"" உதவிடலாம் ! "" ( குமார். கே.சீ.கே. ஜெர்மனி.04.8 ) பார்வையை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார் பார்வையுடன் இருப்பவர்நாம் பலவழியில் உதவிடலாம் ! கல்விதனைக் காணாமல் கணக்கற்றோர் நாட்டிலுள்ளார் கற்றுநிற்கும் நாமவர்க்கு கற்பதற்கு உதவிடலாம் ! அன்னைதந்தை தெரியாது அலமந்து நிற்பார்க்கு ஆதரவுக் கரங்கொடுத்து அரவணைத்து உதவிடலாம் ! ஓலைக் குடிசைதனில் ஒழுக்குவீட்டில் வாழ்பவர்க்கு ஒழுங்கான வாழ்வுவர உள்ளத்தால் உதவிடலாம் ! நீர்கூடக் கிடைக்காமல் நிம்மதியைத் தொலைத்துநிற்கும் ஊரெல்லாம் தனையெண்ணி உணர்வோடு உதவிடலாம் ! மருத்துவ வசதியின்றி மனம்நொந்து நிற்பார்க்கு மருத்துவத்தைத் தெரிந்தவர்கள் மனதார உதவிடலாம் ! ஏமாற்றிப் பிழைப்பவரின் இடருக்குள் புகுந்தவர்கள் இன்னலின்றி வெளியில்வர இயன்றவரை உதவிடலாம் ! மூடத்தனம் என்னும் மூட்டைக்குள் இருப்பவர்கள் முன்னேறி வருவதற்கு முயற்சியுடன் உதவிடலாம் ! அன்புதனைக் காணாமல் அநேகரிங்கு இருக்கின்றார் அவரிடத்து நாம்சென்று அன்புகாட்டி உதவிடலாம் ! |
[Untitled] >