[Untitled]‎ > ‎

07.11.2012- கூத்து..(ஆக்கம்: லிரோஸ்)

posted Nov 7, 2012, 12:54 AM by Web Team   [ updated Nov 7, 2012, 12:56 AM ]
 
கூத்து....
(ஆக்கம்: லிரோஸ்)

கூத்து தமிழர்களின் பாரம்பரிய நாட்டர் கலை வடிவங்களில் ஒன்று.

கிராமத்தின் மண்வாசனையையும், கிராம மக்களது வாழ்வாதாரங்களையும், அவர்கள் மதம் மீது கொண்ட
பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது கூத்துக்கலை.

கூத்துக்கள் பல்வேறு செய்திகளை சமூகத்திற்குச் சொல்கின்றன.
முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்கிற்காகவும், தங்களது களைப்பைப் போக்கும் செயற்பாடாகவும்
ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
அதுவே நாளடைவில் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று கலைகளாகத் தோற்றம் பெற்றது.

அவர்கள் அன்று பொது முற்றத்தில் ஆடியவை இன்று கூத்து என்ற பெயரைப் பெற்று வளர்ந்து நிற்கின்றன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்தக் கூத்துக்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்தக் கூத்துக்களின்
கதையம்சமும், கூத்துக்களினூடாக கூறப்படும் செய்திகளும் தற்போதைய சமூகத்தினரையும் ஈர்ப்பவையாக
அமைந்துள்ளன. பட்டியல்...

தெருக்கூத்து, சாந்திக் கூத்து சாக்கம் ,மெய்க் கூத்து, அபிநயக் கூத்து, நாட்டுக்கூத்து, விநோதக் கூத்து, குரவைக் கூத்து, கலிநடனம் என்னும் 'கழாய்க் கூத்து' கரகம் என்னும் 'குடக் கூத்து' பாய்ந்தாடும் 'கரணம்' நோக்கு 'பார்வைக் கூத்து' நகைச்சுவை கொண்ட 'வசைக் கூத்து' 'சாமியாட்டம்' அல்லது 'வெறியாட்டு பொருட்கள் அடிப்படை மரப்பாவைக் கூத்து தோற்பாவைக் கூத்து கழைக்கூத்து புழுதிக் கூத்து.

Comments