[Untitled]‎ > ‎

10.06.17- கண்ணகி வழக்குரையும் வி.சீ.கந்தையாவும்..

posted Jun 10, 2017, 1:50 AM by Habithas Nadaraja
இலங்கையின் கிழக்குமாகாணத்தில் மண்டூரில் வினாசித்தம்பிசின்னாத்தை தம்பதிகளுக்கு 1920.07.29 இல் பிறந்தவரான வி.சீ.கந்தையா புலமையினால் பண்டிதர்,புலவர்,எழுத்தாளர் என்று பலராலும் அறியப்பட்டவர்.கந்தையா,தன் இளமைக் காலத்தில் வ.பத்தக்குட்டி உபாத்தியாயரிடமும் புலவர்மணிஏ.பெரியதம்பிப்பிள்ளையிடமும்விபுலானந்தரின் குருவாகிய குஞ்சித்தம்பி உபாத்தியாயரிடமும் கல்வி பயின்றவராவார். 

பிற்காலத்தில் யாழ்ப்பாணத்துஆரியபாசாஅபிவிருத்திச் சங்கப் பண்டிதர் பட்டமும்(1943) ,மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதர் பட்டமும் 
(1944) இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தழிழ் வித்துவான் பட்டமும்(1952)அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பி.ஓ.எல்(டீ.ழு.டு) பட்டமும் பெற்றவராவார்.கண்ணகிவழக்குரை மற்றும் மட்டக்களப்புத் தமிழகம் ஆகிய நூல்களுக்கு பதிப்பாசிரியராகபண்டிதர் வி.சீ.கந்தையா பணியாற்றியது இவ்விருல்களுக்கு தனிச்சிறப்பை அளிப்பதுடன் அவரதுதகைமைக்குச் சான்றாகவும் அமைகின்றது.


மட்டக்களப்புத் தமிழகம்என்ற பாடலைப் படைத்து இலங்கை சாகித்தியமண்டலப் பரிசுபெற்றவரும் பழைய ஏட்டுருவிலேகிடந்த “கண்ணகி வழக்குரை”என்ற நூலைஅச்சிற் பதிப்பித்தபெருமையும் வித்துவான் பண்டிதர் வி.சீ.கந்தையாஅவர்களையேசாரும்.

கடல் சூல் இலங்கைகயவாகு பத்தினி வழபாட்டை கொண்டு சென்றான் என்று இளங்கோவடிகள் பாடியதற்கேற்ப தமிழரும் சிங்களவரும் பத்தினி தெய்வத்தை அன்று தொட்டு இன்று வரை வழிபட்டுவருகின்றனர்.ஆதியிலே கண்ணகியின் கதையை திருவிழாக் காலங்களில் பொது மக்கள் பாட்டாக கேட்டு வந்ததுடன் வாய்மொழிக்காப்பியமாகவும் இது வளர்ந்துள்ள தென்று தமிழ்ப்பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்  நூலின் சிறப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஓலைச் சுவடிகளாய் கண்ணகிகோயில்கள் தோறும் உள்ளபெட்டகங்களிலே பன்னெடுங்காலமாக பொதுமக்களின் கைகளை இலகுவில் அடையாதவாறு கிடந்தபழைய ஓலைச் சுவடிகள் பலவற்றைபரிசோதித்துபாடபேதம்,அடிக்குறிப்புஎன்பவற்றுடன் கண்ணகிவழக்குரையை அச்சேற்றிவெளிக்கொணர காலத்துக்கு காலம் பலர் முயன்றும் காரைதீவு அபிவிருத்திச் சங்கத்தினரின் இரண்டாவதுவெளியீட்டு(1968) முயற்சியும் வித்துவான்,பண்டிதவி.சீ.கந்தையாவின் தமிழ்ப் புலமையும் இந்துசமயம் மற்றும் இந்துகலாசார ஆராய்ச்சிவன்மையுமே கண்ணகி வழக்குரை நூல் வெளிவருவதற்கு பெரிதும் உதவியது.

காரைதீவு  கண்ணகையம்மன்ஆலயவண்ணக்கர்களான பொ.செல்லத்துரை, கே.சரவணமுத்து, வே.தம்பிராசா, வ.கயிலாயபிள்ளைகப்புகனார்,  க.குலேசேகரம் வண்ணக்கர், கண்ணகிவழக்குரை பதிப்பாசிரியர் வி.சீ.கந்தையா ஆகியோர்களே கண்ணகிவழக்குரை ஏட்டுப் பிரதிகளின் ஆராய்ச்சிக்கு செயற்பட்டவர்களாக விளங்குகின்றனர்.

கண்ணகை வழக்குரையில் வரம்பெறுகாதையில் கோவலனார் பிறந்தகதையும் அம்மன் பிறந்தகதையும் கப்பல் வைத்த காதையினுள் மீகாமன், துரியோட்டு,கப்பல் வைத்தல் கதையும் கடலோட்டுக் காதையில் வெடியரசன் போர்,நீலகேசிபுலம்பலும் வீரநாரணன் கதையும் மணிவாங்கிய கதையும் மற்றும்  விளங்குதேவன் போரும் உள்ளடக்கப்படகல்யாணக் காதை,மாதவி அரங்கேற்றுகாதை போன்றனவும் பொன்னுக்கு மறிப்பு காதையில் பொன்னுக்கு மறிப்புகதையும் இரங்கியகாதலும் வழிநடைக் காதையில் வயந்தமாலை தூது,வழிநடையும் அடைக்கலக் காதை,கொலைக்களக் காதையில் சிலம்பு கூறல்,கொலைக்களக் கதை,அம்மன் கனாக் கண்டகதையும் உயிர் மீட்புகதையும் வழக்குரைத்தகதையும் குளிர்ச்சிக் காதையில் குளிர்ச்சியும் வழக்குரைக் காவியமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கலைத்தொண்டுக்காக வாழும் பண்டிதர் வி.சீ.கந்தையாவின் சேவைகள் மட்டக்களப்பின் பெருமையையும் முக்கியத்துவத்தினையும் 
உலகறியச் செய்திருக்கின்றனஎன்று,பேராசிரியர் சு.வித்தியானந்தன் அனுவுருத்திரநாடகமதிப்புரையில் கூறுகின்றார் என்பதையும் மனங்கொள்ளவேண்டும்.

பாக்கியராஜா மோகனதாஸ்(நுண்கலைமாணி)
துறைநீலாவணை


Comments