இலங்கை சுதந்திரமடைந்து 67 வருடங்களாகின்றன. சுதந்நதிரத்திற்காக மூவினங்களும் சேர்ந்து செய்த தியாகங்களை அறிவோம். ஆனால் சில காலத்தில் தமிழினம் பலவழிகளாலும் ஒடுக்கப்பட மீண்டும் விடுதலை சுதந்திர உணர்வு தலைதூக்கியது.பலனாக போராட்டம் அழிவு என்று தமிழினம் இழந்தவை ஏராளம். இன்று நல்லாட்சி உருவாவதற்கு அதே தமிழினம் கூடுதல் பங்கைச்செலுத்தியிருக்கின்றன. அவ்வினம் சுதந்திரத்தை நுகரத் துடிக்கின்றது. இந்நிலையில் இனத்திற்கு அப்பால் சமயரீதியில் இலங்கை கூறுபோடப்பட்டிருக்கிறது. இச்சமயமுரண்பாடு களையப்படவேண்டும். நல்லாட்சி ஒரு நாட்டில் நல்லாட்சி நிலவினால் மட்டுமே சமாதானம் ஏற்படும். சமாதானம் நாட்டில் மட்டுமல்ல வீட்டிலும் சமூகத்திலும் சுற்றுச் சூழலிலும் ஊர் எல்லைப்புறங்களிலும் பெண்கள் சிறுவர்கள் மதகுருமார்கள் கல்விமான்கள் அரசியல்வாதிகள் இளைஞர்கள் யுவதிகள் போன்ற அனைவரின் உணர்விலும் உள்ளத்திலும் சமாதானம் சமாதான உணர்வு ஏற்பட வேண்டும். விட்டுக்கொடுப்பு என்பது ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஏற்பட வேண்டும். கருத்து முரண்பாடு விட்டுக்கொடுக்காத தன்மை புரிந்துணர்வு இன்மை போன்றவைகளே ,ன முரண்பாட்டையும் ,னப்பிரச்சினையையும் சமாதான மின்மையும் ஏற்படுத்துகின்றது. ஆகையால் சமாதானம் என்பது ஒரு தூணில் கட்டியெழுப்ப முடியாது. சமாதானம் என்பது ஒவ்வொரு மனிதன் மனங்களிலும் உணர்வுகளிலும் ஏற்பட வேண்டும். சிறுவர்கள் பெண்கள் மதகுருமார்கள் எல்லைக்கிராம மக்கள் அரசியல்வாதிகள் பல்கலைகழக மாணவர்கள் கல்விமான்கள் போன்றவர்களின் மனதில் சமாதானம் ஏற்பட வேண்டும்;. இவ்வாறு பல்வேறு கோணங்களிலும சமாதானம்; கட்டியெழுப்பட வேண்டும். இன்று இறையருளால் நல்லாட்சி என்ற பதத்திற்கு படிப்படியாக அர்த்தம் பெறப்பட்டுவருகிறது. அது நிலைத்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டுமென்பது பலரதும் பிரார்த்தனையாகும். இன்றைய உலகம் சண்டை சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கிறது. தேசீயம் – சர்வதேசம் பற்றி சண்டைகள், இன – மத சச்சரவுகள், வர்க்க -வகுப்புப் பூசல்கள் ஆகிய இவற்றை அலட்சியப்படுத்துவதோ, இல்லை என்று மறுத்துரைப்பதோ முட்டாள் தனமானது. இற்றிற்கு நாம் சமாதான முறையிலேயே தீர்வுக்காண வேண்டும். சமயவேறுபாடுகள். சமய வேறுபாடுகள் என்பது ஒரு புதிய தோற்றமல்ல. இது மனித இனத்தின் நீண்ட வரலாறு போன்றே தொன்மையானது. ஒரே பிராந்தியத்துக்குள்ளும் ஒரே கலாசாரத்துக்குள்ளும் பல்வேறு சமய நம்பிக்கைகளுமி சமயங்களுமி ஆதரவாளர் குழுக்களும் தற்போது காணப்படுவது போன்றே முற்காலத்திலும் காணப்பட்டன. சிலவேளை சமய வேறுபாடுகள் காரணமாக ஏற்பட்ட முறுகல்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பல மில்லியன் மக்களின் உயிர்களைக் காவுகொண்டதோடு எண்ணிலடங்கா பெறுமதியான உடமைகளையும் அழித்துள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சமய வேறுபாடுகள் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரிவுகளுக்குள்ளும் யுத்தங்களைத் தோற்றவித்துள்ளன. சமய வேறுபாடுகள் தமக்குப் பாதகமானது எனக்கருதியவர்களால் இப்பூமியில் இருந்து பல கலாசாரங்கள் தயவுதாட்சண்யமின்றி அழித்தொழிக்கப்பட்டுள்ளன. சமய வேறுபாடுகள் அபாயகரமாக மாறுவது ஒருவர் அதனை தனக்கு சாதகமானதும் இயற்கையானதுமான விடயமாகப் பார்க்காது தனக்குப் பாதகமானது அல்லது எதிரியாகப் பார்ப்பதினாலாகும.; சமய வேறுபாடுகளை சிறந்த முறையில் நோக்கினால் அது ஒரு அழகானதும் மனித குலத்துக்கு நலவானதும் அனுகூலமானதும் உதவக்கூடியதாகவும் காணலாம். இதுவே எல்லா சமயங்களினதும் குறிக்கோளும் ஆகும். சமயம் நல்லனவற்றையே போதிக்கின்றன! எல்லா சமய போதகர்களும் தமது சக மனித இனத்தினது நன்மையைப்பற்றியே அக்கறையாகவுள்ளனர். எந்தவொரு சமயமும் மனிதர்களுக்கு எதிராக செயற்படவோஇ முரண்பாடுகளை ஊக்குவிக்கவோஇ போட்டா போட்டிகளை ஏற்படுத்தவோ போதிப்பதில்லை. சமயங்களின் ஸ்தாபகர்களின் குறிக்கோள்களை சரிவரப் புரிந்துகொள்ளாத அளவுக்கதிக ஆர்வம் கொண்ட அல்லது அர்ப்பணிப்புக் கொண்டவர்களே சமய வேறுபாடுகளை ஒரு பிரச்சினையாக மாற்றுவதற்கு காரணமாகவுள்ளனர். இவர்களின் செயற்பாடுகளே முரண்பாடுகளை உற்பத்தியாக்குவதற்கும் மனக்கிளர்ச்சி மற்றும் தீவிரவாத உணர்ச்சி போன்றவற்றிற்குத் தூபமிடவும் உதவுகின்றது. சமய வேறுபாடுகளை நேரியமுறையில் நோக்கி அதனை மனித குலத்தின் ஒற்றுமைக்குப் பாவிக்க முடியாமல் உள்ள நிலையானது சமய வேறுபாடுகளை மிகவும் எளிதில் எரியக்கூடிய ஆபத்தான நிலையாகப் பார்க்க பலரைத் தூண்டியுள்ளது. ஆனால் இந்நிலைப்பாடு உண்மையில்லை. உண்மையை சந்தேகத்திற்கு இடமின்றி பின்வரும் உதாரணங்கள் மூலம் என்னால் நிரூபிக்க முடியும். இலங்கையின் ஆட்சியாளர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக பௌத்த சமயத்தின் மூலம் பல்வேறு சமய நம்பிக்கைளுடன் பிரிவுகளாக வாழ்ந்த மக்களை முழுமையாக ஒன்றிணைத்தனர். இந்த சமயங்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வேற்றுமையில் ஒற்றுமை வேற்றுமையில் ஒற்றுமை காணும் இப்போக்கை ஆரம்பித்து வைத்தவர் இந்தியாவின் புகழ்பெற்ற பேரரசன் அசோக சக்கரவர்த்தி எனக் கூறமுடியும். அவருக்கு குறிப்பிட்ட ஒரு சமயத்துடன் விருப்பு இருந்த போதிலும் அவர் சமயங்களின் வேறுபட்ட தன்மைகளை மதித்தார். அவர் சமயங்களின் கூட்டை சக்தி வாய்ந்தஇ ஒட்டிப் பிணைந்த ஒரு சக்தியாகக் கண்டார். எனவே அவர் மக்களிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வளர்க்க உதவக்கூடிய சமயங்களில் காணப்பட்ட நல்லம்சங்களைத் தேர்ந்தெடுத்தார். அவர் நாடுகளை யுத்தங்கள் மூலம் வென்றெடுக்கும் சம்பிரதாய வழமைகளைக் கைவிட்டார். அதற்குப் பதிலாக சமயங்களில் காணப்பட்ட சமாதானச்செய்திகளை உள்வாங்கிய தனது நேர்மையான ஆட்சி மூலம் தனது அதிகாரத்தை விஸ்தரிப்பதற்கான ஆதரவைப் பெற்றார். அவர் சமயங்களுக்கிடையே உள்ள வேற்றுமைகளை மதிக்குமாறு மக்களை வலியுறுத்தினார். மக்கள் தமது சமயத்தை புகழ்ந்து கொண்டு ஏனைய சமயங்களை இழிவுபடுத்திக் கருத்து வெளியிடுவதைத் தடுத்தார். இச்செய்தியை அவர் கல்வெட்டுகளில் செதுக்கி மக்கள் பார்வைக்கு வைத்தார். இதில் 'தனது சமயத்தைப் புகழ்ந்து ஏனைய சமயங்களை இழிவு படுத்துபவர்கள் தமக்குத் தெரியாமலேயே தமது சமயத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர்' என்று குறிப்பிட்டிருந்தது. இதன் மூலம் அவர் சமய அடிப்படைவாதத்தை நேரடியாக நிராகரித்துள்ளார். ஓர் சமயத்தைப் பின்பற்றுபவர் ஒரு அடிப்படைவாதியாக இருக்கத்தேவையில்லை. அடிப்படைவாதம் உண்மையை மறைக்கின்றதுஇ பார்வையை மட்டுப்படுத்துகின்றதுஇ மனக்கிளர்ச்சிகள் மூலம் வழி நடாத்தப்படுகின்றது. மனக்கிளர்ச்சி மூலமான செயற்பாடுகள் மிகவும் ஆபத்தான தீ பற்றியெரியக்கூடிய மனம்போனபடியான தாறுமாறான செயல்களில் இறங்கத் தூண்டும். ஒருவருக்கு மனதில் நம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால் பிரித்தறியும் அறிவை உள்ளடக்கிய புத்திசாலித்தனத்தை கைவிடக் கூடாது. இது எல்லா சமய போதகர்களாலும் ஊக்குவிக்கப்படும் ஒரு நடைமுறையாகும். பூகோளக்கிராமத்தில் சமயம். உலகம் சுருங்கி பூகோளக் கிராமமாக மாற்றமடைவதை நாம் காண்கின்றோம். இவ்விதமாக மாற்றமடைந்துவரும் பூகோளக் கிராமத்திற்குள் நாம் சமய வேறுபாடுகளுடனேயே வாழவேண்டியுள்ளது. சமய வேறுபாடுகளை நாம் விளங்கிக் கொள்ளாதபோது அதனை நாம் எமக்கு விரோதமானதாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அடுத்த கட்டமாக நாம் அதனை எதிர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சமயங்கள் உடைந்த துணிக்கைகளாக மாற வேண்டி வரும். சமய வேறுபாடுகள் தொடர்பாக இதுவே தற்காலத்தில் சில பகுதிகளில் நடந்து வருகின்றது. இவ்வகையான எதிர் தாக்குதல்கள் நிச்சயமாக மிகவும் அழிவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் தற்கொலைக்குச் சமமானதாகவும் அமையும். தற்கால பூகோள அமைப்பில் நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிடினும் வேறுபாடுகளை வேறுபாடுகளாகவே நோக்க வேண்டியுள்ளது. நவீன சமூக அமைப்பு பல் கலாசாரஇ பல் சமய எனக் கூறப்படும்போது நாங்கள் கோபப்படக்கூடாது. இவையாவும் தற்காலத்தில் மட்டுமல்லாது எமது நீண்ட வரலாற்றிலும் காணப்பட்ட யதார்த்தமான நிலையாகும். இனிமேலும் மக்கள் ஏனைய கலாசாரங்களினதும். சமயங்களினதுமி தாக்கங்களிலிருந்து பிரிக்கப்பட்டு தனிமையில் வாழ முடியாது. இதில் என்ன பிழை உள்ளது? வேறுபாடுகளுக்குள் வாழும்போதும் ஒருவர் தனது அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இது சமயஇ நம்பிக்கை ஆகிய வேறுபாடுகளுக்குள்ளும் பொருந்தும.; ஆயினும் இது பிரச்சினைக்குள்ளாவது ஒருவர் தனது சமயத்தை அல்லது நம்பிக்கையை தனது உள்ளத்திற்குள் வைக்காது தலையில் வைத்து அலையும் போதுதான். தலையில் சமயத்தை வைத்து அலைவது என்பது வெளிப்பகட்டுக்காக அல்லது விளம்பரத்திற்காக சமயத்தைப் பின்பற்றுவதாகும். இந்த நடைமுறை அடிப்படைவாதிகளுடன் ஒத்துப்போகக்கூடியது. நாங்கள் இதனைச் சரிவர செய்யாவிடின் சமாதானமும் நல்லிணக்கமும் நிறைந்த உலகைப்பற்றிய எமது எதிர்பார்ப்புகள் ஒரு கனவாக மட்டுமே இருக்கும். சிலபோது கனவுகூட இல்லாமல் ஒரு கற்பனையாக மட்டுமே இருக்கும். எனவே நாங்கள் அடிமட்ட யதார்த்தங்களைப் புரிந்தவர்களாக விழித்தெழவேண்டும். வாழு வாழவிடு எல்லா சமயத்தவர்களும் உள்நோக்கங்கள் எதுவுமில்லாமல் திறந்த மனதுடன் செயற்படவேண்டும். சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் விரும்பும் ஒவ்வொருவரும் 'வாழு வாழ விடு' எனும் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். சமயங்கள் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமான ஆயுதங்களாகப் பாவிக்கப்பட வேண்டுமே தவிர அவை சமாதானம். புரிந்தணர்வுஇ நம்பிக்கை போன்றவற்றை அழிக்கும் ஆயுதங்களாகப் பாவிக்கப்படக் கூடாது. சமயம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விடயம். ஓவ்வொருவருக்கும் அவர் விரும்பும் சமயத்தைக் கடைப்பிடிக்கும் உரிமையுண்டு. ஒரு சமயத்திற்கு சேவையாற்றுவது என்பது அச்சமயத்தை நம்பிக்கையுடன் கடைப்பிடிப்பதாகும். எல்லோருக்கும் ஒரு சமயமே இருக்க வேண்டும் என்று எந்த சமயப் போதகரும் கூறியதில்லை. சமயங்கள் என்பது அதனைப் பின்பற்றுவோரின் மகிழ்ச்சி மற்றும் நன்மைக்காக அச்சமயப் போதகர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்யப்பட்ட முயற்சிகளின் பலனேயாகும். எனவே ஏன் சமயத்தை விசனமி துக்கமி முரண்பாடு போன்றவற்றின் ஊற்றாக ஆக்கவேண்டும.;. சாந்தமான மன நிலையானது எல்லாவற்றையும் குறிப்பிட்ட இலக்குடன் நோக்கி பக்கசார்பில்லாமல் நல்லதை மதிக்கவும் கெட்டதைப் புறந்தள்ளவும் இயலுமாக்குகின்றது. இந்த வகையான ஞானம் ஊடாக அறிவுடை நிலையை நாங்கள் பின்பற்றுவதன் மூலம் முரண்பாடுகளும் மோதல்களும் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும.; இதுவே வேறுபாடுகள் நிறைந்த உலகில் சமாதானமான சகவாழ்வுக்கான வழியாகும். நாங்கள் சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ விரும்பினால் இதுவே அதற்கான ஒரே ஒரு தேர்வு ஆகும் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா |
[Untitled] >