என் பிள்ளையும் கொழும்பில் படிக்கின்றான்... பெற்றோர்களின் பேராசையால் வீண்போகும் பிள்ளைகளின் கல்வி.! இன்று குழந்தைகளின் கல்வியானது பெற்றோர்களிடையில் தற்பெருமையும், பேராசையையும், ஈட்டுக்கு போட்டியாக என் குழந்தை கொழும்பில் படிக்கின்றான், என் குழந்தை கண்டியில் படிக்கின்றான், என் குழந்தை மேல் மாகாணத்தில் படிக்கின்றான் என்றெல்லாம் தன் குழந்தைகளின் கல்வியை சீர்குலைக்கும் நிலைக்கு இன்று பெற்றோர்கள் ஆளாகி வருகின்றார்கள். எல்லா பெற்றோர்களிடமும் இருக்கக்கூடிய எண்ணங்கள்தான் தன் குழந்தை நன்றாக படித்து பட்டம் பெற்று நல்ல வேலைக்கு சென்று எதிகாலத்தில் தன் குடும்பத்தை சிறந்த முறையில் வழிநடத்திச் செல்லவேண்டுமென்பது. ஆனான் இன்று சில பெற்றோர்கள் தான் குழந்தைகளின் கல்வியில் தன் அறியாமலே தவறிழக்கின்றார்களென்பதை ஒரு போதும் புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. அதாவது ஒரு குழந்தை தன் ஆரம்பக் கல்வியை ஒரே பாடசாலையில் தன் சொந்த ஊரிலேயே படித்துக்கொண்டிருக்கும் வேளையில் சில பெற்றோர்கள் குழந்தைகளை வெளி ஊர்களுக்கும், வேறு மாகாணங்களுக்கு அதாவது கொழும்பு, கண்டி போன்ற இடங்களுக்கு அனுப்பி படிப்பிப்பதை தற்பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுகின்றார்கள். இப்போக்கு அன்றைய காலங்களைவிட இன்றைய காலங்களிலேயே அதிகரித்து காணப்படுகின்றது. இதை சற்று சிந்தித்து பார்க்கும் போது தன் குழந்தைகளுக்கு போதியளவு கல்வி சொந்த ஊரிலுள்ள பாடசாலைகளிலேயே கிடைக்கவில்லை என்பதனால் வெளி மாகாணங்களுக்கு அனுப்பிப் படிப்பிக்கின்றார்களேயானால் இப்போக்கு அன்றைய காலங்களிலேயே அதிகரித்து காணப்பட வேண்டும். காரணம் அன்றைய காலங்களில் நமது ஊர்களில் போதியளவு பாடசாலை வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை என்றெல்லாம் இருந்தமையினால் வெளி ஊர்களில், வெளி மாகாணங்களுக்கு சென்று படித்திருக்க வாய்ப்பிருந்திருக்கும் என்று நினைக்கலாம், ஆனால் இன்றைய காலங்களில் தமது சொந்த ஊரிலேயே சிறந்த கல்விக்கான எல்லா வசதிகளிருந்தும் தன் குழந்தைகளை ஏன் இன்றைய காலங்களில் வெளி மாகாணங்களுக்கு அனுப்பி படிப்பிப்பது அதிகரித்து காணப்படுகின்றது...???? இது ஏனென்று கேள்வியொழுப்பும் பட்சத்தில் பெற்றோர்கள் கூறுவது. தங்கள் ஊரிலுள்ள எந்தவொரு பாடசாலையும் சரியில்லை,அங்கு கல்வி சரியில்லை, கற்பிக்கின்ற ஆசிரியர்கள் சரியில்லை, சூழல் சரியில்லை. என்றெல்லாம் கூறி தன் பெயராசையையும் தற்பெருமையை நியாயப்படுத்திக் கொள்வதற்காகவேண்டி இவை அனைத்தையும் குறை கூறுவதையே வழக்கத்திற் கொண்டுள்ளார்கள். சில பெற்றோர்கள் இக் குறையை எப்போது கூற ஆரம்பிக்கின்றார்களென்றால் தன் குழந்தை ஆரம்பம் தொட்டு தன் சொந்தவூரிலேயே ஒரே பாடசாலையில் படித்து தரம் 5ம், ஆண்டிற்கான புலமை பரீட்சை எழுத ஆரம்பித்து அதில் சித்தியடைந்த பிற்பாடே தான் தன் குழந்தை இப்பாடசாலையில் படிப்பதற்கு இப்பாடசாலை தரமில்லையென்று கூறிவிட்டு வெளி மாகாணங்களுக்கு அனுப்பி படிப்பிக்க நினைக்கின்றார்கள். எப்போது தன் குழந்தை புலமை பரீச்சையில் சித்தியடைந்தாதோ அப்போதுதான் இப் பெற்றோர்களுக்கு ஊர், பாடசாலை, ஆசிரியர்கள் , சூழல் அனைத்தும் தரமற்றவையாகிவிட்டது, புலமை பரீட்சை எழுதும் வரைக்கும் இப் பாடசாலைகள் ,ஆசிரியர்கள், சூழல்கள் அனைத்தும் தரமானதாகவே விளங்கிய போது பரீச்சை எழுதி சித்தியடைந்த பின்னர் எப்படி தரமதற்றவையாக தெரிந்தது இப் பெற்றோர்களுக்கு இது எந்தவகையில் நியாயம்...??? இக் குறை கூறும் பெற்றோர்கள் ஒரு போதும் சிந்திப்பதில்லை தன் பிள்ளையின் படிப்புதிறன் என்ன? போதியளவு கல்வித்தகமை பெறக்கூடிய நிலையில் இருக்கின்றர்களா? நன்றாக கல்வியில் கவனம் செலுத்துகின்றார்களா.? என்றெல்லாம் பிள்ளைகளின் படிப்பை ஆராய்ந்து பார்ப்பதைவிட தன் பிள்ளை கொழும்பில் அல்லது கண்டியில் படிக்கின்றானா என்ற பெருமைக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இதில் இவர்களின் பெருமைக்கும் பேராசைக்கும் தமது சொந்தவூரையே தாழ்த்தி இதில் மேல்மாகாணம், கீழ்மாகாணம், தாழ்த்தப்பட்ட பிரதேசம் என்றெல்லாம் பேசுகின்றர்களே இதனால் தன்னையே தான் தாழ்த்துகிறோம் என்ற சிந்தனை இவர்களுக்கு ஒருபோதும் தோன்றிவதில்லை. தனக்கு பெருமையும் பெயராசையும் வேண்டுமென்பதனால் எதையும் தாழ்த்திவிடலாமென்ற வரட்டு கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றவர்கள் இவர்கள். இதுபோன்ற குறை குற்றம் கோட்பாடு கொண்ட பெற்றோர்கள் தமது சொந்த ஊர், பாடசாலைகளுக்கும், கல்விக்கும் மதிப்பழிக்காதபோது வேறு சமுகத்தினால் எப்போதும் நமது ஊர், பாடசாலை கல்வித்தகமை அனைத்தும் தாழ்த்தப்பட்டு இழிவாகவே பார்க்கபடும் என்பதனை தற்பெருமை பேராசை பிடித்த பெற்றோர்கள் புரிந்துகொள்வதில்லை.! அன்றைய காலங்களைவிட இன்றைய காலங்களில் எந்தவொரு பாடசாலைகளையும் குறை கூறும் அளவுக்கு அங்கு மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வியை பெற முடியாதென்று சொல்லிவிட முடியாது அந்தளவுக்கு இன்று அனைத்து பாடசாலைகளிலும் கல்விக்கான எல்லா வசதிகளும் வழங்கப்பட்டு சிறந்த முறையில் கல்வியும் வளங்கப்படுகின்றதென்று சொல்லக்கூடியளவுக்கு கல்வியின் வளர்ச்சி நமது ஊர் பாடசாலைகளிலும் முன்னேறிச் சென்றுகொண்டிருக்கின்றது. இப் பெருமை பித்துப் பிடித்த பெற்றோர்ககுக்கு தன் குழந்தைக்கு சிறந்த முறையில் கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற கொள்கை ஒரு பக்கமிருக்க இன்னொரு பக்கம் சமுதாயத்தின் பார்வைக்கு தன் குழந்தையும் வெளி மேல் மாகாணத்தில் படின்றதே என்ற பெருமைக் கொள்கை வேண்டுமென்பது இன்னொரு பக்கக் கொள்கையாக விளங்குகின்றது. பெற்றோர்களாகிய நீங்கள் இப் பெருமைக்கும் புகழுக்கும் வேண்டாச் சிந்தனைகளுக்கும் துணைபோய் உங்கள் பிள்ளைகளின் கல்வியை சீர்குலைத்துவிடாதீர்கள்.! தத்தமது ஊர்களிலேயே சிறந்த பாடசாளைகளும் உண்டு ஆசிரியர்களுமுண்டு அங்கு சிறந்த முறையில் கல்வியும் கற்பிக்கப்படுகின்றது தன் பிள்ளைகள் சிறந்த கல்வியினை பெற்று சிறந்த மகான்களாக விளங்குவதற்கு தமது சொந்த ஊரிலேயே சிறந்த வழியிருக்கும்போது பெருமை தேடி உங்கள் குழந்தைகளை அங்கும் இங்கும் அலையவிட்டு அவர்களின் கல்வியை சீர்குலைத்துவிடாதீர்கள். தன் குழந்தைகள் சிறந்த முறையில் கல்வியை பெற்று தகமையோடு வரும்போது பெருமையும், புகழும் தானாகவே பெற்றோர்களை நாடிவரும் என்பதை ஒரு போதும் மறந்துவிடாதீர்கள். குறிப்பு:- தமது சொந்தவூரிலேயே போதியளவு கல்வியை பெற முடியாதிருப்பின் வெளியூர் சென்று படிப்பதில் சிறந்த கல்வியை பெறமுடியுமாயின் நியாயக் கருத்துக்களாக இருந்தாலும் அதுவே பெருமைக்காகவும் பெயருக்காகவும் வெளியூர் அனுப்பி படிப்பிப்பதென்பது அநியாயக் கருத்துக்களாகும். ஆக்கம் : முஹம்மட் ஜெலீல் |
[Untitled] >