உரசல்கள் ஒழிய வேண்டும் விரிசல்கள் விலக வேண்டும் தெருதனில் தீய தெல்லாம் சிதறியே ஓட வேண்டும் மொழியலை ஓய வேண்டும் முரணிலை ஒழிய வேண்டும் மருணிலை நீங்க வேண்டும் மனநிலை தெளிய வேண்டும் அழிவுகள் அகல வேண்டும் அனைவரும் இணைய வேண்டும் தெளிவுகள் பிறக்க வேண்டும் சிறப்பெலாம் சேர வேண்டும் சமயங்கள் யாவும் சேர்ந்து சமரசம் பேண வேண்டும் இமயமாய் உள்ள சிக்கல் இறந்துமே போக வேண்டும் பெருமைகள் பேசி நிற்போர் பிதற்றலை விடவே வேண்டும் கருவதில் நல்ல எண்ணம் பெருகியே நிற்க வேண்டும் தேசியம், மொழி சாடி நிற்போரும் ஜாதி மத பேத வெறியர்களும் சந்ததிகளே எம் எதிர்காலமென மாறி மனநிலை தெளிய வேண்டும் !!! இன நிம்மதி கிடைக்கும் எனும் தீர்க்க சிந்தனையுடன் கே.சீ.கே. ( குமார் )ஜெர்மனி. ![]() |
[Untitled] >