் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முடிவால் பாராட்டப்படுவீர்கள். புகழ், கவுரவம் கூடும் நாள்.ரிஷபம்:உணர்ச்சிப்பூர்வமாகச் செயல்படுவதைதவிர்த்து, அறிவுப்பூர்வமாகச் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன விஷயங்கள் உடனடியாக நடக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி சில சூட்சமங்களை சொல்லித் தருவார். புதிய பாதை தெரியும்  நாள்.


கடகம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால், சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். எந்த விஷயத்திலும் விழிப்புடன் செயல்படுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரத்தில், லாபம் குறையும். உத்தியோகத்தில் மறதியாய் பிரச்சினை வந்து நீங்கும். முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நாள்.சிம்மம்:உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் வரும். சகோதர வகையில் நன்மைஉண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.கன்னி:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். யோகம் கிட்டும் நாள்.துலாம்:குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம், பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.விருச்சிகம்:திட்டமிட்டகாரியங்ளைச் சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும்.  பழைய நண்பர்கள் உதவுவார்கள். யோக, தியானம் என மனம் சொல்லும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.தனுசு:தன்னிச்சையாகவும், தைரியமாகவும் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புதுமை படைக்கும் நாள்.மகரம்:கடந்த இரண்டு நாட்களாகக் கணவன், மனைவிக்குள் இருந்த போர் நீங்கும். வராது என்று இருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதியவரின் நட்பு கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும் .மகிழ்ச்சியான நாள்.கும்பம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில், மனதில் குழப்ப நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் நம்மைப் புரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். பழைய பிரச்சினைகளை நினைத்து கோபப்படுவீர்கள். வியாபாரத்தில், வேலையாட்களால் பிரச்சினை உண்டாகும். பொறுமை தேவைப்படும் நாள்.


                                        
மீனம்:வீண் அலைச்சலும், சிறு சிறு ஏமாற்றங்களும்ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதத்தால் பிரச்சினைகள் உருவாகும். வெளிவட்டாரத்தில் பொறுமையுடன் செயல்படுங்கள். அனா வசிய செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரிடம் கனிவாகப் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் பணிகளை முடிக்க போராடவேண்டி இருக்கும். நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள்.

02.12.19- இன்றைய ராசி பலன்..(02.12.2019)

posted Dec 1, 2019, 5:22 PM by Habithas Nadarajaமேஷம்: உங்கள் அணுகுமுறையை  ரசனைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார்கள். மற்றவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்தி யோகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.ரிஷபம்:கணவன் மனைவிக்குள் அன்னியோம் பிறக்கும்.உறவினர்கள் நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலை யாட்களை மதிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச் சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி குறைக் கூறுவார். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.கடகம்:கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபர ணங்களை வாங்குவீர்கள். திரு மணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியா பாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டு வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள், உங்களை மதித்துப் பேசுவார்கள்.சிம்மம்:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புக்களை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.கன்னி:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாகச் செல வழித்துச் சேமிக்கத் தொடங் குவீர்கள். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமா வார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்துலாம்:எதிர்ப்புக்களை தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலைக்கான முயற்சி கள் சாதகமாக அமையும். வியா பாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தி யோகத்தில் அமைதி நிலவும் அதிகம் உழைக்க வேண்டிய நாள்.விருச்சிகம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவதும், விற்பதும் லாபகரமாக அமையும்.புது வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சி கள் கை கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பீர்கள். உத்தியோகத்தில் சில  நுணுக் கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக முடிவெடுக்கும் நாள்.


தனுசு:கணவன், மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதிய வர்கள், நண்பர்கள் ஆவார்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த உரிமையைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.மகரம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலர் விமர்சனங் களுக்கும், கேலி பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். நீங்கள் நகைச் சுவைக்காகச் சொல்லக் கூடிய விஷயங்கள் கூட, சீரியசாக வாய்ப்பு இருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.கும்பம்:எடுத்த காரியங்களில் அதிக அலைச்சலும், பிரச்சினையும் உண்டாகும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள் ளுங்கள். மற்றவர்களைப் பகைத்து கொள்ள வேண்டாம். வாகனங்களால் சில பிரச்சினைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஓரளவுலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர் களிடம் அனுசரித்து செல்லுங்கள். தடைகளைத் தாண்டி முன்னேறும்  நாள்.

                                        
மீனம்:தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, எடுத்தக்காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. மற்றவர்களுக்காக சில உதவி களைச் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பாராட்டப் படும். சிந்தனை திறன் பெருகும் நாள்.

1-10 of 1161