[Untitled]‎ > ‎

04.02.16- இலங்கைத் தாய்க்கு சுதந்திர நாள்..

posted Feb 3, 2016, 11:28 PM by Unknown user
இந்து சமுத்திரத்தின் 
செல்லப்பிள்ளை 
இலங்கைத் தாய்க்கு
சுதந்திர நாள்.....

தேசியக் கொடிகள்
தூசு தட்டப்பட்டு
அலங்கரிக்கப்படுகின்றன...

வாள் ஏந்திய 
சிங்கம் மிடுக்குடன்
பறக்க...

இரு நிறங்களின்
இருப்பு
கேள்விக் குறிகளோடு....

எது 
எவ்வாறு
இருப்பினும்
பிற நாட்டவர்
போர் தொடுக்கையில்

எல்லோரும்
இலங்கையரே...

சி.ம.கதன்
Comments