![]() |
01.06.20- கிழக்கில் கண்ணகி வழிபாடு..
கிழக்கில் கண்ணகி அம்மனின் திருக்குளிர்த்தி சடங்கு 01.06.2020 ம் திகதி ஆரம்பமாகியது. கிழக்கில் கண்ணகி வழிபாடு பிரசித்தமானது.இது ஒரு புராதன வழிபாடாகும். திராவிடப்பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினையே கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற கண்ணகியம்மன் வழிபாட்டில் காண்கிறோம். இத்தெய்வங்களில் கண்ணகை அம்மனுக்கு இலங்கையில் குறிப்பாக கிழக்கிலும் வன்னியிலும் ஆலயங்கள் அமைத்து வருடந்தோறும் பொங்கல் படைத்து குளிர்த்தி பாடி வழிபடுவதைக் காணலாம்.பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டிலே பிறந்து பாண்டியநாட்டிலே அரசியல் புரட்சி செய்து சேரநாட்டிலே தெய்வமாகிய கண்ணகை அம்பாள் சிங்கள மக்கள் மத்தியில் பத்தினித்தெய்யோ என இன்றும் வழிபட்டு வருவதைக் காணலாம். கண்டியிலுள் தலதா மாளிகையில் கண்ணகி கோயில் இருப்பதும் கயபாகு மன்னன் இந்தியாவின் சேரநாட்டிலிருந்து கொணர்ந்த சந்தனக்கட்டையாலான விக்கி;ரகமும் சிலம்பும் இன்றுமுள்ளது.ஈழத்துக் கடைசித் தமிழ் மன்னனின் தலைநகர் கண்டி என்பதுடன் அது கண்ணகி வழிபாட்டின் உறைவிடமுமாகும்.இன்று கண்டியில் நடைபெறும் பெரஹரா பத்தினித்தெய்வமாம் கண்ணகிக்கு எடுக்கப்பட்டவிழாவேயாகும் மணிமேகலை சிந்தாமணி சிலப்பதிகாரம் வளையாபதி குண்டலகேசி ஆகிய ஜம்பெரும் காப்பியங்களுள் தமிழில் உருவான முதல் பெரும் காப்பியம் சிலப்பதிகாரமாகும்.இதனை இளங்கோவடிகள் சிருஸ்ட்டித்திருந்தார். சிலப்பதிகாரம் ஒரு சர்வசமய சமரச இலக்கியமான தமிழக்காவியமாகும் .அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றுவது ஊஉம் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்ஊழ்வினைச் உருத்து வந்து ஊட்டும் என்பதும் சூழ்வினைச் சிலம்பு காரணமாக சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் மேற்படி மூன்றுஉண்மைகளிலும் தமிழ்ப் பண்பாட்டை நிலைநாட்டியுள்ளார் . வேறெந்த தமிழ் இலக்கியத்திலும் இல்லாத வகையில் முடியுடை மூவேந்தரையும் அவர்தம் ஆளுகைக்குட்பட்ட தமிழ் நிலத்தையும் சமநோக்கோடு காண்கிறார். சங்ககாலத்திலே கன்னிப்பெண்கள் மட்டுமே காலிலே சிலம்பு அணிவது வழக்கம்.ஆனால் சற்று பின்வந்த சிலப்பதிகார காலத்திலே திருமணமான பெண்கள் சிலம்பணிந்தார்கள்.அச்சிலம்பிலே ஒரு சிலம்பு கழன்றாலோ உடைந்தாலோ கழட்டினாலோ அங்கு விபரீதம் நிகழும் என்பது நம்பிக்கை. அவ்வகையிலே கண்ணகையினதும் கோப்பெருந்தேவியினதும் ஒற்றைச்சிலம்புகளே சிலப்பதிகாரமாயின என்று கூறலாம். கண்ணகி தமிழரிடையே ஒரு புதுத்தெய்வமாக உருப்பெற்ற கதையை சிலப்பதிகாரம் சுவைபடக்கூறுகிறது. வானோர் வடிவில் வந்த கோவலனோடு தெய்வ விமானமேறி கண்ணகி வானகம் சென்ற காட்சியைக் கண்ட வேடுவர்கள் அவளைத் தெய்வமாகப் போற்றினார்கள்.சிறு குடியீரே சிறு குடியீரே ....என்ற சிலப்பதிகார குன்றக்குரவைப் பாடலைப் பாடி வேங்கை மரத்தின் கீழ் எடுத்த முதற் சடங்கு கண்ணகி சடங்காகும்.அதனையொட்டி கண்ணகி சடங்கு முறை வழக்கிற்குவந்தது. சேரன்செங்கூட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கங்கையில் நீராட்டி அக்கல்லிலிருந்து கண்ணகியின் சிலை வடித்து தனது தலைநகராம் வஞ்சிமாநகரில் அமைத்த ஆலயத்தில் பிரதிஸ்டை செய்தான். இந்த விழாவிற்கு குடகக்கொங்கரும் மாளுவவேந்தனும் கடல்சூழிலங்கை கயவாகு வேந்தனும் வந்திருந்ததாக சிலப்பதிகாரம் கூறிநிற்கிறது. கிழக்கின் கரிகாலன் மோனத்தவமுனி முத்தமிழ் வித்தகன் இப்புண்ணிய பூமியில் அவதரித்த ஆண்டான 1892 இல்தான் சிலப்பதிகாரமும் முதன்முதலில் அச்சிடப்பட்டது.அதன் பின்பே அதன் புகழ் கற்றவர் மத்தியில் பரம்பியது. சிலப்பதிகாரம் மானுடப்பெண்ணை தெய்வமகளாகச்செய்து நிற்க வழக்குரைப் பனுவல் தெய்வமகளை மானுடப் பெண்ணாகக் காட்டிச் செல்கின்றது. கண்ணகி வழிபாட்டின் தோற்றம் பற்றி தமிழ் இலக்கிய நூல்கள் மட்டுமல்ல சிங்கள இலக்கிய நூல்களும் காணப்படுகின்றன.ராஜாவலிய ராஜரத்தினாகார பத்தினிக்கத்தாவ முதலிய சிங்கள நூல்கள் அவை. வழக்குரைநூல் சிறிய மணிப்பரல் காரணமாகப் பெரிய போரினைக் கிளப்பிவிட்டுத் தமிழனைத் தமிழன் வென்ற செய்தியினை விரித்துச் செல்கின்றது.ஈழநாட்டிற்கும் சோழநாட்டிற்குமிடையே நடந்தேறிய இச் சண்டையில் திழன் தமிழனோடு சமாதானப்பட்டு வாழ்ந்த செய்தியினை ஈற்றில் நமக்குத் தெரிவித்து நம்மை மகிழ்விக்கின்றது. வழக்குரைநூலில் வருகின்ற அணிகலன்கள் பலவற்றின் பெயர்கள் கிழக்கோடு தொடர்புடையவை.கொப்புவாழி தண்டை காலாழி பீலி உட்கட்டு மேல்வாளி கொப்புவாளி காறை கைக்கட்டு போன்ற நகைகளை அணிகின்ற வழக்கம் இன்றும் நடைமுறையிலிருக்கின்றது. நாடுகாட்டுப் பரவணி;க் கல்வெட்டில் கண்ணகி வணக்கம் பற்றி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.கண்ணகி வணக்கம் இலங்கையின் இரண்டு இனத்தாரிடையே (தமிழர் சிங்களவர்)வளர்க்கப்பட்டு வந்தது. கண்ணகை அம்மன் என்றும் பத்தினி தெய்யோ என்றும் வழங்கப்பட்டுவந்தது. சிலம்புக்காதை பற்றியபாடல்களை மட்டக்களப்பிலே கண்ணகி வழக்குரை என்றும் திருமலையிலே கோவலன் காதை என்றும் வவுனியாவிலே சிலம்பு கூறல் என்றும் பாடுவர். கிழக்கில் காலங்காலமாக வணங்கப்பட்டுவரும் காளி துர்க்கை மாரி பேச்சி முதலிய பெண் தெய்வ வழிபாடுகளில் இறுதியில் வந்து சேர்ந்த தெய்வம் கண்ணகி கண்ணகை என்றும் அழைக்கப்படுவதுண்டு. இன்று வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க குழல்நய ஓசையெழுப்ப வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமையாகிவிட்டது.கயவாகு காலத்தில் அதாவது கி.பி.2ம் நூற்றாண்டில் கண்ணகி வழிபாடு இலங்கைக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இன்று கிழக்கில் 60க்கு மேற்பட்ட கண்ணகை அம்மன் ஆலயங்கள் இருந்திற்றபோதிலும் முதல் ஆலயம் எங்கு எப்போது கட்டப்பட்டது என்பது தொடர்பில் தெளிவில்லை. கயவாகு வேந்தனும் இலங்கையில் முதலில் எங்கு கண்ணகிக்கு கோயில் எடுப்பித்தான் என்பதில் ஜயமிருக்கிறது. அனுராதபுரத்தில் அல்லது யாழ்.கந்தரோடைக்கு அருகிலுள்ள அங்கணாமைக்கடவையில் கட்டப்பட்டது என்று ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.மதுரையை எரித்த கண்ணகி சினத்துடன் தென்பகுதியூடாக இலங்கை வந்து வன்னியின் முல்லைத்தீவிலுள்ள வற்றாப்பளை எனுமிடத்தில் குளிர்ந்து சீற்றம் தணிந்ததாக வரலாறு கூறுகிறது. தனிப்பட்டவர்கள் கண்ணகை ஆலயங்களை சிறிய அளவில்கட்டி வழிபட்டு வந்தனர்.இதனை மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் என்ற நூலும் சுட்டிநிற்கிறது. கண்டி அரசன் இரண்டாம் இராசசிங்கன் காலத்தில் (1629-1637) பாடப்பெற்ற தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் மட்டக்களப்புப் பிராந்தியத்தில் 30 கண்ணகை அம்மன் ஆலயங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.அவற்றில் அங்கணாமைக்கடவை (வெளியிலிருந்தும்) முதலூராகக் குறிப்படப்பட்டு;ள்ளது.எனவே அதுவே முதல் ஆலயமாகக் கொள்ளலாம். தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் கூறப்படாத ஆறு ஊர்களின் பெயர்கள் பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் காவியத்திற் காணப்படுகின்றன.பட்டி நகர் தம்பிலுவில் வீரமுனை காரைநகர் பவுசுபெறு கல்முனை கல்லாறெருவில் மகிளுர்செட்டிபாளையம் புதுக்குடியிருப்பு செல்வமுறு மகிழடித்தீவு முதலைக்குடா அட்ட திக்கும் புகழும் வந்தாறுமூலை நகர் மட்டவிழ் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை மனதில் நினைக்க வினை மாறி ஓடிடுமே. என ஊர்சுற்றுக்காவியம் கூறுகிறது.நாடுகாட்டுப் பரவணி;க் கல்வெட்டுக்குறிப்புகளின்படி பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் ஆலயம் 18ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 19ம் நூற்றாண்டின் முதற்கூற்றில் கட்டப்பட்டிருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது. கண்ணகி வணக்கம் முதலில் தனிப்பட்ட குடும்பங்களின் சொத்தாக பூசிக்கப்பட்டுவந்த போதிலும் கண்ணகையை வழிபடுவோர் தொகை அதிகமாக கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.அதற்கு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும் படையெடுக்கத்தொடங்கினர். உதாரணமாக செட்டிபாளையம் கண்ணகை அம்மன் ஆலயத்தைக் குறிப்பிடலாம்.இவ்வாலயத்தில் கிரான்குளம் களுதாவளை குருக்கள்மடம் மாங்காடு அம்பிலாந்துறை பழுகாமம் தேத்தாத்தீவு ஆகிய ஏழு ஊர்களைச்சேர்ந்தவர்களுக்கு உரிமை இருந்தது.சடங்கு நிகழ்வுகள் கண்ணகி மதுரையை எரித்தது கயவாகு மன்னன் பத்தினிக்கு விழா எடுத்தது சிங்கள மக்கள் பெரஹரா ஊர்வலம் நடாத்தி பத்தினியை வழிபடுவதெல்லாம் ஆடி மாதத்திலாகும். ஆனால் தமிழர்கள் இதனைத் தவிர்த்து வைகாசி மாதத்தில் கண்ணகிக்கு சடங்கு செய்துவருகின்றனர். வைகாசித்திங்கள் வருவேனென்று வரிசைக்கியைந்து விடைகொடுத்தாரே என குளிர்த்திப் பாடல் கூறுகிறது.இதில் வைகாசித் திங்கள் என்பதில் இருவேறு கருத்துக்கள்நிலவிவருகின்றன. ஓன்று வைகாசிப் பூரணையைக்குறிக்கும்.மற்றயது வைகாசிப்பூரணைக்கு அடுத்து வருகின்ற திங்களைக் குறிக்கும்.இவை சடங்குகளின் இறுதித் தினமாகக் கொள்ளப்படுகின்றன.இச்சடங்குகள் வைகாசி மாதத்தில் நடப்பதால் வைகாசிப் பொங்கல் என்றும் வைகாசிச்சடங்கு என்றும் வைகாசிக்குளுத்தி என்றும் அழைக்கப்படுவதுண்டு. சடங்கு சடங்கு நடைபெறும் நாட்களின் எண்ணிக்கை ஊருக்கு ஊர் வேறுபடும்.சில ஊர்களில் 5 நாட்கள் சில ஊர்களில் 7 நாட்கள் இன்னும் சில ஊர்களில் 9 நாட்களும் நடைபெற்றுவருகின்றன.சடங்கின் ஆரம்பநாள் கதவுதிறத்தல் என்று கூறுவர்.மாரியம்மன் காளியம்மன் சடங்கைப் பொறுத்தவரை இது கும்பம் வைத்தல் என அழைக்கப்படும். ஆரம்பநாள் கல்யாணக்கால் வெட்டும் சடங்கு என்றும்' கூறுவர்.அன்று கடல்நீர் எடுத்துவரும்வழியில் ஏலவே பார்த்துவைத்திருந்த இடத்தில் பூவரசு மரம் அல்லது வேம்பு மரக்கிளையை கத்தி பாவிக்காமல்முறித்துஊர்வலமாக வந்து ஆலயத்தில் புடவைகள் சுற்றி நடப்படும்.இது பக்தியுட்டும் நிகழ்வாக சித்திரிக்ப்பட்டுள்ளது. பின்பு பச்சைகட்டல் என்பது பாரம்பரிய நிகழ்வாகும்.மதுரையில் மாதவி வீட்டில் புகுந்த கண்ணகைக்கு சமையல் செய்து கொடுக்கப்பட்டதைக் குறிக்கும்.அன்று வழக்குரையில் அடைக்கலக்காதை பாடப்பெறும்.இக்கதையிற் கூறப்படும் காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சொல்ல கட்டாடியார் அவற்றை எடுத்து அம்மன் முன் காணிக்கையாக வைப்பது இதில் முக்கிய அம்சமாகும். இறுதிநாள் பகலில் வழக்குரையில் கொலைக்களக்காதை பாடப்பெறும்.கோயில் சோகமயமாகவிருக்கும்.அன்று மதியச்சடங்கு நடைபெறமாட்டாது.மாலையில் வழக்குரைக் காதை பாடுவர்.இறுதியில் குளிர்த்திக் காதை பாடியபின் வைகறைப் பொழுதில் திருக்குளிர்த்தி நடைபெறும்.அதன்போது அவ்வவ் ஊர்களிலுள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வழிபடுவது இன்றும் வழக்கிலுள்ளது.இச்சடங்கு காலகட்டத்தில் கிராமங்களில் மஞ்சள் தட்டக்கூடாது மாவிடிக்கக்கூடாது புலால் உண்ணக்கூடாது இப்படி பலத்த பாரம்பரிய கட்டுப்பாடுகள் உள்ளன.அவை இன்றும் பண்பாடு ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றமை அம்மனிலுள்ள பயபக்தியைக் காட்டுகிறது எனலாம். |
10.06.17- கண்ணகி வழக்குரையும் வி.சீ.கந்தையாவும்..
இலங்கையின் கிழக்குமாகாணத்தில் மண்டூரில் வினாசித்தம்பிசின்னாத்தை தம்பதிகளுக்கு 1920.07.29 இல் பிறந்தவரான வி.சீ.கந்தையா புலமையினால் பண்டிதர்,புலவர்,எழுத்தாளர் என்று பலராலும் அறியப்பட்டவர்.கந்தையா,தன் இளமைக் காலத்தில் வ.பத்தக்குட்டி உபாத்தியாயரிடமும் புலவர்மணிஏ.பெரியதம்பிப்பிள்ளையிடமும்விபுலானந்தரின் குருவாகிய குஞ்சித்தம்பி உபாத்தியாயரிடமும் கல்வி பயின்றவராவார். பிற்காலத்தில் யாழ்ப்பாணத்துஆரியபாசாஅபிவிருத்திச் சங்கப் பண்டிதர் பட்டமும்(1943) ,மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதர் பட்டமும் (1944) இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தழிழ் வித்துவான் பட்டமும்(1952)அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பி.ஓ.எல்(டீ.ழு.டு) பட்டமும் பெற்றவராவார்.கண்ணகிவழக்குரை மற்றும் மட்டக்களப்புத் தமிழகம் ஆகிய நூல்களுக்கு பதிப்பாசிரியராகபண்டிதர் வி.சீ.கந்தையா பணியாற்றியது இவ்விருல்களுக்கு தனிச்சிறப்பை அளிப்பதுடன் அவரதுதகைமைக்குச் சான்றாகவும் அமைகின்றது. மட்டக்களப்புத் தமிழகம்என்ற பாடலைப் படைத்து இலங்கை சாகித்தியமண்டலப் பரிசுபெற்றவரும் பழைய ஏட்டுருவிலேகிடந்த “கண்ணகி வழக்குரை”என்ற நூலைஅச்சிற் பதிப்பித்தபெருமையும் வித்துவான் பண்டிதர் வி.சீ.கந்தையாஅவர்களையேசாரும். கடல் சூல் இலங்கைகயவாகு பத்தினி வழபாட்டை கொண்டு சென்றான் என்று இளங்கோவடிகள் பாடியதற்கேற்ப தமிழரும் சிங்களவரும் பத்தினி தெய்வத்தை அன்று தொட்டு இன்று வரை வழிபட்டுவருகின்றனர்.ஆதியிலே கண்ணகியின் கதையை திருவிழாக் காலங்களில் பொது மக்கள் பாட்டாக கேட்டு வந்ததுடன் வாய்மொழிக்காப்பியமாகவும் இது வளர்ந்துள்ள தென்று தமிழ்ப்பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் நூலின் சிறப்புரையில் குறிப்பிட்டுள்ளார். ஓலைச் சுவடிகளாய் கண்ணகிகோயில்கள் தோறும் உள்ளபெட்டகங்களிலே பன்னெடுங்காலமாக பொதுமக்களின் கைகளை இலகுவில் அடையாதவாறு கிடந்தபழைய ஓலைச் சுவடிகள் பலவற்றைபரிசோதித்துபாடபேதம்,அடிக்குறிப்புஎன்பவற்றுடன் கண்ணகிவழக்குரையை அச்சேற்றிவெளிக்கொணர காலத்துக்கு காலம் பலர் முயன்றும் காரைதீவு அபிவிருத்திச் சங்கத்தினரின் இரண்டாவதுவெளியீட்டு(1968) முயற்சியும் வித்துவான்,பண்டிதவி.சீ.கந்தையாவின் தமிழ்ப் புலமையும் இந்துசமயம் மற்றும் இந்துகலாசார ஆராய்ச்சிவன்மையுமே கண்ணகி வழக்குரை நூல் வெளிவருவதற்கு பெரிதும் உதவியது. காரைதீவு கண்ணகையம்மன்ஆலயவண்ணக்கர்களான பொ.செல்லத்துரை, கே.சரவணமுத்து, வே.தம்பிராசா, வ.கயிலாயபிள்ளைகப்புகனார், க.குலேசேகரம் வண்ணக்கர், கண்ணகிவழக்குரை பதிப்பாசிரியர் வி.சீ.கந்தையா ஆகியோர்களே கண்ணகிவழக்குரை ஏட்டுப் பிரதிகளின் ஆராய்ச்சிக்கு செயற்பட்டவர்களாக விளங்குகின்றனர். கண்ணகை வழக்குரையில் வரம்பெறுகாதையில் கோவலனார் பிறந்தகதையும் அம்மன் பிறந்தகதையும் கப்பல் வைத்த காதையினுள் மீகாமன், துரியோட்டு,கப்பல் வைத்தல் கதையும் கடலோட்டுக் காதையில் வெடியரசன் போர்,நீலகேசிபுலம்பலும் வீரநாரணன் கதையும் மணிவாங்கிய கதையும் மற்றும் விளங்குதேவன் போரும் உள்ளடக்கப்படகல்யாணக் காதை,மாதவி அரங்கேற்றுகாதை போன்றனவும் பொன்னுக்கு மறிப்பு காதையில் பொன்னுக்கு மறிப்புகதையும் இரங்கியகாதலும் வழிநடைக் காதையில் வயந்தமாலை தூது,வழிநடையும் அடைக்கலக் காதை,கொலைக்களக் காதையில் சிலம்பு கூறல்,கொலைக்களக் கதை,அம்மன் கனாக் கண்டகதையும் உயிர் மீட்புகதையும் வழக்குரைத்தகதையும் குளிர்ச்சிக் காதையில் குளிர்ச்சியும் வழக்குரைக் காவியமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. கலைத்தொண்டுக்காக வாழும் பண்டிதர் வி.சீ.கந்தையாவின் சேவைகள் மட்டக்களப்பின் பெருமையையும் முக்கியத்துவத்தினையும் உலகறியச் செய்திருக்கின்றனஎன்று,பேராசிரியர் சு.வித்தியானந்தன் அனுவுருத்திரநாடகமதிப்புரையில் கூறுகின்றார் என்பதையும் மனங்கொள்ளவேண்டும். பாக்கியராஜா மோகனதாஸ்(நுண்கலைமாணி) துறைநீலாவணை |
07.06.17- பெண்மையின் பெருமையையும் நீதியின் வெற்றியையும் பேசும் பெருங்காப்பியம் - சிலப்பதிகாரம்
பெண்மையின் பெருமையையும் நீதியின் வெற்றியையும் பேசும் பெருங்காப்பியம் - சிலப்பதிகாரம் கண்ணகையம்மன் சடங்கு சிறப்புக் கட்டுரை பெண் தெய்வ அல்லது தாய்த் தெய்வ வழிபாடு கி.மு 7000 ஆண்டுகளுக்குரிய நியோதிலிக்காலமான புதிய கற்காலத்திலும் அதற்கு முந்திய காலப்பகுதியான கி.மு25000 ஆண்டுகளுக்குரியதுமான மேலைப் பலியோலிதிக் காலமான பழைய கற்காலத்திலும் பெண் தெய்வ மற்றும் தாய்த் தெய்வ வழிபாட்டுக்கான சான்றுகளை தொல்பொருளியலாளர்கள் வெளிக்கொணர்ந்துள்ளனர். புணர்ச்சியும் மகப்பேறும் ஒன்றோடொன்று தொடர்புடையதென்பதை அறியாத காலத்தில் மக்கட் பேறு பெண்ணிற்கேயுரிய இயற்கை வளமெனவும் மனித இனத்தை பெண்ணாலேயே காப்பாற்ற முடியுமென்ற நம்பிக்கையும் இருந்தது. சங்க இலக்கியங்களில் பெண் தெய்வமான கொற்றவை திராவிட மக்களால் வழிபடப்பட்டதுடன் குறிப்பாக ஆநிரை கவர்வதில் வெற்றியை தருபவளாகவும் இரத்தப் பலியினால் மகிழ்விக்கப்படுபவளென்றும் குறிப்பிடப்படுகின்றது. சிவவழிபாடு நாட்டார் பெண் தெய்வ வழிபாட்டுடன் கலப்புற்ற நிலையில் சக்தி வழிபாடாகியது.இந்து மரபில் சக்தியை வழிபடுபவர்கள் சாக்தர்கள்.சாக்த வழிபாடு சிவ வழிபாட்டிலிருந்து வேறுபட்டது.சக்தியின்றி சிவன் உயிரற்றதென சாக்தம் குறிப்பிடுகின்றது.இதிலிருந்து சக்தியின் தன்மை மற்றும் கிராமிய தெய்வங்களில் வல்லமை, மகிமை, அதியற்புத ஆற்றல் புலப்படுகின்றது. இருக்கு வேதத்தில் ஒளியுடனும் செல்வத்துடனும் தொடர்புடையவளாக கூறப்படும் உஸா பசுக்களின் தாயாகவும் அழகிய இளம் பெண்ணாகவும் தெய்வங்களின் தாயெனவும் பிரபஞ்ச ஒழுங்கையும் அற ஒழுங்கையும் பேணுபவளாகவும் குறிப்பிடப்படுகிறது. அக்கினி மற்றும் கருட புராணங்களில் எதிரிகளுக்கெதிராக, யுத்தத்தில் வெற்றியைத் தரும் சக்தியாக காளி குறிப்பிடப்படுகிறாள்.12 ஆம் நூற்றாண்டில் காளி வணக்கம் தமிழ்நாட்டில் பரவலாக காணப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் புகார்,மதுரை,வஞ்சிக் காண்டங்களையும் முப்பது காதைகளையும் 5001 பாடலடிகளையும் உள்ளடக்கிய பெருங்காப்பியமாகவுள்ளது.எல்லா பிரிவுகளையும் காதை என்று கூறுவது வழக்கமாயிற்று.காதையென்பதை பொதுவாக பாடல் என்றும் கூறலாம். புகார்க்காண்டம் பத்து காதைகளையும் மதுரைக் காண்டம் பதின்மூன்று காதைகளையும் வஞ்சிக் காண்டம் ஏழு காதைகளையுமாக மூப்பது காதைகளை சிலப்பதிகாரம் கொண்டுள்ளதுடன் பெண்மையின் பெருமையையும் நீதியின் வெற்றியையும் பேசும் ஒரு பெருங்காப்பியமாகவுமுள்ளது. கண்ணகை வழக்குரையில் வரம்பெறு காதையில் கோவலனார் பிறந்த கதையும் அம்மன் பிறந்த கதையும் கப்பல் வைத்த காதையினுள் மீகாமன்,துரியோட்டு,கப்பல் வைத்தல் கதையும் கடலோட்டுக் காதையில் வெடியரசன் போர்,நீலகேசி புலம்பலும் வீர நாரணன் கதையும் மணிவாங்கிய கதையும் மற்றும் விளங்கு தேவன் போரும் உள்ளடக்கப்பட கல்யாணக் காதை,மாதவி அரங்கேற்று காதை போன்றனவும் பொன்னுக்கு மறிப்பு காதையில் பொன்னுக்கு மறிப்பு கதையும் இரங்கிய காதலும் வழிநடைக் காதையில் வயந்த மாலை தூது,வழிநடையும் அடைக்கலக் காதை,கொலைக்களக் காதையில் சிலம்பு கூறல்,கொலைக் களக் கதை,அம்மன் கனாக் கண்ட கதையும் உயிர் மீட்பு கதையும் வழக்குரைத்த கதையும் குளிர்ச்சிக் காதையில் குளிர்ச்சியும் வழக்குரைக் காவியமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இக்காதைகள் மூப்பதும் கோவலன் கண்ணகி,மாதவி ஆகியோரின் பிறப்பு வளர்ப்பையும் கப்பல் கட்டி நாகமணி பெறச் சென்ற போது மீகாமனுக்கும் வெடியரசன்,வீர நாரணன்,விளங்கு தேவன் என்போருக்கும் இடையே நிகழ்ந்த போரையும் நாகமணி பெற்று வந்ததன் பின்பு கோவலனுக்கும் கண்ணகிக்கும் இடம்பெற்ற திருமணத்தையும் கோவலன் மாதவியுடன் இன்பமுற்றிருந்ததையும் மாதவியின் தாய்க்கு கோவலன் பொன் கொடுத்தல் மற்றும் அவன் மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் வந்து அவளுடன் மதுரைக்கு செல்வதையும் மதுரையில் சிலம்பு விற்க சென்றபோது பாண்டிய மன்னனால் கொலையுண்டதையும் கண்ணகி பாண்டிய மன்னனுடன் வழக்காடி பின் மதுரையை எரித்ததையும் கண்ணகியின் கோபம் தணிய குளுத்தி பாடுதல் என்பவற்றை வி.சீ.கந்தையாவின் கண்ணகி வழக்குரை பதிப்பு கூறி நிற்கின்றது. கண்ணகியம்மன் சடங்குக் காலங்களில் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நிகழ்ந்த திருமணம் கன்னிக்கால் சடங்காகவும் கண்ணகியின் கோபம் தணிய குளுத்தி பாடுவது குளிர்ச்சிக் காதையாகவுமுள்ளது. இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் ஆகாமம் சாரா நாட்டார் வழிபாடுகள் முக்கியத்துவம் கொண்டதாக விளங்குகின்றது.பெரும்பாலும் கிராமியத் தெய்வங்கள் பெண் தெய்வங்களாகவே இருப்பதுடன் கல் அல்லது மரமே தெய்வங்களது இருப்பிடமாகவுமிருக்கும்.உதாரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள கோராவெளி கண்ணகையம்மன் ஆலயம் ,துறைநீலாவணை கண்ணகையம்மன் ஆலயம் போன்ற பல்வேறு ஆலயங்களை குறிப்பிடலாம். சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகை வழிபாடு கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே பெரு வழக்காயுள்ளது.கிழக்கு மாகாணத்தில் இற்றை வரை வருடா வருடம் சடங்காக நிகழ்த்தப்படும்கண்ணகையம்மன்,மாரியம்மன்,பேச்சியம்மன்,காளியம்மன்,திரௌபதையம்மன் முதலான பெண் தெய்வங்கள் பெண் தெய்வ வழிபாட்டின் வரலாற்றுத் தொடர்ச்சியை எடுத்துக்காட்டுவதனுடன் இவ்வாறான கிராமிய தெய்வங்கள் கிராமத்தின் காவல் தெய்வமாகவும் கிராமத்துக்கான பய பக்தியுடைய தெய்வமாகவும் கருதப்படுகிறது. கண்ணகி சடங்கு வழிபாட்டில் ஈழத்தில் என்றும் சிறப்புப் பெற்று விளங்கும் பிரதேசம் கிழக்கிலங்கை என்றால் மிகையாகாது.சோழ நாட்டிலிருந்து சீர்பாத தேவிக்கு வந்தவர்கள் இறைவனது அருளால் வீரமுனை வந்து சீர்பாதகுலமாகி வீரமுனையில் வாழலாயினர். சிங்கள மக்கள் பத்தினி தெய்யோ என்றும் தமிழ் மக்களால் கண்ணகை சடங்கும் என்று ஒவ்வொரு வருட வைகாசி மாதத்திலும் இச்சடங்கினை நிகழ்த்தி வருகின்றனர். கண்ணகையம்மன் சடங்குக் காலங்களில் பக்தியோடு படிக்கப்படும் வாய்மொழி பயில்நிலையில் இன்றுள்ளகண்ணகி வழக்குரை நூல் பல மாற்றங்களைப் பெற்றிருப்பதை அறியக்கூடியதாகவுள்ளது.மட்டக்களப்பு அம்பாறை பிரதேச மக்கள் வழக்குரை காதையெனவும் வழக்குரை ஏடு என வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். சிலப்பதிகாரத்தில் கண்ணகி,மனிதரும் தெய்வமாகலாம் எனும் மகுட வாக்கியத்தின் வடிவமானாள்.தன் நல்லொழுக்கத்தின் பயனாக தீயாய் மாறி தீமைகளை அழித்தவள்.தன் கணவனுக்கு நிகழ்ந்த அநீதிக்காக தேவர்களையே அழைத்து நியாயம் கேட்ட கற்பின் வலிமை கொண்டவள். பெரும்பாலான கண்ணகை அம்மன் ஆலயங்களில் பத்தசி சடங்கு முறைகளை காணக்கூடியதாகவுள்ளது. அம்மாளிடம் மண்டியிட்டு மன்றாடி வணங்குவதையே அடிப்படையாக கொண்டுள்ளது.அம்பாளுக்கு உச்சாடனம் பண்ணப்படும் மந்திரங்கள் தொடக்கம் போற்றிப் பாடப்படும் காவியங்கள் வரை இரந்து தன்னை அம்மையிடம் ஒப்படைத்து நீயே கதியம்மா என வழிபடும் ஆகமம் சாரா பத்ததி பூசை முறைமையினை துறைநீலாவணை கண்ணகையம்மன் ஆலய சடங்கிலும் காணக்கூடியதாகவுள்ளது. பொதுவாக கண்ணகியாலயங்களில் இடம்பெறும் ஏழு மற்றும் ஐந்து நாட் சடங்குகளுள் திருக்கதவு திறத்தல் ஆராதனை, கும்பம் ஊர் சுற்றல்,கல்யாணச் சடங்கு,வட்டுக்குத்துச் சடங்கு திருக்குளிர்த்தி போன்ற சடங்குகள் இடம்பெறுவது வழக்கமாகவுள்ளது.காவடி எடுத்தல்,கற்பூரச்சட்டி ஏந்தல்,அங்கப் பிரதட்சணம்,அடி அளத்தல் என்பன சடங்குக் காலங்களில் பக்தர்களால் நேர்த்திக்கடன்களுக்காக செய்யப்படுவது வழக்கமாகவுள்ளது. மட்டக்களப்பு வாவியினாலும் குளங்களினாலும் சூழப்பெற்ற துறைநீலாவணை கண்ணகையம்மன் ஆலயம் கிழக்கும் தெற்கும் வயல் நிலங்களாலும் மேற்கும் வடக்கும் மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பெற்று கிராமத்தின் வட அந்தத்தில் அமைந்துள்ளது. கோயிலை சுற்றிலும் சிறு சிறு குன்றுகளும் அதன்மேல் விருட்சங்களும் வளர்ந்து காணப்படுகின்றன.இக்கிராமத்தில் கண்ணகையம்மன் அருள்பாலிக்கும் இடத்தில் மாத்திரமே பாறைகள் காணப்படுவதால் இங்குள்ள அம்மனை கல்லடி அம்மன்,கல்லடி நாச்சி என இவ்வூர் மக்கள் பெயர் சொல்லி அழைக்கலாயினர். தற்போது கோயில் அமைந்திருக்கும் இடம் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் காடடர்ந்த பகுதியாக காணப்பட்டுள்ளது.சில முனிவர்கள் அவ்விடத்தை தேர்ந்தேடுத்து ஆச்சிரமம் அமைத்து உறைவிடமாக்கிக் கொண்டார்கள்.இவர்கள் மந்திர தந்திர சித்து வித்தைகளில் மேம்பட்டு இருந்ததனால் இவ்வூர் மக்கள் இப்பகுதிக்கு செல்ல பீதியுற்றார்கள்.இம் முனிவர்கள் சக்தி வழிபாட்டை பின்பற்றியிருந்தார்கள். சில காலத்தின் பின் இம்முனிவர்கள் ஏதோ காரணத்தை யொட்டி வேறிடத்துக்கு சென்றுவிட்டார்கள்.இதன் பின்னர் மக்கள் அப்பகுதிக்கு சென்று ஊடாடித் திரிந்தார்கள்.இவ்வாறு சனநடமாட்டம் ஏற்பட்டு வரும் காலத்தில் இக்கிராமத்தை சேர்ந்தவொருவர் அங்கு சென்ற போது ஓர் ஆச்சரியத்தைக் கண்டார்.அங்கு மூன்று சிலைகளையும் முக்கோண வடிவமுடையதும் அதிக வேலைப்பாடுடைய இரு சோடிச் சிலம்பையும் தண்டச் சிலம்பு இரு சோடிகளையும் கண்ட அவர்கள் பயத்தோடு தான் கண்டதை கிராமத்து மக்களுக்கு எடுத்துக்கூறினர்.சிலைகள் உருவ அமைப்பில் கண்ணகை அம்சங்களை கொண்டு இருந்த படியால் கண்ணகை அம்மன் என்று நாமம் சூட்டி வழிபடலாயினர். மட்டக்களப்பு வாவியை வடமுகப்பாக கொண்டு குன்றையும் சிலையையும் நடுவணாகக் கொண்டு ஒரு கோயில் அமைத்து வழிபட்டுவந்த வேளையில் அக்காலத்தில் பல முனிவர்கள் வாழ்ந்த குறுமண்வெளி எனுமிடத்திலுள்ள கெங்காதசி ஐயர் என்பவரை வருவித்து மூன்று சிலைகளையும் காண்பித்ததுடன் அவர் சிலை வடிவில் அமைந்த கண்ணகையம்மனுக்கு பூசை செய்யும் விதிகளையுடைய பத்ததியொன்றை வழங்கினார். வருடா வருடம் சடங்கு நடத்திய தன்மார் எனும் பூசகருக்கு அம்மனின் தரிசனமும் கட்டளையும் கிடைத்தது.அதாவது இந்த மூன்று சிலைகளில் மிக்க ஒளியுடையதும் அகோரம் பொருந்தியதுமான சிலையை கோயிலுக்கு எதிரேயுள்ள மட்டக்களப்பு வாவியின் நான்கு உபவாவிகள் ஒன்றுடனொன்று சேருமிடத்தில் அமிழ்த்தி விட வேண்டும் என்ற அம்மனின் கட்டளைக்கு இணங்க அதன் படி கிராம மக்களுடன் தன்மார் எனும் பூசகர் செய்து முடித்ததன் பிற்பாடு வருடா வருடம் பூசை செய்யும் பூசகர்கள் இறக்கும் நிலை நின்றுவிட்டது.சடங்கு செய்யும் வேளையில் தீபம் வாவியை நோக்கி காட்டப்படுவதும் தெய்வமேறியாடுபவர்கள் வாவியை நோக்கி குதித்து ஓடுவதும் இன்றும் கூட இருந்து வருகின்றது. மூன்று சிலைகளில் மற்றைய சிலைகளில் ஒரு சிலை கும்ப ஊர்வலத்தின்; போது எடுத்துச் செல்லப்பட மற்றையது ஆலய கற்பக்கிரகத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றது. துறைநீலாவணை கண்ணகையம்மன் ஆலய வளாக சூழலில் வதனமார்,நாகதம்பிரான்,வைரவர் ஆலயங்களுடன் பதினொரு தேவதைக்குரிய கோயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. சுருங்கக் கூறின் பொதுவாக சிலப்பதிகாரம் மற்றும் கண்ணகி வழக்குரை ஆகிய இரு நூல்களினதும் கதையமைப்பு ஒன்றாகவுள்ளதுடன் இவ்விரு காவியத்தினை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு வருட வைகாசி மாதத்திலும் சடங்கு நிகழ்த்தப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.மட்டு அம்பாறை கண்ணகியம்மன் ஆலயங்களில் முதல் நாள் கதவு திறத்தல் சடங்குடன் ஆரம்பமாகி வைகாசி மாத பூரணை அல்லது பூரணையை அடுத்து வரும் திங்கட்கிழமை குளுத்தி பாடி நிறைவு பெறுவதை வழக்கமாக கொண்டிருக்கும். கண்ணகி வழக்குரை காவியம் சடங்கு வழிபாட்டில் பராயணம் செய்யப்படும் தன்மையாதலினால் சைவ சமய வழிபாட்டு மரபு பண்பாட்டு அமைவுக்கு ஏற்ப கண்ணகியை பிறப்பிலேயே வழிபடப்படுகின்ற அம்மனாக காட்டப்பட்டுள்ளதுடன் கண்ணகி கண் கண்ட தெய்வமாகவும் கண் எதிரே காட்டுபவளாகவும்,காவல் தெய்வமாகவும் வளம் மற்றும் சௌபாக்கிய மகப்பேற்று பாக்கியத்தை பெற்றுத் தரும் தெய்வமாகவும் போற்றப்படுகிறாள். அம்மை போன்ற தொற்று நோய்களில் இருந்தும் இயற்கை அழிவிலிருந்தும்தீய சக்திகளிலிருந்தும் அகால மரணங்களிள் இருந்து விடுபடவும் மழை மற்றும் மக்கட் பேறு வளம் பெறவுமே கிராமிய பெண் தெய்வ வழிபாடுகள் பய பக்தியுடன் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. தெய்வ நிலை அடைதல்,கனவு காணுதல்,வஞ்சினம் கொள்ளுதல்,பழி தீர்த்தல்,நீதிக்காக போராடுதல்,இல்லற கடமைகளை புரிதல் என்பவை கண்ணகி வழக்குரை மற்றும் சிலப்பதிகார கண்ணகி பாத்திரத்துக்கூடாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதுடன் ஆண்களினால் நீதியீனமாக நடத்தப்பட்ட பெண்கள் தமக்கிழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக கிளர்ந்தெழுந்த பொழுது தெய்வமாக மேலுயர்த்தப்பட்ட வரலாற்றை உணர்த்துவதாகவுள்ளது. மஞ்சந்தொவாய்,வந்தாறுமூலை,கன்னங்குடா,கோவில்போரதீவு,ஆரையம்பதி,புதுக்குடியிருப்பு,கோட்டைக்கல்லாறு,தம்பிலுவில்,திருககோயில்,காரைதீவு,ஒந்தாச்சிமடம்,11 ஆம் மற்றும் 15 ஆம் கிராமம்,துறைநீலாவணை போன்ற மட்டு அம்பாறை மாவட்டங்ளிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் கண்ணகியம்மன் சடங்கு நிகழ்த்தப்பட்டவண்ணமுள்ளது என்றால் மிகையாகாது. முற்றும். கிழக்கிலங்கையில் கண்ணகி அம்மன் சடங்குகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இக்கட்டுரையின் அவசியமும் உணரப்படுகின்றது. பாக்கியராஜா மோகனதாஸ் (துறைநீலாவணை) |
06.05.17- சமூகமுக்கியத்துவம் வாய்ந்த எண்ணைச் சிந்துபாடல்..
சமூகவாழ்வு,உழைப்பு,உணர்வுஉடையவனேமனிதன். இவ்வாறானமனிதன் தோற்றம் பெற்றகாலத்திலிருந்தேகலைகளும் தோன்றியுள்ளன. கலைகள் யாவும் மனிதஅனுபவஉணர்வுகளிலிருந்தும் அவனதுஉழைப்பிலிருந்தும் தோற்றம் பெற்றுதனக்கெனஓர் வடிவத்தையும் தனித்துவத்தையும் கொண்டுவிளங்குகின்றன. அவ்வாறுதோற்றம் பெற்றபல்வேறுகலைகளுள் “கிராமிய இசையும்”முக்கியத்துவம் பெற்றுவிளங்குகின்றன. மக்களின்அன்றாடவாழ்க்கையிலும்சமூகபோராட்டத்திலிருந்தும்சுற்றுப்புறச் சூழலில் இருந்தும்மலருகின்றகலைகள்தான் கிராமியப் பாடல்களாகும். இப் பாடல்கள் தாலாட்டுப் பாடல்,விளையாட்டுப் பாடல்,தொழிற்பாடல்,காதல் பாடல்,கூத்துப்பாடல்,சடங்குமுறைகளுடன் கூடியபாடல்,கும்மிப்பாடல்,ஊஞ்சற் பாடல்,கொம்புமுறிப் பாடல்,எண்ணெய் சிந்துப்பாடல்,ஒப்பாரிப் பாடல் எனஒவ்வொருபாடல் வகைகளும் மனிதவாழ்வோடுபின்னிப் பிணைந்துபிறப்புமுதல் இறப்புவரைஎல்லாநிலைகளிலும் பாடப்பட்டுதனக்கெனஓர் வடிவத்தைப் பெற்றுநிற்கின்றன. இவ்வாறான பாடல் வகைகளுள் எண்ணெய்ச்சிந்து பாடல்கள் மனிதனின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டு அம்சங்களையும்நல்ல உயர்சிந்தனைகளையும் உள்ளடக்கி ஒரு வாழ்க்கைத் தத்துவக் கோட்பாட்டை இசை வடிவில் எடுத்துக் கூறி மனித சமூகத்தின் யதார்த்தத்தையும் இயற்கையுடன் இணைந்த உள்ளத்து இயல்புகளையும்வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்த பாடல்களாக எண்ணெய்ச்சிந்துப் பாடல்கள் காணப்படுகின்றன. எண்ணெய் சிந்துப் பாடலை யார் இயற்றினார் என்பது அறியப்படவில்லை. ஆயினும் இதனை இயற்றியவர் ஒருவரென்றும் கருதுவர் பலர் என்றும் கருதுவர். எனினும் “யாரோ ஒரு ஏடறியாப் புலவன் நாடறியாக் கவிஞனால் ஆக்கப்பட்டதே” இப்பாடல்களாகும். கிராமங்கள் தோறும் இயங்கிய திண்ணைப்பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்துதான் எண்ணெய்ச்சிந்து பாடல் பாடும் முறையானதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் தாழ்ந்த உயர்ந்த சாதிபாகுபாடின்றி எல்லோரும் மாணவர்கள் என்ற உயர்வான சாதி அமைப்பினைக் கொண்டு கல்வியினைக் கற்க விரும்பிய மாணவர்களே இங்கு கல்வியினைக் கற்றுவந்தனர். குறிப்பாக கல்வி கற்பது பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டும் உரியதாகக் காணப்பட்டது. ஆரம்ப காலத்தில் திண்ணைப்பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பிப்பவர்களை உபாத்தியாயர் சட்டம்பி புலவர் என அழைத்தனர். இத்திண்ணைப்பள்ளிக்கூடங்களில் வாயிற்கணக்கு,கேசர் கணக்கு, நாட்கணக்கு, எண்ணற்கணக்கு போன்ற கணக்கு வகைகளும் ஆத்திசூடி ,கொன்றை வேந்தன், மூதுரை,நன்னெறி, நல்வழி போன்ற நீதி நூல்களும் இராமாயணம், மகாபாரதம் போன்ற தர்ம நூல்களும் போதிக்கப்பட்டன. வீடுகள் தோறும் சென்று மாணவர்களும் ஆசிரியர்களுமாக பாடிய பாடல்களே எண்ணெய்ச்சிந்து பாடல்களாகும். இங்கு எண்ணெய் ஒரு பொருளாகவும் சிந்து ஒரு பா வகையாகவும் காணப்படுகிறது. சிந்து எனும் போது தமிழ் யாப்பிலக்கணத்தில் மூன்று சீர்கள் உள்ள அடியை சித்தடி என்பார்கள். மூன்று சீர் உடைய அடிகள் மிகுதியாக வருவதனால் இவ் எண்ணெய்ச்சிந்து பாடல்கள் ஒரு சிந்து வகைக்குள் அடங்கும் பாடல்களாகவே கருதப்படுகின்றது. எண்ணெய் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகக் காணப்படுகின்றது. அதாவது சமையலுக்கு எண்ணெய் பயன்படுத்துதல், விலங்குகளின் நோய் தீர்க்க மருந்தாகப் பயன்படுத்துதல்,எண்ணெய் உருக்கி தலையில் வைத்து முழூகுதல் அக் காலத்தில் மின்சாரப் பயன்பாடின்மையால் குப்பி விளக்குகளின் பயன்பாட்டிற்கு எண்ணெய் பயன்படுத்துதல் போன்ற பழக்கவழக்கங்களை இம் மக்களின் வாழ்கை நடைமுறையில் காணப்பட்டது. இதனால் எண்ணெய் வீடுதோறும் மிகுதியாக இருப்பது வழக்கமாகும். வீடுகள் தோறும் கிடைக்கும் எண்ணெயைக் கொண்டு கால்நடைகளின் நோய்களைத் தீர்த்தனர். எமது முன்னோர்கள் தமது சுய தேவைக்காகவும் வருவாய்க்காகவும் விலங்குகளை வளர்த்து வந்துள்ளளர். சேகரிப்பில் தேங்காய் எண்ணெய் மட்டுமின்றி ஆமணக்கு எண்ணெய், புன்னைக் கொட்டை எண்ணெய்,இலுப்பை எண்ணெய் போன்றன கிடைக்கப் பெற்றன. இதன் மூலம் விலங்குகளின் நோய் தீர்க்கும் மருந்தாக இவை பயன்படுத்தப்பட்டு வந்தன. மக்கட் பேறில்லாது வருந்தும் தம்பதிகளின் இல்லத்தில் எண்ணெய்ச்சிந்து பாடும் போது மாணவர்களுக்கு இனிப்புக்கள்,பலகாரங்கள், மோர், இளநீர் கொடுத்தால் அடுத்த வருடம் இவ் எண்ணெய்ச்சிந்து பாடலைப் பாடிவரும் போது அக் குடும்பத்தினருக்கு குழந்தை பிறந்திருக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. இவ்வாறு குருவின் காணிக்கையாகவும் தமிழ் பாடசாலைகளின் வளர்ச்சிக்காகவும் விலங்குகளின் நோய் தீர்ப்பதற்காகவும் இப் பாடலை பாடியதுடன் மட்டுமின்றி ஆசிரியரின் வருவாய்க்காகவும் பெற்றோர் ஆசிரியரின் அறிமுகத்தை வளர்த்துக் கொள்வதற்காகவும் பாடப்பட்டதுடன் சில பிரதேசங்களில் வயல் பெருக்கி நெல் வளம் வாய்க்கப்பெற்றிருந்த போடியார்மார் தமது இல்லத்திற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் இச் சிந்து பாடி வருவதை ஒரு மரியாதையாகக் கருதினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இப் பாடலானது வெவ்வேறு நோக்கங்களுக்காக மேற்கூறப்பட்டவாறு அதன் தோற்றத்தில் அதாவது 1990 வரை பாடப்பட்டு வந்துள்ளன. அதன் பின் நிறுவனமயமாக்கப்பட்ட சைவப் பாடசாலைகள் ஆரம்பிக்க அனுமதி கிடைத்த போது அத்தகைய பாடசாலைகளை நிறுவுவதற்குரிய பணம் சேகரிப்பதற்காகவும் பாடசாலைகளின் அபிவிருத்திற்குரிய பணம் சேகரிப்பதற்காகவும் மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களை எடுத்துரைப்பதற்காகவும் பாடப்பட்டு வந்துள்ளது. இப் பாடல்கள் இரவு பகல் என இரு வேளைகளிலும் பாடப்படுவதோடு அதற்கென ஒரு மரபாக சனிக்கிழமைகளிலே பாடப்பட்டு வருவதே முறையாகக் காணப்படுகிறது. எண்ணெய்ச்சிந்து பாடல்கள் அடங்கியநூலை குருமாணக்கர் பரம்பரையை முன்னெடுத்துக் காட்டும் பழமை பொருந்திய பாடலாக மட்டுமின்றி அன்பு பாசம் தியாகம் முதலிய நற்பண்புகள் நமது சமுதாயத்தில் வேரூன்றுவதற்கும் மனித வாழ்க்கை முறையை அதாவது வாழ்க்கையினை எவ்வாறு சீரமைக்க வேண்டும் என்ற நோக்கம் வாழ்க்கைக்கு என்ன என்ன தேவை என்றும் வாழ்வாதாரத்துடன் கூடிய சேமிப்பு முறை என்பவற்றை எடுத்துக் கூறுவதோடு இத்தத்துவங்களை எம் முன்னோர்களும் நன்குணர்ந்து நடைமுறையில் கடைப்பிடிக்கும் வண்ணம் வாய்மொழி இசையாக காணப்பட்டு தற்போது ஒரு பதிப்பு நூலாக அமையப் பெற்றுள்ளது. பாடல் அமைப்பு : எந்தவொரு பாடலும் தான் கூறவந்த விடயத்தை ஒன்றன்பின் ஒன்றாக ஒரு ஒழுங்கு முறையில் தொகுத்து காப்பு துதி என ஆரம்பித்து பின் கூறவந்த விடயம் ஆரம்பமாகின்றது.இதன் அடிப்படையில் ஒரு எளிமையான மொழிநடையிலும் ஆழமான கருத்துக்களுடனும் ஒரு முழுமையான வடிவத்தை இந்நூல் பெறுகின்றது.இதன் படி எந்தக் காரியமும் தொடங்குவதற்கு முன் இறைவனை வணங்கியே தொடங்குவது எமது தமிழரின் வழக்கமாகும். அவ்வாறே ஒரு நூலை எழுதும் போது அதற்கு வாழ்த்துப்பாடியே ஆரம்பிக்கப்படுகிறது. வாழ்த்து எனும் போது நாம் தொடங்கும் காரியங்களுக்கு இடையூறு தொடரா வண்ணம் அதை முழுமையாக நிறைவேற்றுவதற்காகப் பாடுவதே கடவுள் வாழ்த்து ஆகும். எண்ணெய்ச்சிந்துப் பாடல்களும் இதனடிப்படையில் விநாயகருக்குத் துதி பாடி முறையே சிவன் பரமேஸ்வரி சுப்பிரமணியர் சரஸ்வதி போன்ற தெய்வங்களையும் வேண்டி காப்பு பாடப்படுகின்றது. அதன் பின்னே எண்ணெய்ச்சிந்து நூற்பகுதி தொடர்கின்றது. இப் பாடல் ஒரு தாய்க்கும் சேய்க்கும் உள்ள பிணைப்பை எடுத்துக்காட்டுகின்றது. ஒரு பெண்மையின் புனிதம் தாய்மை என்ற மதிப்பும் அப் பெண்ணிற்கு புத்திர செல்வத்திலே கிடைக்கின்றது. ஒரு சமூகத்தில் தாய்மையடையாத பெண்கள் சுபகாரியங்கள் நல்ல விடயங்கள் நடைபெறும் போது ஒதுக்கப்பட்டு முடக்கப்படுகின்றார்கள். இவ்வாறு குழந்தை இல்லாதவர்கள் நேர்த்திக்கடன் வைத்தல் தான தருமங்களைச் செய்வதன் மூலம் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடையவர்களாகவும் இறைவன் மீது கொண்ட பக்தியும் புத்திர செல்வத்தின் முக்கியத்துவத்தையும் கூறி நிற்பதோடு தாய் தந்தையர் இறைவன் சார்பில் அவர்கள் நம்மைப் படைத்துக் காத்து பராமரிக்கும் மறு தெய்வங்கள். எனவே தாய் தந்தையரை மதித்து நடக்க வேண்டும் என்ற உண்மைகள் எடுத்துரைக்கப்படுகின்றன. மேலும் குழந்தை பிறந்தவுடன் செய்யும் சடங்கு முறைகள் சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்கள் என்பன இப் பாடல்களில் காணப்படுகின்றன. ஒரு குழந்தைக்கு கல்வியானது இச் சமூதாயத்தில் பண்புள்ள மனிதனாகவும் நல்லொழுக்கத்துடன் கூடிய ஒரு நற்பிரஜையாகவும் எல்லோராலும் மதித்துப் போற்றத்தக்க அளவிற்குச் சிறந்த கல்விமானாகவும் திகழவைக்கின்றது. அவ்வாறு கல்வியைக் கற்காதவர்கள் இச் சமூதாயத்தில் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள் என்பதையும் இவ் எண்ணெய்ச்சிந்துப் பாடல்கள் எடுத்துக் கூறுவதோடு ஒரு சமூகத்தின் சீரான வளர்ச்சிக்கும் மனித வாழ்க்கை முறையில் உயர்ந்து செல்வதற்கும் கல்வியானது முக்கியம்; வாய்ந்தது என்பதை வலியுறுத்துவதாகவே இப் பாடல்கள் அமைந்துள்ளன. மேலும் இப் பாடல்கள் எல்லோரும் விளங்கிக் கொள்ளும் முறையில் எளிமையான மொழிநடையிலும் உவமை உருவக அணிகள் எதுகை மோனைகள் எனப் பல்வேறு இலக்கணச் சிறப்புக்களைக் கொண்டமைக்கப்பட்டு பெற்றோர் பிள்ளைகள் ஆசிரியர்கள் என ஒன்றிணைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வரலாற்றை தெளிவுபடுத்தும் நூலாக இவ் எண்ணெய்ச்சிந்துப் பாடல்கள் காணப்படுகின்றன. இசையானது சமூகம் சூழல் பொருளாதாரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே தோற்றம் பெறுகிறது. மனிதன் தோற்றம் பெற்ற காலம் முதல் அவனிடம் தோன்றிய உணர்வுகளின் வெளிப்பாடு ஒரு சில ஒலிகளாகவும் பின்பு அவனது மொழிபெயர்ப்பு வளர வளர இந்த ஒலிகளும் அழகான இசை வடிவத்தைப் பெறத் தொடங்கின. மனிதனையும் இறைவனையும் மற்ற உயிரினங்களையும் அசைய வைக்கின்ற ஓர் சாதனமே இசையாகும். இவ் இசையின் ஆதி மூலம் தமிழிசையே ஆகும். தமிழில் செய்யுளையோ பாடலையோ எழுதி அவற்றிற்கு இசையமைத்துப் பாடுவதைக் குறிக்கும். இது இசையும் தமிழுமாக ஒன்றாகப் பின்னிப்பிணைந்து பாடலாசிரியரின் மனதிலிருந்து தோன்றுவது. பாடல் எழுதி அதற்கு இசையமைக்காமல் பாடும் பொழுதே இயலும் இசையுமாக கலந்து வருவதே தமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையோடு இசையும் தாளத்தையும் கருப்பொருள் அமைத்து எழுத்துக்கும் இசைக்குமிடையேயுள்ள உறவை உணரும் நுட்பமான முறையைப் பெற்றிருக்கின்றன. இத்தகைய மரபினை அடியொற்றியதாகவே எண்ணெய்ச்சிந்துப் பாடல்களும் பாடப்படுகின்றன. தமிழிசை மரபில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாவினங்கள் காணப்படுகின்றன. இப் பாவினங்களில் ஒன்றான வெண்பா அமைப்பினைக் கொண்டதாக எண்ணெய்ச்சிந்துப் பாடல்களின் நூற்பகுதி காணப்படுகின்றன. உதாரணமாக: “ ஆனைமுகனே யரனார் திருமானே கானமதம் பொழியுமொரு கையோனே – ஞானமுற வித்தை கற்கும் பிள்ளைகட்கும் விக்கினங்கள் வாராமற் நித்தம் நிதம் நீ துணையாய் நில்.” என ஆரம்பிக்கப்படுகிறது. இவ்வாறான நால்வகைப் பாக்களுக்குரிய செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் எனும் ஓசை விகற்பங்கள் தாளத்தினை அடிப்படையாகக் கொண்டவை. இவ்வாறு தாளத்தோடு பொருந்திய இயற்தமிழ் பாவினோடுஇசையை இயைந்து பாடும்போது அது பண் அல்லது ராகம் தோன்றி இனிமையாக ஒலிக்கின்றது. இத்தகைய பண்கள் நூற்றிமூன்று(103) காணப்படுகின்றன. இவை கி.பி 6ம் நூற்றாண்டு தொடக்கம் பத்தாம் நூற்றாண்டு வரை தோன்றிய நாயன்மார்களின் உருப்படிகள் தேவார திருமுறைகளிலே அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான காலகட்டத்தில் பாடப்பட்ட பாடல் வகைகளுள் “அம்மானைப் பாடல்களும்” முக்கியம் பெறுகின்றது. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் சில பாடல்வகைகளைக் கூறியுள்ளார். இவற்றுள் அம்மானைக்காய் கொண்டு விளையாடும்இளைய மகளீர் தம் முன் உரையாடி மகிழும் முறையில் அமைந்த வரிப்பாடலே அம்மானைப் பாடலாகும். இப் பாடல்களுக்கென ஒரு தனியான இசையமைப்பு உள்ளது. தாலாட்டுக்குரிய பண்ணை மேகராக குறிஞ்சி எனும் நீலாம்பரி ராகத்திலே இப் பாடல்கள் பாடப்படுகின்றன. இது ஒரு பெரும்பான்மைப் பண்ணாக காணப்பட்ட போதிலும் அம்மானை பாடுவதற்கேற்றதாக இவ் ராகம் உள்ளது. மேலும் ஆரம்ப காலத்தில் ஓதுவார் வழிமுறையினூடாகவே பாடல்கள் இசைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன. பாடல்கள் ஓதுவார் முறைகளிலும் பாடல்களுக்குப் பண்ணமைத்துப் பாடியும்; பண்ணிசையாகவும் சுக்தாங்;கமாகவும் அதாவது பாடுபவர் தம் உணர்ச்சிப் பெருக்கிற்கும் இசையறிவில்லாத கற்பனை வளத்திற்கும் ஏற்ப இசையும் சொல்லும் பொருளும் சிதையாமல் பாடலை விரித்து விளக்கிப் பாடும் முறையாகவும் பாடப்பட்டன. இவ்வாறான இசை ஒழுங்குடன் கூடியதாகவே எண்ணெய்ச்சிந்துப் பாடல்களும் பாடப்படுகின்றன. இதன் மூலக்கருத்தும் அறக்கருத்துக்களும் மக்கள் மத்தியில் ஒரு இசை மரபினூடாக வெளிப்படுத்தப்படுவதைக் காணலாம். மக்கள் கூட்டமாக வாழுகின்ற அமைப்பே சமூகமாகும். மக்களின் வாழ்க்கை முறை,பண்பாட்டு அம்சங்கள்,பழக்கவழக்கங்கள்,கல்வி என்பன ஒரு சமூகத்தைத் தீர்மானிக்கின்றன. இவ்வாறான சமூகத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறையையும் வாழ்வியல் அம்சங்களையும் எடுத்துக் கூறுவதாக அமைவதே எண்ணெய்ச்சிந்துப் பாடல்களாகும். குழந்தைகள் சிறுவர்கள் தாய் தந்தையர் மாணவர்கள் ஆசிரியர்கள் என ஒன்றிணைக்கப்பட்ட சமூக அமைப்பைப் பிரதிபலிப்பதாக இவை அமைகின்றன. இப் பாடல்கள் சமூகத்தின் இயங்கியலுக்கும் ஒரு மனிதனை ஆரோக்கியமான வாழ்விற்கு வழி காட்டி செல்வதற்கும் ஊன்று கோலாக அமைந்துள்ளன. எம் முன்னோர்கள் சிக்கன சேமிப்புடன் கூடிய வாழ்க்கையை மேற்கொண்டனர்.அதாவது அன்றாடம் உணவு சமைக்கும் போது பயன்படுத்தும் அரிசியில் ஒரு பிடியை சேமித்து பின் அதனைத் தேவையேற்படும் போது பயன்படுத்தினர். சில குடும்பத்தினர் சீட்டுப்பிடிக்கும் முறையை மேற்கொண்டு தமது மூலதனத்தினைப் பெருக்கினர். இவ்வாறான சேமிப்பு முறைகளை மேற்கொள்வதோடு பண்டமாற்று முறையுடன் கூடியதாக ஆளுக்காள் தமது சுய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் ஒரு வலுவான சமூகத்தை மேம்படுத்துவதற்கும் இப் பாடல்கள் உதவுகின்றன. மேலும் எம் முன்னோர்களால் கடைப்பிடித்து வந்த சடங்கு முறைகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், சமய நிலமைகள் என்பவற்றை இன்னும் எமது சமூகத்தில் காணப்படுவதற்கும் அதாவது குழந்தை பிறந்தவுடன் நாள் குறிப்புக்கள் பார்த்தல், குழந்தைக்குக் கண்ணூறு வராமல் திருநீறு ஓதிப் பூசுதல், குழந்தையைப் பன்னிரெண்டாம் நாள் தோட்டிலில் இடல், முப்பதாம் நாள் முடியெடுத்து மருங்கை செய்தல்,அன்றைய தினம் காப்பு, அரைநாண் கயிறு, சதங்கை என்பன அணிவித்தல், கல்வி முறையில் தோத்திரப் பாடல்கள்,சமயம் சார்ந்த கதைகள் போதிக்கப்பட்டன. இம் முறைகள் இன்றைய தலைமுறைகளிடம் பின்பற்றி நிற்பதற்கு ஒரு வழிகாட்டியாக இவ் எண்ணெய்ச்சிந்துப் பாடல்கள் காணப்படுகின்றன. எண்ணெய்ச்சிந்துப் பாடல்கள் பாடசாலைமாணவர்களால் பாடப்பட்டு வந்தாலும்இவர்களுடன் இணைந்து கிராம பொதுமக்கள் சிறுவர்கள் என அனைவரையும் ஒன்று சேர்க்கும் களமாக இது காணப்படுவதோடு உயர்ந்த தாழ்ந்த சாதிப் பாகுபாடின்றியும் ஆரம்ப காலத்தில் ஆண் சமூகத்தில் மதிக்கப்பட்டதாகவும் இப் பாடல்க்ள மூலமே ஆண்கள் பெண்கள் என இருபாலாரும் சமத்துவமானவர்கள் என்று மதிக்கப்பட்டும் எல்லோரும் ஒன்றிணைந்தும் செயல்படுவதற்கும் இ இதன் மூலம் சமூக ஒற்றுமையையும் நல்லுறவையும் கட்டியெழுப்புகின்ற களமாக காணப்படுகின்றது. இன்று எவ்வளவோ புதிய இசைகளின் வளர்ச்சியின் மத்தியில் தமிழிசை மரபானது இவ்வாறான பாடல்களினூடாக நிலை நிறுத்தப்பட்டு மக்கள் மத்தியில் நிலை பெற்று ஓர் இசை மரபினூடாக சமூக விழுமிய கருத்துக்கள் பரிமாறப்படுவது சிறப்பானதாகும். மேலும் தாய் தந்தையரை மதிக்காது புறக்கணித்து வாழும் சமூகத்திற்கும்இனிவருகின்ற சந்ததியினரது வாழ்க்கை வழிகாட்டியாகவும் இவ்வாறான தத்துவப்பாடல்கள் தோன்றியிருப்பதும் அவற்றினூடாக ஒரு ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் இப் பாடல்கள் மக்களது வாழ்க்கையில் பயனுள்ளதாகக் காணப்படுகின்றன. கட்டுரையாக்கம் :- சௌந்தரராஜன் செசயனா |
04.05.17- மனித வர்க்கமும் ஊடகமும் உலக பத்திரிகை சுதந்திர தின சிறப்புக் கட்டுரை..
பத்திரிகை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையும் இதனை அங்கீகரித்து 1973 ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதியை உலக பத்திரிகை சுதந்திர தினம் என அறிவித்தது. அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது.மேலும் பத்திரிகையையும் பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறுகிறது.இக்கட்டுரை மனித வர்க்கமும் தொடர்பாடல் ஊடகமும் பற்றி விபரிக்க விழைகிறது மனிதன் ஒரு தொடர்பாடும் விலங்காக காணப்படுகின்றான்.மனிதன் எப்போதும் தனித்து வாழ விரும்புவதில்லை.அவன்; எப்போதுமே குழுக்களாக வாழ விரும்புகிறான்.குழுவாக வாழும்போது அங்கத்தவர்களிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமை தேவைப்படுவதன் காரணமாகவே மனிதனுக்கு தொடர்பாடல் முக்கியமடைகின்றது.தொடர்பாடல் முறையானது மனித வர்க்கத்தின் அளவுக்கு மிகப் பழமையானதாகும். ஒருவழித் தொடர்பாடல்,இருவழித் தொடர்பாடல் என தொடர்பாடலை இரு வகைப்படுத்தலாம்.ஒலி,காட்சி என்ற இரு வழிகளில் தொடர்பாடல் மனிதனால் மேற்க்கொள்ளப்படுகின்றன. ஓலி :-பேச்சு,ஒலிகளை பயன்படுத்தல் காட்சி :- படங்கள்,குறியீடுகள்,நிறங்கள். அனுப்புனர்,ஊடகம்,பெறுநர் எனும் மூன்று கூறுகளின் ஊடாகவே சிறப்பானதொரு தொடர்பாடலை சாதாரணமாக ஏற்;படுத்த முடியும்.உதாரணமாக கடிதத் தொடர்பைக் குறிப்பிடலாம். மேளங்கள்,தீ,அங்க அசைவுகள் போன்றவற்றின் ஊடகவேஆதிகால மனிதன் தொடர்பாடலை மேற்க்கொண்டான்.இம் மூன்றின் ஊடாகவுமே தொடர்பாடலும் வளர்ச்சியடைந்தது. பண்டைய தொடர்பாடல் முறைகளின் பின்னரே மொழிகள் விரிவாகத் தொடங்கின.மொழிகள் விரிவாக்கமடைந்ததன் பிற்பாடே எழுத்து வடிவம் உருவாகியது.ஆதி வாழ்க்கை தொடர்பாடலானது அங்க அசைவுகள் மூலமாகவே இருந்தது.அதாவது விலங்குகளை பிடிப்பது தொடர்பான சைகை.நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் அதை நெருப்பிலே வேக வைத்து கூடியிருந்து உண்டு மகிழ்ந்தான். ஆடிப்பாடிக் குதூகளிக்கும் வேளையில் மேளங்களும் பயன்படுத்தப்பட்டன.ஆதிகால மனிதனுக்கு இலைகுலைகளும்,நெருப்பும்,இயற்கை வளங்களுமே அவனுக்கு ஊடகமாயிருந்தன.பின்னர் ஒரு காலத்தில் வார்த்தைப் பிரயோகம் வளர்ச்சியடைந்து குறிகள்,சங்கேதங்கள் முக்கியம் பெற்றன. வரி வடிவத்தின் பரிமாணம் எழுத்தாக மாறியது.17,18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கைத்தொழிற் புரட்சியின் காரணமாக அச்சியந்திரம்,நீராவி இயந்திரம்,கூர்ப்புக்கொள்கை போன்ற பல விசித்திரமான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. மனிதனது கருத்துகள்,சிந்தனைகளே கலை வடிவங்களில் படிமங்களாக படைக்கப்படுகின்றன.கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால விடயங்கள்,நிகழ்வுகளையே கலைஞன் படிமங்களாக்குகையில் தனது கற்பனைகளையும் இணைக்கின்றான்.இவற்றின் பேறாக அமையும் கலைப் படைப்பு அடிப்படையில் வாழ்வினை ஒத்ததாக அமையும். உணர்ச்சி அல்லது உணர்வைத் தூண்டுவதே கலையின் நோக்காகவும் அவ்வுணர்ச்சி நிலையானதொரு மனப்பதிவினை ஏற்படுத்தி சிந்தனையையும் உணர்வையும் தூண்டுவனவே கலைப் படைப்புகளாக கருதப்படுகின்றன. சிறந்த கலைப் படைப்புகள் கருத்தை முதன்மைப்படுத்தாது உணர்வு,சூழ்நிலை,அனுபவம் என்பவற்றின் ஊடாக கருத்து நிலையை வெளிப்படுத்தும். மனிதன் ஒருவன்மனிதருக்கு மனிதரது சாதாரண மொழியில் பேசுவதுதான் கலையென்று வோட்ஸ்ருவோட்டும் மனிதனின் மானுடத்திற்கான நிவேதனமே கலையென கிறீபிறிற்றேட் கூறுகின்றார். ஆதிகாலத்தில் மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்தில் தங்க வீடும் உடுக்க உடையும்,உண்ண உணவும் உண்டாக்கி கொள்ள தெரியாமல் விலங்கு போல அலைந்து திரிந்தான்.பிறகு மெல்ல மெல்ல நாகரீகம் அடையத் தொடங்கி வசிக்க வீடும் உடுக்க உடையும் உண்ண உணவும் உண்டாக்கி கொள்ள கற்றுக்கொண்டான்.இதனால் அவன் மிருக வாழ்க்கையிலிருந்து விலகி நாகரீக வாழ்க்கையடைந்தான். மனிதன் நாகரீகம் பெறுவதற்கு பேருதவியாக இருந்தவை அவன் சிறிது சிறிதாக கற்றுக்கொண்ட பல வகையான தொழில்களேயாகும்.ஆனால் அவன் இந்த நிலையை அடைவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தன. காவியம்,கட்டிடம்,சிற்பம்,ஓவியம்,நடனம்,நாடகம்,இசை போன்ற நுண்கலைகளை கண்களால் பார்த்தும் செவியினால் கேட்டும் மனதினால் மகிழ்ந்தும் உணர்கிறான். எல்லா வகை செய்தித் தொடர்புக்கும் அடிப்படை குறிகள்,சங்கேதங்கள் என்பனவே.குறிகள் தம்மையன்றி பிறவற்றை உணர்த்தும் செய்கைகள்.சங்கேதங்கள் குறிகள் ஒழுங்குற அமைந்துள்ள திட்டவட்டமான அமைவுகளாகும்.இவ்வமைவுகள் எவ்வாறு பல்வேறு குறிகள் ஒருங்கிணைக்கப்படலாம் என்பதை முடிவு செய்கின்றன. குறிகளும் சங்கேதங்களும் பிறருக்கு செலுத்தப்படுகின்றன.சங்கேதங்களை செலுத்துதலும் பெறுதலும் சமூக உறவுகளின் அடிப்படையாக அமைகின்றன.செய்தித் தொடர்பு என்பது செய்திகள் வாயிலாக சமூக உறவு கொள்ளலாகும்.தனி மனிதர்களுக்கிடையிலான தொடர்பாடல்,குழுத் தொடர்பு,வெகுசனத் தொடர்பு என தொடர்பாடல் மூன்று வகைககளாக பகுக்கப்படுகிறது. தகவல்களை,எண்ணங்களை,உளப்பாங்குகளை பரிமாற்றுவது தொடர்பாடலாகும். எண்ணங்கள்,கருத்துக்கங்களை பகிர்ந்து கொள்ள,தகவல்களை வழங்க,சமூகமயமாக்கல்,ஊக்குவித்தல்,விவாதித்தல்,கலந்துரையாடுதல்,கலாசாரத்தை செழுமையாக்கல்,மகிழ்வூட்டல்,ஒன்றிணைத்தல் திறமைகளை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ள,புதியவற்றை அறிந்துகொள்ள, ஏனையவர்களை அறிவுறுத்த,வழிநடத்த ,பொழுதுபோக்கு போன்றன தொடர்பாடலின் நோக்கங்களாக அமைகின்றன. மொழி தெரியாமை ,உள்ளடக்கத்தை தெளிவாக புரியாமை,கவனத்தை திசை திருப்பும் காரணிகள்,நேரம் போதாமை,பௌதீகவியல் காரணிகள்,மருத்துவ ரீதியான காரணிகள்,நம்பிக்கைகள்,வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்பல்,உணர்வுகள் போன்றனவற்றின் மூலமாக தொடர்பாடலில் பாதிப்பும் உருவாகிறது. அறியப்படாத ஒன்றை வெளிப்படுத்துவதும்உண்மைகளை தொகுத்தளிப்பதும்,மறைத்து வைத்திருப்பதை வெளிக்காட்டுவதும்,அவசரமாக நிகழ்கின்ற ஒரு வரலாறும்,நாளைய சரித்திரத்திற்கான இன்றைய பதிவு,வாசகர் அறியாததன் வெளிப்படுத்துகை,எதிர்பார்த்ததும் எதிர்பார்க்காததுமான சேர்க்கை போன்றனவே செய்தியாக அமைகிறது. கிடைக்கின்ற எல்லாவற்றையும் செய்தியாக்க முடியாது,வற்புறுத்தலுக்கு அடி பணியக்கூடாது,விமர்சிக்கும் உரிமை கிடையாது,முரண்பாடுகளை தூண்டக்கூடாததாகவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உறவினர் பார்வை ஒதுக்கப்பட வேண்டும் என்பன செய்தியாளருக்கும் செய்திக்குமுரிய பண்புகளாக அமைகின்றன. மக்களுக்குள் ஒருவருக்கொருவர் நேர் முகமாக நிகழும் தொடர்பு தனிமனிதர்களுக்கிடையிலான தொடர்பு எனப்படும்.மக்களுக்கு குழுவூக்கம் இயல்பானது.ஜீன்கள் வழி செலுத்தப்படுவது என்று கூறும் பரிணாமவியற் கொள்கை முதல் குழுவினுள் நிகழும் உறுதிப்பாடுகளே இவ்வகை நடத்தையே உருவாக்குகின்றன. ஒரு குழுவினர் தமக்குள் கொள்ளும் பொதுத் தொடர்பு குழுத்தொடர்பு எனப்படுகிறது.குழுத்தொடர்பு முன்னிலைப்படுத்தும் சாதனங்களான தனி மனிதர் தம் குரல்,பேச்சு,முகபாவம் இவற்றாலோ அன்றி இயந்திர சாதனங்கள் வாயிலாகவோ நிகழலாம். பெரும் தொழில் ரீதியாக நிகழுகின்ற உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்ற,அரசாங்கத்தால் பெருமளவு கட்டுப்படுத்துகின்ற சாதனங்கள் வாயிலாக பொழுதுபோக்குகள்,தகவல் அளித்தல் போன்றவற்றிற்கான உற்பத்தி செய்யப்படும் செய்தியமைப்புகளும் அவற்றை உற்பத்தி செய்யும் முறைகளும் வெகுசனத் தொடர்பு என்பதிலடங்கும். காவியக்கலை காவியத்தின் பொருளை மனதினால் உணர்ந்து அறிவினால் இன்புற வேண்டும்.ஆகவே காவியக்கலையை துய்ப்பதற்கு மனவுணர்வு மிக முக்கியமானதாகும்.இசைக்கலையினை செவியினால் கேட்டு இன்புறுகிறோம்.இசைக் கலைக்குத் துணைக் கருவிகளாக யாழ்,வீணை,குழல்,முழவு,தாளம் முதலியவையுள்ளன. முற்காலத்தில் சுவர்களிலும் பலகைகளிலும் துணிகளிலுமே ஓவியங்கள் வரையப்பட்டன.பலவித நிறங்களால் இயற்கையழகு பொருந்த எழுதப்படுகிற படங்களே ஓவியக்கலையாகும்.கல்,சுதை,உலோகம்,மரம் முதலான இயற்கைப் பொருள்களினால் மனிதர்,விலங்கு,பறவை,தாவரம் முதலான இயற்கைப் பொருட்களின் வடிவத்தையும் கற்பனையாக கற்பித்து அமைக்கப்பட்ட பொருள்களின் உருவத்தையும் அமைப்பதுதான் சிற்பக்கலையாகும்.கோயில்கள்,மாடமாளிகைகளின் கட்டட அமைப்பு என்பன கட்டட கலைக்குள் அமையும்.எந்தக் கலை வடிவமும் மனித தொடர்பாடல் இன்றி வெற்றி பெறாது. செய்தித்தாள்,வானொலி,தொலைக்காட்சி,புத்தகங்கள்,நாடகங்கள்,பிரமாண்டமான விளம்பரங்கள் போன்றன செய்தித் தொடர்புகளாகவுள்ளன. நிலவுலகத்திலே மிருகம் போலத் திரிந்து வாழ்ந்;த ஆதிகால மனிதர்,நாகரீகமடைந்து நற்பண்பு பெற்ற காலம் முதல் இசைக்கலையை வளர்த்து வருகிறார்கள்.துன்பமும் துயரமும் சூழ்ந்த மனித வாழ்க்கையிலே சிறிது நேரம் ஒய்வுகொண்டு இசையைப் பாடியும் கேட்டும் மனச்சாந்தி அடைகின்றது மனித இனம். மனிதத் திறனின் வெளிப்பாடே கலையாகின்றது.கலைக்கு ஒரு தொடர்பாடல் வல்லமை இருக்கிறது.சமூகத்தின் ஒரு பிரிவினர் கலையைப் பிறப்பிக்க ஏனையோர் அதனைப் பெறுகின்றனர்.ஆற்றுகைக் கலையான நடனக் கலையை பொறுத்த வரையில் நடனக் கலைஞன் தான் பெற்ற அனுபவங்களை தன் அனுபவங்களின் ஊடாக ஏனையவர்களுக்கு வழங்குகின்றான்.அந்த வகையில் உலகம் தழுவிய நிலையில் நடனம் சமூகத்துக்கு புரிய வைக்கப்படுகின்றது. நாடகக் கலையானது சமூக மாற்றுச் சாதனமாக அமைகிறது.சமூகத்தை பல்வேறுபட்ட மாற்ற நிலைக்கு கொண்டு வருவதில் அரங்கிற்கு வலிமையான சக்தியுள்ளதே அதற்கு காரணமாகும்.சமூகத்திலே காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளை இனங்கண்டு வெளிப்படுத்துவதும் அதற்கான தீர்வுகளை பெற்றுத் தரும் ஒரு சிறந்த சாதனமாக அரங்கமைகின்றது. எந்தவெரு கலை வடிவம் ஊடாகவும் சிறப்பானதொரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.ஊடகங்களே மனித சமுதாயத்தை வழிப்படுத்துகின்றன.எந்தவொரு கலை வடிவத்தின் வளர்ச்சியில் மனிதத் தொடர்பாடல் பிரதான பங்காற்றுகிறது.உயிருள்ள கலைஞர் உயிருள்ள பார்வையாளர் முன்னிலையில் நிகழ்த்தப்படும்போது நுகரப்படும் கலையாக அமைகிறது.இதனால் நாடகம் வாழ்வை ஒத்ததாகவும் காணப்படுகின்றது.நாடகத்தில் ஆற்றுவோர் பார்ப்போர் உறவு நெருக்கமாக இரத்தமும் சதையுமான கலைஞர்கள் நாடகம் ஊடாக தொடர்பு கொள்ளும்போது நாடகம் சிறப்பானதொரு சமூகத்தை கட்டியெழுப்பும் சிறந்த ஊடகமாகவுள்ளது. அச்சு ஊடகம்,ஒலிபரப்பு ஊடகம்,ஒளிபரப்பு ஊடகம்,நவீன ஊடகம் என ஊடகங்களை நான்காக வகைப்படுத்தலாம்.குரல் வளம்,உச்சரிப்பு,சமர்ப்பிக்கும் முறை,மனவெழுச்சிகளை கட்டுப்படுத்தல்,தன்னம்பிக்கை,வாசிக்கும் திறன்,நேர முகாமைத்துவம்,தன்னடக்கம்,ஊடகத்துறை பற்றிய அறிவு போன்ற பண்புகளை ஒலி,ஒளி ஊடகவியலாளர்கள் கொண்டிருப்பதுடன் மொழியறிவு,பொது அறிவு,நுண்ணறிவு,ஞாபகம்,முதன்மை ஊக்கம்,தலைமைத்துவ பண்பு,சமூகமயமாதல்,ஆளுமை,மனவெழுச்சி சமநிலை,தெளிவாக சமர்ப்பிக்கும் முறை போன்ற தகைமைகளையும் பெற்றவராக இருத்தல் வேண்டும். ஆதி காலத்திலிருந்து இன்றைய சமூகம் வரை எல்லா மட்டங்களிலும் ஒரு வகையிலான தொடர்பு முறைகள் இருந்து வருகின்றன.இத்தொடர்பு முறைகள் சமூக நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதற்கும்,பண்பாட்டுக் கையளிப்பினை மேற்க்கொள்வதற்கும் வழி ஏற்படுத்துகின்றன. ஆதி காலத்தில் தீ,தூது,முரசறைதல் போன்ற நிலையிலிருந்து பாரிய மாற்றம் பெற்று பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் என எத்தனையோ ஊடகங்கள் வளர்ச்சி பெற்றுள்ளது.அவை தாம் வளர்ந்தோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கு தேவையானவற்றையும் வளர்த்துக்கொண்டிருக்கின்றன. மிகப் பழமை வாய்ந்த தொடர்பு ஊடகமான பத்திரிகை, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் அடிப்படையாக உள்ளது.எழுத்துருவாக்கம்,நிலைபேறாக்கம்,எழுத்துச் சீர்திருத்தம் போன்றவற்றிற்கும் பத்திரிகைகள் முன்னோடியாக விளங்குகின்றன. இந்தியாவில் கி.பி 1780 இல் பத்திரிகை இதழ் வெளிவந்ததுடன் 1831 இல் தமிழ் சஞ்சிகை என்ற இதழும் வெளிவந்தது.தமிழில் வெளிவந்த முதல் இதழும் இதுவேயாகும்.இதனைத் தொடர்ந்து தினவர்த்தமானி,சுதேச மித்தரன் போன்றன தோற்றம் பெற்றன.இவை செய்திகளோடு அவ்வப்போது இலக்கிய விடயங்களையும் வெளியிட்டன. இலங்கையில் 1841 இல் யாழ்ப்பாணத்திலிருந்து உதய தாரகை என்ற சஞ்சிகை மாதம் இரு முறை வெளிவந்தது.1891 இல் உதயாதித்தன்,இலங்கை நேசன் போன்ற போன்ற பத்திரிகைகள் வெளிவந்;தன. 1930 களில் ஆரம்பிக்கப்பட்ட தினத் தபால்,வீரகேசரி,ஈழகேசரி ஆகிய பத்திரிகைகள் தமிழ் இலக்கிய வளர்ச்சியை நோக்கமாக கொண்டு செயற்படத் தொடங்கின. 1930 களில் தினத்தபால்,வீரகேசரி,ஈழகேசரி ஆகிய பத்திரிகைகளும் 1947 இல் சுதந்திரனும் 1945 இல் மறுமலர்ச்சி எனும் சஞ்சிகையும் 1950 இல் தினகரனும் 1959 இல் ஈழநாடும் தொடங்கப்பட்டது. 1963 இல் செய்தி என்ற வாரப் பத்திரிகை இலக்கியத் தகவல்களை வெளியிட்டதுடன் பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கதிர் என்ற சஞ்சிகையும் யாழ்ப்பாணத்திலிருந்து உதயன்,ஈழநாதம் போன்றனவும் கொழும்பிலிருந்து தினக்குரல்,மித்திரன்,தினமுரசு போன்றவையும் வெளிவந்தது. இலங்கை வானொலி,இலங்கையின் முன்னணி வானொலி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும்.இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது.1922 இல் தந்தி திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முயற்சியில் ஒலிபரப்பபட்டது.இலங்கை ஒலிபரப்புச் சேவையை தீவிரமாக முன்னெடுத்த எட்வேட் ஹாப்பாரே இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை என்று பலராலும் பாராட்டப்பட்டார். இலங்கையில் 1950 களில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வானொலி 1967 இல் கூட்டுத்தாபனமாக மாற்றம்பெற்று அன்றிலிருந்து இன்று வரை பல தமிழின் வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகளை ஒலிபரப்ரபி சமுதாயத்தின் ஊடகமாக அமைந்தன.1972 மே 22 இல் இலங்கை குடியராசாக மாற்றம் பெற்றதைத் தொடர்ந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்று இலங்கையரசின் ஊடக,தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது. இலங்கை வானொலி தெற்காசியாவிலே பல சிறப்பான வல்லுனர்களை உருவாக்கியுள்ளது.அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் லிவி விஜேமான,வேணன் கொரெயா,பேர்ள் ஓண்டாட்ஜி,டிம்; ஹோர்;சிங்டன்,கிறெக் ரொஸ்கோவ்ஸ்கி,ஜம்மி பாருச்சா,மில் சன்சோனி,கிளோட் செல்வரெட்ணம்,அமீன் சயானி,எஸ்பி.மயில்வாகனம்,தேவிஸ் குருகே,விஜயா கொரெயா போன்றோரைக் கூறலாம். இமயமலை உச்சியில் கால் பதித்த ஹிலாரியும் ரென்சிங்கும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை தான் முதலில் கேட்டார்கள் என்று அறியப்படுகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கே.எஸ்.ராஜாவை மறக்க முடியாத நேயர்கள்; இருக்கிறார்கள்.அவருக்குப் பின்னர் பி.எச்.அப்துல் ஹமீட் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.தேச எல்லைகளை கடந்து பல கோடி நெஞ்சங்களை செவிமடுக்க வைத்த இலங்கை வானொலியின் சிகரங்களாக விளங்கிய கே.எஸ்.ராஜா,பி.எச்.அப்துல் ஹதீத் மற்றும் இராஜேஸ்வரி சண்முகம் ஆகியோரை குறிப்பிட்டு கூறலாம். மக்களின் மனங்களில் விரைவாக மாற்றத்தை ஏற்படுத்தும் தொலைக்காட்சி பல விடயங்களை மக்களிடம் கொண்டு செல்கின்றன.இலங்கையில் ரூபவாஹினி ஐ அலைவரிசை,சக்தி ரீ.வி போன்றன அவ்வாறான தாக்கங்களை சமூகங்களிடத்து செலுத்தியிருந்தது. இன்று இனம் சார்ந்து மட்டுமே பேசப்படும் ஆயிரக்கணக்காண மொழிகளில் தமிழும் ஒன்று.தமிழ் பல நாடுகளில் பேசப்பட்டாலும் தமிழர்களால்; பேசப்படும் முதன்மையான மொழியாக காணப்படுகின்றது. தமிழும் கணிப்பொறிநுட்பமும் கைகோர்த்துக்கொண்ட தமிழில் குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்தது ஊடக இணையமாகும்.இணையத்தில் தமிழர்களின் தொடர்பாடல் ஆசியாவிலுள்ள ஏனைய மொழிகள் அனைத்துடனும் போட்டிபோடக்கூடியளவிற்கு முன்னேறியுள்ளது.மொழி ஊடகங்கள் மூலமாகவே நிலைத்து நிற்கின்றது.தொடர்ந்தும் நிலவுகின்றது என்றால் மிகையாகாது. பாக்கியராஜா மோகனதாஸ்(நுண்கலைமாணி) துறைநீலாவணை |
20.04.17- கவிஞர் சண்முகம் சிவலிங்கம் நினைவு தின சிறப்புக் கட்டுரை..
எப்படி வாழ்வை வாழ்ந்து முடித்தோம் சண்முகம் சிவலிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு - (1936-2012.04.20) கிழக்கிலங்கையின் கல்முனையின் அருகேயுள்ள பஞ்சபாண்டவர்கள்இதிரௌபதை குடிகொண்டுள்ள பாண்டிருப்பு எனும் பழம்பதியில் 1936.12.19 அன்று சண்முகம் சின்னப்பிள்ளை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.இவர் தமது பெற்றோரால் மிக அன்பாகவும் செல்லமாகவும் தாலாட்டி சீராட்டி வளர்க்கப்பட்டதுடன் சிவலிங்கம் மாஸ்ரர்இஸ்டீபன் மாஸ்ரர்இசசி என்றெல்லாம் அவ் ஊர் மக்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார்.இளம் வயதிலிருந்து கலை உணர்வோடு வாழ்ந்து வந்ததுடன் தன் திறமையினால் கலை உணர்வை பல எழுத்து வடிவங்களில் வளர்த்து நிறைவாக்கினார். “எப்படி வாழ்வை முதலில் கண்டோம் என்பதை விட எப்படி அவ்வாழ்வை வாழ்ந்து முடித்தோம்” என்பது அவரது படைப்புகளின் மையக்கருத்தாக இருந்தது.எப்படி அவ்வாழ்வை வாழ்ந்து முடித்தார் என்பதையும்அவரது படைப்புகளின் ஸ்திரத் தன்மையையும் அவரது படைப்புகள் ஊடாகவும் நூல்களுக்கூடாகவும் ஆராய முற்படுகிறது. 1941 ஆம் ஆண்டு கத்தோலிக்க மதகுருமாரால் ஸ்தாபிக்கப்பட்ட சென்.மேரிஸ் பாடசாலையில்இவர் தனது ஆரம்பக் கல்வியை கற்ற போது அங்;கு ஆசிரியராக கடமையாற்றி அருட்சகோதரர் யு.வு.அல்போன்ஸ் அவர்களின் பருந்துப் பார்வைஇபடு சுட்டியும் படிப்பில் மட்டுமின்றி கலை நிகழ்ச்சிகளிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் அதி முதன்மையான ஆற்றலுடன் விளங்கிய சண்முகம் சிவலிங்கம் மீது விழுந்தது.இவரின் கற்றல் திறமையையும் ஏனைய திறமையும் கண்ட அருட்சகோதரர்இ சசி அவர்களை(ச.சிவலிங்கம்) ஒரு துறவியாக்க வேண்டும் எனக் கருதி அவரின் பெற்றோரிடத்தே கேட்ட போது சசியின் தாய் தந்தையர் கொஞ்சமும் விரும்பாது இறுதியாக கிறிஸ்தவ மதத்தை தழுவுவதற்கு மட்டும் சம்மதத்தை அவரது பத்தாவது வயதில் தெரிவித்தனர். கற்றல் திறமையையும் ஏனைய திறமையும் கண்ணுற்ற தலைமையாசிரியர் இவரை கல்முனை பற்றிமா கல்Âரியில் கற்க அனுமதி பெற்றுக்கொடுத்ததோடு அவரும் தலைமையாசிரியரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக சிறப்பாக கல்வி கற்று சாதாரண தரம்இஉயர்தரம் என இரண்டு பரீட்சைகளிலும் பெறுமதியான பெறுபேறுகளை பெற்றார்.அக்கால கட்டத்தில் கத்தோலிக்க மதத்தின் மீது இருந்த ஈடுபாட்டின் காரணமாக தனது பெயரை ஸ்டீபன் எனவும் நாமம் சுட்டிக் கொண்டார். அக்கால நடைமுறையில் இருந்த கேம்பிரிஜ் சீனியர் பரீட்சைக்குப் பதிலாக சிரேஸ்ட பாடசாலை தராதர பத்திர பரீட்சையில் (S.S.C)சித்தயடைந்ததன்பின்னர் வாழைச்சேனை தமிழ் மகாவித்தியாலத்தில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு கடமையாற்றினார்.அப்போது அருட்சகோதரர் அல்போன்ஸ் அவர்களின் ஆலோசணைகளுடன் 1956 இல் மேற்படிப்புக்காக இந்தியாவில் கேரள மார்இவோனியா பல்கலைக்கழகத்தில் இணைந்து உயிரியல் பட்டப்படிப்பை(B.Sc)மேற்கொண்டு நான்கு ஆண்டுகளின் பின் 1959 இல் நாடு திரும்பியவுடன் கொழும்பிலுள்ள அரசாங்கப் பாடசாலையொன்றில் ஆசிரியராக கடமையாற்றினார். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் குறிப்பாக சசி அவர்களுக்கு கல்விக்கான பாதையை வடிவமைத்துக் கொடுத்து துணையாக நின்று வழிகாட்டிய பெருமை அருட்சகோதரர் அல்போன்ஸ் அவர்களையே சாரும். 1962 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து இடமாற்றம் பெற்று நாவலப்பிட்டி கதிரேசன் கல்லுரியில் ஆசிரியராக கடமையாற்றிய அவ்வருடம் மே 21 இல் இவரின் தந்தையார் சண்முகம் அவர்கள் காலமானார்.இதன் பின் 1963 இல் இடமாற்றம் பெற்று அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் கடமையாற்றியதை அடுத்து 1964 இல் நிந்தவுர்அல்அஸ்ரக் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய காலத்தில் அவ்வருடம் ஆகஸ்ட் 20 இல் பெற்றோரின் சம்மதத்துடன் பாண்டிருப்பிலுள்ள தங்கராசா தங்கரத்தினம் ஆசிரியத் தம்பதியினரின் சிரேஸ்ட புத்திரி தங்கராணியை இல்லறத் துணையாக ஏற்றுக் கொண்டு ஆறு ஆண் குழந்தைகளுக்கு தந்தையாகவும் வழிகாட்டியாகவும் சீரும் சிறப்புமாகவும் வாழ்ந்து வந்துள்ளார். கேரளாவில் படிக்கும் போது கம்னிச சித்தாந்தத்தில் ஈடுபாடு உள்ளவராக அதன்பால் ஈர்க்கப்பட்டு மாக்சிய கொள்கையைப் பின்பற்றியதோடு இவர் இலங்கையைச் சேர்ந்த கம்பனிசவாதி சண்முகநாதனுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.கேரளாவில் பட்டப் படிப்பை மேற்க்கொண்ட காலங்களில் அங்கு மேடையேற்றப்படும் நாடகங்களில் முன்நின்று செயலாற்றி நடிப்பதோடு உள்ளக விளையாட்டுக்களிலும்(ஐனெழழச புயஅந) தன் திறமையை வெளிப்படுத்தி பரிசில்களும் பெற்றுள்ளார். கேரளாவில் பட்டதாரியாகி பாண்டிருப்பு வந்து இளைஞர்களை ஒன்றினைத்து இராவணேஸ்வரன் எனும் நெடுங்காவியத்தை மேடையேற்றி இராவணேஸ்வரன் பாத்திரத்தில் வீணையுடன் தோன்றி நடித்ததோடு நெறியாள்கைஇகதைஇவசனம்இஒப்பனை. காட்சியமைப்புக்கள் இவேடவுடை போன்றவற்றை நாடகத்துக்கேற்ப சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார்.அதனையடுத்து அம்பாரை பிள்ளையார் ஆலயத் திருவிழாவுக்காக மனப்போர் எனும் நாடகத்தையும் தயாரித்து நெறிப்படுத்தியிருந்தார். 1974 இல் கல்வி டிப்ளோமா கற்கை நெறியை கொழும்பு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட காலப்பகுதியிலேயே கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் புத்தக ஆக்கக் குழுவிலும் ஈடுபட்டார்.1977 இல் உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றியதை அடுத்து 1983 இல் பற்றிமாக் கல்லுரிக்கு மாற்றலாகி பின் 1990 ஆம் ஆண்டு மருதமுனை சம்ஸ் மத்திய கல்லுரிக்கும் பின் 1992 இல் அதிபராக பதவி உயர்வு பெற்று பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு அதிபரானார்.1995 இல் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற காலத்திலிருந்து கலை இலக்கியப் பணிகளில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். வாழ்வின் தத்துவங்களையும் அதன் உள்நோக்கான அர்த்தங்களையும் புரிந்துகொண்டு மாக்சிய சிந்தனை மூலம் தன் வாழ்க்கையில் வெற்றி கொண்டு பலருக்கு விஞ்ஞான அறிவையும் ஆங்கில அறிவையும் ஆங்கில இலக்கியத்திற்கான அடித்தளத்தையும் இட்ட பெருந்தகையாக இருந்துள்ளார். இவர் இலங்கையில் ஒரு தலை சிறந்த விமர்சகராகவும் இலக்கியவாதியாகவும் கதாசிரியராகவும் நடிகராகவும் கலை உலகில் பிரவேசிக்கலானார்.கவிதைகளுடன் சிறுகதைஇநாடகம்இமொழிபெயர்ப்புஇவிமர்சனம் ஆகியவற்றிலும் தன் ஆளுமையை செலுத்தி வந்துள்ளார்.ஆனால் கவிதையே அவரை ஒரு அழியாக் கவிஞனாக நிலை நிறுத்தியுள்ளது. ஈழத்துக் கவிதை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக என்றும் நிலைத்திருக்கும் பெருமைக்குரியவர் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் ஆவார்.சண்முகம் சிவலிங்கத்தின் முதல் பிரசுரிப்புக் கவிதையானது 1966 ஆம் ஆண்டில் அழைப்பு எனும் பெயரில் வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.அழைப்பு எனும் கவிதையானது நீர் வளையங்கள் எனும் கவிதைத் தொகுப்பினுள்உள்ளது. சண்முகம் சிவலிங்கத்தின் கவிதைகள் ஈழக்கவிதையுலக வரலாற்றில் அவை ஒரு தனியான தனித்துவ அடையாளத்துக்கும் வகைக்கும் உரியனவாக உள்ளதுடன்பிற ஈழக்கவிஞர்களின் தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளிலிருந்து “தனித்து வேறுபட்ட நிலையில் தனி அடையாளத்தைக் கொண்டிருப்பதுடன் மரபார்ந்த முறையின் சாயலில் நவீன வெளிப்பாட்டு முறையாகவும் அமைந்து அவரின் வாழ்க்கை மற்றும் சிந்தனைப் போக்கின் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது”என்று பிரபல இலக்கிய நாடக விமர்சகரனஅ.யேசுராசா அவர்கள் குறிப்பிட்டுள்ளார் என்பதையும் முழுமையாக மனங்கொள்ள வேண்டும். ச.சிவலிங்கம் பாடசாலையில் கல்வி கற்கும் காலங்களில் முதன் முதலாக ‘ஆட்டுக்குட்டிகள்’ என்ற கதையைதனது 12 ஆவது வயதில் 1948 இல் எழுதியதோடு குறிப்பாக சொல்லப்போனால் 1950 காலப்பகுதிகளில் சிறுகதைகளை எழுத ஆரம்பித்திருக்கிறார் எனலாம். 1964 -1965 காலப்பகுதியிலிருந்து சுமார் 50 ஆண்டு காலமாக நாங்கள் முரண்படதா நண்பர்களென்றும் 1960 -1970 களில் இராப்பகலாக இலக்கிய வேட்கையோடு அலைந்திருக்கிறோம் என்பதை “நாங்கள் இரு தும்பிகள்” என்ற கவிதை உறுதிப்படுத்த ஒருவருக்கொருவர் ஆதர்சனமாக இருந்திருக்கிறோம் என்பதை “மரியாத உயிர்ச் சுவடும் விலகிச் செல்லும் மையங்களும்” எனும் கவிதை வெளிப்படுத்துவதாக உள்ளது என ச.சிவலிங்கம் அவர்களின் இலக்கிய வரலாற்றுப் பாதையை அவருடைய நெருங்கிய நண்பரும் சக பயணியுமான பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் ஊடாகவும் அறியக்கூடியதாகவுள்ளது. அறுபதுகளின் பின் அரைவாசியில் தான் முழுமையாக கவிதைத் துறையில் ஈடுபட்டு கவிதை எழுதத் தொடங்கினார்என்றும்தனது எழுத்துக்களை அவர் எப்போதும் திருத்தித்திருத்தி செழுமைப்படுத்திக் கொண்டே இருப்பதோடு திருத்தித்திருத்தி எழுதியும் திருப்தியடையாத மனதுடனும்இதனது படைப்புகளை பிரசுரிப்பதில் அதிக அக்கரையின்மையுடனும் இருந்துள்ளார் என்பதை பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களுக்கூடாகவே வெளிவருகின்றது. இவரது ஆரம்ப காலக் கவிதைகள் மரபுவழி கவிதைக்கும் புதுக்கவிதை போக்கிற்கும் இடைப்பட்ட இருகரையும் தழுவி வழியும் போக்கினைக் கொண்டிருந்தது.அவரது பிற்காலக் கவிதைகள் அதாவது சிதைந்து போன தேசமும் சேர்ந்து போன மனக்குகையும் எனும் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் மரபுக்கவிதையிலிருந்து விலகியிருப்பதைக் காணலாம்.1998 இல் வெளிவந்த நீர்வளையங்கள் என்ற தொகுப்பி உடாக இலக்கியவுலகில் குறிப்பாக கவிதையுலகில் நிலையான இடத்தைப்பெற்றதோடு அதன் பிறகு 2010 இரண்டாவது தொகுதியில் தனது அல்லலையும் ஆதங்கங்களையும் சிதைந்து போன தேசமும் சேர்ந்து போன மனக்குகையும் எனும் கவிதைத் தொகுப்பில் வெளிப்படுத்துகின்றார்.இந்த இரண்டாவது தொகுப்பு ஒரு காவியம் போலவே தொகுக்கப்பட்டுள்ளது. அவரது கவிதைகளில் கணிசமானவை அவரைப் பற்றிய கவிதையாகவுள்ளதுடன் குறியீடுகளாகவும் படிமங்களாகவும் அமைந்திருக்கும் என பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களின் கூற்றுக்கூடாக அறிய முடிகிறது.ஒரு சுதந்திரமான தேசத்தை கணவு கண்டவர் என்பதற்கு ஆதாரமாய் 1985 இல் எழுதிய காவல் அரன் எனும் கவிதையை ஆதாரமாய் குறிப்பிடலாம். மீட்கப்பட்ட தமிழ் மண்ணில் எனது சைக்கிள் உருண்டோடும் வெறிச்சோடிய தெருக்களின் பகல் பொழுதில் பழுத்த இலைகள் உதிர்ந்து கிடக்கும். அதே போல் இனங்களுக்கிடையிலான உறவுப் பாலமாய் திகழ்ந்து,1987 இல் இந்திய சிப்பாய்கள் காலடி பதித்த போது நிகழ்ந்த அநீதிகளை கவிதைகளுக்கூடாக புடம் போட்டவர்.நண்டும் முள்முருக்கம் வும், வெளியார் வருகை,ஆக்காண்டி ஆக்காண்டி, நிலவும் வழிப்போக்கனும், மறுதலை போன்ற கவிதைகள் முற்றிலும் மாறுபட்ட வெளிப்படுத்தலைக் கொண்ட கவிதைகளாக அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டம் மனிதனை ஒரு மண்புழுவாக வீழ்ச்சியடைய வைத்த வரலாற்றை உருவகமாகக் கூறுவதுடன் மனிதனை மண்புழுவாகக் காணும் படிமம் எம் உள்ளுணர்வை உலுப்புவதுடன் யுத்தம் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த கவிதைகளுள் வீழ்ச்சி என்ற கவிதையும் உள்ளடங்கும். காய்ந்த சருகுபோல் ஒரு மண்புழு ஊர்ந்து கொண்டிருந்தது படியோரம் நான் மனிதன் என்ற இரக்கம் மீ அதனைப் பார்த்து விட்டுப் போனேன் ஒரு கணம் சுர் என்று சருகு இரைதல் போல் கேட்டது திரும்பிப் பார்த்தேன் மண்புழு வாலில் நின்றது… வாயைத் திறந்தது கூரிய பல்தெரிய நாக்கு எங்கே என நினைக்கையில் நாக்கிலிருந்து தீச்சுவாலை பறந்தது. மண்புழுவுக்கு பல் ஏது? நாக்கு ஏது? நினைக்கையில் தெரிந்தது மண்புழு உருமாறி விட்டதென்று எனினும் அஞ்சவில்லை குனிந்தேன் தடி எடுக்க நிமிரும்போது மண்புழுவின் கையில் துப்பாக்கி இருந்தது அல்ல ஒரு பாம்பின் கைத்துப்பாக்கி அதுவும் அல்ல ஒரு சிப்பாயின் கைத்துப்பாக்கி நான் குனிந்து பாம்பாய் நெளிந்து காய்ந்த சருகின் மண்புழு ஆகி ஊர்ந்து கொண்டிருக்கிறேன் படியோரம் எகிப்தின் தெருக்களிலேஇவெளியார் வருகைஇஆக்காண்டிஇபிரியாவிடை போன்ற கவிதைகளுள் முதல் மூன்றும் அரசியற் கவிதையாக அமைவதுடன் எகிப்தின் தெருக்களிலே கவிதையானது “தெருக்களில் மக்கள் எழுச்சி பெறுவதை கருவாகக் கொள்ள”இ“அதிகாலை கனவை வெளிப்படுத்துவதாக வெளியார் வருகை” எனும் கவிதை அமைய “நாட்டார் பாடலின் தோற்றத்தில் எளிமையாய் மிக ஆழமான அர்த்தங்களோடு எழுதப்பட்ட கவிதையாக ஆக்காண்டி கவிதை அமைகிறது. காற்றிடையே,ஆக்காண்டி ஆக்காண்டி,வெளியார் வருகை, போன்ற கவிதைகளில் மாக்சியக் கருத்துக்கள் உள்ளடக்கமாக அமைவதோடு பிரச்சாரமின்றிய கவிதையாகவும் அமைகின்றன.சண்முகம் சிவலிங்கம் என்றாலே ஆக்காண்டிப் பாடல் தான் ஞாபகம் வரும்.ஆக்காண்டி என்ற நாட்டார் பாடலில் தனது குஞ்சுகளை ஒவ்வொன்றாக இழந்த தாய்ப்பறவையின் சோகம் காற்றில் இழந்து வருவதை எல்லோரும் அறிவர்.“அதே ஆக்காண்டிப் பாடலை அடிப்படையாக வைத்து சண்முகம் சிவலிங்கம் எழுதிய பாடலும் எங்கள் வாழ்க்கையைப் பாடும் பாடலாக அமைந்திருந்தது”.1968 ஆம் ஆண்டு சசியினால் இயற்றப்பட்ட ஆக்காண்டி கவி வரியானது நீர் வளையங்கள் எனும் கவிதைத் தொகுப்பினுள் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘நீர் வளையங்கள்’(1988)‘சிதைந்து போன தேசமும் சேர்ந்த போன மனக்குகையும்’(2010) ஆகிய இரு கவிதைத் தொகுதிகள் வெளி வந்திருக்கின்றன. ‘சிதைந்து போன தேசமும் சேர்ந்த போன மனக்குகையும்’ என்ற தொகுப்பில் போருக்குப் போனாய் போ என்ற கவிதையே முதல் கவிதையாக அமைவதுடன்கவியாசிரியர் தம்மையே தம் மனக்குகையாக்கியுமுள்ளார். ஈழத்துக் கவிதைகள் பற்றிப் பேசுவோர் எவ்வாறு சண்முகம் சிவலிங்கத்தையோ அவரது கவிதைகளையோ தவிர்த்து விட்டுப் பேசமுடியாதோ அதேபோல் காண்டாவனத்தின் வருகையின் பின்னர் ஈழத்தின் சிறுகதைகள் பற்றிப் பேசுவோரும் சண்முகம் சிவலிங்கத்தையோ அவரது சிறுகதைகளையோ தவிர்க்க முடியாது என்பதும் உண்மையாகும். மருதமுனையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த முனைப்பு சஞ்சிகையில்மனிதநேயமும் மண்ணாங்கட்டியும்என்ற சிறுகதையும் விகம் சஞ்சிகையில் வெளிவந்து தடம் பதித்த “கன்னிகா” களம் சஞ்சிகையில் வேரூன்றிய “காலடி” குறுநாவல் போன்றன இலக்கியவுலகில் மெச்சக்கூடியதாய் அதிர்வு கண்டது.யாருமே தொட்டிராத வித்துவப் பணியினையும் அவருக்கான சிறப்பான தனியடையாளத்தையும் காணக்கூடியதாகவுள்ளது. ஈழத்தின் போர்க்காலச் சூழலை பின்னனியாகக் கொண்ட பல சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.காண்டாவனம் தொகுப்பிலுள்ள கதைகள், போர்ச்சூழலின் இன்னொரு தளத்தில் புதிய பரிமாணத்தில் எழுதப்பட்டிருக்கின்றது என்றால் மிகையாகாது.சசியின் சிறுகதைகள் அவருடைய கவிதைகள் போன்றே தனித்துவமாகவும் காத்திரமாகவும் தரமானதாகவும் விளங்குவதுடன் அவரது வாழ்க்கையாகவும் வாழ்க்கை அனுபவமாகவும் உள்ளன.அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் மனிதாபிமானத்தை அடையாளம் காட்டி நின்றது.. முக்கியமாகப் பால்நிலை மற்றும் பாலியல் தொடர்பான விசயங்களில் அவர் பல சிறுகதைகளை எழுதினார்.ஆனால் அவை விரச நோக்கத்துக்காக எழுதப்பட்டவையல்ல என்பதை மனங்கொள்வதோடு வாழ்வின் அடிப்படைகளை நோக்கிய பார்வையும் பயணமுமே சண்முகம் சிவலிங்கம் அவர்களின் எழுத்துலகப் பயணமாக அமைந்தது. சசியின் ஆரம்ப காலக் கதைகள், சில சம்பங்கள் புனைவுத் தருக்கத்தைக் கொண்டமைந்த கதைகளாகவுள்ளன.எடுத்துக்காட்டாக மழை,அது வேறு ஆள் , நீக்கம், தொலைவும் மீட்பும் போன்ற கதைகளைக் கூறலாம். “கதை அதனுடைய புனைவுத் தருக்கத்தில் சுவாரஸ்யப்பட முடியுமானால் மாத்திரமே தன்னால் திருப்தியுற முடியுமென்று”கதையாசிரியரான சசி அவர்கள் தனது காண்டவனம் கதைகள் பற்றிய குறிப்பில் குறிப்பிடுகிறார். கீற்று இதழில் வெளியான அது வேறு ஆள் என்ற கதையும் அலையில் வெளியான நீக்கம் கதையும் இருப்பியல் சார்புடையதாகவேயுள்ளது.தனக்கு திடீரென ஏற்பட்டதென ஒருவன் நினைக்கின்ற தனது ஆனந்தமான சலனமற்ற நிலைக்கான காரண காரியத்தை பின்னோக்கி ஆராய்வதினால் ஏதோ ஒரு காரணத்தை கண்டுபிடித்தது போலவும் அதே சமயம் அது நழுவிப் போவதாகவும்இமனித இருத்தலுக்கும் தர்க்க நியாயத் தொடர்புக்கும் உள்ள பிளவை வெளிப்படுத்துவதாக நீக்கம் கதையுள்ளது. மகாகவியின் “ஒரு சாதாரண மனிதனது சரித்திரத்தில்” மாத்திரம் அல்லாமல் ஏனைய பல கவிதைகளிலும் காணப்படும் முனைவும், உழல்வும் சகிப்பும் இருத்தலின் நித்திய நிலையே எனக்கூறுவதுடன் தனது சில கவிதைகளிலும் கதைகளிலும் இருப்பியல் புலப்பாடுகளை காணக்கூடியதாக இருக்கும் என கூறுகின்றார்.மல்லிகையில் வெளியான மழை சிறுகதையானது “மழையுடன் விடிந்த ஒரு நாட் காலைப் பொழுதின் உண்மை அனுபவத்தைக் கொண்டமைவதோடு புறவியமான காரண காரிய நியாயத்தின் குறியீடாக அமைந்துஇமழைக்கும் அப்பால்தான் அவன் அன்று பாடசாலைக்குப் போகாத காரணம் உள்ளது என கூற விழைகிறார். சமூக அரசியல் மற்றும் போர்க்காலக் கவிதைகளை உயிரோட்டமுள்ளதாக்கியதுடன் பாட்டாளி மக்களுக்காகவும் தன் பேனா முனையினை குனிய வைத்தவர்.திசைமாற்றம்(1957)மனிதநேயமும் மண்ணாங்கட்டியும்(1980)இகாண்டாவனம்(1985) உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்(1987) காட்டுத்தோடை(1987) உட்சுழிகள்(1988)போருக்குப் போனவர்கள்(1984) வாலிவதையும் வானரச் சேனையும் (1988) மரணப்ட்டு வெளியேற்றம்(1990) பிரமாண்டம் நோக்கி(1990)படைகள் நகர்ந்த போது(1990)பிரகத்தம்(1989)தொலைந்து போன கிரகவாசி (1992) (1999)இகாலடி(1987) போன்ற சிறுகதைகள் காண்டாவனம் எனும் நுலிலுள்ள கதைகளாகும்.காண்டாவனத்திலுள்ளபதினாறு கதைகளில் (16)‘திசைமாற்றம்’,‘மனிதநேயமும் மண்ணாங்கட்டியும்’,‘காலடி’ ஆகிய கதைகள் ஏற்கனவே சஞ்சிகைகளில் பிரசுரமானவை.‘பிகாத்தம்’ என்ற கதை 2013 இல் அவரது ஓராண்டு நினைவாக வெளியிடப்பட்ட ‘நினைவுவெளி’ என்ற நுலில் இடம்பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.ஏனையவை இதுவரை பிரசுரமாகாத கதைகளாகும். நீர்வளையங்கள்(1988)சிதைந்து போன தேசமும் சேர்ந்த போன மனக்குகையும்(2010) ஆகிய இரு கவிதைத் தொகுதிகளுக்கூடாகவும் காண்டவனம் எனும் சிறுகதைத் தொகுதிக்கூடாகவும்(2001),ஓராண்டு நினைவஞ்சலிக்காக வெளியிடப்பட்ட நினைவுவெளி எனும் Áலுக்கூடாகவும்நண்பர்களுக்கூடாகவும் சண்முகம் சிவலிங்கம் அவர்ளின் கலையிலக்கிய வரலாற்றுப் பதிவை அறியக்கூடியதாகவுள்ளது. நாட்டில் அவ்வப்போது தோன்றிய அவசரகால அசாதாரண நிலைமைகளின் போது தனது கவிதைகள்இசிறுகதைகள் பலவற்றை எடுத்துஎரித்துச் சாம்பலாக்கியதோடு 1978இல் கிழக்கிலங்கையில் வீசிய சூறாவளியினாலும் அவரது பல படைப்புக்களின் கையெழுத்துப்பிரதிகள் அநேகம் மழைக்காற்றில் கரைந்து அழிந்து விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் மிக முக்கியமானவை.அதாவது “அலை”யில் வெளிவந்த இருப்பியல் வாதம் பற்றிய கட்டுரை போன்றன விமர்சனத்தின் புதிய போக்குகளை இனங்காட்டத்தக்கவையாக இருக்கின்றது.சண்முகம் சிவலிங்கம் அவர்கள் மரணம் பற்றி எழுதிய கவிதையானதுஇமனிதன் ஒருவன் இறந்த பின்னர் நிகழும் யாதார்த்த நிலைமையினை புடம்போட்டுக் காட்டுகின்றது.இக்கவிதை யாவருக்கும் பிடித்தமான கவிதையாக அமைகிறது என்றால் மிகையாகாது. நான் மறைந்து விடுவேன் நான் இருந்தேன் என்பதற்கு எந்தத் தடயமும் இருக்காது ஆனால் எனது இருப்பு காற்றுக்குள் ஊதியிருக்கும் அதை நீங்கள் காணமாட்டீர்கள் எனது இருப்பின் வன்மம் அவலங்களின் சின்னமாய் இருக்கும் அதை நீங்கள் அறியமாட்டீர்கள் தொலைக்காட்சியில் வானொலியில் புகைப்படத்தில் அல்லது ஒரு பாராட்டுக்கூட்டத்தில் என்னை மலினப்படுத்த முடியாது ஒன்றும் இல்லாமைக்குள் எனது ஒரு கண் என்றும்… சிவப்பாய் இருக்கும் “யாருக்கும் தெரியாமல் நடுநிசியில் மறைந்து விடுவேன் என்னைக் காணமாட்டீர்கள்” எனும் கவி வரியினை எழுதியது மாத்திரமல்லாமல் 2012.04.20 அன்று தனது எழுபத்தைந்தாவது வயதில் இயற்கையாக மரணத்தைத் தழுவிக்கொண்டார்.அவரின் வெற்றிடம் இற்றைவரைக்கு எவராலும் நிரப்பப்பட முடியாத இடமாகவேயுள்ளது. சுருக்கமாகக் கூறுவதாயின் இலக்கிய ஆர்வலர்கள்இகலைரசனையாளர்கள் நிச்சயமாக கற்க வேண்டிய ஆளுமைகளுள் இவருமொருவராகும்.எந்த விடயத்திலும் பிரச்சாரத்தை விரும்பாததன் காரணமாகவே இவர் தன் படைப்புகளை பிரசுரிப்பதில் தயக்கம் காட்டினார் என்பதை அவரது நண்பரான பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் கூறுவதிலிருந்து புலப்படுகின்றது.இவர் தனது கவிதைஇசிறுகதைபோன்ற இலக்கிய படைப்புகளுக்கூடாக போர்க்காலச் சூழலை (1971 இல் கொழும்பு இனக் கலவரம்1983 லைக் கலவரம்) குறிப்பாக இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக் கெடுபிடிகளை புடம்போட்டுக் காட்டிய பெருமையும் இவரை மாத்திரேமே சாரும். கிழக்கிலங்கையில் குறிப்பாக சமூகத்தின் யதார்த்தப் பிரச்சினைகளை, மக்கள் எதிர்கொண்ட நடப்பியல் பிரச்சினைகளை ஒளிவு மறைவின்றி தனது கவிதைகளுக்கூடாகவும் சிறுகதைகளுக்கூடாகவும் கூறியது அவரின் இலக்கிய அரசியல் விமர்சன மேதாவிலாசத்தை இலக்கிய ஆர்வலர்களுக்கு எடுத்துரைப்பதாகவுள்ளது. கிழக்கிலங்கையில் ஊடகங்கள் பேசத் தயங்கிய பல விடயங்களை எந்தவித தயக்கமுமின்றி தனது கவி வரிகளுக்கூடாகவும் கதைகளுக்கூடாக பெரும்பான்மையினரின் அட்டூழியங்களை வெளிச்சத்திற்கு வெளிப்படுத்தியிருந்தார்.கிழக்கில் இலக்கியத்தில் ஈடுபட்டவர்களிற் பெரும்பாலானவர்கள் சண்முகம் சிவலிங்கம் அவர்களை ஆதர்சமாகக் கொண்டுள்ளனர் என்றால் மிகையாகாது. ஒரு வகையில் நாடறிந்த நாடகக்காரரான குழந்தை ம.சண்முகலிங்கத்தையும் (1931.11.15 -),தேசமறிந்த இலக்கியக்காரரான சண்முகம் சிவலிங்கத்தையும் (1936-2012.04.20 ஒப்பு நோக்;கக்கூடியதாகவுள்ளது. யாழ்ப்பாண திருநேல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட கு.ம.சண்முகலிங்கம் அவர்கள் தனது நாடக எழுத்துருக்களுக்கூடாக தம் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் சவால்களையும் பாத்திரங்களுக்கூடாக வெளிப்படுத்த கிழக்கிலங்கையில் தம் மண்ணின் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை தனது கவி வரிகளுக்கூடாகவும் கதைகளுக்கூடாகவும் வெளிப்படுத்தியிருந்தார்.இவ்விருவரையும் போர்க்கால உளவியல் படைப்புகளை சமூகத்துக்காக படைத்தளித்த பெருந்தகைகளாக கொள்வதில் எந்தவித வியப்புக்குரிய விடயமுமல்ல.இவ்விருவரும் எக்காலத்துக்கும் போற்றப்படவேண்டியவர்களாவதுடன் ஆய்வுக்கூட்படுத்த வேண்டியவர்களுமாவர். முற்றும் பாக்கியராஜா மோகனதாஸ்(நுண்கலைமாணி) துறைநீலாவணை |
18.03.17- சுவாமி நடராஜானந்த ஜீயின் 50வது சிரார்த்ததினம்..
தமிழ்கூறு நல்லுகிற்கு முதல் தமிழ்ப்பேராசிரியராம் சுவாமி விபுலானந்த அடிகளாரை ஈன்றளித்த கிழக்கின் காரைதீவு மண் மற்றுமொரு சேவைத்துறவியையும் ஈன்றளித்தது. அவர்தான் சுவாமி நடராஜானந்த மஹராஜ். சேவைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த சுவாமியின் 50வது சிரார்த்ததினம் இன்று (18.03.2017) ஆகும். அம்பாறை மாவட்டத்தில் பழம்பெரும் சிறப்பு வாய்ந்த காரைதீவு மண்ணிலே கிழக்கு வானின் விடிவெள்ளியாக இரு கண்மணிகள் அவதரித்தனர். அவர்களில் ஒருவர் உலகம் போற்றும் 'யாழ்நூல் வல்லோன்' உலகின் 'முதற்றமிழ் பேராசான்' 'முத்தமிழ் வித்தகர்' சுவாமி விபுலானந்தர் மற்றையவர் 'உத்தமத்துறவி' 'சேவையின் சிகரம்' 'ஏழையின் சிரிப்பினில் இறைவனைக்கண்ட பொதுநெறிப்பெரியார்', 'நடமாடும் தெய்வம்', 'ஏழைச்சிறுவர்களின் வாழ்வில் கல்வி எனும் சுடரை ஏற்றி மறுமலர்ச்சியை தோற்றுவித்த சேவாதிலகம்', 'ஏழைகளின் இல்லங்களில் ஒளியூட்டிய ஞானசூரியன்' சுவாமி நடராஜானந்தர் வரலாற்றுச்சுருக்கம்! மட்டக்களப்பு மாநிலத்தின் இராமகிருஸ்ணமிசன் மடாலயத்திலிருந்துகொண்டு இலங்கையிலிருந்த 26 மிசன்பாடசாலைகளையும் கவனித்து முகாமையாளராக சீரிய சேவையாற்றிய சுவாமி நடராஜானந்தா 1903.நவம்பர் மாதம் 29ஆம் திகதி காரைதீவில் கதிர்காமத்தம்பி விதானையாருக்கும் மயிலம்மாவிற்கும் மகனாக அவதரித்தார். கேம்பிரிச் சீனியர் லண்டன் மொற்றிகுலேசன் பரீட்சைகளில் சித்திபெற்று ஆசிரியராக நீர்ப்பாசன பொறியியல்உதவியாளராக சேவையாற்றி இ.கி.மிசனில்1935இல் இணைந்தார். முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நெருங்கிய தொடர்பையடுத்து நிர்வேதசைதன்யர் எனும் துறவறப்பெயருடன் துறவறம் புகுந்து சுவாமி அகண்டானந்தரை குருவாகக்கொண்டு சுவாமி நடராஜானந்தரானார். 1967.03.18ஆம் திகதி அதிகாலை பகவான் ஸ்ரீ ராமகிருஸ்ண பரமஹம்சரின் திருவுருவப்படத்தை மார்பில் தாங்கியவண்ணம் இறைவனடி சேர்ந்தார். வரலாறு கார்காத்த வேளாள மரபிலே கதிர்காமத்தம்பி விதானையாருக்கும் மயிலம்மாவிற்கும் மகனாக 1903ம் ஆண்டு கார்த்திகை மாதம் 29ம் திகதி இப்பூவுலகில் அவதரித்தார். அவரது பிள்ளைத்திருநாதம் சிதம்பரப்பிள்ளை. இவரை செல்லமாக சீனிவாசகம் எனவும் அழைத்தனர். சீனிவாசகம் தனது ஆரம்பக்கல்வியை காரைதீவு ஆண்கள் பாடசாலையிலும் அடுத்து கல்முனை ஆர்ச் மரியாள் ஆங்கிலக்கல்லூரி மற்றும் மட்டக்களப்பு ஆர்ச் மைக்கேல் கல்லூரியிலும் பெற்று சிறந்த மாணவனாகத் திகழ்ந்தார். சுவாமிகள் கேம்பிரிச் சீனியர் பரீட்சை, லண்டன் மெற்றிக்குலேசன், ஆங்கில ஆசிரியர் தராதரப்பத்திரம் போன்ற பரீட்சைகளில் தேறி சிறந்த ஓர் ஆசானாக தன்னை உயர்த்திக்கொண்டார். தனது கல்விப்பேற்றினால் திருகோணமலை இந்துக்கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம், யாழ் வைத்தீஸ்வரா வித்தியாலயம் ஆகியவற்றில் தனது ஆசிரியத் தொழிலை சீராகச் செய்து தனது உன்னத பணியின் பேறாக சிறந்த கல்வியறிவுள்ள மாணவச் செல்வங்களை உருவாக்கினார். ஆசிரியத் தொழிலின் புனிதத்தன்மைக்குச் சான்றாக விளங்கியவர் சுவாமிகள். இவரிடம் கற்றோர் பின் பல கலைகளிலும் சிறந்து விளங்கி உயர் பதவி வகித்தனர். இவர் ஆசிரியர் தொழிலை விட்டு நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பொறியியல் உதவியாளராகவும் பணியாற்றினார். செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தும் அழியும் பொருளின் மேல் பற்றறுத்து அழியாப்பேரின்பப் பெருவாழ்வான துறவு வாழ்வின் மேல் அவரது மனம் நாட்டம் கொண்டது. இராமகிருஷ்ண சங்கத்தின் பணிகளும், தொண்டுகளும், கடமைகளும் சுவாமிகளை மிகவவும் கவர்ந்தன. அதன் காரணமாக தனது பதவியை துறந்தார். அவ்வேளையில் சிதம்பரப்பிள்ளையின் உறவினரான சுவாமி விபுலானந்தரின் அருட்பார்வையால் கவரப்பட்டு இராமகிருஸ்ண சங்கத்தில் சேர்ந்து 'நிர்வேத சையதன்யர்' எனும் பிரமச்சரிய நாமம் பெற்று துறவுநிலை பூண்டார். ரங்கூனில் இராமகிருஷ்ண சங்கத்தால் நடாத்தப்பட்ட இலவச மருத்துவமனையில் வைத்தியர்களுக்கு உதவியாக நோயாளிகளுக்கு வேண்டிய சிறந்த சேவையாற்றினார். 2ம் உலகப்போரின்போது வீசப்பட்ட குண்டின் காரணமாக ரங்கூன் பிரதேசம் முற்றாக பாதிக்கபட்டு மக்கள் அகதிகளாயினர். சுவாமிகளும் அகதியாக கல்கத்தாவை வந்தடைந்து பின் தாய்நாடு திரும்பினார். 1943ம் ஆண்டு கல்கத்தா நகரிலுள்ள இராமகிருஷ்ண சங்கத்தலைமையகத்தில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச்சீடரான சுவாமி அகண்டானந்தரைக் குருவாகக் கொண்டு சந்நியாச தீட்சை பெற்று 'சுவாமி நடராஜானந்தர்' எனும் தீட்சா நாமம் பெற்றார். பாரதத்தின் நாட்டறப்பள்ளி, உதக மண்டலம் போன்ற பல இடங்களிலும் கடமையாற்றினார். பின் மட்டக்களப்புக் கல்லடியில் அமைந்துள்ள சிவபுரியில் தங்கியிருந்து 26 இராமகிருஸ்ண சங்கப்பாடசாலைகளினதும் 3 சிறுவர் இல்லங்களினதும் முகாமையாளராக அரும்பணியாற்றினார். சுவாமி நடராஜானந்தர் முகாமையாளராகப்பணியாற்றிய காலம் மிவும் கஸ்டமான காலமாகும். இல்லக்குழந்தைகளுக்குரிய உணவு, உடை, உறையுள் போன்ற முக்கிய தேவைகளுக்குக் கூட பஞ்சம் நிலவிய காலம். 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என நினைத்து வாழ்ந்த சுவாமிகள் சுவாமிகளுக்குரிய ஒரு இலக்கணமாகத் திகழ்ந்தார் அறுவடைக்காலங்களில் சாக்கினைத் தோளில் போட்டுக்கொண்டு களவெட்டிகளுக்குச் சென்று அங்கு போடிமார் கொடுக்கும் நெல்லையும், பொருட்களையும், பணத்தையும் கொண்டு பெற்றோரை இழந்த விடுதிக்குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றினார். அதுமட்டுமன்றிஇ தாயாய் அன்புகாட்டி அரவணைத்து, தந்தையாய் கல்வியறிவூட்டி, இல்லச்சிறுவர்கள் நோயுற்றவேளை இரவு பகல் பாராது விழித்திருந்து சேவையாற்றும் போது சேவகனாகவும் உன்னத பணிகள் செய்தார். அது மட்டுமன்றி உடற்பயிற்சி, யோகாசனம், ஆன்மீகம் என்பவற்றை இல்லக்குழந்தைகளுக்கு சாதனை முறையில் பயிற்றுவித்தார். சகல இன மத மாணவர்களையும் ஒன்று சேர்த்து கல்விஇ மனிதப்பண்புகள், சமய சிந்தனை, சகோதரத்துவம் என்பவற்றிலே மாணவர்களது மனதை ஒருமுகப்படுத்தியவரும் இவரே. கண்ணை இமையிரண்டு காப்பது போல இல்லக்குழந்தைகளை வண்ணமறக் காத்து நின்றவர்தான் சுவாமி நடராஜானந்தர். 'இங்கிவரை நாம்பெறவே என்ன தவம்செய்தோம்' என அன்று அந்த இல்லச்சிறுவர்கள் அகமகிழ்ந்தனர். சுவாமிகள் தனக்கென்று ஏதும் விசேடமாக செய்து உண்ணமாட்டார். உடை விடயத்திலும் அப்படியே. 'மூன்று சோடி உடுப்பு ஒரு மனிதருக்குப் போதும்' என்பார். இது போல இறுதி மூச்சவரை வாழ்ந்து காட்டினார். சுவாமிகளின் மேற்பார்வையில் இருந்த சிவானந்தா இல்லம், காரைதீவு மகளிர் இல்லம், ஆனைப்பந்தி மகளிர் இல்லம் ஆகிய இல்லங்களிலுள்ள குழந்தைகளின் தேவைகளையும் கடமைகளையும் நிறைவேற்றவேண்டிய பாரிய பொறுப்பு சுவாமிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சிவபுரியில் இருந்தவாறு சுவாமிகள் எதற்கும் மனந்தளராது தனது கடமைகளை செவ்வனே செய்து சேவா திலகமாகத் திகழ்ந்தார். உண்மைத்துறவியாக, சேவையின் சிகரமாக ஏழைக்குழந்தைகளின் அன்பு அன்னையாக நல்லாசானாக குன்றிலிட்ட தீபம் போல் பிரகாசித்த எமது அன்புத் தெய்வம் 1967ம் ஆண்டு பங்குனி மாதம் 18ம் திகழி சனிக்கிழமை அதிகாலை 04.30 மணியளவில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தை தனது மார்பிலே அணைத்த வண்ணம் இறைவன் திருவடி நீழலை அடைந்தார். அமர ஜோதியாம் நடராஜானந்த ஜோதி அணையாத ஜோதியாக இறையடியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை. விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா சுவாமி நடராஜானந்த நூற்றாண்டுவிழாக்குழுச் செயலாளர் காரைதீவு |
08.01.17- இலங்கையில் இந்து,பௌத்த சமய நடைமுறைகள் ஓர் ஒப்பீடு..
இத்தலைப்பினுடே இந்து பௌத்த சமயங்கள் பற்றிய அறிமுகம் இலங்கையில் இந்து, பௌத்த சமயங்கள் தோன்றிய வரலாற்று பின்ணணிகள். பல்வேறு கால கட்டங்களிலும் இடம் பெற்ற சமய நடைமுறைகள் என்பவை நோக்கப்பட்டுள்ளன. இந்து சமயம் உலகில் நின்று நிலவும் பல்வேறு சமயங்களிலே காலத்தால் முந்திய சிறப்பும் தொன்மையும் கொண்ட சமயமாக இந்து சமயம் போற்றப்படுகிறது. இந்து என்ற சொல் சிந்துவெளியில் வாழ்ந்த மக்களால் கடைப்பிடிக்கப்பபட்ட ஒரு சொல் ஆகும் இதன் மூலம் சிந்து வெளிகால மக்களால் கடைப்பிடிக்கப்பட்ட சமயம் என்பதையும், இந்திய மக்களால் கடைப்பிடிக்கப்பட்ட சமயம் என்பதை சுட்டும் விதமாக வெளி நாட்டவராகிய பாரசீகர், கிரேக்கர் தமது மொழியிலே ஹிந்து என கூறப்பட்ட சொல் மருவி இந்து என அழைக்கப்பட்டது என்பர். கிமு 6 ஆம் நூற்றாண்டில் மத்திய கங்கை சமவெளிகளில் பல்வேறு சமயப்பிரிவுகள் தோன்றின அச்சமயம் 62 சமய பிரிவுகளாக இருந்ததாக நாம் அறிகின்றோம். இவற்றில் பல சமயப்பிரிவுகள் பிராந்திய பழக்க வழக்கங்களையும் வடக்கு,கிழக்கு இந்தியாவில் பல தரப்பட்ட மக்கள் அனுட்டித்து வந்த சமயவினை முறைகளையும் அடிப்படையாக கொண்டமைந்தன என்றும் இச்சமய பிரிவுகளில் சமணமும் பௌத்தமும் மிகவும் ஆற்றல் வாய்ந்த சீர்திருத்த இயக்கங்களாக உருவேடுத்து வளர்ந்தன என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறான சமயங்கள் தோன்ற காரணம் யாது என நோக்கின் ஒரு சமயத்தில் ஏற்படும் குறைபாடுகள் இன்னோரு சமயத்தின் எழுச்சிக்கு காரணம் எனலாம். இலங்கையில் இந்து,பௌத்த சமயங்கள் தோற்றம் பெற்ற வரலாற்று பிண்னணியை நோக்கும் போது பாக்குத் தொடுவாயில் பிரிவுண்டிருப்பினும் பாரத நாட்டிற்கு மிக அண்மையில் இலங்கை அமைந்துள்ளால் அந்த நாட்டின் சமய கலாசாரத்தின் படர்ச்சி இங்கும் பண்டைய காலம் தொட்டே திகழ்ந்துள்ளமை இயல்பேயாகும். வரலாற்றுக்கு முன்பிருந்தே இலங்கையில் இந்து சமயம் பரவியிருந்து இன்றும் தொடர்வது குறிப்பிடதக்கது. இராமாயண இதிகாச காலத்திலேயே இலங்கையும் அதன் அரசனான இராவணன் பற்றிய செய்திகளை அவ்விலக்கியத்தினுடே அறியலாம். இதன் மூலம் இராவணன் ஒரு சிவபக்தன் என்பதும், அவனது பட்டத்துராணி மண்டோதரி சிவவழிபாட்டினை மேற்க்கொண்டாள் என்பதையும் இராமாயணத்தினுடே அறியக்கூடிய செய்தியாகும். இலங்கையிலே வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த சாதியினர் இயக்கர் எனப்படுவோர். இராவணன் இயக்கன் எனவும், இலங்கையில் முதல் குடியேறியான விஜயன் இலங்கைக்கு வந்த போது தன் மனைவியாய் ஏற்றவள் குவேனி என்பாள் அவள் இயக்கி என்பதும் வரலாற்று நூலாகிய மகாவம்சம் மூலம் அறியக்கூடிய செய்தி தமிழிலே வந்த யாழ்ப்பாண வைபவமாலை விஜயனை இந்து மதத்தினன் என கூறுகிறது. எனவே இவற்றை அடிப்படையாக கொண்டு இலங்கையில் இந்து சமயம் பரவிய வரலாற்றை அறிலாம். பௌத்த சமயத்தை நோக்கும் போது தெராவாத பௌத்தம் பெருவாரியாக விளங்கும் தெற்கில் உள்ள நாடுகளில் தொடங்கினால் முதலில் இலங்கை காணப்படுகிறது இங்கு பெருவாரியாக பௌத்தர்களே காணப்படுகின்றனர் இங்கு அரச மதமாக பௌத்தமே காணப்படுகிறது இலங்கை தீவு பௌத்த சமய பண்பாட்டை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பௌத்த சமய வரலாற்று ஆதாரங்களின்படி கி.மு 250 ல் அசோகசக்கரவர்த்தியின் தூதுவரான மஹிந்தா என்ற துறவியால் பௌத்த சமயம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது மஹிந்த தேரருடைய துறவிகளால் முதன் முதலாக அனுராதபரத்தில் மடாலயம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் வழியே பௌத்த சமயம் பரப்பட்டது என கூறப்படுகின்றது. சமய நடைமுறைகள் பற்றி நோக்கும் போது இந்து,பௌத்த சமயங்களின்தெய்வங்கள், சடங்குகள்,சம்பிரதாயங்கள், வழிபாடுகள், பண்டிகைகள்,விழாக்கள் போன்றவற்றின் மூலம் சமய நடைமுறைகளை அறிந்து கொள்ளலாம். இந்துக்களுக்கான சமய நடைமுறைகளை பௌத்தர்களும் பௌத்தர்களுக்கான சமய நடைமுறைகளை இந்துக்களும் காலத்துக்கு ஏற்ற வகையில் உள்வாங்கி செயற்படுகின்றமை குறிப்பிடதக்கது. அந்தவகையில் இந்து தெய்வங்களாகிய முருகன் கணபதி சிவன் போன்ற தெய்வங்களை பௌத்தர்கள் வழிபடுகின்றனர் உதாரணமாக கதிர்காம ஸ்ரீமுருகப்பெருமானை கதரகம தெய்யோ என வழிபடுவதை கூறலாம். கதிர்காத்தில் இந்து பௌத்த ஏனைய சமயத்தவர்களுக்குரிய வழிபாட்டுத்தலங்களும் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பிற்குரியதாகும் கதிர்காம முருகன் ஆலயத்திற்கு இந்துக்களை போன்று பௌத்தர்களும் பாதயாத்திரை சென்றும் நெர்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டு வருகின்றமை இந்து சமயத்தின் சிறப்பை மேலும் மேருகூட்டுகிறது. இந்துக்கள் கௌதம புத்தரை வி~;னுவின் அவதாரமாக பாவித்து வழிபடுகின்ற வழமை இலங்கையில் காணப்படுகின்றது. பௌத்த சமய சிறு தெய்வங்களாகிய மணிமேகலை,தாராதேவி போன்ற தெய்வங்களை இந்து சமயம் ஏற்றுக்கொண்டுள்ளது மணிமேகலை தெய்வத்தை இந்து சமய ஆலயங்களில் பரிவார தெய்வங்களுள் ஒன்றாக காணலாம் ஆதி காலம் தொடக்கம் இன்றுவரை இந்து தெய்வங்களுக்கான ஆலயங்கள் அமைக்கப்பட்டன விஜயன் ஒரு பௌத்த சமயத்தை சார்ந்த அரசனாக காணப்பட்ட போதும் அவனால் நான்கு திசைகளிலும் நான்கு சிவன் ஆலயங்கள் அமைக்கப்பட்டமையை எடுத்துக்காட்டாக கூறலாம். இது ஏனைய மதங்களுக்கு அரசர்கள் வழங்கிய முக்கியத்துவம் எடுத்துக்காட்டப்படும் அதேவேளை அக்கால மக்கள் இந்துசமய நடைமுறைகளையும் உள்வாங்கியவர்களாக காணப்பட்டார்கள் என்பது இதன் மூலம் வெளிப்படுகின்றது. இந்து சமயத்தில் கூறப்படும் மற்றுமோரு முக்கியமான விடையம் நான்கு ஆச்சிரமங்கள் பிரம்மச்சரியம் கிருகஸ்தம் வானப்பிரஸ்தம் சன்னியாசியம் என்பன இதில் பிரம்மச்சரியம் கல்வி கற்கும் நிலை, அதாவது குருகுலகல்வியை மேற்கொள்ளும் நிலையாகும். இந்நிலையில் குருவிற்கு பணிவிடை செய்து குரு ஓய்வாக உள்ள நேரங்களில் குருவிடம் இருந்து கல்வியை பெற்றுக்கொள்ளலாகும். இம்முறையானது இலங்கையை பொறுத்தவரையில் இந்து சமயத்தவர்களிடம் சற்று குறைவாகவே காணப்படுகின்றது. ஆனால் பௌத்தர்களிடம் மிக முக்கிய ஒரு நிலையாக கருதப்படுகின்றது. இலங்கையை பொறுத்தவரை பௌத்த தூறவிகளை பிக்குகள் எனவும் துறவற பெண்களை பிக்குனிகள் எனவும் அழைக்கும் வழக்கம் காணப்படுகின்றது. இந்து சமயத்தில் குருக்கள் என அழைக்கும் வழமையும் காணப்படுகிறது. பௌத்த துறவிகளுக்கு சமூகரீதியாக மதிப்பும் மரியாதையும் சமயரிதியாக முதலிடமும் அதாவது பௌத்தசமயத்தை போதிப்பவர்களாக அவர்கள் மதிக்கப்படுகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது இந்து சமயத்தில் துறவிகள் காணப்படுகின்றனர் மத போதகர்களாக அன்றி ஆலய வழிபாடு கிரியைகளை ஆற்றுபவராக காணப்படுகின்றார். இரு சமய துறவிகளும் சமய வழிபாட்டுமுறை அடிப்படையில் வேறுபட்ட நடைமுறைகளையே பின்பற்றுகின்றனர். இந்து,பௌத்த சமய நடைமுறைகளுள் ஒன்றாகிய ஆசிபேறும் விடையம் .ஏதாவது ஒரு விடையத்தை ஆரம்பிக்கும் போது எங்காவது தூர பயணங்களுக்கு செல்லும் போது இரு சமயத்தவர்களும் தங்களது தாய் தந்தை பெரியோர் அல்லது சமயஸ்தலங்களுக்கு சென்று குருவிடம் ஆசி பெற்று செல்கின்ற வழமை காணப்படுகின்றது. எந்த ஒரு விடையத்தை ஆரம்பிக்கும் முன்பும் இறைவனை வணங்கிவிட்டு ஆரம்பிக்கின்ற வமையானது பொதுவான ஒன்றாக காணப்படுகின்றது. பௌத்தர்களிடையே மடங்களை அமைக்கின்ற முறையானது காணப்படுகின்றது இலங்கையின் பல இடங்களிலும் துறவியர்களுக்கான மடங்கள் அமைக்கப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன உதாரணமாக அஸ்கிரியபீடம்,மல்வத்துபீடம் போன்றவற்றை கூறலாம் இங்கு துறவியர் கூட்டத்தினர் தங்கியிருந்து சமய போதனைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது இந்துக்களுக்கான மடபாரம்பரியடி முறையானது ஆதிகாலத்தில் அதிகமாக காணப்பட்ட போதும் தற்காலத்தில் சற்று குறைவாகவே காணப்படுகின்றது ஒரு சில இந்துசமய நிறுவனங்கள் இந்துசமயத்தை வழம்படுத்தும் முயற்சியில் இந்துசமய விருத்திச்சங்கம்,விவேகானந்த சபை போன்றவை அழிந்து போகும் சமய நடைமுறைகளை கிராம,நகர மட்டங்களில் உயர்ச்சியடைய செய்து வருகின்றமை குறிப்பிடதக்கது குறிப்பாக மலையகம், கிழக்கு பகுதிகளில் காணப்படும் காயத்திரி பீடங்கள் வாயிலாகவும் சமய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.தியானம் செய்தல் என்ற விடையத்திலும் ஒத்த நடைமுறையை உடையதாக காணப்படுகின்றது ஆதிகாலத்தில் இந்து சமயத்தவர்கள் ஆச்சிரமங்களில் தியானத்தை மேற்கொண்டனர் தற்காலத்தில் இலங்கையில் ஆச்சிரம முறை வழக்கிழந்த நிலையில் இந்துக்கள் மன அமைதிக்காக காயத்திரி பீடங்களிலும், ஆலயங்களிலும் தியானம் மேற்கொள்கின்றனர் இதே போன்று பௌத்த சமயத்தவர்களும் விகாரைகளிலும் தங்கள் மடாலயங்களிலும் தியானத்தை மேற்கொள்கின்றமை குறிப்பிடதக்கது. பஞ்சமா பாதங்களாக கருதப்படும் கொல்லாமை, கல்லாமை, கள்ளுண்ணாமை புலால் மறுத்தல் பிறர்மனை விளையாமை போன்ற சமய நடைமுறைகளை இந்து,பௌத்த சமயிகள் ஆகிய இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது இதனை இரு சமய துறவியரும் விடையமாக பின்பற்றுகின்றமை எடுத்து காட்டதக்கது. சில விடையமாக தினங்கள் என்ற அடிப்படையில் இரு சமயத்தவர்களது சமய நடைமுறைகள் ஒத்ததாக காணப்படுகின்றது எடுத்துக்காட்டாக பூரணை தினங்களில் இந்து ஆலயங்களில் விN~ட வழிபாடுகள் இடம்பெறுவதை போலவே பௌத்த வணக்கஸ்தலங்களிலும் விடையமாக வழிபாடுகளும் போதனைகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்க ஒன்றாகும். இந்து சமயத்தில் காணப்படும் கையில் நூல் அணிதல் எனும் விடையத்தில் பௌத்த சமயிகளும் ஒற்றுமைப்பட்டு செல்கின்றனர் ஏதாவது ஒரு தேவை நிறைவேறுவதற்காக வேண்டி அல்லது காற்று கருப்பு அண்டாமல் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையின் நிமித்தம் இந்துக்கள் ஆலயத்திற்கு சென்று நூல் அணியும் வழக்கம் காணப்படுகின்றது இதனைப் போல பௌத்த சமயத்தவர்களும் விகாரைகளுக்கு சென்று அங்குள்ள குருவிடம் அதாவது பிக்குவிடம் நூல் அணிந்து கொள்ளும் வழமை காணப்படுகின்றது. வழிபாடு என்ற விடையத்தை எடுத்து நோக்கும் போது இருபாலாரும் வழிபாடுகளை மேற்க்கொள்ள செல்லும் போது சுத்தமான ஆடை அணிந்து வழிபாட்டுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு செல்வது நடைமுறையாக காணப்படுகின்றது. இந்து சமய ஆலய வழிபாட்டு முறைகளுள் ஒன்றான மகோற்சவம் என்ற விடையம் இதன் போது ஆலயத்தில் திருவிழா எடுத்தல் நிகழ்வு இடம் பெறும் இதே நிகழ்வு பௌத்தர்களிடையே பெரகேரா என்ற பெயருடன் காணப்படுகின்றது. பண்டிகை என்ற விடையத்தை நோக்கும் போது புது வருடப்பிறப்பு ஜனவரி முதலாம் திகதி இரு சமயத்தவர்களுடைய ஆலயத்திலும் விடையமாக வழிபாடுகள் இடம் பெறுவது வழமை இது ஒரு சமய நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகின்றது. சித்திரை வருடப்பிறப்பு சித்திரை 13ஆம், 14ஆம் திகதிகளில் இந்துக்களும் பௌத்தர்களும் சித்திரை வருடப்பிறப்பினை கொண்டாடுகின்றனர் வருடப்பிறப்பு கருமமாகிய மருத்து நீர் தேய்த்தல் என்ற முறையானது பௌத்தர்களிடையே விகாரைகளுக்கு சென்று எண்ணெய் தேய்த்தல் என்ற வகையில் மாறிக்காணப்படுகின்றது இந்து பௌத்தர்களிடையே புத்தாடை அணிதல்,கைவிN~டம்,உறவினர் வீடுகளுக்கு செல்லல், விருந்துபசாரம் போன்ற விடையத்தில் ஒரே வகையான நாடைமுறைகளே காணப்படுகின்றன. இவ்வாறாக இரு சமயத்தின் தோற்றம், அதன் கால எல்லை மாறுபட்டிருப்பினும் சமய நடைமுறை என்ற வகையில் இந்து சமயத்தில் காணப்படுகின்ற நடைமுறைகளை பௌத்த சமயமும் பௌத்த சமயத்தில் காணப்படுகின்ற நடைமுறைகளை இந்து சமயமும் மாறி மாறி பின்பற்றி வருகின்றமை காலம் காலமாக இடம்பெற்று வருகின்ற ஒன்றாக காணப்படுகின்றது இந் நடைமுறைகளை எதிலிருந்து எது கற்றுக் கொண்டுள்ளது என்பது ஒரு கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது. |
29.12.16- ஈழக்கூத்தரங்கத்தில், 1960 களின் பின்னரான செயற்பாடுகள்..
ஏறத்தாழ கி.பி 250 க்கு முற்பட்ட காலத்திலேயே கோடியர்,வயிரியர்,கண்ணுளர்,பொருநர் போன்ற கூத்தர் குழுக்கள் இருந்துள்ளனர் என்பதை சங்கஇலக்கிய Áல்களுக்கூடாக அறியமுடிகிறது.அதாவது கூத்தர்கள் சங்க காலத்திலேயே ஆற்றுகை செய்துள்ளனர் என்பதற்கான சான்றாதாரங்கள் திருமுருகாற்றுப்படை, கலித்தொகை தவிர்ந்த ஏனைய பதினைந்து கீழ்க்கணக்கு Áல்களுக்கூடாக திறமான தடயங்களை பெறமுடிகிறது.சான்றாக அகநாÁறில் வாத்தியக்கருவிகள் பற்றியும்,புறநாÁறில் அளிக்கை நிகழ்ந்ததை பற்றியும்,பட்டினப்பாலையில் மேடையமைப்பு பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. இந்ல்களுக்கூடாக கூத்துக்களங்கள்,கூத்தாற்றுகைகள் நிகழ்ந்துள்ளன என்பதை அறுதியிட்டுக்கூறமுடியும்.பன்னெடுங் காலமாக ஆடப்பட்டுவரும் ஈழக்கூத்தானது சுமார் 17 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியிலிருந்து தான் ஆடப்பட்டு வந்திருக்கின்றது என்பதற்கு ஆதாரமாக “ஈழத்தின் முதல் கூத்துப் பனுவலான கணபதி ஐயரின் (1709 - 1784) வாளபிமன் கூத்துப்பிரதியை ஆதாரமாகக் குறிப்பிடலாம்.” மரபுவழிக்கூத்தின் அடிப்படையை வைத்துக்கொண்டே 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மையாக்கம் என்ற பெயரும் அதனைத் தொடர்ந்து சிற்சில மாற்றங்களுடன் சமூக உள்ளடக்கத்துடனும் வளர்ச்சியடைந்து வரும் வேளையில் 2002 ஆம் ஆண்டிலிருந்து மீளுருவாக்கம் எனும் பரிமாணத்துடன் கூத்தரங்கானது அன்றாடம் செயற்பாடு சார்ந்து நிகழ்த்தப்பட்டவண்ணமுள்ளது.இவ்வாறு கூத்தரங்கானது இற்றை வரைக்கும் இரு பரிமாணம் பெற்று விளங்கினும் ஊர்களில் ஆடப்படும் மட்டக்களப்பு தென்மோடி,வடமோடி கூத்தரங்கானது இற்றைவரைக்கும் எந்தவித பிசகுமின்றி பாரம்பரிய இயல்புடன் ஆடப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். யாழ்ப்பாண பிரதேச வடமராட்சியில் காத்தான்கூத்தும்,பருத்தித்துறையில் நாட்டைக்கூத்தும் ஏனைய தென்மோடி,வடமோடி,மகிடிக்கூத்து என்பனவும் நிகழ்த்தப்பட வன்னியில் கோவலன்கூத்தும்,காத்தான்கூத்தும்,தென்மோடிக்கூத்தும் ஆடப்பட மன்னார் பேசாலையில் உடக்குபாஸ் கூத்துடன் ஏனைய வாசாப்பு,வடபாங்கு,தென்பாங்கு என்பனவும் பயில்நிலையிலுள்ளன.மலையகப் பெருந்தோட்டங்களில் காமன்கூத்து,அர்ச்சுனன் தபசு,பொன்னர் சங்கர் போன்றனவும் ஆடப்பட்டவண்ணமுள்ளன.சிற்சில இடங்களில் ஐரோப்பியர்களின் வருகை(1505 -1948) காரணமாக கூத்துக்கள் பாரம்பரியக்கூத்துக்குரிய அடிப்படை இயல்புகளை இழக்கலாயின. இலங்கையின் பல பாகங்களிலும் ஆடப்பட்ட கூத்துக்கள் ஆரம்ப காலங்களில் இந்து,இதிகாச,புராண கதைகளை அடிப்படையாக்கொண்டிருந்தது.ஐரோப்பியர்களின் வருகையினால் இலங்கையின் யாழ்ப்பாணத்தின் கரையோரப்பகுதிகள்,மன்னார்ப்பகுதி,சிலாபம்,நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களில் ஆடப்பட்ட கூத்துக்கள் கத்தோலிக்கக் கதைகள்,கத்தோலிக்கப் பாத்திரங்கள்,மதப்பிரச்சாரம் சார்ந்து அமைந்திருந்தது.“கத்தோலிக்க மதகுருமார்களுக்கு ஆட்டமுறைகள் சிக்கலாகயிருந்ததன் காரணமாக வட்டக்களரியையும்,ஆடலம்சங்களை விடுத்து பாடலில் அதிக கவனம் செலுத்தினர்.மன்னார் பகுதியில் ஏறத்தாழ 150 க்கு மேற்பட்ட கிறிஸ்தவ கூத்துப்பிரதிகளும்,யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க செல்வாக்குமிக்க இடங்களில் 1810 – 1915 வரைக்குமான காலப்பகுதிக்குள் 74 கூத்துக்களும் ஆடப்பட்டதாக மு.சி.ஆசிர்வாதம் தாம் எழுதிய Áலொன்றில் குறிப்பிடுகின்றார்.இதிலிருந்து பாரம்பரிய ஆட்டக்கூத்தின் தன்மையை அதன் தனித்துவத்தையும் உயிர்த்துடிப்பையும்(வட்டக்களரி) மேற்கத்தேயர் அறிந்ததைக் கூட எம்மவர் பலர்( 1962 – 1998 ) அறியவில்லை எனலாம். கூத்து,கூத்தரங்கத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டே செம்மையாக்கம்,சமூக உள்ளடக்கம், மீளுருவாக்கம் என்ற சிந்தனைகள் மூன்றாம் உலக நாடுகளிலுள்ள எம்மவர் மத்தியிலிருந்து தோன்றிய கொள்கைகளாகவுள்ளன.ஈழத்திலே பயில்நிலையிலுள்ள கூத்து மரபானது பிரதேசத்துக்கு பிரதேசம் ஆடல்,பாடல்,மேடையமைப்பு,அவைக்காற்றுகை முறை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு பிரதேசங்களில் தத்தமக்குரிய இயல்புகளையுள்வாங்கி இன்றுவரை நிகழ்த்தப்பட்டவண்ணமுள்ளது. கிழக்கு மாகாணத்தில் வாழும் குறிப்பாக மட்டக்களப்புத்தமிழர் மத்தியிலே ஆடப்படும் பறைமேளக்கூத்து,மகிடிக்கூத்து,வசந்தன்கூத்து,வடமோடிக்கூத்து,தென்மோடிக்கூத்து போன்றவை அன்றிலிருந்து இன்று வரைக்கும் பாரம்பரிய முழுமையினை பின்பற்றி ஊர்களிலும்,நகர்ப்புறங்களிலும் ஆடப்பட்டு வருகின்றது.இத்தன்மையினை ஏனைய பிரதேசக் கூத்துக்களில் காணமுடியாதுள்ளது.கூத்தரங்குகளை மரபுவழிக் கலையெனவும்,பாரம்பரியக்கலையெனவும்,உயிரணுவின் அரங்க வடிவங்கள் எனவும் அழைக்கலாம். இலங்கையரங்க வரலாற்றில் கலாசார அமைச்சின் கீழ் கலைக்கழகம் 1956 இல் நிறுவப்பட்டதுடன் அதன் தலைவராக கந்தசாமி கணபதிப்பிள்ளை விளங்க 1957 - 1974 வரையான காலப்பகுதியில் தலைவராக சு.வித்தியானந்தன் அவர்கள் விளங்க 1975 இல் அதன் தலைவராக கா.சிவத்தம்பி விளங்கினார் என்றால் மிகையாகாது. வித்தியானந்தன் அவர்கள் 1957 ஆம் ஆண்டு காலத்தில் கலைக்கழகத் தலைவராக இருந்த காலப்பகுதிக்குள் கூத்தைப் பேணவும் அது பிறந்த இடமான ஊர்களிலேயே(கிராமங்கள்) செல்வாக்குப் பெறவும்,நகர்ப்புற மக்களின் செல்வாக்குப் பெறவும் உறுதுணையாக இருந்தார்.சுப்பிரமணியம் வித்தியானந்தன் அவர்கள் கூத்து செம்மையாக்கத்தின் மூலம் கூத்தை மக்கள் கலையாக மக்களிடத்தே தக்க வைத்தக்கொள்வதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டார் எனலாம். எமது சுதேசிய கலைகளுக்குள் ஒரு தமிழ்த்தேசிய நாடக வடிவத்தினை உருவாக்கும் நோக்கோடு ஈழத்தவர்களின் கூத்துக்களை குறிப்பாக மட்டக்களப்பு வடமோடி,தென்மோடி கூத்துக்களை அடிப்படையாக வைத்து சுப்பிரமணியம் வித்தியானந்தன் அவர்கள் தனது சிந்தனைக்கேற்ப கொழும்பு ,பேராதனைப் பல்கலைக்கழக மாணாக்கரைக்கொண்டு வடமோடியான கர்ணன் போர்(1962), தென்மோடியான நொண்டி(1963), வடமோடியான இராவணேசன்(1964), வடமோடியான வாலிவதை (1967 – 1968 ) போன்ற கூத்துக்களை பல்கலைக்கழகங்களிலும் ஏனைய பல்வேறு இடங்களிலும் மத்தியதர வர்க்கத்தினருக்காக செம்மையாக்கம் செய்து தயாரித்ததுடன் கற்றோரின் மதிப்பையும் கௌரவத்தையும் பெறச்செய்தார்.எந்தவொரு விடயத்தையும் முன்னின்று முதன் முதலாக செய்வதென்பது இலகுவான காரியமல்ல என்பதை நாமனைவரும் முதற்கண் விளங்கிக்கொள்ள வேண்டும்.ஈழத்துத் தமிழ் அரங்கப் பரப்பில் சுமார் இரண்டு Áற்றாண்டு காலமாக ஆடப்பட்டு வந்த பாரம்பரியக் கூத்துக்கலையை செம்மையாக்கம் செய்ததென்பது மிகப்பெரிய பாரியவெற்றி என்றே கூற வேண்டும். ஈழத்தமிழருக்குரிய தனித்துவமான கலை மரபு ஒன்றை வளர்த்தெடுப்பதற்கு வித்தியானந்தனின் பங்கும் பணியும் அளப்பரியதாகவிருந்தது. தென்மோடிக்கூத்துப் பனுவலான அலங்பாரரூபன் 1962 ஆம் ஆண்டிலும் மன்னாரில் ஏட்டில் இருந்த என்டிறீக்கு எம்பரத்தோர்(1964),மூவிராசாக்கள்(1966),ஞானசௌந்தரி(1967)போன்ற கூத்துப் பனுவல்களைப் பதிப்பித்ததுடன் கூத்து சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளையும்,கூத்துப்போட்டிகளையும் நடாத்தி பிரதேசக்கூத்துக்கள் வளர பேராசிரியர் சு.வித்தியானந்தன்முன்னோடியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொழுப்பு பல்கலைக்கழக இந்து மாணவர் சங்கம் சிலாபத்திலிருந்த வாளபிமன் கூத்தினையும்,மார்க்கண்டன் கூத்தினையும் 1963 இல் அச்செற்றியது.இவ்விரு கூத்துக்களையும் தொகுத்தவராக கா.சிவத்தம்பி(1932 – 2011.07.06) விளங்குகின்றார்.புலவர் மரியாம்பிள்ளை பாடிய விசயமனோகரன் நாடகத்தை மு.வி.ஆசிர்வாதம் 1968 இல் வெளியிட்டார். 1964,1966,1969,1970 ஆம் ஆண்டுகளில் மன்னாரிலும்மட்டக்களப்பிலும் அரச ஆதரவில் இயங்கிய பிரதேச கலாமன்றங்களின் ஆதரவில் கலைக்கழகத்தின் ஆதரவுடன் அண்ணாவிமார் மகாநாடுகள் நடாத்தப்பட்டன.1969 களில் மட்டக்களப்பு பிரதேச கலாமன்றத்தின் முதற்பணியாக கூத்துப் பிரதிகள் வெளிவருவது அன்று வரவேற்கத்தக்கதாக இருந்தது.அதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் என்றால் மிகையாகாது.மன்னாரில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய திரு.தேவநேசன் நேசையா அவர்கள் அப்பகுதியிலுள்ள நாடகங்கள் பலவற்றை நேரில் பார்வையிடவும்மேடையேற்றவும் மற்றும் அச்சிட்டு வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் கிடைத்ததோடு அப் பணிகளுக்கு துணையாக பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு பிரதேச கலாமன்றத்தின் நாடகத் துறையிலான பணிகள் அனைத்துக்கும் ,அரசாங்க அதிபரான திரு.தேவநேசன் நேசையா அவர்களுக்கும் ஆலோசனைகள் கூறிக்கொண்டு ஒரு நிரந்தர ஆலோசகராக பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனுவுருத்திர நாடகத்துக்கு பதிப்பாசிரியராக பண்டிதர் வி.சீ.கந்தையா (1920.07.29) பணியாற்றுவது தனிச்சிறப்பை அளிக்கின்றதென்றும் இத்தொண்டுக்கு மிகப்பொருத்தமானவர் அவரே என்றும் அவரது Áல்களாகிய மட்டக்களப்புத் தமிழகம்,கண்ணகி வழக்குரை என்பன அவரின் தகைமைக்குச் சான்று பகருகின்றன என்றுஅனுவுருத்திர நாடக மதிப்புரையில் வீ.சி.கந்தையா பற்றி, பேராசிரியர் சு.வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளார்.இவையெல்லாம் சு.வித்தியானந்தன் கலைக்கழக தலைவராகயிருந்த காலத்திலேயே நடந்தேறியது என்பதை மனங்கொள்ள வேண்டும்.சு.வித்தியானந்தன் அவர்களால் அண்ணாவியார் மாநாடானது மட்டக்களப்பு சென்மேரிஸ் கல்Âரியில் 1969.10.10 அன்று நடந்தேறியதை பலருமறிவர். வித்தியானந்தன் தயாரித்த படைப்புகள் பொருவாரியாக சாதாரண மக்கள் மத்தியில் வெற்றிபெறவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்த போதும் ஊர் ஊராகச் சென்று அவதானித்து,ஊக்கம் கொடுத்து கூத்துக்கலை புத்துயிர் பெறுவதற்காக உழைத்தது என்பதை பாரிய வெற்றியாகவே கொள்ளல் வேண்டும். 1950 தொடக்கம் 1960 காலப்பகுதியில் தமிழரின் சுதேசியத்தை எவரும் வெளிப்படுத்த முன்வராத போது முதன்முதலாக கூத்து சார்ந்து பல பணிகளை செய்து தமிழரின் தமிழ்த்தேசிய சுதேசியத்தை வெளிக்கொணர்ந்த பெருமை சு.வித்தியானந்தன் அவர்களையே சாரும்.கூத்து செம்மையாக்கம் மூலம் பாரம்பரியக் கூத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக பாரியளவிலான முயற்சிகளை மேற்க்கொண்டார் என்பதை நாமனைவரும் முதற்கண் விளங்கிக்கொள்ள வேண்டும். வித்தியானந்தன் தயாரித்த கூத்துக்களில் நடித்தவரான பேராசிரியர் சின்னையா மௌனகுரு அவர்கள் முதன் முதலில் சமூக உள்ளடக்கத்தினை புகுத்தி சமூகப் பிரச்சினைகளை வித்தியானந்தனின் பாணியில் சங்காரம்(1968) எனும் நாடகமாக தயாரித்திருந்தார்.1968 1970 காலப்பகுதிக்குள் புதிய கருத்துக்களை அடித்தளமாகக்கொண்டு பல தயாரிப்புக்கள் நிகழ்ந்ததையும் மறந்துவிடலாகாது.என்.கே.ரகுநாதனின் கந்தன் கருணையானது அம்பலத்தாடிகள் குழுவினரால் காத்தான்கூத்துப் பாணியில் நாடகமாக்கப்பட்டது.அன்றைய மாவிட்டபுர கந்தசுவாமி கோயில் நிர்வாக தர்மகர்த்தாக்களுக்கு கந்தன் கருணை நாடகவாக்கத்தின் ஊடாக பலத்த எதிர்ப்பை திடப்படுத்தினர்.கந்தன் கருனை நாடகமானது யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கூட்டு முயற்சியினாலேயே மேடையேற்றப்பட்டாலும் இந்நாடகவுருவாக்கத்துக்கு(அளிக்கை) மூலகாரணமாக செயற்பட்டவர் இளைய பத்மநாதன் அவர்களாவார் என்பதை ஈழத்து தமிழ்நாடக துறைசார்ந்தவர்கள் பலரும் மறந்தவிட்டனர் போலும். 1969 இல் முருகையனின் மேடைக்கவிதை நாடகமான கோபுரவாசல் அளிக்கையும் அன்றைய சமகால பிரச்சினைகளை வெளிப்படுத்தியதாக அமைந்தது. கந்தன் கருணை(1974,79),சங்காரம்(1980), ஏகலைவன்(1988) போன்றனபுதிய கருத்துக்களை புதிய அமைப்பிலும்,கானகம் ஏகிய இராமன்(1973),விடிவு(1985),சக்தி பிறக்குது(1986) போன்றன பரதத்துடன் கூத்தினை இணைத்த முறைமையினையும்,விழிப்பு, புதியதொரு வீடு, பொறுத்தது போதும், முறுவல், அதிமானுடன் ,மண்சுமந்த மேனியர், தியாகத் திருமணம்,உயிர்த்த மனிதர் கூத்து, மனிதனும் மிருகமும்,மாயமான், விடுதலைக்காளி, கசிப்பு, போர் மண்ணிற் புனிதத்தாய் போன்றன கூத்து மரபு கலந்த நவீன நாடகங்களாகவும் அளிக்கை செய்யப்பட்டன.வித்தியானந்தனின் செம்மையாக்கமானது பிற்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு வளர்ச்சியுறுகிறது.கூத்து மரபு கலந்த நவீன நாடகங்களுள் கூத்தாட்டங்கள்,கூத்துப்பாடல்கள்,கூத்துத் தாளக்கட்டுக்கள்,கட்டியக்காரன் பாத்திரப்படைப்பு போன்ற இன்னோரன்ன விடயங்கள் உள்வாங்கப்பட்டிருந்தது. நம்மைப் பிடித்த பிசாசுகள்,சரிபாதி,மழை, சக்தி பிறக்குது போன்ற தயாரிப்புகளுள்கூத்தின் வடிவத்துள் சமகால பிரச்சினைகளும் ,தப்பி வந்த தாடி ஆடு,வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள் போன்றன கூத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுவர் நாடகங்களாகவும்,போர்க்களம்,மகாகவியின் புதியதொரு வீடு,நுஃமானின் அதிமானுடன்,நா.சுந்தரலிங்கத்தின் அபசுரம் ,ஞானியின் குருN~த்ரோபதேசம் ,அயனெஸ்கோவின் தலைவர் போன்றன பாரம்பரிய வடமோடிக்கூத்தின் ஆட்டமுறைகளை உள்வாங்கிய நவீன நாடகங்ளாக, சி.மௌனகுரு அவர்களால் தயாரிக்கப்பட்டன. சங்காரம்(1968),யாருக்குச் சொந்தம்,கும்பகர்ணன் ,சக்தி பிறக்குது,மழை,சரிபாதி,நம்மைப் பிடித்த பிசாசுகள்,போர்க்களம்,உயிர்ப்பு,பரபாஸ்,ஓர் உண்மை மனிதனின் கதை,வனவாசத்தின் பின் காண்டவ தகனம்,,சுத்தமாக்குவோம் சுத்தமாக்குவோம்,தப்பி வந்த தாடி ஆடு,வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள்போன்ற நாடகப் பனுவல்களைசின்னையா மௌனகுரு எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சு.வித்தியானந்தன் கூத்துக்களை செம்மைப்படுத்த சி. மௌனகுரு அவர்கள் தப்பி வந்த தாடி ஆடு,வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள்,நம்மைப் பிடித்த பிசாசுகள்,போர்க்களம் போன்ற நாடகங்களுக்கு கூத்தாட்டங்களைப் பயன்படுத்தி நாடகங்களை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆற்றுகைக் கலையில் செயல்முறை மற்றும் கோட்பாட்டு அறிவுள்ளவர்களாக்கி சிருஸ்டித்துவம் கொண்ட கலைஞர்களுக்கூடாக அவைக்காற்றுகைக் கலைகளில் குறிப்பாக நாடகத்தில் பல புதிய பரிசோதனைகளை 2012 ஆம் ஆண்டிலிருந்து சி.மௌனகுரு தனது மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்துக்கூடாக செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.வடமோடிக்கூத்தின் சில கூறுகளையும் ஏனைய சில நடன இசைக்கூறுகளையும் இணைத்து இராவணேசன்,காண்டவ தகனம் போன்ற நவீன நாடகங்களைசான்றாக குறிப்பிடுகிறார். சிரேஸ்ட விரிவுரையாளரும்,சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளருமானகலாநிதி.சி.ஜெயசங்கர், 1990 காலப்பகுதியிலிருந்து கூத்து சார்ந்து ஊர்களுக்குள் செயற்பட்டு வருவதுடன் கிரேக்கரங்கு,ரோம காலஅரங்கு,மத்தியகால அரங்கு,மறுமலர்ச்சிக்கால அரங்கு போன்ற அரங்கங்களை விட பாரம்பரியக் கூத்தரங்கானது காத்திரமான அரங்காகவுள்ளதுடன் கற்றுக்கொள்வதற்கு தேவையான நிறைய படிப்பினைகளை உட்கொண்டுள்ளது எனவும்,கூத்தரங்குக்கு ஊடாக பல்பரிமாண திறமைகளையும், நிர்வாகத்துக்கு தேவையான முழு ஆற்றலையும்,உள ஆற்றுப்படுத்தலையும் உள்வாங்கலாம் என்பதும் சி.ஜெயசங்கர் அவர்களின் கூத்தரங்கு சார்ந்த எண்ணக்கருவாகவுள்ளது. கூத்தரங்கின் சமுதாய அரங்கப் பண்பையும்,சமுதாய பல்கலைக்கழக அம்சங்களையும் சமகாலத்திற்குரிய வகையில் கருத்தியல் ரீதியாகவும் செயற்பாட்டு முறையாகவும் ,இன்றைய சமூகத்துக்காகமுன்னெடுக்கப்படும் சமுதாய அரங்கச் செயற்பாடே கூத்து மீளுருவாக்கமெனவும் கூத்து மீளுருவாக்கச் சிந்தனையானது 2002 ஆம் ஆண்டிலிருந்து பங்குகொள் ஆய்வுச்செயற்பாட்டின் மூலமாக தொடங்கப்பட்டு இன்று வரைக்கும் தொடர்செயற்பாட்டின் ஊடாக மீளுருவாக்கக் கூத்தாற்றுகைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்றும்,கூத்தின் அடிப்படையை மாற்றாமல் அதே நேரம் கட்டாயம் மாற்ற வேண்டிய கருத்துக்களை மாற்றி மீள உருவாக்குவதே கூத்து மீளுருவாக்கம் எனசி.ஜெயசங்கர் குறிப்பிடுகிறார். திறந்த வெளியில் மனிதர்கள் கூடிக்களிக்கும் களங்களாக கூத்தரங்குகளை சமகால நோக்கில் காத்திரமாக பயன்படுத்துவதுடன் முழுக்க முழுக்க சமுதாய ஆதரவிலும் அர்ப்பணிப்பிலும் இயங்குவனவாகவே மீளுருவாக்கக் கூத்துக்கள் இயங்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார். பெண் பிள்ளைகள் கூத்தாடுவதை விரும்பாத கூத்தாடினால் இழிவாகப் பார்க்கின்ற இந்த பொதுவான சூழலில் மீளுருவாக்க கூத்தாற்றுகைகளை செய்தது மட்டுமல்லாமல் கூத்தை எழுதுகின்ற ஆளுமையாளர்களாக பலர் உருவாக்கப்பெற்றிருப்பதும்மீளுருவாக்க கூத்தின் பாரிய வெற்றியாகவேயுள்ளது. இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஏனைய பல்கலைக்கழகங்களை விட வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக நுண்கலைத்துறை மாணவர்கள் அன்றாடம் செயற்பாடு சார்ந்து கல்விகற்பதனைஅதாவது களத்தில் இறங்கிஊர்களுக்குள் சென்று ,மக்களுடன் வாழ்ந்து வேலை செய்யும் தன்மையினை அண்மைக்காலமாக காணமுடிகின்றது.மனித மனங்களை ஆற்றுப்படுத்தும்,அறியும் தன்மையானது அழகியற் துறை மற்றும்உளவியற் துறை சார்ந்து வேலை செய்பவர்களிடம் மட்டுமே காணப்படுவதுடன் கிழக்குப் பல்கலைக்கழக ,சுவாமி விபுலானந்தா நுண்கலைத்துறை மாணவர்கள் அன்றாடம் பாரம்பரியக் கூத்து சார்ந்த செயற்பாடுகளில்ஈடுபட்டவண்ணமுள்ளனர் என்பதனையும் கூத்துச்சமூகங்கள் அறிந்தவண்ணமுள்ளது. அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் கடந்த ஐந்து வருட காலமாக ஆலய முன்றலில் நான்கைந்து நாட்களுக்கு பாரம்பரிய அரங்க ஆற்றுகைகளையும்,கைப்பணிக் காட்சிக்கூடத்தினையும்நடைமுறைப்படுத்தி, கோயிற்திருவிழாவுக்கு வரும் பல்லின சமூகங்களை பண்படுத்துவதனுடன் ஊக்கப்படுத்தி மற்றும் ஆற்றுப்படுத்தி வருவதனை பலரும் கண்ணுற்றிருப்பர். வித்தியானந்தன் அவர்கள் தனது அறிவுக்கெட்டிய வகையில் மத்தியதர வர்க்க சமூகத்தின் தேவைக்கேற்ப கூத்தை செம்மைப்படுத்த குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள்(1931.11.15) பாடசாலை மாணக்கருக்கு ஏற்ப கல்வியியல் அரங்கு,சமூக அரங்கினை உருவாக்க சி.ஜெயசங்கர் அவர்கள் இயந்திர மயமான தற்கால சூழலுக்கேற்ப கூத்தை அடிப்படையாக வைத்து மீளுருவாக்கக் கூத்துக்களை சமூகக்கலையாக சமூகத்திடத்தே கொண்டு செல்லும் நோக்கோடு கூத்தரங்குகளை பயன்படுத்தி வருகின்றார். பாரம்பரியக் கலை வடிவங்களை ஆற்றுகை செய்வதுடன்,பிற சமூகம் அறியாத பாரம்பரியக்கலை வடிவங்களை(வாகரை அம்பந்தனாவெளி புலிக்கூத்து) பிற சமூகங்களும் அறிந்து அதை பார்த்து ஆராய்வதுடன் அக்கலை வடிவங்களை நிகழ்த்தஅச்சமூகத்தை அன்றாடம் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தியவண்ணமுள்ளார் என்பதும்குறிப்பிடத்தக்கது. வித்தியானந்தன் கூத்துக்கலையை செம்மைப்படுத்த பேராசிரியர் சின்னையா மௌனகுரு அவர்கள் வித்தியானந்தனின் பாணியைப் பின்பற்றியதுடன் கூத்தின் வடிவத்துள் சமகால எரியும் பிரச்சினைகளை நாடகமாக்க அதாவது மரபுவழிக்கூத்தின் அடிப்படையில் இராவணேசன் எனும் நாடகத்தை நெறியாள்கை செய்ய குறிப்பாக வித்தியானந்தனைப்போன்று மரபுவழியரங்கப் பண்புகளையுள்வாங்கி இராவணேசனை படச்சட்ட மேடையிலேயே தயாரிக்க கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்கள் கூத்தின் உயிர்த்துடிப்போடு வட்டக்களரியரங்கில் சிம்மாசனப்போர், சீதை சூர்ப்பனகை வதை,அபிமன்யு இலக்கணன் வதம்,அல்லியின் எதிர்வாதம்,சுபத்திரை கல்யாணம் போன்ற மீளுருவாக்கக் கூத்துக்களையும் சிறுவர் கூத்தான மழைப்பழம் போன்றவற்றையும் கூத்து சமூகங்களது வரவேற்புக்கு இணங்க தயாரித்துள்ளார். ஊர்க்கூத்துக்கார கலைஞர்களுடனும்,ஏனைய கலைஞர்களுடனும் வருங்கால இளம் தலைமுறையினருடனும் இணைந்து பல்வேறு கலை வடிவங்களை,பல்வேறு இனங்களை சமூகத்தினுள் தேடியலைகின்றார்.அதாவது இல்லாத விடயங்களை தேடமால் விளிம்பு நிலையில் இருக்கின்ற சமூகத்துக்குமுக்கியமாக தேவைப்படுகின்ற கலையாற்றுகைகளை நிகழ்த்த பல்வேறு துறைசார்ந்து செயற்படுகின்றார்.சான்றாக புலிக்கூத்தினையும் ஆதாரமாகக் கொள்ளலாம். சிவஞானம்.ஜெயசங்கர் அவர்களின் பல்வேறு செயற்பாடுகளுள் கூத்து மீளுருவாக்கம் என்பதும் ஒருசிறு உயிர்த்துணிக்கையாகவுள்ளது.அதாவது கட்டமைக்கப்பட்ட,புனையப்பட்ட புராண இதிகாச கதைகளை,பாத்திரப்படைப்புகளுக்கூடாக மீளுருவாக்கம் செய்கின்றார்.தலித்தியம்,பெண்ணியம்சார்ந்து பாத்திரப்படைப்புகளை கூத்துச்சமூகத்துடன் கலந்துரையாடி சமூகத்தின் தேவையை உணர்ந்து பன்மைத்துவ சமூகத்தின் தேவைக்கேற்ப தயாரிக்கிறார். கண்ணகி –பாண்டியன்,சீதை - இராமன்,பாஞ்சாலி –பாண்டவர்கள், போன்ற பல்வேறு மீளுருவாக்;க கூத்துப் பாத்திர படைப்புகளுக்கூடாக தட்டியெழுப்பி சமூதாயத்தை கேள்வி கேட்க வைக்கின்றார்.குறிப்பாக கூத்துப் பாத்திரப் படைப்புகளுக்கு ஊடாக மனித சமூதாயத்தை எதிர்க்கணைகளை தொடுக்க வைக்கின்றார். கலாநிதி சிவஞானம்.ஜெயசங்கர் அவர்கள் (1965.12.29) கூத்தின் அழகியலை உள்வாங்கி கருத்தியல் ரீதியாக மீளுருவாக்கக் கூத்துக்களை வட்டக்களரியிலேயே அரங்கேற்ற வைக்கின்றார்.எது எவ்வாறு இருப்பினும் கூத்தரங்கத்தை சமூகங்களினுள்ளே வாழ்தலுக்காக வைத்துக்கொள்ளும் தன்மையினை மீளுருவாக்கக் கூத்துக்கள் செயற்பாடு ரீதியாக செய்த வண்ணமுள்ளது. கூத்துக்கலையானது 17 ஆம் Áற்றாண்டில் நிகழ்ந்ததைப் போலவே இன்றும் தொடர் செயற்பாடாக ஆடப்பட வேண்டும் என்ற பரந்த நோக்கத்திலேயே பரவலாக பல்வேறு பிரதேசங்களிலும்கூத்துச் சமூகங்கள் கூத்துக்கலையை ஆடிய வண்ணமுள்ளது.இந்நிலையினை பலர் உணர்ந்து அதைச்சென்று பார்க்க வேண்டிய தேவையுமுள்ளது. வித்தியானந்தனின் செம்மையாக்கமானது ஒரு பரிமாணமாக அமைய பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் சமூக உள்ளடக்கம் பிறிதொரு பரிமாணமாக அமைய கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டு பணியானது இன்னொரு பரிமாணமாக அமைகின்றது.ஈழக்கூத்தின் பரிமாணமாக பேரா.சு.வித்தியானந்தன் ,பேரா.சி.மௌனகுரு,கலாநிதி சி.ஜெயசங்கர்போன்ற மூன்று ஆளுமையாளர்களின் செயற்பாடு அமைந்துள்ள போதும் பெருவாரியாக செம்மையாக்கம்,மீளுருவாக்கம் எனும் இரு பெரும் திருப்புமுனைகளேதெட்டத்தெளிவாக தென்படுவதை கூத்து சமூகங்களும் கல்வியியலாளர்களும் பெரிதும் அறிந்திருப்பர்.இதன் பிற்பாடும் பிற்பட்ட காலத்திலும் ஆளுமையாளர்களது சிந்தனைக்கேற்ப இன்னுமொரு பரிமாணமும் தோன்றலாம்.அது இயல்பும் நியதியுமாகும். சுருக்கமாகக்கூறின் ஈழக்கூத்தரங்கானது ஒவ்வொரு பிரதேசங்களிலும் தத்தமக்குரிய அடிப்படைப்பண்புகளுடன் ஆடப்பட்டு வரும் வேளையில் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர்களுக்கான தேசியவுணர்வின் சொந்தப் பண்பாடு பற்றி பிரக்ஞை ஏற்பட்டதன் காரணமாகவே சு.வித்தியானந்தனால் செம்மையாக்கம் எனும் பதமும் சமூக சமகாலக் கதைகளை புகுத்தியதனால் சமூக உள்ளடக்கம் எனும் பதமும் உருவாகியது எனலாம். பாரம்பரியக்கலையிலக்கியங்கள்,ஆற்றுகைகள் சார்ந்து வருங்கால இளஞ்சந்ததியினர் செயற்படவேண்டும் எனவும் பாரம்பரியக் கலையாற்றுகைகள் என்றென்றும் மக்கள் மத்தியில் வாழவேண்டும் என்ற பரந்த நோக்கத்திலுமே சி.ஜெயசங்கர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார் என்றால் மிகையாகாது. கூத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு கூத்துத் தயாரிப்புகளை உருவாக்கலாமே தவிர அடிப்படையான கூத்தரங்கத்தினை,கூத்தரங்கத்தின் கட்டுமானத்தினை,வடிவமைப்பினை மாற்றும் பொறுப்பு எவருக்குமில்லையாகும். பாக்கியராஜா மோகனதாஸ்(நுண்கலைமாணி) துறைநீலாவணை |
24.12.16- அடிப்படை ஈழக்கூத்தரங்கத்தில், எம்மவர்களின் செயற்பாடுகள்..
ஏறத்தாழ கி.பி 250 க்கு முற்பட்ட காலத்திலேயே கோடியர்,வயிரியர்,கண்ணுளர்,பொருநர் போன்ற கூத்தர் குழுக்கள் இருந்துள்ளனர் என்பதை சங்கஇலக்கியல்களுக்கூடாக அறியமுடிகிறது.அதாவது கூத்தர்கள் சங்க காலத்திலேயே ஆற்றுகை செய்துள்ளனர் என்பதற்கான சான்றாதாரங்கள் திருமுருகாற்றுப்படை, கலித்தொகை தவிர்ந்த ஏனைய பதினைந்து கீழ்க்கணக்கு ல்களுக்கூடாக திறமான தடயங்களை பெறமுடிகிறது.சான்றாக அகநாறில் வாத்தியக்கருவிகள் பற்றியும்,புறநாறில் அளிக்கை நிகழ்ந்ததை பற்றியும்,பட்டினப்பாலையில் மேடையமைப்பு பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. இந்Áல்களுக்கூடாக கூத்துக்களங்கள்,கூத்தாற்றுகைகள் நிகழ்ந்துள்ளன என்பதை அறுதியிட்டுக்கூறமுடியும்.பன்னெடுங் காலமாக ஆடப்பட்டுவரும் ஈழக்கூத்தானது சுமார் 17 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியிலிருந்து தான் ஆடப்பட்டு வந்திருக்கின்றது என்பதற்கு ஆதாரமாக “ஈழத்தின் முதல் கூத்துப் பனுவலான கணபதி ஐயரின் (1709 - 1784) வாளபிமன் கூத்துப்பிரதியை ஆதாரமாகக் குறிப்பிடலாம்.” மரபுவழிக்கூத்தின் அடிப்படையை வைத்துக்கொண்டே 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மையாக்கம் என்ற பெயரும் அதனைத் தொடர்ந்து சிற்சில மாற்றங்களுடன் சமூக உள்ளடக்கத்துடனும் வளர்ச்சியடைந்து வரும் வேளையில் 2002 ஆம் ஆண்டிலிருந்து மீளுருவாக்கம் எனும் பரிமாணத்துடன் கூத்தரங்கானது அன்றாடம் செயற்பாடு சார்ந்து நிகழ்த்தப்பட்டவண்ணமுள்ளது.இவ்வாறு கூத்தரங்கானது இற்றை வரைக்கும் இரு பரிமாணம் பெற்று விளங்கினும் ஊர்களில் ஆடப்படும் மட்டக்களப்பு தென்மோடி,வடமோடி கூத்தரங்கானது இற்றைவரைக்கும் எந்தவித பிசகுமின்றி பாரம்பரிய இயல்புடன் ஆடப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். யாழ்ப்பாண பிரதேச வடமராட்சியில் காத்தான்கூத்தும்,பருத்தித்துறையில் நாட்டைக்கூத்தும் ஏனைய தென்மோடி,வடமோடி,மகிடிக்கூத்து என்பனவும் நிகழ்த்தப்பட வன்னியில் கோவலன்கூத்தும்,காத்தான்கூத்தும்,தென்மோடிக்கூத்தும் ஆடப்பட மன்னார் பேசாலையில் உடக்குபாஸ் கூத்துடன் ஏனைய வாசாப்பு,வடபாங்கு,தென்பாங்கு என்பனவும் பயில்நிலையிலுள்ளன.மலையகப் பெருந்தோட்டங்களில் காமன்கூத்து,அர்ச்சுனன் தபசு,பொன்னர் சங்கர் போன்றனவும் ஆடப்பட்டவண்ணமுள்ளன.சிற்சில இடங்களில் ஐரோப்பியர்களின் வருகை(1505 -1948) காரணமாக கூத்துக்கள் பாரம்பரியக்கூத்துக்குரிய அடிப்படை இயல்புகளை இழக்கலாயின. இலங்கையின் பல பாகங்களிலும் ஆடப்பட்ட கூத்துக்கள் ஆரம்ப காலங்களில் இந்து,இதிகாச,புராண கதைகளை அடிப்படையாக்கொண்டிருந்தது.ஐரோப்பியர்களின் வருகையினால் இலங்கையின் யாழ்ப்பாணத்தின் கரையோரப்பகுதிகள் ,மன்னார்ப்பகுதி,சிலாபம்,நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களில் ஆடப்பட்ட கூத்துக்கள் கத்தோலிக்கக் கதைகள்,கத்தோலிக்கப் பாத்திரங்கள்,மதப்பிரச்சாரம் சார்ந்து அமைந்திருந்தது.“கத்தோலிக்க மதகுருமார்களுக்கு ஆட்டமுறைகள் சிக்கலாகயிருந்ததன் காரணமாக வட்டக்களரியையும்,ஆடலம்சங்களை விடுத்து பாடலில் அதிக கவனம் செலுத்தினர்.மன்னார் பகுதியில் ஏறத்தாழ 150 க்கு மேற்பட்ட கிறிஸ்தவ கூத்துப்பிரதிகளும்,யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க செல்வாக்குமிக்க இடங்களில் 1810 – 1915 வரைக்குமான காலப்பகுதிக்குள் 74 கூத்துக்களும் ஆடப்பட்டதாக மு.சி.ஆசிர்வாதம் தாம் எழுதிய Áலொன்றில் குறிப்பிடுகின்றார்.இதிலிருந்து பாரம்பரிய ஆட்டக்கூத்தின் தன்மையை அதன் தனித்துவத்தையும் உயிர்த்துடிப்பையும்(வட்டக்களரி) மேற்கத்தேயர் அறிந்ததைக் கூட எம்மவர் பலர்( 1962 – 1998 ) அறியவில்லை எனலாம். கூத்து,கூத்தரங்கத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டே செம்மையாக்கம்,சமூக உள்ளடக்கம், மீளுருவாக்கம் என்ற சிந்தனைகள் மூன்றாம் உலக நாடுகளிலுள்ள எம்மவர் மத்தியிலிருந்து தோன்றிய கொள்கைகளாகவுள்ளன.ஈழத்திலே பயில்நிலையிலுள்ள கூத்து மரபானது பிரதேசத்துக்கு பிரதேசம் ஆடல்,பாடல்,மேடையமைப்பு,அவைக்காற்றுகை முறை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு பிரதேசங்களில் தத்தமக்குரிய இயல்புகளையுள்வாங்கி இன்றுவரை நிகழ்த்தப்பட்டவண்ணமுள்ளது. கிழக்கு மாகாணத்தில் வாழும் குறிப்பாக மட்டக்களப்புத்தமிழர் மத்தியிலே ஆடப்படும் பறைமேளக்கூத்து,மகிடிக்கூத்து,வசந்தன்கூத்து,வடமோடிக்கூத்து,தென்மோடிக்கூத்து போன்றவை அன்றிலிருந்து இன்று வரைக்கும் பாரம்பரிய முழுமையினை பின்பற்றி ஊர்களிலும்,நகர்ப்புறங்களிலும் ஆடப்பட்டு வருகின்றது.இத்தன்மையினை ஏனைய பிரதேசக் கூத்துக்களில் காணமுடியாதுள்ளது.கூத்தரங்குகளை மரபுவழிக் கலையெனவும்,பாரம்பரியக்கலையெனவும்,உயிரணுவின் அரங்க வடிவங்கள் எனவும் அழைக்கலாம். இலங்கையரங்க வரலாற்றில் கலாசார அமைச்சின் கீழ் கலைக்கழகம் 1956 இல் நிறுவப்பட்டதுடன் அதன் தலைவராக கந்தசாமி கணபதிப்பிள்ளை விளங்க 1957 - 1974 வரையான காலப்பகுதியில் தலைவராக சு.வித்தியானந்தன் அவர்கள் விளங்க 1975 இல் அதன் தலைவராக கா.சிவத்தம்பி விளங்கினார் என்றால் மிகையாகாது. வித்தியானந்தன் அவர்கள் 1957 ஆம் ஆண்டு காலத்தில் கலைக்கழகத் தலைவராக இருந்த காலப்பகுதிக்குள் கூத்தைப் பேணவும் அது பிறந்த இடமான ஊர்களிலேயே(கிராமங்கள்) செல்வாக்குப் பெறவும்,நகர்ப்புற மக்களின் செல்வாக்குப் பெறவும் உறுதுணையாக இருந்தார்.சுப்பிரமணியம் வித்தியானந்தன் அவர்கள் கூத்து செம்மையாக்கத்தின் மூலம் கூத்தை மக்கள் கலையாக மக்களிடத்தே தக்க வைத்தக்கொள்வதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டார் எனலாம் எமது சுதேசிய கலைகளுக்குள் ஒரு தமிழ்த்தேசிய நாடக வடிவத்தினை உருவாக்கும் நோக்கோடு ஈழத்தவர்களின் கூத்துக்களை குறிப்பாக மட்டக்களப்பு வடமோடி,தென்மோடி கூத்துக்களை அடிப்படையாக வைத்து சுப்பிரமணியம் வித்தியானந்தன் அவர்கள் தனது சிந்தனைக்கேற்ப கொழும்பு ,பேராதனைப் பல்கலைக்கழக மாணாக்கரைக்கொண்டு வடமோடியான கர்ணன் போர்(1962) தென்மோடியான நொண்டி(1963) வடமோடியான இராவணேசன்(1964) வடமோடியான வாலிவதை (1967 – 1968 ) போன்ற கூத்துக்களை பல்கலைக்கழகங்களிலும் ஏனைய பல்வேறு இடங்களிலும் மத்தியதர வர்க்கத்தினருக்காக செம்மையாக்கம் செய்து தயாரித்ததுடன் கற்றோரின் மதிப்பையும் கௌரவத்தையும் பெறச்செய்தார்.எந்தவொரு விடயத்தையும் முன்னின்று முதன் முதலாக செய்வதென்பது இலகுவான காரியமல்ல என்பதை நாமனைவரும் முதற்கண் விளங்கிக்கொள்ள வேண்டும்.ஈழத்துத் தமிழ் அரங்கப் பரப்பில் சுமார் இரண்டு Áற்றாண்டு காலமாக ஆடப்பட்டு வரும் பாரம்பரியக் கூத்துக்கலையை செம்மையாக்கம் செய்ததென்பது மிகப்பெரிய பாரிய வெற்றி என்றே கூற வேண்டும். ஈழத்தமிழருக்குரிய தனித்துவமான கலை மரபு ஒன்றை வளர்த்தெடுப்பதற்கு வித்தியானந்தனின் பங்கும் பணியும் அளப்பரியதாகவிருந்தது. தென்மோடிக்கூத்துப் பனுவலான அலங்பாரரூபன் 1962 ஆம் ஆண்டிலும் மன்னாரில் ஏட்டில் இருந்த என்டிறீக்கு எம்பரத்தோர்(1964),மூவிராசாக்கள்(1966),ஞானசௌந்தரி(1967)போன்ற கூத்துப் பனுவல்களைப் பதிப்பித்ததுடன் கூத்து சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளையும்,கூத்துப்போட்டிகளையும் நடாத்தி பிரதேசக்கூத்துக்கள் வளர பேராசிரியர் சு.வித்தியானந்தன்முன்னோடியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொழுப்பு பல்கலைக்கழக இந்து மாணவர் சங்கம் சிலாபத்திலிருந்த வாளபிமன் கூத்தினையும்,மார்க்கண்டன் கூத்தினையும் 1963 இல் அச்செற்றியது.இவ்விரு கூத்துக்களையும் தொகுத்தவராக கா.சிவத்தம்பி(1932 – 2011.07.06) விளங்குகின்றார்.புலவர் மரியாம்பிள்ளை பாடிய விசயமனோகரன் நாடகத்தை மு.வி.ஆசிர்வாதம் 1968 இல் வெளியிட்டார். 1964,1966,1969,1970 ஆம் ஆண்டுகளில் மன்னாரிலும்மட்டக்களப்பிலும் அரச ஆதரவில் இயங்கிய பிரதேச கலாமன்றங்களின் ஆதரவில் கலைக்கழகத்தின் ஆதரவுடன் அண்ணாவிமார் மகாநாடுகள் நடாத்தப்பட்டன.1969 களில் மட்டக்களப்பு பிரதேச கலாமன்றத்தின் முதற்பணியாக கூத்துப் பிரதிகள் வெளிவருவது அன்று வரவேற்கத்தக்கதாக இருந்தது.அதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் என்றால் மிகையாகாது.மன்னாரில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய திரு.தேவநேசன் நேசையா அவர்கள் அப்பகுதியிலுள்ள நாடகங்கள் பலவற்றை நேரில் பார்வையிடவும்மேடையேற்றவும் மற்றும் அச்சிட்டு வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் கிடைத்ததோடு அப் பணிகளுக்கு துணையாக பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு பிரதேச கலாமன்றத்தின் நாடகத் துறையிலான பணிகள் அனைத்துக்கும் ,அரசாங்க அதிபரான திரு.தேவநேசன் நேசையா அவர்களுக்கும் ஆலோசனைகள் கூறிக்கொண்டு ஒரு நிரந்தர ஆலோசகராக பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனுவுருத்திர நாடகத்துக்கு பதிப்பாசிரியராக பண்டிதர் வி.சீ.கந்தையா (1920.07.29) பணியாற்றுவது தனிச்சிறப்பை அளிக்கின்றதென்றும் இத்தொண்டுக்கு மிகப்பொருத்தமானவர் அவரே என்றும் அவரது Áல்களாகிய மட்டக்களப்புத் தமிழகம்,கண்ணகி வழக்குரை என்பன அவரின் தகைமைக்குச் சான்று பகருகின்றன என்றுஅனுவுருத்திர நாடக மதிப்புரையில் வீ.சி.கந்தையா பற்றி, பேராசிரியர் சு.வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளார்.இவையெல்லாம் சு.வித்தியானந்தன் கலைக்கழக தலைவராகயிருந்த காலத்திலேயே நடந்தேறியது என்பதை மனங்கொள்ள வேண்டும்.சு.வித்தியானந்தன் அவர்களால் அண்ணாவியார் மாநாடானது மட்டக்களப்பு சென்மேரிஸ் கல்Âரியில் 1969.10.10 அன்று நடந்தேறியதை பலருமறிவர். வித்தியானந்தன் தயாரித்த படைப்புகள் பொருவாரியாக சாதாரண மக்கள் மத்தியில் வெற்றிபெறவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்த போதும் ஊர் ஊராகச் சென்று அவதானித்து,ஊக்கம் கொடுத்து கூத்துக்கலை புத்துயிர் பெறுவதற்காக உழைத்தது என்பதை பாரிய வெற்றியாகவே கொள்ளல் வேண்டும். 1950 தொடக்கம் 1960 காலப்பகுதியில் தமிழரின் சுதேசியத்தை எவரும் வெளிப்படுத்த முன்வராத போது முதன்முதலாக கூத்து சார்ந்து பல பணிகளை செய்து தமிழரின் தமிழ்த்தேசிய சுதேசியத்தை வெளிக்கொணர்ந்த பெருமை சு.வித்தியானந்தன் அவர்களையே சாரும்.கூத்து செம்மையாக்கம் மூலம் பாரம்பரியக் கூத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக பாரியளவிலான முயற்சிகளை மேற்க்கொண்டார் என்பதை நாமனைவரும் முதற்கண் விளங்கிக்கொள்ள வேண்டும். வித்தியானந்தன் தயாரித்த கூத்துக்களில் நடித்தவரான பேராசிரியர் சின்னையா மௌனகுரு அவர்கள் முதன் முதலில் சமூக உள்ளடக்கத்தினை புகுத்தி சமூகப் பிரச்சினைகளை வித்தியானந்தனின் பாணியில் சங்காரம்(1968) எனும் நாடகமாக தயாரித்திருந்தார்.1968 – 1970 காலப்பகுதிக்குள் புதிய கருத்துக்களை அடித்தளமாகக்கொண்டு பல தயாரிப்புக்கள் நிகழ்ந்ததையும் மறந்துவிடலாகாது. என்.கே.ரகுநாதனின் கந்தன் கருணையானது அம்பலத்தாடிகள் குழுவினரால் காத்தான்கூத்துப் பாணியில் நாடகமாக்கப்பட்டது.அன்றைய மாவிட்டபுர கந்தசுவாமி கோயில் நிர்வாக தர்மகர்த்தாக்களுக்கு கந்தன் கருணை நாடகவாக்கத்தின் ஊடாக பலத்த எதிர்ப்பை திடப்படுத்தினர்.கந்தன் கருனை நாடகமானது யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கூட்டு முயற்சியினாலேயே மேடையேற்றப்பட்டாலும் இந்நாடகவுருவாக்கத்துக்கு(அளிக்கை) மூலகாரணமாக செயற்பட்டவர் இளைய பத்மநாதன் அவர்களாவார் என்பதை ஈழத்து தமிழ்நாடக துறைசார்ந்தவர்கள் பலரும் மறந்தவிட்டனர் போலும். 1969 இல் முருகையனின் மேடைக்கவிதை நாடகமான கோபுரவாசல் அளிக்கையும் அன்றைய சமகால பிரச்சினைகளை வெளிப்படுத்தியதாக அமைந்தது. கந்தன் கருணை(1974,79) சங்காரம்(1980), ஏகலைவன்(1988) போன்றனபுதிய கருத்துக்களை புதிய அமைப்பிலும்,கானகம் ஏகிய இராமன்(1973),விடிவு(1985),சக்தி பிறக்குது(1986) போன்றன பரதத்துடன் கூத்தினை இணைத்த முறைமையினையும்,விழிப்பு, புதியதொரு வீடு, பொறுத்தது போதும், முறுவல், அதிமானுடன் ,மண்சுமந்த மேனியர், தியாகத் திருமணம்,உயிர்த்த மனிதர் கூத்து, மனிதனும் மிருகமும்,மாயமான், விடுதலைக்காளி, கசிப்பு, போர் மண்ணிற் புனிதத்தாய் போன்றன கூத்து மரபு கலந்த நவீன நாடகங்களாகவும் அளிக்கை செய்யப்பட்டன.வித்தியானந்தனின் செம்மையாக்கமானது பிற்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு வளர்ச்சியுறுகிறது.கூத்து மரபு கலந்த நவீன நாடகங்களுள் கூத்தாட்டங்கள்,கூத்துப்பாடல்கள்,கூத்துத் தாளக்கட்டுக்கள்,கட்டியக்காரன் பாத்திரப்படைப்பு போன்ற இன்னோரன்ன விடயங்கள் உள்வாங்கப்பட்டிருந்தது. நம்மைப் பிடித்த பிசாசுகள்,சரிபாதி,மழை, சக்தி பிறக்குது போன்ற தயாரிப்புகளுள்கூத்தின் வடிவத்துள் சமகால பிரச்சினைகளும் ,தப்பி வந்த தாடி ஆடு,வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள் போன்றன கூத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுவர் நாடகங்களாகவும்,போர்க்களம்,மகாகவியின் புதியதொரு வீடு,நுஃமானின் அதிமானுடன்,நா.சுந்தரலிங்கத்தின் அபசுரம் ,ஞானியின் குருN~த்ரோபதேசம் ,அயனெஸ்கோவின் தலைவர் போன்றன பாரம்பரிய வடமோடிக்கூத்தின் ஆட்டமுறைகளை உள்வாங்கிய நவீன நாடகங்ளாக, சி.மௌனகுரு அவர்களால் தயாரிக்கப்பட்டன. சங்காரம்(1968),யாருக்குச் சொந்தம்,கும்பகர்ணன் ,சக்தி பிறக்குது,மழை,சரிபாதி,நம்மைப் பிடித்த பிசாசுகள்,போர்க்களம், உயிர்ப்பு,பரபாஸ்,ஓர் உண்மை மனிதனின் கதை,வனவாசத்தின் பின் காண்டவ தகனம்,,சுத்தமாக்குவோம் சுத்தமாக்குவோம்,தப்பி வந்த தாடி ஆடு,வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள்போன்ற நாடகப் பனுவல்களைசின்னையா மௌனகுரு எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சு.வித்தியானந்தன் கூத்துக்களை செம்மைப்படுத்த சி. மௌனகுரு அவர்கள் தப்பி வந்த தாடி ஆடு,வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள்,நம்மைப் பிடித்த பிசாசுகள்,போர்க்களம் போன்ற நாடகங்களுக்கு கூத்தாட்டங்களைப் பயன்படுத்தி நாடகங்களை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆற்றுகைக் கலையில் செயல்முறை மற்றும் கோட்பாட்டு அறிவுள்ளவர்களாக்கி சிருஸ்டித்துவம் கொண்ட கலைஞர்களுக்கூடாக அவைக்காற்றுகைக் கலைகளில் குறிப்பாக நாடகத்தில் பல புதிய பரிசோதனைகளை 2012 ஆம் ஆண்டிலிருந்து சி.மௌனகுரு தனது மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்துக்கூடாக செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.வடமோடிக்கூத்தின் சில கூறுகளையும் ஏனைய சில நடன இசைக்கூறுகளையும் இணைத்து இராவணேசன்,காண்டவ தகனம் போன்ற நவீன நாடகங்களைசான்றாக குறிப்பிடுகிறார். சிரேஸ்ட விரிவுரையாளரும்,சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளருமானகலாநிதி.சி.ஜெயசங்கர், 1990 காலப்பகுதியிலிருந்து கூத்து சார்ந்து ஊர்களுக்குள் செயற்பட்டு வருவதுடன் கிரேக்கரங்கு,ரோம காலஅரங்கு,மத்தியகால அரங்கு,மறுமலர்ச்சிக்கால அரங்கு போன்ற அரங்கங்களை விட பாரம்பரியக் கூத்தரங்கானது காத்திரமான அரங்காகவுள்ளதுடன் கற்றுக்கொள்வதற்கு தேவையான நிறைய படிப்பினைகளை உட்கொண்டுள்ளது எனவும்,கூத்தரங்குக்கு ஊடாக பல்பரிமாண திறமைகளையும், நிர்வாகத்துக்கு தேவையான முழு ஆற்றலையும்,உள ஆற்றுப்படுத்தலையும் உள்வாங்கலாம் என்பதும் சி.ஜெயசங்கர் அவர்களின் கூத்தரங்கு சார்ந்த எண்ணக்கருவாகவுள்ளது. கூத்தரங்கின் சமுதாய அரங்கப் பண்பையும்,சமுதாய பல்கலைக்கழக அம்சங்களையும் சமகாலத்திற்குரிய வகையில் கருத்தியல் ரீதியாகவும் செயற்பாட்டு முறையாகவும் ,இன்றைய சமூகத்துக்காகமுன்னெடுக்கப்படும் சமுதாய அரங்கச் செயற்பாடே கூத்து மீளுருவாக்கமெனவும் கூத்து மீளுருவாக்கச் சிந்தனையானது 2002 ஆம் ஆண்டிலிருந்து பங்குகொள் ஆய்வுச்செயற்பாட்டின் மூலமாக தொடங்கப்பட்டு இன்று வரைக்கும் தொடர்செயற்பாட்டின் ஊடாக மீளுருவாக்கக் கூத்தாற்றுகைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்றும்,கூத்தின் அடிப்படையை மாற்றாமல் அதே நேரம் கட்டாயம் மாற்ற வேண்டிய கருத்துக்களை மாற்றி மீள உருவாக்குவதே கூத்து மீளுருவாக்கம் எனசி.ஜெயசங்கர் குறிப்பிடுகிறார். சிம்மாசனப்போர், சீதை சூர்ப்பனகை வதை,அபிமன்யு இலக்கணன் வதம்,அல்லியின் எதிர்வாதம்,சுபத்திரை கல்யாணம் போன்ற மீளுருவாக்கக் கூத்துக்களையும் சிறுவர் கூத்தான மழைப்பழம் போன்றவற்றையும் கூத்து சமூகங்களது வரவேற்புக்கு இணங்க தயாரித்துள்ளார். திறந்த வெளியில் மனிதர்கள் கூடிக்களிக்கும் களங்களாக கூத்தரங்குகளை சமகால நோக்கில் காத்திரமாக பயன்படுத்துவதுடன் முழுக்க முழுக்க சமுதாய ஆதரவிலும் அர்ப்பணிப்பிலும் இயங்குவனவாகவே மீளுருவாக்கக் கூத்துக்கள் இயங்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார். பெண் பிள்ளைகள் கூத்தாடுவதை விரும்பாத கூத்தாடினால் இழிவாகப் பார்க்கின்ற இந்த பொதுவான சூழலில் மீளுருவாக்க கூத்தாற்றுகைகளை செய்தது மட்டுமல்லாமல் கூத்தை எழுதுகின்ற ஆளுமையாளர்களாக பலர் உருவாக்கப்பெற்றிருப்பதும்மீளுருவாக்க கூத்தின் பாரிய வெற்றியாகவேயுள்ளது. இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஏனைய பல்கலைக்கழகங்களை விட வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக நுண்கலைத்துறை மாணவர்கள் அன்றாடம் செயற்பாடு சார்ந்து கல்விகற்பதனைஅதாவது களத்தில் இறங்கிஊர்களுக்குள் சென்று ,மக்களுடன் வாழ்ந்து வேலை செய்யும் தன்மையினை அண்மைக்காலமாக காணமுடிகின்றது. மனித மனங்களை ஆற்றுப்படுத்தும்,அறியும் தன்மையானது அழகியற் துறை மற்றும்உளவியற் துறை சார்ந்து வேலை செய்பவர்களிடம் மட்டுமே காணப்படுவதுடன் கிழக்குப் பல்கலைக்கழக ,சுவாமி விபுலானந்தா நுண்கலைத்துறை மாணவர்கள் அன்றாடம் பாரம்பரியக் கூத்து சார்ந்த செயற்பாடுகளில்ஈடுபட்டவண்ணமுள்ளனர் என்பதனையும் கூத்துச்சமூகங்கள் அறிந்தவண்ணமுள்ளது. அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் கடந்த ஐந்து வருட காலமாக ஆலய முன்றலில் நான்கைந்து நாட்களுக்கு பாரம்பரிய அரங்க ஆற்றுகைகளையும்,கைப்பணிக் காட்சிக்கூடத்தினையும்நடைமுறைப்படுத்தி, கோயிற்திருவிழாவுக்கு வரும் பல்லின சமூகங்களை பண்படுத்துவதனுடன் ஊக்கப்படுத்தி மற்றும் ஆற்றுப்படுத்தி வருவதனை பலரும் கண்ணுற்றிருப்பர். வித்தியானந்தன் அவர்கள் தனது அறிவுக்கெட்டிய வகையில் மத்தியதர வர்க்க சமூகத்தின் தேவைக்கேற்ப கூத்தை செம்மைப்படுத்த குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள்(1931.11.15) பாடசாலை மாணக்கருக்கு ஏற்ப கல்வியியல் அரங்கு,சமூக அரங்கினை உருவாக்க சி.ஜெயசங்கர் அவர்கள் இயந்திர மயமான தற்கால சூழலுக்கேற்ப கூத்தை அடிப்படையாக வைத்து மீளுருவாக்கக் கூத்துக்களை சமூகக்கலையாக சமூகத்திடத்தே கொண்டு செல்லும் நோக்கோடு கூத்தரங்குகளை பயன்படுத்தி வருகின்றார். பாரம்பரியக் கலை வடிவங்களை ஆற்றுகை செய்வதுடன்,பிற சமூகம் அறியாத பாரம்பரியக்கலை வடிவங்களை(வாகரை அம்பந்தனாவெளி புலிக்கூத்து) பிற சமூகங்களும் அறிந்து அதை பார்த்து ஆராய்வதுடன் அக்கலை வடிவங்களை நிகழ்த்தஅச்சமூகத்தை அன்றாடம் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தியவண்ணமுள்ளார் என்பதும்குறிப்பிடத்தக்கது. வித்தியானந்தன் கூத்துக்கலையை செம்மைப்படுத்த பேராசிரியர் சின்னையா மௌனகுரு அவர்கள் வித்தியானந்தனின் பாணியைப் பின்பற்றியதுடன் கூத்தின் வடிவத்துள் சமகால எரியும் பிரச்சினைகளை நாடகமாக்க அதாவது மரபுவழிக்கூத்தின் அடிப்படையில் இராவணேசன் எனும் நாடகத்தை நெறியாள்கை செய்ய குறிப்பாக வித்தியானந்தனைப்போன்று மரபுவழியரங்கப் பண்புகளையுள்வாங்கி இராவணேசனை படச்சட்ட மேடையிலேயே தயாரிக்க கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்கள் கூத்தின் உயிர்த்துடிப்போடு வட்டக்களரியரங்கில் சிம்மாசனப்போர்,சீதை சூர்ப்பனகை வதை,அபிமன்யு இலக்கணன் வதம்,அல்லியின் எதிர்வாதம்,சுபத்திரை கல்யாணம் போன்ற மீளுருவாக்கக் கூத்துக்களை தயாரித்ததுடன் மழைப்பழம் எனும் சிறுவர் கூத்தினையும் தயாரித்துள்ளார். ஊர்க்கூத்துக்கார கலைஞர்களுடனும்,ஏனைய கலைஞர்களுடனும் வருங்கால இளம் தலைமுறையினருடனும் இணைந்து பல்வேறு கலை வடிவங்களை,பல்வேறு இனங்களை சமூகத்தினுள் தேடியலைகின்றார்.அதாவது இல்லாத விடயங்களை தேடமால் விளிம்பு நிலையில் இருக்கின்ற சமூகத்துக்குமுக்கியமாக தேவைப்படுகின்ற கலையாற்றுகைகளை நிகழ்த்த பல்வேறு துறைசார்ந்து செயற்படுகின்றார்.சான்றாக புலிக்கூத்தினையும் ஆதாரமாகக் கொள்ளலாம். சிவஞானம்.ஜெயசங்கர் அவர்களின் பல்வேறு செயற்பாடுகளுள் கூத்து மீளுருவாக்கம் என்பது சிறு உயிர்த்துணிக்கையாகவுள்ளது. அதாவது கட்டமைக்கப்பட்ட,புனையப்பட்ட புராண இதிகாச கதைகளை,பாத்திரப்படைப்புகளுக்கூடாக மீளுருவாக்கம் செய்கின்றார்.தலித்தியம்,பெண்ணியம்சார்ந்து பாத்திரப்படைப்புகளை கூத்துச்சமூகத்துடன் கலந்துரையாடி சமூகத்தின் தேவையை உணர்ந்து பன்மைத்துவ சமூகத்தின் தேவைக்கேற்ப தயாரிக்கிறார். கண்ணகி –பாண்டியன்,சீதை - இராமன்,பாஞ்சாலி –பாண்டவர்கள், போன்ற பல்வேறு மீளுருவாக்;க கூத்துப் பாத்திர படைப்புகளுக்கூடாக தட்டியெழுப்பி சமூதாயத்தை கேள்வி கேட்க வைக்கின்றார்.குறிப்பாக கூத்துப் பாத்திரப் படைப்புகளுக்கு ஊடாக மனித சமூதாயத்தை எதிர்க்கணைகளை தொடுக்க வைக்கின்றார். கலாநிதி சிவஞானம்.ஜெயசங்கர் அவர்கள் (1965.12.29) கூத்தின் அழகியலை உள்வாங்கி கருத்தியல் ரீதியாக மீளுருவாக்கக் கூத்துக்களை வட்டக்களரியிலேயே அரங்கேற்ற வைக்கின்றார்.எது எவ்வாறு இருப்பினும் கூத்தரங்கத்தை சமூகங்களினுள்ளே வாழ்தலுக்காக வைத்துக்கொள்ளும் தன்மையினை மீளுருவாக்கக் கூத்துக்கள் செயற்பாடு ரீதியாக செய்த வண்ணமுள்ளது. கூத்துக்கலையானது 17 ஆம் Áற்றாண்டில் நிகழ்ந்ததைப் போலவே இன்றும் தொடர் செயற்பாடாக ஆடப்பட வேண்டும் என்ற பரந்த நோக்கத்திலேயே பரவலாக பல்வேறு பிரதேசங்களிலும்கூத்துச் சமூகங்கள் கூத்துக்கலையை ஆடிய வண்ணமுள்ளது.இந்நிலையினை பலர் உணர்ந்து அதைச்சென்று பார்க்க வேண்டிய தேவையுமுள்ளது. வித்தியானந்தனின் செம்மையாக்கமானது ஒரு பரிமாணமாக அமைய பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் சமூக உள்ளடக்கம் பிறிதொரு பரிமாணமாக அமைய கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டு பணியானது இன்னொரு பரிமாணமாக அமைகின்றது.ஈழக்கூத்தின் பரிமாணமாக பேரா.சு.வித்தியானந்தன் ,பேரா.சி.மௌனகுரு,கலாநிதி சி.ஜெயசங்கர்போன்ற மூன்று ஆளுமையாளர்களின் செயற்பாடு அமைந்துள்ள போதும் பெருவாரியாக செம்மையாக்கம்,மீளுருவாக்கம் எனும் இரு பெரும் திருப்புமுனைகளேதெட்டத்தெளிவாக தென்படுவதை கூத்து சமூகங்களும் கல்வியியலாளர்களும் பெரிதும் அறிந்திருப்பர்.இதன் பிற்பாடும் பிற்பட்ட காலத்திலும் ஆளுமையாளர்களது சிந்தனைக்கேற்ப இன்னுமொரு பரிமாணமும் தோன்றலாம்.அது இயல்பும் நியதியுமாகும். சுருக்கமாகக்கூறின் ஈழக்கூத்தரங்கானது ஒவ்வொரு பிரதேசங்களிலும் தத்தமக்குரிய அடிப்படைப்பண்புகளுடன் ஆடப்பட்டு வரும் வேளையில் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர்களுக்கான தேசியவுணர்வின் சொந்தப் பண்பாடு பற்றி பிரக்ஞை ஏற்பட்டதன் காரணமாகவே சு.வித்தியானந்தனால் செம்மையாக்கம் எனும் பதமும் சமூக சமகாலக் கதைகளை புகுத்தியதனால் சமூக உள்ளடக்கம் எனும் பதமும் உருவாகியது எனலாம். பாரம்பரியக்கலையிலக்கியங்கள்,ஆற்றுகைகள் சார்ந்து வருங்கால இளஞ்சந்ததியினர் செயற்படவேண்டும் எனவும் பாரம்பரியக் கலையாற்றுகைகள் என்றென்றும் மக்கள் மத்தியில் வாழவேண்டும் என்ற பரந்த நோக்கத்திலுமே சி.ஜெயசங்கர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார் என்றால் மிகையாகாது.கூத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு படைப்புக்களை உருவாக்கலாமே தவிர அடிப்படையான கூத்தரங்கத்தினை,கூத்தரங்கத்தின் கட்டுமானத்தினை,வடிவமைப்பினை மாற்றும் பொறுப்பு எவருக்குமில்லையாகும். பாக்கியராஜா மோகனதாஸ்(நுண்கலைமாணி) துறைநீலாவணை |
1-10 of 115