காரை மண்ணின் கலங்கரையே - இன்று கைபேசி செய்தியிலும் உயர் நிலையே எம் காரைதீவு நியூஸ்.கொமெ...! உன் அகவை நான்காம் வியப்புத்தான் உன் வளர்ச்சியிலும் கொஞ்சம் பொறாமைதான். உன் உறுப்பினர் எனும் உன் பிள்ளைகள் எதையும் எதிர்பார்க்காமல் தாய்க்கு செய்யும் கடமைவிட உனக்கு கொஞ்சம் அதிகமாய்த்தான் உழைக்கிறார்கள் என் போன்றவர்கள் மந்தமாக...! உன்னை நினைக்கையில் பலருக்கு பொறாமைதான் அதனால் தனிப்பட்ட காரணங்களை பொதுக் காரணங்களாக்கிய வண்ணம் எது நடப்பினும் உன்னை தாங்கி உனக்காக உழைக்கும் தலைமையும் உன் உறுப்பினர்களும் உள்ளவரை நீ என்றும் கலங்கரை விளக்கமே...! காரைதீவு செய்தியில் கலங்கரைவிளக்கமான உன்னை வளர்க்க மகத்தான ஆலோசகர்களை உன் பக்கம் ஈர்தது தந்தநீ என்றும் உயர்வு உன் மனம் போல் உன் வளர்ச்சிபோல் அவர் மனம் என்றும் மகிழ்வாக இருக்கட்டும்...! ஆக்கம்- கதன் |
[Untitled] >