மனித நேயம் இன்று மரணித்துவிட்டதோ இங்கு உதவும் உள்ளங்கள் ஊமையானதோ? அழுக்கடைந்த கூரைவழி ஆகாய நிலவு பார்க்கலாம் அங்குள்ள விண்மீனெண்ணலாம் மாரியில் மழைதுளி எண்ணலாமோ வாடையின் பனித்துளி தாங்கலாமோ? தன்னல வாழ்க்கை தடையிலா செல்வம் ஆடம்பர வாழ்வு அளவில்லா பணம் ஒருபுறம் மறுபுறம்.... உப்பில்லா சோறு ஒட்டிய உடம்பு காற்றிலே பறக்கும் வீடு இது கனவுகள் இல்லா இருள் காடு நீயும் நானும் நினைத்து பூக்காது புது மாற்றம் நீங்களும் நாங்களும் இணைந்து கொடுப்போம் உறவுகளுக்காய் புது தோற்றம் நன்றி: நிறோஷன் |
[Untitled] >