உலகில் வாழும் சிறுவர்களை முக்கியத்துவப்படுத்தி, அவர்களை மரியாதை செய்யும் முகமாக சிறுவர் தினமானது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதலாந்தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன்படி இவ்வருட சிறுவர் தின தொனிப்பொருள் "அன்புடன் எங்களை அரவணையுங்கள்" (Protect Us with Love) என்பதாகும். ஐ.நா சிறுவர் உரிமைகள் சாசனம் 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்று கூறுகின்றது. உலகில் வாழ்கின்ற மக்களில் 1ஃ3 பங்கினர் சிறுவர்களாகக் காணப்படுகின்றனர். ஒவ்வொரு நாடுகளும் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. 'இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்' என்பதற்கிணங்க இன்றைய சிறுவர்கள் தன் குடும்பம், சூழல், சமூகத்தால் எவ்வாறு வழிநடத்தப்பட்டு அன்பு காட்டப்படுகின்றார்களோ, அதன் பிரதிபலிப்பைத் தான் அவர்கள் எதிர்காலத்தில் வெளிப்படுத்துவார்கள.; 'அன்பு காட்டப்பட்ட குழந்தை அன்பு காட்டும்'. எதிர்கால சமுதாயம் ஒளிமயமாக வேண்டுமானால் இன்றைய சிறுவர்கள் அன்புடன் பாதுகாக்கப்பட வேண்டும். உலகில் ஒவ்வொரு சிறுவர்களும் பல்வேறுவகையான திறன்களுடன் பிறக்கின்றனர். அவர்களுடைய ஒவ்வொரு செயற்பாட்டின் வெற்றிக்கும் வழிகளை ஏற்படுத்தி கொடுத்து அவர்களை விருத்தியடையச் செய்யவேண்டியது நமது கடமையாகும். 18வயதுக்குக் குறைந்த அனைத்து சிறுவர்களையும் கண்காணித்து அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதில் பாடசாலைக் கல்வி முக்கியமானது. சிறுவர்கள் என்போர் கள்ளங்கபடமற்றவர்கள், தூய்மையானவர்கள் இவர்களது நடத்தைகளை சீர்குலைப்பதற்கு வெளியில் நிறைய சக்திகள் காணப்படுகின்றது. இதிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவேண்டும். இலங்கையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சிறுவர் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளது. சிறுவர் துஸ்பிரயோகம் ஏற்பட்டால் 24 மணித்தியாலயச் சேவையாகக் காணப்படும். 1929 என்ற தொலைபேசி அழைப்பிற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்யலாம். தற்காலத்தில் பாடசாலை மட்டத்தில் அதிக சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்று வருவதை ஊடகங்கள் வாயிலாக தினந்தோறும் அறிய முடிகிறது. குறிப்பாக முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே இதில் கூடுதலாக சம்பந்தப்படுவது வேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது. இதனாலேயே பாடசாலை மட்டத்தில் நல்லொழுக்கக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பல்வேறு செயற்பாடுகளைச் செய்து வருகின்றது. உலகளாவிய ரீதியில் நோக்கும் போது சிறுவர்கள் மீதான வன்முறைகள், உரிமை மீறல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. சிறுவர்களுக்கு எதிராக துஸ்பிரயோகங்கள் பாலியல், தொழிற்சாலைகளில் சிறுவர்கள் மீதான வன்முறைகள், உரிமை மீறல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. சிறுவர்களுக்கு எதிராக பாலியல் துஸ்பிரயோகங்கள் , சிறுவர் தொழிலும் வேலைப்பழுவும், கடத்துதல், மோசடிகள், உளரீதியான பாதிப்புக்குள்ளாக்குதல் எனப் பல்வேறு வடிவங்களில் மிகக் கொடூரமான சம்பவங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. சிறுவர்கள் தொடர்பாக ஐ.நாவினால் முன்னெடுக்கப்பட்ட விடயங்களில் 1989ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சர்வதேச சிறுவர் உரிமைகள் சாசனம் அக்டோபர் முதலாந் திகதியை சர்வதேச சிறுவர் தினமாகப் பிரகடனப் படுத்தியமை, யூன் மாதம் 12ஆம் திகதியை சிறுவர் தொழிலாளர்களுக்கெதிரான தினமாக பிரகடனப்படுத்தியுள்ளமையும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஐ.நா சபை செயற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறுவர்களின் உரிமைகள் தொடர்பாக எழுத்துருவில் பல்வேறு பிரகடனங்களும், சட்டங்களும், காப்பீடுகளும், ஆவணப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அன்றாடம் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களின் போக்கு அதிகரித்து வருகின்றன. இலங்கையைப் பொறுத்தளவில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அரச கட்டமைப்பில் பல்வேறு காப்பீடுகள் காணப்படுகின்ற அதேவேளை தேசிய சர்வதேச சிவில் அமைப்புக்களும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன. இலங்கையில் 1883ல் முதல் முறையாக சிறுவருக்கான தண்டனைச் சட்டக் கோவை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு 1995இலும், 1998இலும் திருத்தம் செய்யப்பட்டது. இலங்கையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களுக்கு குடும்பங்களின் பொருளாதாரப் பின்னடைவும், குறிப்பாக வறுமையும் ஒரு காரணம் எனக் கூறப்படுகின்றன. பெருந்தோட்டங்கள், கிராமங்களில் வாழும் பொருளாதார பின்னடைவுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தச் செய்து செல்வந்த வீடுகளிற்கும், கடைகள், ஹோட்டல்கள் போன்ற பல இடங்களில் வேலைக்கு அனுப்புகின்றனர். நகர்ப்புறங்களில் வாழும் செல்வந்தர்களின் பிள்ளைகள் தனிப்பட்ட குரோதங்களுக்காகவும் பணத்திற்காகவும் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். மேலும் பெற்றோர் மத்தியில் பிள்ளைகள் தொடர்பான அன்பு, அக்கறையின்மை, பெற்றோர்களின் குறைந்த கல்வியறிவு, சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வின்மை ஆகியன சிறுவர் தொழிலை ஊக்குவிக்கும் காரணிகளாகும். சிறுவர்களின் உரிமைகளை பெரியோர்கள் மதித்தும் வலியுறுத்தியும் செயற்படுத்துவார்களேயானால் மட்டுமே சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க முடியும். ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு அயலவரும் சிறுவர்களுக்கான உரிமைகளைப் பாதுகாத்து அவர்களை மகிழ்ச்சியான சூழலில் அன்புடன் அரவணைக்கவேண்டும். நமது நாளாந்த வாழ்வில் சிறுவர்களை நாளைய சொத்துகளாகக் கருதி அவர்களது உரிமைகளைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சிறுவர் உரிமைகள் மீறப்படும் போது பல்வேறு சட்ட கட்டமைப்புகள் காணப்டுகின்றன. சகல பொலிஸ் திணைக்களங்களிலும் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மனித உரிமைகள் அணைக்குழு, சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விNஷட அழைப்பு இலக்கம் 1929 போன்ற பலரிடமும் சென்று முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்கும் பட்சத்தில் சிறுவர் உரிமை மீறல்களை இல்லாதொழித்து சிறுவர்களை அன்புடன் அரவணைத்து அவர்களது எதிர்காலத்தை வளப்படுத்த நாங்களும் வழி சமைக்க முடியும். |
[Untitled] >