[Untitled]‎ > ‎

01.07.14- அமெரிக்காவில் ஒட்டிப்பிறந்த இரட்டை மீன் கண்டுபிடிக்கப்பட்டது

posted Jul 1, 2014, 5:27 AM by Unknown user
ஒரே உடல் இரட்டை தலைகளுடன் சிலர் அபூர்வமான பிறப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். இரட்டை தலை கொண்ட பாம்புகள் கூட இருக்கின்றன. இந்த வகையில் இரட்டை தலை கொண்ட சுறா மீன் ஒன்று முதல் முறையாக அமெரிக்காவில் இருப்பது உறுதியாக்கி இருக்கிறது. கடலில் சிக்கிய இந்த அதிசய சூறாமீனை புளோரிடாவிலுள்ள கல்லூரி ஒன்றுக்கு ஆய்வு செய்ய கொண்டு வரப்பட்டது.
அங்கு போதுமான ஆய்வு நடத்த வசதிகள் இல்லாததால், பின்னர் இதை தீவிர ஆய்வு நடத்துவதற்காக மிஷிகனிலுள்ள கடல் உயிரின ஆய்வு பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர்ந்தது. பேராசிரியர் வாக்னெர் தலைமையில் விஞ்ஞானிகள் இந்த சூறாமீனை ஆய்வு செய்ததில் அது ஒட்டிப்பிறந்த இரட்டை மீன் என்பதை கண்டுபிடித்தார்கள். இந்த சூறாமீனுக்கு 2 தலைகள் மட்டுமின்றி 2 இருதயம், 2 குடல் பகுதியும், ஒரு வால் ஆகியவை இருப்பதை கண்டுபிடித்தனர்.
Comments