[Untitled]‎ > ‎

04.06.15- புகைத்தல் எதிர்ப்பு தின கவிதை..

posted Jun 3, 2015, 11:27 PM by Unknown user   [ updated Jun 8, 2015, 9:23 AM ]
மாறிவிட்ட சமூகத்திலே
மாறாத சமூக நோய் புகைத்தல். 
புற்றுநோய்க்கு மருந்து உண்டு 
புகைத்தல் நோய்க்கு உண்டோ?

சாதனைகள் பல புரிய 
சோதனைகள் பலவும் உண்டு
சகவாடிகள் கேலிக்கூச்சல் தனை 
தாங்க முடியாமல் தலை குனிவோன் என்று எண்ணி 
தானும் அதை கையில் தூக்க
தாழாத சோதனையாய் தானும் வந்து 
கூடிக் கொண்டது எனை விட்டகலா நண்பன் போல..

விட்டு விட்டேன் என்று
  நாசூக்காய்  நானுரைத்த போதினிலே
விளங்க வில்லை
விபரிதாமாய் எனை ஒரு வியாதி வந்தே சூழும் என்று,

விட்டிடுவீர் விட்டிடுவீர் 
வீண் கௌரவம் தேவையில்லை
வியாதி தானும்  தேவையில்லை
விண்ணை முட்டும் புகழ் பரப்ப 
விழிப்படைவீர் நண்பர்களே

நன்றி: Subaraj


Comments