[Untitled]‎ > ‎

08.01.17- இலங்கையில் இந்து,பௌத்த சமய நடைமுறைகள் ஓர் ஒப்பீடு..

posted Jan 8, 2017, 9:26 AM by Habithas Nadaraja
இத்தலைப்பினுடே இந்து பௌத்த சமயங்கள் பற்றிய அறிமுகம் இலங்கையில் இந்து, பௌத்த சமயங்கள் தோன்றிய வரலாற்று பின்ணணிகள். பல்வேறு கால கட்டங்களிலும் இடம் பெற்ற சமய நடைமுறைகள் என்பவை நோக்கப்பட்டுள்ளன.

இந்து சமயம் உலகில் நின்று நிலவும் பல்வேறு சமயங்களிலே காலத்தால் முந்திய சிறப்பும் தொன்மையும் கொண்ட சமயமாக இந்து சமயம் போற்றப்படுகிறது. இந்து என்ற சொல் சிந்துவெளியில் வாழ்ந்த மக்களால் கடைப்பிடிக்கப்பபட்ட ஒரு சொல் ஆகும் இதன் மூலம் சிந்து வெளிகால மக்களால் கடைப்பிடிக்கப்பட்ட சமயம் என்பதையும், இந்திய மக்களால் கடைப்பிடிக்கப்பட்ட சமயம் என்பதை சுட்டும் விதமாக வெளி நாட்டவராகிய பாரசீகர், கிரேக்கர் தமது மொழியிலே ஹிந்து என கூறப்பட்ட சொல் மருவி இந்து என அழைக்கப்பட்டது என்பர்.
கிமு 6 ஆம் நூற்றாண்டில் மத்திய கங்கை சமவெளிகளில்  பல்வேறு சமயப்பிரிவுகள் தோன்றின அச்சமயம் 62 சமய பிரிவுகளாக இருந்ததாக நாம் அறிகின்றோம். இவற்றில் பல சமயப்பிரிவுகள் பிராந்திய பழக்க வழக்கங்களையும் வடக்கு,கிழக்கு இந்தியாவில் பல தரப்பட்ட மக்கள் அனுட்டித்து வந்த சமயவினை முறைகளையும் அடிப்படையாக கொண்டமைந்தன என்றும் இச்சமய பிரிவுகளில் சமணமும் பௌத்தமும் மிகவும் ஆற்றல் வாய்ந்த சீர்திருத்த இயக்கங்களாக உருவேடுத்து வளர்ந்தன என்றும் கூறப்படுகின்றது. 
இவ்வாறான சமயங்கள் தோன்ற காரணம் யாது என நோக்கின் ஒரு சமயத்தில் ஏற்படும் குறைபாடுகள் இன்னோரு சமயத்தின் எழுச்சிக்கு காரணம் எனலாம்.
இலங்கையில் இந்து,பௌத்த சமயங்கள் தோற்றம் பெற்ற வரலாற்று பிண்னணியை நோக்கும் போது பாக்குத் தொடுவாயில் பிரிவுண்டிருப்பினும் பாரத நாட்டிற்கு மிக அண்மையில் இலங்கை அமைந்துள்ளால் அந்த நாட்டின் சமய கலாசாரத்தின் படர்ச்சி இங்கும் பண்டைய காலம் தொட்டே திகழ்ந்துள்ளமை இயல்பேயாகும்.
வரலாற்றுக்கு முன்பிருந்தே இலங்கையில் இந்து சமயம் பரவியிருந்து இன்றும் தொடர்வது குறிப்பிடதக்கது. இராமாயண இதிகாச காலத்திலேயே இலங்கையும் அதன் அரசனான இராவணன் பற்றிய செய்திகளை அவ்விலக்கியத்தினுடே அறியலாம். இதன் மூலம் இராவணன் ஒரு சிவபக்தன் என்பதும், அவனது பட்டத்துராணி மண்டோதரி சிவவழிபாட்டினை மேற்க்கொண்டாள் என்பதையும் இராமாயணத்தினுடே அறியக்கூடிய செய்தியாகும். 

இலங்கையிலே வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த சாதியினர் இயக்கர் எனப்படுவோர். இராவணன் இயக்கன் எனவும், இலங்கையில் முதல் குடியேறியான விஜயன் இலங்கைக்கு வந்த போது தன் மனைவியாய் ஏற்றவள் குவேனி என்பாள் அவள் இயக்கி என்பதும் வரலாற்று நூலாகிய மகாவம்சம் மூலம் அறியக்கூடிய செய்தி தமிழிலே வந்த யாழ்ப்பாண வைபவமாலை விஜயனை இந்து மதத்தினன் என கூறுகிறது. எனவே இவற்றை அடிப்படையாக கொண்டு இலங்கையில் இந்து சமயம் பரவிய வரலாற்றை அறிலாம். 
பௌத்த சமயத்தை நோக்கும் போது தெராவாத பௌத்தம் பெருவாரியாக விளங்கும் தெற்கில் உள்ள நாடுகளில் தொடங்கினால் முதலில் இலங்கை காணப்படுகிறது இங்கு பெருவாரியாக பௌத்தர்களே காணப்படுகின்றனர் இங்கு அரச மதமாக பௌத்தமே காணப்படுகிறது இலங்கை தீவு பௌத்த சமய பண்பாட்டை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பௌத்த சமய வரலாற்று ஆதாரங்களின்படி கி.மு 250 ல் அசோகசக்கரவர்த்தியின் தூதுவரான மஹிந்தா என்ற துறவியால் பௌத்த சமயம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது மஹிந்த தேரருடைய துறவிகளால் முதன் முதலாக அனுராதபரத்தில் மடாலயம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் வழியே பௌத்த சமயம் பரப்பட்டது என கூறப்படுகின்றது.

சமய நடைமுறைகள் பற்றி நோக்கும் போது இந்து,பௌத்த சமயங்களின்தெய்வங்கள், சடங்குகள்,சம்பிரதாயங்கள், வழிபாடுகள், பண்டிகைகள்,விழாக்கள் போன்றவற்றின் மூலம் சமய நடைமுறைகளை அறிந்து கொள்ளலாம். இந்துக்களுக்கான சமய நடைமுறைகளை பௌத்தர்களும் பௌத்தர்களுக்கான சமய நடைமுறைகளை இந்துக்களும் காலத்துக்கு ஏற்ற வகையில் உள்வாங்கி செயற்படுகின்றமை குறிப்பிடதக்கது. அந்தவகையில் இந்து தெய்வங்களாகிய முருகன் கணபதி சிவன் போன்ற தெய்வங்களை பௌத்தர்கள் வழிபடுகின்றனர் உதாரணமாக கதிர்காம ஸ்ரீமுருகப்பெருமானை கதரகம தெய்யோ என வழிபடுவதை கூறலாம். கதிர்காத்தில் இந்து பௌத்த ஏனைய சமயத்தவர்களுக்குரிய வழிபாட்டுத்தலங்களும் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பிற்குரியதாகும் கதிர்காம முருகன் ஆலயத்திற்கு இந்துக்களை போன்று பௌத்தர்களும் பாதயாத்திரை சென்றும் நெர்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டு வருகின்றமை இந்து சமயத்தின் சிறப்பை மேலும் மேருகூட்டுகிறது.
இந்துக்கள் கௌதம புத்தரை வி~;னுவின் அவதாரமாக பாவித்து வழிபடுகின்ற வழமை இலங்கையில் காணப்படுகின்றது. பௌத்த சமய சிறு தெய்வங்களாகிய மணிமேகலை,தாராதேவி போன்ற தெய்வங்களை இந்து சமயம் ஏற்றுக்கொண்டுள்ளது மணிமேகலை தெய்வத்தை இந்து சமய ஆலயங்களில் பரிவார தெய்வங்களுள் ஒன்றாக காணலாம் ஆதி காலம் தொடக்கம் இன்றுவரை இந்து தெய்வங்களுக்கான ஆலயங்கள் அமைக்கப்பட்டன விஜயன் ஒரு பௌத்த சமயத்தை சார்ந்த அரசனாக காணப்பட்ட போதும் அவனால் நான்கு திசைகளிலும் நான்கு சிவன் ஆலயங்கள் அமைக்கப்பட்டமையை எடுத்துக்காட்டாக கூறலாம். இது ஏனைய மதங்களுக்கு அரசர்கள் வழங்கிய முக்கியத்துவம் எடுத்துக்காட்டப்படும் அதேவேளை அக்கால மக்கள் இந்துசமய நடைமுறைகளையும் உள்வாங்கியவர்களாக காணப்பட்டார்கள் என்பது இதன் மூலம் வெளிப்படுகின்றது. 

இந்து சமயத்தில் கூறப்படும் மற்றுமோரு முக்கியமான விடையம் நான்கு  ஆச்சிரமங்கள் பிரம்மச்சரியம் கிருகஸ்தம் வானப்பிரஸ்தம் சன்னியாசியம் என்பன இதில் பிரம்மச்சரியம் கல்வி கற்கும் நிலை, அதாவது குருகுலகல்வியை மேற்கொள்ளும் நிலையாகும். இந்நிலையில் குருவிற்கு பணிவிடை செய்து குரு ஓய்வாக உள்ள நேரங்களில் குருவிடம் இருந்து கல்வியை பெற்றுக்கொள்ளலாகும். இம்முறையானது இலங்கையை பொறுத்தவரையில் இந்து சமயத்தவர்களிடம் சற்று குறைவாகவே காணப்படுகின்றது. ஆனால் பௌத்தர்களிடம் மிக முக்கிய ஒரு நிலையாக கருதப்படுகின்றது. இலங்கையை பொறுத்தவரை பௌத்த தூறவிகளை பிக்குகள் எனவும் துறவற பெண்களை பிக்குனிகள் எனவும் அழைக்கும் வழக்கம் காணப்படுகின்றது. இந்து சமயத்தில் குருக்கள் என அழைக்கும் வழமையும் காணப்படுகிறது. பௌத்த துறவிகளுக்கு சமூகரீதியாக மதிப்பும் மரியாதையும் சமயரிதியாக முதலிடமும் அதாவது பௌத்தசமயத்தை போதிப்பவர்களாக அவர்கள் மதிக்கப்படுகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது இந்து சமயத்தில் துறவிகள் காணப்படுகின்றனர் மத போதகர்களாக அன்றி ஆலய வழிபாடு கிரியைகளை ஆற்றுபவராக காணப்படுகின்றார். இரு சமய துறவிகளும் சமய வழிபாட்டுமுறை அடிப்படையில் வேறுபட்ட நடைமுறைகளையே பின்பற்றுகின்றனர்.
இந்து,பௌத்த சமய நடைமுறைகளுள் ஒன்றாகிய ஆசிபேறும் விடையம் .ஏதாவது ஒரு விடையத்தை ஆரம்பிக்கும் போது எங்காவது தூர பயணங்களுக்கு செல்லும் போது இரு சமயத்தவர்களும் தங்களது தாய் தந்தை பெரியோர் அல்லது  சமயஸ்தலங்களுக்கு சென்று குருவிடம் ஆசி பெற்று செல்கின்ற வழமை காணப்படுகின்றது. எந்த ஒரு விடையத்தை ஆரம்பிக்கும் முன்பும் இறைவனை வணங்கிவிட்டு ஆரம்பிக்கின்ற வமையானது பொதுவான ஒன்றாக காணப்படுகின்றது.

பௌத்தர்களிடையே மடங்களை அமைக்கின்ற முறையானது காணப்படுகின்றது இலங்கையின் பல இடங்களிலும் துறவியர்களுக்கான மடங்கள் அமைக்கப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன உதாரணமாக அஸ்கிரியபீடம்,மல்வத்துபீடம் போன்றவற்றை கூறலாம் இங்கு துறவியர் கூட்டத்தினர் தங்கியிருந்து சமய போதனைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது இந்துக்களுக்கான மடபாரம்பரியடி முறையானது ஆதிகாலத்தில் அதிகமாக காணப்பட்ட போதும் தற்காலத்தில் சற்று குறைவாகவே காணப்படுகின்றது ஒரு சில இந்துசமய நிறுவனங்கள் இந்துசமயத்தை வழம்படுத்தும் முயற்சியில் இந்துசமய விருத்திச்சங்கம்,விவேகானந்த சபை போன்றவை  அழிந்து போகும் சமய நடைமுறைகளை கிராம,நகர மட்டங்களில் உயர்ச்சியடைய செய்து வருகின்றமை குறிப்பிடதக்கது குறிப்பாக மலையகம், கிழக்கு பகுதிகளில் காணப்படும் காயத்திரி பீடங்கள் வாயிலாகவும் சமய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.தியானம் செய்தல் என்ற விடையத்திலும் ஒத்த நடைமுறையை உடையதாக காணப்படுகின்றது ஆதிகாலத்தில் இந்து சமயத்தவர்கள் ஆச்சிரமங்களில் தியானத்தை மேற்கொண்டனர் தற்காலத்தில் இலங்கையில் ஆச்சிரம முறை வழக்கிழந்த நிலையில் இந்துக்கள் மன அமைதிக்காக காயத்திரி பீடங்களிலும், ஆலயங்களிலும் தியானம் மேற்கொள்கின்றனர் இதே போன்று பௌத்த சமயத்தவர்களும் விகாரைகளிலும் தங்கள் மடாலயங்களிலும் தியானத்தை மேற்கொள்கின்றமை குறிப்பிடதக்கது.

பஞ்சமா பாதங்களாக கருதப்படும் கொல்லாமை, கல்லாமை, கள்ளுண்ணாமை புலால் மறுத்தல் பிறர்மனை விளையாமை போன்ற சமய நடைமுறைகளை இந்து,பௌத்த சமயிகள் ஆகிய இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது இதனை இரு சமய துறவியரும் விடையமாக பின்பற்றுகின்றமை எடுத்து காட்டதக்கது. சில விடையமாக தினங்கள் என்ற அடிப்படையில் இரு சமயத்தவர்களது சமய நடைமுறைகள் ஒத்ததாக காணப்படுகின்றது எடுத்துக்காட்டாக பூரணை தினங்களில் இந்து ஆலயங்களில் விN~ட வழிபாடுகள் இடம்பெறுவதை போலவே பௌத்த வணக்கஸ்தலங்களிலும் விடையமாக வழிபாடுகளும் போதனைகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்க ஒன்றாகும். 

இந்து சமயத்தில் காணப்படும் கையில் நூல் அணிதல் எனும் விடையத்தில் பௌத்த சமயிகளும் ஒற்றுமைப்பட்டு செல்கின்றனர் ஏதாவது ஒரு தேவை நிறைவேறுவதற்காக வேண்டி அல்லது காற்று கருப்பு அண்டாமல் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையின் நிமித்தம் இந்துக்கள் ஆலயத்திற்கு சென்று நூல் அணியும் வழக்கம் காணப்படுகின்றது இதனைப் போல பௌத்த சமயத்தவர்களும் விகாரைகளுக்கு சென்று அங்குள்ள குருவிடம் அதாவது பிக்குவிடம் நூல் அணிந்து கொள்ளும் வழமை காணப்படுகின்றது.

வழிபாடு என்ற விடையத்தை எடுத்து நோக்கும் போது இருபாலாரும் வழிபாடுகளை மேற்க்கொள்ள செல்லும் போது சுத்தமான ஆடை அணிந்து வழிபாட்டுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு செல்வது நடைமுறையாக காணப்படுகின்றது. இந்து சமய ஆலய வழிபாட்டு முறைகளுள் ஒன்றான மகோற்சவம் என்ற விடையம் இதன் போது ஆலயத்தில் திருவிழா  எடுத்தல் நிகழ்வு இடம் பெறும் இதே நிகழ்வு பௌத்தர்களிடையே பெரகேரா என்ற பெயருடன் காணப்படுகின்றது. 

பண்டிகை என்ற விடையத்தை  நோக்கும் போது புது வருடப்பிறப்பு ஜனவரி முதலாம் திகதி இரு சமயத்தவர்களுடைய ஆலயத்திலும் விடையமாக வழிபாடுகள் இடம் பெறுவது வழமை இது ஒரு சமய நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகின்றது. சித்திரை வருடப்பிறப்பு சித்திரை 13ஆம், 14ஆம் திகதிகளில் இந்துக்களும் பௌத்தர்களும் சித்திரை வருடப்பிறப்பினை கொண்டாடுகின்றனர் வருடப்பிறப்பு கருமமாகிய மருத்து நீர் தேய்த்தல் என்ற முறையானது பௌத்தர்களிடையே விகாரைகளுக்கு சென்று எண்ணெய் தேய்த்தல்  என்ற வகையில் மாறிக்காணப்படுகின்றது இந்து பௌத்தர்களிடையே புத்தாடை அணிதல்,கைவிN~டம்,உறவினர் வீடுகளுக்கு செல்லல், விருந்துபசாரம் போன்ற விடையத்தில் ஒரே வகையான நாடைமுறைகளே காணப்படுகின்றன.

இவ்வாறாக இரு சமயத்தின் தோற்றம், அதன் கால எல்லை மாறுபட்டிருப்பினும் சமய நடைமுறை என்ற வகையில் இந்து சமயத்தில் காணப்படுகின்ற நடைமுறைகளை பௌத்த சமயமும் பௌத்த சமயத்தில் காணப்படுகின்ற நடைமுறைகளை இந்து சமயமும் மாறி மாறி பின்பற்றி வருகின்றமை காலம் காலமாக இடம்பெற்று வருகின்ற ஒன்றாக காணப்படுகின்றது இந் நடைமுறைகளை எதிலிருந்து எது கற்றுக் கொண்டுள்ளது என்பது ஒரு கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது.   உலகநாதன் சுபராஜ்Comments