சிறுவர் தொழில் என்றால் என்ன? சிறுவர்கள் செய்யும் எல்லா வேலைகளையும் சிறுவர் தொழிலென வகைப்படுத்தமுடியாது. சிறுவர்களை வேலைக்கு அமர்த்துகின்ற விடயத்தை கையாள்வதற்குரிய ஒரு பிரதான நடவடிக்கையாக, குறிப்பாக தரமான கல்வியின் முக்கியத்துவத்தை இவ்வருட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கெதிரான உலக தினம் எடுத்து காட்டுகிறது. இன்று சர்வதேச ரீதியாக குழந்தை தொழிலை எதிர்க்கும் தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. அண்மையில் உலக ரீதியாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் படி, 5 – 14 வயதுக்கிடைப்பட்ட இரு பாலருமாக ஏறக்குறைய 120 மில்லியன் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தப்பட்டு ஆண், பெண் இருபாலான சிறுவர்களும் சமஅளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் இந்த தொடர்ச்சியான செயற்பாடு வறுமையினால் நன்கு வேரூன்றி விட்டது. மேலும், வளர்ந்தோரின் ஒழுக்க குறைபாடான வேலைகள், குறைவான சமூக பாதுகாப்பு, வேலைகளுக்கு அமர்த்தப்படும் அனைவரும் உரிய சட்ட ரீதியாக ஆகக்குறைந்த வயதில் பாடசாலைக்கு செல்கின்றார்களா? என்பதனை உறுதிப்படுத்த தவறுதல் போன்ற விடயங்களும் காரணமாக அமைகின்றன. சிறுவர்களை வேலைக்கு அமர்த்துகின்ற விடயத்தை கையாள்வதற்குரிய ஒரு பிரதான நடவடிக்கையாக, குறிப்பாக தரமான கல்வியின் முக்கியத்துவத்தை இவ்வருட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கெதிரான உலக தினம் எடுத்து காட்டும். இவ்வாறு செய்வது இப்போது பொருத்தமான காலமாக அமையும். ஏனென்றால், 2015ம் ஆண்டில் சர்வதேச சமூகம், கல்வி அபிவிருத்தியின் இலக்கை அடையாமைக்கான காரணங்களை மீளாய்வு செய்யக் கூடியதாகவும், புதிய இலக்குகளையும் உபாயங்களையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். சிறுவர் தொழில் என்றால் என்ன? சிறுவர்கள் செய்கின்ற பல வகையான வேலைகளுக்கிடையில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் காணப்படுகின்றன. சில வேலைகள் கஷ்ரமானதாகவும், மிகவும் கிராக்கியானதாகவும் உள்ளன. ஏனைய தொழில்கள் ஆபத்தானதாகவும், நன்னடத்தைகளை பாதிக்கக் கூடியவாகவும் உள்ளன. சிறுவர்கள் வேலையில் ஈடுபடும் போது பல விரிவான வேலைகளையும், செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றார்கள். சிறுவர் தொழிலை வரைவிலக்கணப்படுத்தல் சிறுவர்கள் செய்யும் எல்லா வேலைகளையும் சிறுவர் தொழிலென வகைப்படுத்தக் கூடாது. சிறுவர்களோ அல்லது வளர்ந்தவர்களோ தங்களுடைய உடல் நலம், ஆளுமை விருத்தி என்பவற்றை பாதிக்காத வேலைகளும் பாடசாலைக்கு செல்வதில் இடையூறுகளை ஏற்படாத வேலைகளும் பொதுவாக நேர் தன்மையுடையனவாக கருதப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளாவன, வீட்டில் பெற்றோருக்கு உதவுதல், குடும்ப வியாபாரத்தில் உதவி செய்தல், அல்லது பாடசாலைக்கு புறப்பான நேரங்களிலும் பாடசாலை விடுமுறை காலங்களிலும் சிறு செலவுகளை பணத்தை சம்பாதித்தல் என்பனவாகும். இவ்வகையான செயற்பாடுகள் சிறுவர்களின் அபிவிருத்திற்கும் அவர்களின் குடும்பங்களின் நலன்புரி விடயங்களுக்கும் பங்களிப்பு செய்கின்றன. இச்செயற்பாடுகள் சிறுவர்களுக்கு திறன்களையும், அனுபவங்களையும் வழங்குகின்றன. மேலும் அவர்களுடைய வயோதிப பருவத்தில் சமூகத்தில் வினைத்திறனுள்ள அங்கத்தவராக இருப்பது அவர்களை தயார் செய்கின்றன. 'சிறுவர் தொழில் எனும் பதம் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. சிறுவர் தொழில், சிறுவர்களை அவர்களது பிள்ளைப்பருவத்திலிருந்து, ஆளுமை, சுயகௌரவம் என்பவற்றிலிருந்து வேறுபடுத்தி அவர்களது உடல், உள விருத்திற்கு தீங்கு விளைவிக்கின்றது. பின்வரும் வேலைகளை குறிப்பிடப்படுகின்றது. • உடல், உள, சமூக நடத்தை ரீதியாக ஆபத்துக்களை ஏற்படுத்தி சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கின்றது. • அவர்களுடைய பாடசாலை செல்லும் விடயங்களில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றது. • அவர்கள் பாடசாலைக்கு செல்லும் வாய்ப்புக்களை தடுக்கின்றது. • உரிய வயதை அடைவதற்கு முன்னரே பாடசாலையை விட்டு விலக வழிவகுக்கின்றது. • பாடசாலை வரவோடு மேலதிகமான நீண்ட கஷ்டமான வேலைகளையும் இணைந்து முயற்சி செய்வதற்கான தேவையை ஏற்படுத்துகின்றது. சிறுவர் தொழில்களை மிகப்பெரிய அளவில் பார்க்கும் போது அவை சிறுவர்களை அடிமைகளாக்கி அவர்களுடைய குடும்பங்களிலிருந்து பிரித்து வைக்கின்றன. மேலும் கடுமையான ஆபத்துக்களுக்கும், நோய்களுக்கும் உட்படுத்தப்படுகின்றன. அல்லது பெரிய நகரங்களின் வீதியில் விட்டு விடுகின்றன. சிறுவர்களின் வயதும், வேலை வயது, வேலை செய்யும் கால அளவு, எவ்வாறான நிபந்தனையின் கீழ் வேலை செய்யப்படுகின்றன என்பவற்றை பொறுத்து இவ்வாறான வேலைகள் சிறுவர் தொழில் என அழைக்கப்படுகின்றன. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலனில் மதம், சமூகம், சுரண்டல், பாகுபாடு என்பவற்றிக்கு இலங்கை அரசியல் யாப்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 2000 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு மிகச் சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. 5 வயது தொடக்கம் 14 வயது வரை இலவசக் கல்வியும் குழந்தை அணுகுமுறை அபாயகரமான தொழில்களில் இருந்து பாதுகாத்தல் என்பவற்றுக்கு சிறப்புரிமை வழங்கப்பட்டுளள்து. ILO Worst Forms of Child Labour Convention (No. 182) ILO Minimum Age for Employment Convention (No. 138) ILO Forced Labour Convention (No. 29) ILO Abolition of Forced Labour Convention (No. 105) UN Convention on the Rights of the Child (CRC). என்பனவாகும். சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவத்துக்கெதிரான சர்வதேச தினத்தில் வேலைக்கு அமர்த்துவதற்குரிய ஆகக் குறைந்த வயதுவரை சகல சிறுவர்களுக்கும் இலவச, கட்டாய, தரமான கல்வியை வழங்குதலும், அவ்வாறான சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுத்தலும். சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் கல்வி என்பவற்றில் தேசிய கொள்கைகளை வகுத்து, அவை உறுதிப்பாட்டுடனும், பயனுள்ளதாகவும் இருப்பதனை உறுதிப்படுத்துவதற்கான புதிய முயற்சிகள் கற்பித்தல் தொழிலில் தரமான கல்விக்குரிய இலகு வழியை ஏற்படுத்துவதற்கும் முதலீட்டையும் உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகள். ஆகியவற்றிற்கு உலக நாடுகளில் கவனத்தை செலுத்த ஜக்கிய நாடுகள் சபை முயற்சி எடுக்கின்றது. சிறுவர் தொழிலை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் பல சவால்களுக்கு மத்தியில், சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதோடு மேலும் முன்னேற்றம் இடம் பெற வாய்ப்புண்டு. கடந்த 10 ஆண்டுகளில், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துகின்ற விடயத்தில் ஒரு கீழ் நோக்கிய போக்கு காணப்படுகின்றது. அத்தோடு பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும் இந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்துகின்ற விடயத்தை முற்றாக நிறுத்துவதற்கு பல தேவைகள் செய்யப்படவுள்ளன. தற்போதுள்ள அவசரமான தேவை என்னவென்றால், முன்னேற்றம் எங்கே ஏற்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு கற்றுக் கொண்ட விடயங்களை விஷேடமான துரித நடவடிக்கைகளில் பிரயோகப்படுத்த வேண்டும். அவ்வாறு தேவைப்படுகின்ற மிக முக்கிய நடவடிக்கைகள் ஆவன. தரமானதும், இலவசமானதுமான கட்டாயக்கல்வியை வழங்கல். அனைத்து ஆண், பெண் சிறுவர்களும் பாதுகாப்பானதும் தரமானதுமான கற்றல் சூழலை கொண்டிருப்பதை உறுதிப்படுத்தல். முறையான கல்வியைப் பெறத்தவறிய வளர்ந்த பிள்ளைகளுக்கு அடிப்படைக்கல்வியை வழங்குவதற்காக அவர்களை முறையான தொழில் பயிற்சி நிகழ்ச்சி திட்டங்களில் இணைந்து கொள்ளும் வாய்ப்புக்களை வழங்கல். சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதில் நியாயமான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் பாடசாலை வரவை உறுதிப்படுத்தலும். பாடசாலை வரவை ஊக்கப்படுத்துவற்கான சமூகப் பாதுகாப்புக் கொள்கைகளை மேம்படுத்தல். உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்ட தொழில் வாய்மையை கொண்டுள்ளவர்களை வைத்திருத்தலும், சமூக கலந்துரையாடல்கள் மூலம் ஏற்ற கற்பித்தலை முன்னெடுக்கின்ற அணியினரை ஊக்குவித்தலும். இளம் தொழிலாளர்கள் பாடசாலையிலிருந்து விலகும் போது அவர்களை பாதுகாத்தலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய தொழில்களில் அவர்களை சிக்கிக் கொள்வதை தடுத்தலும். சிறுவர் தொழில் தொடர்பாக சர்வதேச தொழில் நிறுவனத்தின் உடன்படிக்கைகளும், சிபாரிசுகளும் சிறுவர்களின் தொழில் மற்றும் வேலைக்கு அமர்த்துதல் போன்ற விடயத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அல்லது தடை செய்வதற்கு பெரும்பாலான நாடுகள் சட்டத்தை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துகின்றன இவற்றில் அனேகமானவை சர்வதேச தொழில் நிறுவனத்தினால் ஊக்குவிக்கப்பட்டு நியமனங்கள் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான முயற்சிகளுக்கு மத்தியில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் செயற்பாடு பாரிய அளவில் தொடர்ந்தும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அபிவிருத்தி அடைவதும் நாடுகளில் சிலவேளை திடுக்கிடச் செய்யும் அளவிற்கு இடம் பெறுகின்றன. இந்த முன்னேற்றம் மந்தகதியில் இருப்பதற்கு அல்லது வெளிப்படையாக இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்னவென்று சொன்னால் இவ்விடயம் ஒரு பாரிய சிக்கலான விடயமாக மாறியுள்ளது. இதைப்பற்றி நாங்கள் எழுதிக் கொண்டிருப்பதாலோ அல்லது பேசிக் கொண்டிருப்பதாலோ முற்றாக நிறுத்த முடியாது. எவ்வாறாயினும் துணிவான ஒன்றுபட்ட அடிப்படையிலான நடவடிக்கையாக சட்டம் வேண்டும். சட்டம் மட்டும் தான் இதனை முற்றாக நிறுத்தி எமது இறுதி கொள்கை இலங்கை அடைய வழிவகுக்கும். இவ்விடயத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மிக மோசமான சிறுவர் தொழில்களை இனங்கண்டு தடைசெய்வதற்காக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். சிறுவர் தொழிலின் மிகவும் மோசமான செயற்பாடுகள் தொடர்பான சர்வதேச தொழில் நிறுவனத்தின் 1999ம் ஆண்டு 182ம் இலக்க உடன்படிக்கை தெளிவான புள்ளி விபரங்களின் படி சிறுவர் தொழிலானது, உலகளாவிய ரீதியல் பாரிய விகிதாசாரப் பிரச்சினையாக உள்ளது. இவ்விடயம் தொடர்பான பரந்த அளவிலான ஆராச்சிகளை தொடர்ந்தும் தற்போதுள்ள சிறுவர் தொழில் தொடர்பான உடன்படிக்கைகளை வலுப்படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என சர்வதேச தொழில் நிறுவனம் தீர்மானித்துள்ளது. எல்லா வகையான சிறுவர் தொழில்களையும் முற்றாக நிறுத்த வேண்டும் எனும் நீண்டகால குறிக்கோளை கொண்டு செயற்படாமல் சிறுவர் தொழில்களில் மிகவும் மோசமான செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளித்து நிறுத்தவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கு 182ம் உடன்படிக்கை உதவுகின்றது. சர்வதேச தொழில் நிறுவனத்தின் 182ம் இலக்க உடன்படிக்கை சாசனம். சர்வதேச தொழில் நிறுவனத்தின் 190ம் இலக்க சிபாரிசு தொடர்பான சாசனம். உறுதிப்படுத்தல் பட்டியல். தொழில் மற்றும் வேலைகளுக்கு அனுமதிப்பதற்கான ஆகக்குறைந்த வயது தொடர்பான சர்வதேச தொழில் நிறுவனத்தின் 138ம் இலக்க உடன்படிக்கை சிறுவர்கள் சிறுவயதில் வேலைகளில் ஈடுபடக்கூடாது என்பதனை உறுதிப்படுத்தவதற்கான மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்றாக கருதப்படுவது என்னவென்றால், சட்ட பூர்வமாக வேலையில் ஈடுபடுவதற்கு அல்லது தொழில்களின் அமர்த்தப்படுவதற்கு உரிய வயது எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும். சிறுவர்கள் வேலையில் ஈடுபடல் அல்லது வேலைகளுக்கு அமர்த்துதல் தொடர்பான அனுமதிப்பதற்கான ஆகக் குறைந்த வயது பற்றிய சர்வதேச தொழில் நிறுவனத்தின் உடன்படிக்கை பின்வருமாறு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச தொழில் நிறுவனத்தின் 138ம் இலக்க உடன்படிக்கை சாசனம். சர்வதேச தொழில் நிறுவனத்தின் 146ம் இலக்க சிபாரிசு தொடர்பான சாசனம். உறுதிப்படுத்தல் பட்டியல். இவ்வாறு இன்றையதினத்தில் மட்டுமல்லாது எல்லாக்காலங்களிலும் சிறுவர்தொழிலை சமுகம் முற்றாக எதிhத்து ஒழிக்கவேண்டும் என்பதே எமது அவா. தேசமான்ய பி.ஸ்ரீகாந் மனித அபிவிருத்தி தாபனம் காரைதீவு |
[Untitled] >