[Untitled]‎ > ‎

10.05.15- யாரோ அம்மாவுக்காக -அன்புடன்" மறக்க முடியாத அந்த தெய்வம் "

posted May 9, 2015, 12:27 PM by Unknown user

" மறக்க முடியாத அந்த தெய்வம் "
என்னை சுமந்தவள் 
நான் 
ஏடுகளை சுமக்க தினம் 
மண்ணைச் சுமந்தவள்...! 

கூட்டியும், பெருக்கியும், 
சேர்த்த கூலிக்காசில் 
என்னை 
கூட்டலும், பெருக்கலும்
படிக்க வைத்தவள்....!

காதணிகளையெல்லாம் 
விற்றுவிட்டு- எனக்கு 
உவமையணியும், 
உருவக அணியும் 
வாங்கிக் கொடுத்தவள்....! 

தான் நடப்பதற்குக் 
கூட செருப்புகளை 
வாங்காமல்- நான் 
பறப்பதற்காக சிறகுகளை 
சேமித்துக் கொடுத்தவள்....! 

கடிதம் கூட எழுதத் 
தெரியாத இவள்தான் 
என்னை கவிதை 
எழுத வைத்தவள்....!

என்னைச் சுமந்தவள் 
நான், ஏடுகளைச் 
சுமக்க- தினம் 
மண்ணைச் சுமந்தவள் 
இன்று - மண்ணுக்குள்ளே 
புதைந்துவிட்டாள் ...! 

அந்த அன்னையை 
சுமக்க முடியாமல்- இன்று  
தன்னையே சுமக்க 
முடியாதவனாய்  
-தள்ளாடி......தள்ளாடி.....
நடை பிணமாக்கினாள் 
என்னை 
அந்தமறக்க முடியாத
தெய்வம் !!!- 
அன்புடன் குமார் ( கே.சீ.கே.) ஜெர்மனி.
Comments