வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்காக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் வந்திறங்கும் பயணிகளின் பணத்தை சூரையாடும் மினி வேன்” ஓட்டுனர்கள். வெளிநாடுகளிலிருந்து கொழும்பு விமான நிலையம் வந்திங்கிய போது தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கான மினி வேன்களை விமான நிலையத்திலேயே பதிவு செய்து தன் சொந்த இடங்களுக்கு செல்வதைவிட இன்று நம்மில் சிலர் நமது ஊர் பிரதேசங்களிலிருந்து வந்திருக்கும் மினி வேன்களில் ஏறிச்செல்வது வழக்கம், காரணம் நமது பிரதேசத்தை சேர்ந்தவர்களின் வேன் , நமது மொழி தெரிந்தவர்கள் என்றெல்லாம் நம்பிக்கையேடு ஏறிச்செல்கின்றோம். ஆனால் இந்த சாரதிகள் அந்த நம்பிக்கையை முதற்று முழுதாக தகர்த்து பயணிகளை ஏமாற்றிக் விடுகின்றார்கள். பயணிகளை ஏற்றிச் செல்லும்போது தமது சொந்த ஊர் நெருங்கும் தருவாயில் வைத்து பயணிகளிடம் சாரதி கூறுகின்றார்கள் தனது வீடுக்கே கொடுசென்று விடுவதாயின் இன்னும் மேலதிகமாக பணம் தரவேண்டும் அப்படி தராதபட்சத்தில் ஊர் எல்லையில் விட்டு விட்டுச் சென்றுவிடுவேன் என்றெல்லாம் எமாற்றுகின்றார்கள் அப்படி மேலதிகமாக பணம் தருகின்றேன் வீட்டிலேயே விட்டு விடுங்கள் என்ற போதிலும் இங்கு வந்ததும் இன்னும் மேலதிகமாக பணம் கேட்டு வாதிட்டு சண்டையிடுகின்றார்கள். உண்மையில் இது பயணிகளை ஏமாற்றி கொள்ளையடிக்கும் சம்பவமாகும் இந்த ஏமாற்று சாரதிகள் நினைத்திருக்கின்றார்கள் வெளிநாட்டில் ஏதோ பணத்தை றோட்டில் குவித்து வெய்த்திருப்பதாகவும் அதை இவர்கள் அள்ளிக்கொண்டு வருவதாகவும் நினைக்கின்றர்கள்பேல். தன் குடும்பத்தை பிரிந்து தன் உறவை தொலைத்து, உணர்வை தொலைத்து பல இன்னல்களுக்கு மத்தியில் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை இந்த கொள்ளையர்கள் சூரையாடிச் செல்வது எந்தவகையில் நியாயம்.?? ஆகையால் வெளிநாடுகளில்ருந்து தன் சொந்த நாட்டுக்கு வரும் உறவுகள் இக்கொள்ளையர்களிடமிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வதில் கவனம் செலுத்தி உங்களையும் உங்கள் பணத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஆக்கங்கள்:முஹம்மட் ஜெலீல்,நிந்தவூர் |
[Untitled] >