சுவாமி அவர்களின் 67 ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை கலாநிதி க.கணேசராஜா அவர்களால் பிரசுரிக்கப்பட்டது. தத்துவத்துடனும் விஞ்ஞானத்துடனும் மனிதன் நேரடியாகத் தொடர்புபடுகின்றான். இந்த இரண்டிற்கும் சிந்தனை அடிப்படையானது. இச் சிந்தனைப் பரிணாம வளர்ச்சியின் விளைவை,ஆரம்பகாலம் ( Early Period) மத்திய காலம் ( Middle Period) மறுமலர்ச்சி காலம்,(Renaissance Period) நவீன காலம், (Middle Period) சமகாலம்,(Contemporary Period) கடந்த சமகாலம்(Post Contemporary Period) என நோக்கலாம்;;. இந்த கால பரிணாம வளர்ச்சியில் மொழிஆற்றல், இலக்கியம், கலை, அழகுணர்வு, பழக்கவழக்கம், புதிது புனைதல் இருப்பதை கண்டு பிடித்தல் கற்றவர் கல்லாதவர், அறிவாளி, சொத்துடையோர்,பலசாலி, ஏழை என பல நிலைகள் மனித வர்க்கத்திலும் நடத்தையிலும் தோன்றியது. இந்த தோற்றப் பின்னணியில் சடவாதமும் கருத்தவாதமும் ஒன்றுக்கொண்று மாறுபாடான நிலைப்பாட்டினைக் கொண்துள்ளது. கருத்துவாதம் பிரபஞ்சத்திற்கு அப்பாற் பட்ட விடயம்பற்றி பல கருத்துக்களை முன்வைக்கின்றது. இது நிண்ட வரலாற்றைக் கொண்ட சொல்லாடலுக்கு உட்பட்ட ஒரு விடயமாகும். இந்த கருத்துவாத (Idealism) வரலாற்றுப்பிண்னணியில்தான்; சுவாமிவிபுலாநந்தரை நோக்க வேண்டியுள்ளது. இவர் அம்பாரை மாவட்டத்தில் உள்ள காரைதீவு என்ற பழம்பெரும் கிராமத்திலே பிறந்தார். (.1892 – .1947) “வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ” என்ற பாடலை கேட்டதும் எமது மனம் விபுலானந்தரையே ஞாபகப்படுத்துகிறது. விபுலானந்தர் தமிழியல் சிந்தனையாளராக சம காலத்தில் விளங்கியவர் என்பதற்கு அவரது பல்வேறு பணிகளும்இ படைப்புகளும் காரணமாக இருந்தன. ஆசிரியராக அதிபராக, விரிவுரையாளராக, பேராசிரியராக, பத்திரிகை ஆசிரியராக, கவிஞராக, மொழிபெயர்ப்பாளராக, எழுத்தாளராக, ஆய்வாளராக, கண்டுபிடிப்பாளராக, ஆன்மீக வழிகாட்டியாக, பாடசாலை ஸ்தாபகராக, கல்விசார் குழுக்களின் உறுப்பினராக சிறந்த சொற்பொழிவு செய்பவராக, கலைச் சொல் ஆக்கராக, சங்கங்களின் அல்லது பேரவைகளின் தலைவராக பன்முக பரிமாணங்களை தமது பணியோடு வெளிப்படுத்தி நின்றவர்.அதுமட்டுமல்ல மொழி, பண்பாடு சமயம் சார்ந்த விடயத்தில் மிகுந்த பற்று கொண்ட இவர் குடும்ப உறவுசார்ந்த விடயத்திலும் மிகவும் அக்கறையாக இருந்தார். விபுலானந்தரின் பணிகளை மதீப்பீடு செய்யும் போது ஆன்மீக நெறியுடன் இணைந்த கல்விஇ மூடபழக்கவழக்கங்கள் இல்லாது போதல், கல்வியில் அனைருக்கும் சம வாய்ப்பு, தீண்டாமை ஓளிப்பு, தாய் மொழிக் கல்வி, தேச நலன் பேணக்கூடிய கல்வி, மத வேறுபாடுகளை கருத்தில் கொள்ளாது மக்கள் ஜக்கியமாதல்.போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். சுவாமி தமிழில் எழுதிய கட்டுரைகளை நோக்கும் போது: 01. பூஞ்சோலைக்காவலன் : வங்க நாட்டுக்கவி ரவீந்திர நாத் தாகூர் அவர்கள் இயற்றிய “கார்டனர்” என்னும் ஆங்கிலப் பக்கங்களின் தமிழ் மொழிப் பெயர்ப்பு. செந்தமிழ் தொகுதி – 20, பக்கம் 301-307 (சித்திரை – வைகாசி – 1922) செந்தமிழ் தொகுதி – 22, பக்கம் 69-77. (கார்த்திகை – 1923). 02. மேற்றிசைக் செல்வம் : செந்தமிழ் தொகுதி – 20 பக்கம் 381-390, 469-474 (சித்திரை – வாகாசி 1922) செந்தமிழ் தொகுதி – 21, பக்கம் 185 – 192 (ஆணி 1923) செந்தமிழ் தொகுதி – 22, பக்கம் 121 – 130. 03. விஞ்ஞான தீபம் : செந்தமிழ் தொகுதி – 20, பக்கம் 413 – 440 (சித்திரை – வைகாசி – 1922) செந்தமிழ் தொகுதி – 21, பக்கம் 1 – 10, 61 – 68 (கார்த்திகை – 19922) செந்தமிழ் தொகுதி – 22, பக்கம் 209 – 222 (கார்த்திகை – 1923).04. பொருணூற் சிறப்பு : செந்தமிழ் தொகுதி – 21 பக்கம் 123 – 130, 560 – 564 (சித்திரை – வைகாசி – 1922). 05. யவன புரத்துக் கலைச்செல்வம் : செந்தமிழ் தொகுதி – 21, பக்கம் 501 – 507 (புரட்டாதி – 1923). 06. மஹாலக்ஸ்மி தோத்திரம் : (செய்யுள்) செந்தமிழ் தொகுதி – 22, பக்கம் 241 – 245 (மாசி – 1924). 07. சூரிய சந்ரோற்பத்தி : செந்தமிழ் தொகுதி – 21, பக்கம் 245 – 251 (ஆணி – 1923).08. மலைகடலுற்பத்தி : செந்தமிழ் தொகுதி – 21, பக்கம் 349 – 356 (ஆணி – 1923). 09. மதங்கசூளாமணி : செந்தமிழ் தொகுதி – 22, பக்கம் 321 – 344, 361 – 368, 401 – 422, 467 – 489 (1924) செந்தமிழ் தொகுதி – 23, பக்கம் 1 – 24, 73 – 86, 121 – 130, 161 – 172, 201 – 206 (1925).10. ஐயமும் அழகும் : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 29 – 34 (மார்கழி – 1940 - 1941). 11. வண்ணமும் வடிவும் : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 49 – 56 (மார்கழி – 1940 - 1941).12.நிலவும் பொழிலும் : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 113 – 120 (1940 – 1941).13. மலையும் கடலும் : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 169 – 176 (1940 – 1941).14. கவியும் சால்பும் : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 177 – 184 (1940 – 1941).15. நாடும் நகரும் : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 193 – 200 (பங்குனி – 1942).16. சங்கீத மகரந்தம் : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 337 – 344 (1942).17. எண்ணலளவை : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 473 – 482 (1924)18.இசைக்கிரமம் : செந்தமிழ் தொகுதி – 38, பக்கம் 401 – 410 (1941 – 1942) செந்தமிழ் தொகுதி – 39, பக்கம் 57 – 68 (மார்கழி - 1941 – 1942) பக்கம் 509 – 521 (புரட்டாசி 1942 – 1943) செந்தமிழ் தொகுதி – 40, பக்கம் 33 - 46 (மார்கழி 1942 – 1943). 19. உலக புராணம் : செந்தமிழ் தொகுதி – 39, பக்கம் 19 – 31 (மார்கழி 1941 – 1942).20. வங்கியம் : செந்தமிழ் தொகுதி – 39, பக்கம் 373 – 376 (1942).21. மதுரை இயற்றமீழ் மகாநாட்டுத் தலைவர் பேருரை : செந்தமிழ் தொகுதி – 39, பக்கம் 465 - 480 (ஆவணி - 1942).22. சங்கீத பாரிஜாதம் : செந்தமிழ் தொகுதி – 39, பக்கம் 525 – 536 (1942).23. தில்லி மாநகர்த் திருவமர்மார்பன் திருக்கோயிற் காட்சி : செந்தமிழ் தொகுதி – 40, பக்கம் 1 – 8 (கார்த்திகை 1942).24. நட்டபாடைப் பண்ணின் எட்டுக்கட்டளைகள் : செந்தமிழ் தொகுதி – 41, பக்கம் 9 – 14 (1943).25. தென்னாட்டில் ஊற்றெடுத்த அன்புப் பெருக்கு வடநாட்டில் பரவிய வன்முறை : செந்தமிழ் தொகுதி – 40, பக்கம் 73 – 80. செந்தமிழ் தொகுதி – 41, பக்கம் 41 – 46 (மார்கழி 1943 – 1944).26. பாரிஜாதவீணை : செந்தமிழ் தொகுதி – 42, பக்கம் 1 – 4 (கார்த்திகை 1944).27. இமயம் சேர்ந்தகாக்கை : தமிழ்ப்பொழில் - 16ம் துணர், பக்கம் 367 – 375 (இக்கட்டுரை உரைநடை விருந்து என்னும் நூலிலும் வெளிவந்தது. பக்கம் 85 – 91, 4ம் பதிப்பு 1955).28. உள்ளம் கவர்கள்வன் : தமிழ்ப்பொழில் - 16ம் துணர், பக்கம் 335 – 341..29. திருக்குறள் முதலதிகாரமும் திருச்சிரபுரத்துத் திருப்பதிகாரமும் – தமிழ்ப் பொழில் 16ம் துணர், பக்கம் 207 – 213..30. நீரரமகளிர் இன்னிசைப்பாடல் : தமிழ்ப்பொழில் - 16ம் துணர், பக்கம் 291 – 296.31. பண்ணும் திறனும் : தமிழ்ப்பொழில் - 16ம் துணர், பக்கம் 391 – 448.32. லகர வெழுத்து : தமிழ்ப்பொழில் - 16ம் துணர், பக்கம் 189 – 195.33. உணவு : தமிழ்ப்பொழில் - 17ம் துணர், பக்கம் 9 – 13.34. குழலும் யாழும் : தமிழ்ப்பொழில் - 17ம் துணர், பக்கம் 26 – 30, 35 – 43.35. கண்ணகியார் வழக்குரை : தமிழ்ப்பொழில் - 17ம் துணர், பக்கம் 59 – 61.36. எண்ணும் இசையும் : தமிழ்ப்பொழில் - 17ம் துணர், பக்கம் 67 – 71, 95 – 107, 127 – 130, 158 – 160.37. பாலைத்திரிபு : தமிழ்ப்பொழில் - 17ம் துணர், பக்கம் 246 – 249, 278 – 281, 306 – 309, 338 – 341, தமிழ்பொழில் 18ம் துணர், பக்கம் 5 – 12. 38. சுருதி வீணை : தமிழ்ப்பொழில் - 18ம் துணர், பக்கம் 41 – 48, 81 – 87.39. இயலிசை நாடகம் : தமிழ்ப்பொழில் - 18ம் துணர், பக்கம் 160 – 170.40. கங்கையில் எழுதியிட்ட ஓலை : (செய்யுள்) தமிழ்ப்பொழில் - 18ம் துணர், பக்கம் 411 – 441.41. பேரையூர் அம்பாள் குளம் பொய்யாத விநாயகர்திருவடி பரவிய தேவபாணி : தமிழ்ப்பொழில் - 22ம் துணர், பக்கம் 314 – 315 (சித்திரை – 1946).42. சோழ மண்டலத்தமிழும் ஈழமண்டலத்தமிழும் : கலைமகள், பக்கம் 82 – 88 (1941). 43. தமிழில் எழுத்துக் குறை : கலைமகள். 44. ஆங்கிலவாணி : (ஆங்கில நாட்டின் கலைச்செல்வத்தை விளக்குவது) பண்டித மணி மு.கதிரேசச்செட்டியார் அவர்களின் 60ம் ஆண்டு நிறைவு விழா வெளியீடாகிய மணிமலரில் வெளிவந்தது.. 45. மானசவாவி : திரு. பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களின் 60வது ஆண்டு நிறைவு விழா மணிமலரில் வெளியிடுவதற்காக எழுதப்பட்டது. இந்த மலரை அச்சிடும் பொறுப்பை ஏற்றிருந்த திரு. ச.க. கோவிந்தசாமிப்பிள்ளை எம்.ஏ அவர்கள் திடீரென்று காலம் சென்று விட்டபடியால் மணிமலர் வெளியிடப்படவில்லை. ஆகவே மானச வாவிக்கட்டுரையும் வெளியாகவில்லை. 46. பயனுள்ள கல்வி : செந்தமிழ்ச்செல்வி - 12ம் சிலம்பு, பக்கம் 410 – 413 (1933ஃ34) (வித்தியாசமாசாரப் பத்திரிகை – பக்கம் 195-202 மார்ச் 1934).47. தமிழ்;க்கலைச் சொல்லாக்க மகாநாடு தலைமையுரை : செந்தமிழ்ச்செல்வி - 15ம் சிலம்பு, பக்கம் 99 – 102, 149 - 155 (1936-37) (1936ம் ஆண்டு செப்டம்;பர் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் பேசியது) அடியார்கள் பாடிய செய்யுள் நூல்களாக :கணேச தோத்திர பஞ்சகம்இ கதிரையம்பதி மாணிக்கப்பிள்ளையார் இரட்டை மணிமாலைஇசுப்பிரமணிய சுவாமிகள் இரட்டை மணிமாலைஇகுமாரவேணவமணிமாலை.அடிகள் தமிழில் எழுதிய வசன நூல்கள்இ யாழ்நூல் என்னும் இசைத்தமிழ் நூல்-கரத்தைத் தமிழ்ச் சங்க வெளியீடு – தஞ்சை (1947)இ மதங்கசூளாமணி என்னும் ஒரு நாடகத் தமிழ் நூல்-செந்தமிழ் பிரசுரம் - 51.மதுரைத் தமிழ்ச் சங்கமுத்திரசாலை – 1926இநடராசவடிவம்-தில்லைதிருநடனம்இ உமாமகேஷ்வரம்இகலைச் சொல்லகராதியின் ஒரு பகுதி.அடிகளார் மொழி செயர்த்த நூல்களாக: சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள் - (மொழிபெயர்ப்பு) ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் மயிலாப்பூர் சென்னை (1945)இவிவேகானந்தஞான தீபம் (மொழிபெயர்ப்பு) 1934)இ கருமயோகம்இஞானயோகம்இநம்மவர் நாட்டுஞான வாழ்க்கை.மேலும் அடிகளார் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளாக :The book of books of Tamil land-Thirukkural (தமிழக நூல்களுள் ஒரு நூல் திருக்குறள்) Vedanta Kesari – 1940, The Harps of Ancient Tamil Land and the twenty two srutis of Indian Musical Theory : Culcutta Review – 1941,The Origin and growth of Tamil Literature (தமிழ் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்)The Culcutta Heritage of India -Sri Ramakrishna
Centenary Memo. ial. Vol.iii,Phonotics (தமிழ் நெடுங்கணக்கின் ஒலிவடிவத்தைப் பற்றியது) University Review (1947),The Development of Tami lion Religious Thought Annamalai University – Journal Vol – 1 No:2,The Gift of Tongues an Essay on the study of Language prabudda – Bharath Golden Jubilee Number – 1945 Pages 87 – 90 இப்படியான படைப்புக்களை வெளிப்படுத்தியவரை அறிய விரும்புவோர் இன்று ஏராளம். சாதாரண மாணவர்கள் முதல் புலமையாளர்கள் வரை இவரைப்பற்றியும் இவரது எழுத்துக்கள் பற்றியும் அறிய முயல்பவாகள் பலர்;. அப்பிள் பழத்தினால் அப்பிள் மரம் பிரபல்யமாவது போன்று விபுலானந்தரின் எண்ணம் செயல் எழுத்து ஆகியவற்றால் தமிழ் பேசும் நல் உலகமே பெருமையடைகிறது. அவரது பிறந்த இல்லத்தை வந்து பார்த்தும் அவரது நினைவாக கட்டப்பட்டு இருக்கின்ற விபுலானந்த ஞாப கார்த்தமண்டபத்தை பார்த்தும் சிறப்படைவர். அவரது வீடு பழைய முறையில் அமைந்த வீடாக உள்ளது. ஆனால் அவரது ஞாபகமாக அமைந்துள்ள மண்டபம் பல கலாசார நிகழ்ச்சிகளை நடத்தக் கூடிய அழகான கலை அரங்கு. அதில் இன்றும் பல தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகள் நிகழ்வதுண்டு. அது மட்டுமல்ல அவர் பெயர்சார்ந்த பாடசாலைகள் , விளையாட்டு கழகங்கள், தனியார் கல்வியகங்கள், சமூக அமைப்புகள் அங்கு மட்டுமல்ல எல்லா பிரதேசங்களிலும் அமைந்துள்ளன. சுவாமியின் நோக்கில் சமயம் பற்றி நோக்கும் போது: “சமயம் மனிதனின் வாழ்வு, அவனது ஆன்மாவின் ஒளி;;: உலகில் வாழும் மார்க்கத்திற்குத் தீபம்: மனிதனின் இலட்சியமாம், சத்தியத்தின் உயர்நாடி: வாழ்வின் பேரன்பம்: அமைதியின் நித்தியத்தின் பூரணத்துவம் என்பதும், எல்லா மானிடரிடமும தெய்வீகமுறைகின்றது. இம்மானிட உடல் இறைவனின் ஆலாயமாகும். இதனை இருளில் வைத்திருக்கலாகாது. அதனுள் அறிவுச்சுடர் ஏற்பட வேண்டும். அறிவு விளக்கானது இறைவனைப் போன்றது. அது கல்வியாகும். இறைவனைப் பற்றிய அறிவின் வழியாக ஞானோதயம் பெறுதல் வேண்டும்” என்பதும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமகம்சரின் அருள்வாக்காகும்;.மனிதனை நல்வழிப்படுத்தவும் வாழ்வைச் செம்மைப்படுத்தவுமே காலத்துக்குக் காலம உலகிற் பல்வேறு சமயங்களும் சமயப் பிரிவுகளும் தோன்றலாயின. “வாழ்க்கை, நெறிமுறைகளுக்கு இசைந்தவாறு அமையவேண்டும் என்ற கவலை அரும்பும் நிலையே சமயத்தின் தோற்றமாகும்” என்பர். அவ்வாறு தோன்றும் சமயங்கள், காலப் போக்கில் ஊழல்களுக்கும் சாதாரன மக்கள் பின்பற்ற முடியாத கடினமான கட்டுப்பாடுகளுக்கும் நெறிமுறைகளுக்கும் இடமளிக்கும் போதும், காலத்தின் தேவைகளை கருத்திற் கொள்ளாத போதும் சமய வாழ்வுக்கும் உலகியல் வாழ்வுக்குமிடையிலான நெருங்கிய பினைப்பில் விரிசல் ஏற்படுகிறது. இந்நிலையிற் சில மதங்கள் செல்வாக்கிழப்பதும் அருகுவதும் மறைந்து போவதும் காணக்கூடியன. மதங்களிற் குறைபாடுகள் ஏற்படும்போது காலத்துக்குக் காலம் தனிப்பட்டவர்களாலோ இயக்கங்களாலோ காலத்துக்கேற்ற வகையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட்டும் குறைபாடுகள் அகற்றப்பட்டும் மீண்டும் நந்நிலைக்குக் கொண்டுவரப்படுதலுமுண்டு. புதிய சமயப் பரிவுகள் தோன்றுவதும் உலகச் சமயவரலாற்றில் காணக்கூடியன. இந்தியச் சமய வரலாற்றையும், தமிழகச் சமய வரலாற்றையும் நோக்கினாலே மேற்கண்ட உண்மை தெற்றெனப் புலப்படும். சமய வாழ்வும், சமயப்பணிகளும் மக்கள் வாழ்க்கை நலனோடு இணைந்து செல்ல வேண்டும். சமயத்தையும் வாழ்வையும் தனித்தனியே பிரித்து நோக்காமல் சமூகத்தின் நல்வாழ்வையும் முன்னேற்றத்தையும் முதன்மையாகக் கொண்டதாகச் சமயமும் வாழ்வும இரண்டறக் கலந்து நிற்றல் வேண்டும். மக்களது வாழ்க்கை நலனைக் கருத்திற் கொள்ளாத எந்த ஒரு சமயமும் நீண்ட காலம் உயிரத்துடிப்புடன் நிலைக்க மாட்டாது. அதே போன்று ஆத்மீக உணர்வையும் நெறிமுறைகளையும், ஒழுக்க விதிகளையும் உதாசீனம் செய்யும் சமுதாயமும் சீரழிந்து போகும். இவ்வுண்மையினை உலகச் சமூக வரலாறுகள் நிரூபித்து நிற்பதை அவதானிக்கலாம் என சுவாமி வெளிப்படுத்தினார். விபுலானந்தரின் கல்வி பற்றிய விழுமியங்களை நோக்கும் போது:பழந்தமிழ் இலக்கிய நெறி நின்று தற்காலத்துக்கேற்ற கல்வியினைக் கட்டியெழுப்புவதுதான் விபுலாநந்த அடிகளாரின் நோக்கமாக இருந்தது. மேலை நாட்டுத் தத்துவங்களையோ கல்விக் கோட்பாடுகளையோ தனித்து ஏற்றுக் கொள்ளாது தமது பண்டையோர் கண்ட கல்வி முறையின் வழிநின்று, தற்காலத்துக்குத் தேவையான கல்வித்திட்டங்களை அடிகளார் வகுத்துள்ளார். அடிகளாரின் எழுத்தாக்கங்கள் யாவற்றையும் சேர்த்து தொகுத்து, அவற்றிலே அவர் நுணுக்கமாக பொதிந்து வைத்துள்ள கல்விக்கருத்துக்களைச் சரிவரத் தெரிவு செய்து, ஒழுங்குபடத் தொகுத்தமைத்துத் தந்தால் அவர் வாழ்ந்த காலத்திற்கேற்பவும் அதற்குப் பின்னரும் எத்தகையதொரு கல்விக் கொள்கையைத் தனது மனதிலே அவர் கொண்டிருந்தார் என்பது நமக்குத் தெளிவாகப் புலப்படும். அந்தவகையிலே, அடிகளாரது மொழிநடையிலேயே இக்கல்விக் கருத்துக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்கருத்துக்களை மனத்திருத்தி, நாம் ஆழமாகச் சிந்தித்தால் மேற்கிந்திய அறிவியலினைக் கீழைத்தேய கலைஞானத்துடன் சேர்த்து உள, உடற்பயிற்சி அடிப்படையில் புதியதொரு கல்வி அமைப்பை எம்மிடையே பரப்ப வேண்டும் என்பதே இவரது நோக்கமாக இருந்தது என்பதனை நாம் அறிய முடிகின்றது. அறிவு, இச்சை, செயல் என்னும் மனத்தின் குணங்கள் மூன்றினுள் அறிவு உண்மையைச் சார்ந்தது. இச்சை அழகின் பாற்பாடுவது, செயல் செம்மையை உணர்த்துவது, உண்மை, அழகு, செம்மை என்பன முறையே அறிவு, இச்சை, செயலுக்கு எல்லையாகவும் நிலைக்களமாகவும் அமைந்தன. நெஞ்சத்து நல்லம் யாமென்னும் நடுவுநிலைமையாற் கல்வியேயழகு என்பதால் கல்வியும் உயர்ந்து அழகாகின்றது. இத்தகைய கல்வியை உண்மையிலே கற்ற ஒரு மனிதன் யாதும் ஊரே யாவரும் கேளீர் எனக் கூறுகின்றான். கல்வியறிவுள்ள மனிதன் ஆட்சி செய்யும் சாம்ராஜ்யமானது தேசிய உலலைகளினால் வரையறுக்கப் படுவதொன்றல்ல. இத்தகைய கல்விமான் எவ்வுருவை உடையவனெனினும் எத்தகையோராலும் மதிக்கப்படுவான். இறந்தகாலத்தும் எதிர் காலத்தும் நிகழ்காலத்தும் எய்திய உண்மையை ஆராய்ந்து உணரும் ஆற்றல் கல்விக்கு உண்டு. அவ்வாறே ஒருவனுக்கு மறுமைப்பயன் தருவது கல்வியாகும். இவ்விதமாக இம்மை மறுமைப்பயன்களைத் தந்து நிற்கின்ற கல்வியோ கரையற்ற தன்மையது என்று சுவாமி கூறுவது வள்ளுவப் பெருக்தகையின் கருத்துக்களுடன் உடன்புடுகிறது. சுவாமி விபுலானந்த அடிகளாருடைய பணி பற்றி பார்க்கும் போது இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவில் அவர் ஆற்றிய பங்களிப்பு அதிகமாகும். குறிப்பாக கரந்தை தமிழ்சங்கத்திலும் மதுரை தமிழ் சங்கத்திலும் பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். அவர் எழுதிய கட்டுரைகள் இன்னும் ஆராய்ச்சிக்கு உட்படக் கூடியவை. இவற்றுள் சிலவற்றை தொகுத்து நூலாக வெளியீட்டிருக்கிறார் நண்பர், முனைவர் ஜெ.அரங்கராஜ் அவர்கள். அவர் தனது தொகுப்பு நூலான “சுவாமி விபுலானந்தர் பேச்சும் எழுத்தும”; என்ற தலைப்பில் இந்தியாவில் 2009 ல் வெளியீட்டிருக்கிறார். அந்நூலில் கீழ்வரும் தலைப்புக்களில் சுவாமி கட்டரைகளை எழுதியிருப்பதை அவரது தொகுப்பு நூலில் அறியமுடிகறது. அவையாவன “நிலவும் பொழிலும்”, “நாடும் நகரும்”;, “மலையும் கடலும”;, “கவியும் சால்பும், சமயமும் அழகும், வண்ணமும் வடிவும், விஞ்ஞான தீபம், சூரிய சந்திரோற்பத்தி”, “வங்கியம்”, “பொருநூற்சிறப்பு-1” ,”பொருநூற்சிறப்பு-2,” “உலக புராணம்”, “எண்ணலளவை”, “லகரவெழுத்து”, “மதுரை இயற்றமிழ் மாநாட்டு தலைவர் பேருரை”, “திருக்குறள் முதல் அதிகாரமும் திருச்சிவபுரத்து திருப்பதிகமும”;, “இமையம் சேர்ந்த காக்கை”, “உள்ளம் கவர் கள்வன”;, “உணவு, கரந்தை தமிழ்சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழாவில் தலைமை தாங்கிய உயர் திரு.சுவாமி விபுலானந்தர் அவர்கள் பேசிய முன்னுரை”, “கங்கையில் எழுதியிட்ட ஓலை”, “நிலவும் பொழிலும்,” “சங்கீத பாரிஜாதம்”, “சங்கீத மகரந்தம்”, “இசைக்கிரமம், பண்ணும் திறனும்”, “பண்ணும் திறனும்”, “எண்ணும் இசையும்”, “எண்ணும் எழுத்தும”;, “சுருதி வீணை”, “குழலும் யாழும்”;, “நீரரமகளிர் இன்னிசை பாடல”, “இயலிசை நாடகம், பாலைத்திரிபு”.போண்ற கட்டுரைகள் அவரது நூலில்; காணப்படுகிறது.. சுவாமி விபுலானந்த அடிகளாரது தமிழ் ஆக்கங்கள் யாவற்றையும் படித்து அவற்றிலிருந்த சிறந்த கருத்துக்களை மணிமொழிகளாக தொகுத்து வெளியீட்டுள்ளார் கல்விஅமைச்சின் தமிழ்மொழிப்பிரிவின் முன்னாள் பணிப்பாளராகிய என். நடராசா அவர்கள்இ அவற்றுள் சிலவற்றை இங்கு நான் குறித்துக் காட்ட விரும்புகின்றேன். கடவுளிடத்து வழிப்பட்டு பக்தி செய்தால் தீய குணங்களைப் போக்கும். ஆடம்பரம் இன்றி தியானம் செய்ய விரும்புபவன் துயிலப் போகும் போதும் துயில் எழுந்தும் கிடந்த படியே தியானம் செய்வது எழியதும் மேலானதுமான முறையாகும் யான் உன்னைத் தொழவேண்டும் தூய்மையடைய வேண்டும் பலஉயிர்க்கும் பயன்பட வேண்டும் இன்புற்றிருக்க வேண்டும் என்று அவனைப் பிரார்த்திக்க வேண்டும். தன்னிடத்திலும் சரி ஆசிரியரிடத்திலும் சரி தமையனிடத்திலும் சரி எந்த உயிரிடத்திலாயினும் நீதியோடு நிகழ்கின்ற இரக்கமே உண்மையன்பு. காரணம் தெரியாமலே பனையிலும் பற்றையிலும் ஏழையிலும் வழிப்போக்கனிடத்திலும் உள்ளம் ஓடித்தழுவி இரக்கத்தையோ இன்பத்தையோ அடையக் கூடுமானால் அதுதான் அன்பு வாழ்வு.. பயனில்லாத செயலும்இ சிந்தனையும் விவேகமற்று நடப்பதும் ஆத்தும துரோகமாகும் காமத்திலும் வெகுளி கொடியதுஇ வெகுளியிலும் மயக்கம் கொடியது விடய சுகங்களை காதலித்து நிற்கும் பற்றுள்ளமே காமம் எனப்படுவது. மற்றைய பொருள் மேற்செல்லும் உளப்போக்கினை பிறிதொருவர் இடைநின்று தடுக்குங்கால் அவற்றை அழித்தற்கு முயலும் முயற்சியே வெகுளியாவது.. வெகுளியினால் அலைந்த உள்ளம் நன்மையைத் தீமை என்றும் தீமையை நன்மை என்றும் மாறுபட உணர்வதே மயக்கம் எனப்படுவது. இம்மூன்றும் எழுதற்கு பற்றுக் கோடாகிய விடைய சுகங்களை வெறுத்தகற்றுதலால் ஆன்மசக்தி அதிகரிக்கின்றது. மௌனம் என்பது உரையாடாது இருக்கும் ஒன்று மாத்திரம் அன்று மனம். மெய். மொழி ஆகிய மூன்றும் சமநிலையில் நிற்பதே உண்மையான மௌனமாகும். இத்தகைய மௌனத்தினால் ஆன்ம சக்தி அதிகரிக்கின்றது. அன்மையில் சுவாமிகளின் ஆக்கங்கள் பற்றி தேடும் அவாவில் இந்தியாவின் கரந்தையில் உள்ள தமிழ்ச் சங்கத்திற்குச் சென்றேன் அங்கு தமிழசங்கத்தினரால் 1925ம் ஆண்டு முதல் வெளியிடப்படுகின்ற “தமிழ்ப் பொழில்” என்ற கட்டுரைத்தொகுதி நூலில் 1947ம் ஆண்டு வெளியான தொகுதியில் விபுலானந்தர் பற்றிய குறிப்புக்கள் வாசிக்கக் கிடைத்தது அக்குறிப்பினை அப்படியே பகிர்ந்து கொள்கின்றேன்.“அண்மையில் இசைத்தமிழ் நூலாகிய யாழ் நூலை நிறைவு செய்து அரங்கேற்றி அருளிய யாழ் நூல் ஆசிரியரும், இலங்கை பல்கலைக்கழக தமிழ் பேராசிரியரும் ஆகிய அருட்டிரு விபுலாநந்த அடிகளாரவர்கள் கொழும்பு நகரத்திலே 1947 ஜூலை 19 சனிக்கிழமை இரவு 1 ¼ மணிக்கு இறைவன் திருவருளிற்கலந்து மறைந்தார்கள் என்னும் துயரச் செய்தி தமிழகத்தாருள்ளத்திற் பேரிடி வீழ்ந்ததென பெரும் கலக்கத்தை தருகின்றது. சென்ற வைகாசித்திங்களில் ஆளுடைய பிள்ளையாரர் திருநாளில் (5,6-06-1947) திருக்கொள்ளம் பூதூர்திருக்கோவிலில் நிகழ்ந்த யாழ்நூல் அரங்கேற்று விழாவில் பெருமகிழ்சியில் நிலைத்தயாம் தமிழருக்கு எய்ப்பில் வைப்பாகிய அடிகளாரது பெரும் புலமையினைக் கொண்டு தமிழகத்தில் இன்னும் பல புது நூல்களைப் பெற்று மகிழ்வார் எனவும் பண்டைத்தமிழர் இசை நலம், உலகெலாம் பரவ அடிகள் யாழ் நூலை ஆங்கில மொழியில் இயற்றியளிப்பார்கள் எனவும் எதிர்பார்த்திருந்தோமே.. எமது எண்ணங்கள் சிதறுண்டு போகும் வண்ணம் இவ்வளவு விரைவில் அடிகளார் எம்மைப்பிரியும் தீவினையுடைய ராயினேம் என்றதன்றி வேறு என்ன சொல்ல இருக்கிறது. உடைந்த நெஞ்சினே மாகிய யாம், எமது துயரத்தினை இணைத்தெடுத்து வெளியிடவும் இயலாதிருக்கின்றோம்.” “நம் சங்கத்தை போற்றி வளர்த்த செந்தமிழ் புலவர் தமிழவேள் அவர்கள் வட நாட்டின் அயோத்தி நகரின் அருகே இறையருளிற் கலந்து மறைந்த துன்ப நிகழ்வைக் கேட்டு உள்ளங்கலங்கிய விபுலாநந்ந அடிகளார் அருட்புலமை நீர் பெய்து, நம் அனைவரையும் ஆறாத்துயரத்தில் ஆழ்த்தினார். இசைத் தமிழ் நூலை விரைவில் இயற்றி அளித்தல் வேண்டுமென அடிக்கடி தமிழவேளவர்கள் வேண்டியதற்கிணங்க நம் அடிகளாரும், தமிழவேள் அவர்கள் அன்பு நிலையமாகிய கரந்தை தமிழ்ச்சங்கத்தின் கதிரையில் அமர்ந்து யாநூலின் முதற்பகுதியை எழுதினார்கள். போர்க்காலத்தில் கல்கத்தா நகரத்தில் தங்கிய அடிகளாரது உள்ளம், பண்டைத்தமிழரது அருங்கநிதியமாகிய இசைச் செல்வத்தை எப்படியாவது தமிழ் நாட்டார்க்கும், உலகத்தார்க்கும் வெளிப்படுத்திவிட வேண்டுமென்ற நினைவிலேயே தோய்ந்திருந்தது. அந்நாளில் அடிகளார் கருத்தினைக் குறிப்பினால் உணர்ந்து அதனைவாங்கித்தர முன்வந்த பெரிய திருவெள்ளம் பூதூர் திருப்பணிச் செல்வரும், நம் சங்கப் பேரன்பரும், புரவலரும் ஆகிய கோனூர் சமீன்;தார் திரு.பெ.ராம்.சீத. சிதம்பரச் செட்டியாரவர்களாவர். இவர்களது தூண்டுதலினால் அடிகளார் கல்கத்தாவில் நின்று மீண்டும் தமிழ் நாட்டிற்கு வந்து புதுக்கோட்டை ராம நிலையம் என்னும் இவர் தம் இல்லத்தில் தங்கி யாழ் நூலின் பிற்பகுதியினையும் எழுதிமுடித்தார்கள். யாழ் நூல் எழுதி முடிந்த பின்னரும் அதனை அச்சிடத்தொடங்குவதற்குத் தடைகள் இருந்தன. ஊணுறக்கமின்றி இவ்வாராய்ச்சியினை நிகழ்த்தி தளர்ந்த நிலையில் உள்ள அடிகளார் இலங்கைப் பல்கலைக்கழக அலுவல்களையும் மேற்கொண்டு நிகழ்த்தும் கடமையுடையராணார்கள். வட நாட்டிற்கும் தென்நாட்டிற்கும் சென்று வந்த நலிவால் அவர்களுக்கு நெருப்புக்காச்சல் உளதாயிற்று. அதனால்பெரிதும் வருத்த முற்ற அடிகளாரது நல்லுயிர்இ உடம்பின் அகத்ததோ புறத்ததேர் என ஐயுறு நிலையினை எய்தியது. இந்நிலையில் அடிகளாரைக்கண்டு வேண்டும் மருத்துவ வசதிகளை செய்யவந்த செட்டியார் அவர்களை நோக்கி அடிகளார் மெலிந்த குரலில் கூறிய மொழி நம்மனோர் உள்ளத்தையுருக்கும் நீர்மையதாம்.. “யான் இன்னும் சிலவாண்டுகள் உயிர் வாழ்தற்குரிய நன்மருந்து யாழ் நூலையச்சிட்டுப்பார்த்தலொன்றே“ என அடிகளார் கூறிய கனிவுரையைக்கேட்ட செட்டியார் யாழ்நூலை விihந்து அச்சிடச்செய்தார்கள். அதன்பின் யாழ் நூல் திருத்தப்படிகளை அடிகளார்பார்வைக்கு அனுப்பிவந்தோம். அவற்றைக்கண்டு மகிழ்ந்த அடிகளாரும் நோய் நீங்கி நலம் பெற்றார்கள். என்றாலும்இ அவர்கள் தமிழாராய்ச்சியில்வைத்த பேராற்றலால் தம் உடம்பினை உரியவகையில் பேணிக்கொள்ளவும் மறந்தார்கள். அதனால் பாரிச வாயு என்னும் நோய் அவர்கள் உடம்பை பற்றியது. யாழ் நூலரங்கேற்றத்தை விரைவில் நிகழ்த்தித் தாம் கண்ட அரியவுண்மைகளை தமிழறிஞர்களுக்கு வெளிப்படுத்திவிட வேண்டு மென்னும் ஆர்வம் அடிகளார் உள்ளத்தில் பெருகியது. அந்நிலையில் அவர்களை செட்டியார் அவர்கள் நன்றாக கவனிதது வந்தார்கள். அவர்க்ள் தொண்டின்பயனாக அடிகளாரும் உடல் நலம் பெற்று யாழ் நூல் அரங்கேற்று விழாவில் நோய் நீங்கிய பெருமித நிலையில் வீற்றிருந்தார். பண்டைத்தமிழர் இசைநயங்களை எடுத்தரைத்து நம்தமிழ் மக்களுக்குத் தமிழ்ப்பணியில் புதிய எழுச்சியினையும் ஊக்கத்தினையும் தந்தருளினார்” ……. என அந்நூலில் முதலாம்இ இரணடாம் பக்கங்களில் அவர்பற்றி எழுதியுள்ளார்கள். இப்படியாக சுவாமி அவர்களைப்பற்றி பலகருத்துக்களை பல கோணங்களில் முன்வைக்க முடிகின்றது. பொதுவாக அவரது சமநிலை ஆளுமைத்தன்மைஇகருத்தியல் நோக்குஇ பற்றற்ற செயலும் துறவு நிலையும்இ பல் கோண ஆய்வுஇ சமய அனுபவம்இ கற்றது போதாது என்ற உணர்வுஇ உண்மையை அறிய வேண்டும் என்ற அவாபோன்றவைகள் அவரது கருத்தியல் தன்மையை உறுதிப்படுத்துகிறது. கலாநிதி. க.கணேசராஜா முதுநிலை விரிவுரையாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் |
[Untitled] >