[Untitled]‎ > ‎

04.09.14- கடந்து போகின்றோம் பல​ கனவுகள் சுமந்து போகின்றோம்...

posted Sep 4, 2014, 12:16 AM by Unknown user

ஆண்டுதோறும் கல்வி தந்தாய்
ஆண்டவனாம் ஆசான் தந்தாய்
அளவில்லா நண்பர்கள் தந்தாய்
இன்றேனோ பிரிவை தந்தாய்?

காலையில் கேட்டிடும் மணியோசை
இனி எங்கே கேட்டிடுவோம்?
கனிவாய் பாடிடும் இறை கீதங்கள்
இனி எங்கே கேட்டிடுவோம்?

பண்பாய் பழகிடும் தோழிகள்
மொழியை எங்கே கேட்டிடுவோம்?
பலன்கள் தந்திடும் ஆசான்
மொழியை எங்கே கேட்டிடுவோம்?

நாம் சாயிந்து பேசிய​ தூண்களும்
எம் கிறுக்கல் உள்ள மேசையும்
ஆடி பாடிய​ மேடையும்
இனி என்றோ காணும் எம்மை?

கல்விக் கூடமே பல​
கனவுகள் தந்த​ கூடமே
கடந்து போகிறோம் பல​
கனவுகள் சுமந்து போகிறோம்
                                                 ஆக்கம்:-புவனேந்திரன் நிரோஷன்
Comments