[Untitled]‎ > ‎

02.01.15- மனத்தினால் வரவேற்போமே...

posted Jan 1, 2015, 6:51 PM by Unknown user

      இரண்டாயிரத்து பதினைந்தை
       இன்பமுடன் வரவேற்போம்
       எங்களது வாழ்வினிலே
       ஏற்றமுற வேண்டுமென்று

       சங்கடங்கள் போவதற்கும்
       இங்கிதங்கள் வருவதற்கும்
       பொங்கிவரும் புதுவருடம்
       புதுமருந்தாய் அமைந்திடட்டும்

       வங்கக்கடல் கடைந்த
       மாதவனைக் கேசவனை
       வாழ்த்திநின்ற மார்கழியை
       மனமார வணங்கிடுவோம்

       எங்களது வாழ்விலினிலே
       மங்கலமே வருகவென
       சங்குகொண்டு ஊதிநின்று
       சந்திப்போம் புதுவரவை

      மனங்களில் மாற்றம்வந்து
      மதங்களால் அமைதிவந்து
      தினம்தினம் எங்கள்வாழ்வு
      திருந்திட வேண்டிநிற்போம்

      புலர்ந்திடும் பொழுதுபோல
      பூரிப்பு வந்துசேர
      மலர்ந்திடு வருடமென்று
      மனத்தினால் வரவேற்போமே !

கொந்திராத்து காசுபதி மகன் 
குமார் + குடும்பம்- ஜெர்மனி.
Comments