இன்றை சூழலில் ‘பகிடிவதை’என்பதூயர் கல்வியைவழங்கும் நிறுவனங்களைத்தாங்கியுள்ளதீராதநோய் இன்றை சூழலில் 'பகிடிவதை' என்பது உயர் கல்வியை வழங்கும் நிறுவனங்களைத்தாங்கியுள்ள தீராதநோய் போன்று மாறியுள்ளது. அது அக்கல்வி நிறுவனங்களின் கற்றல், இகற்பித்தல் மற்றும் நிருவாக விடயங்களில் பல் வேறுப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கி கல்வி நிறுவனங்களின் விளைவுகளையே கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு சிறந்த உதாரணமாக எமதுநாட்டின் பல்கலைக்கழகங்களில், கல்விக்கல்லூரிகளில் மற்றும் ஏனைய கல்வியை வழங்கும் நிறுவனங்கி புதிதாக அனுமதி பெறும் மாணவர்களுக்கு உடல் உளரீதியாகவும் வார்த்தைகளாலும் இழைக்கப்படும் துன்புறுத்தலைக் கூறலாம். பல்கலைக்கழகங்களில் உள்ள மூத்தமாணவர் (சிரேஸ்ர) சிலரால் மேற் கொள்ளப்படுகிறது. இது இன்றைய சூழலிலே பகிடி இல்லாத 'வதை' யாகமாறிவருகின்றது. பகிடிவதை என்பது பகிடி10 வதை என்னும் இரு சொற்கள் சேர்ந்தஒரு (சொல்) பதமாகும்; இதற்கு இரு பொருள் விளக்கம் கூற முடியும். 'பகிடி' என்பதுதாமும் மகிழ்ச்சியடைந்து பிறரையும் மகிழ்ச்சிப்படுத்துவது. 'வதை' என்பது சமூகவிரோதச்செயல்பாடாகும். உளவியல் ரீதியாக பிறரை துன்புறுத்தி இன்பம் காணும் மனம் படைத்தோர் உளநோய் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளவர்கள் என்று கூறப்படுகின்றது.எனவே 'பகிடிவதை' எனும் இரு சொல் கொண்டபதமானது சமூகவிரோத செயல்களுடன் தொடர்புடையதனால் நிச்சயம் ஒழிக்கப்படல் வேண்டும்.அதனால் 'பகிடி'என்பதுதேவையானஒன்றேஆனால் வதைஎன்பதுதேவையற்றது. காரணம் 'பகிடிவதை'என்பதுஒருவகைதுஸ்பிரயோகமே.இது சட்ட விரோத மானது. அதனைத விப்பது தவிர்க்க முடியாத ஒன்றே.இதனை ஒழிப்பதற்கு அதனுடன் தொடர்புடையவர்கள் உணர்ந்து செயற்படுவது மிகவும் வேண்டத்தக்க ஒன்று. இன்றேல் எமது கல்விச் சமூகம் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும். இப்';பகிடிவதை 'தோன்றிய வரலாற்றை நோக்கினால் பகிடிவதையில் ஈடுபடுவோர் நிச்சயமாக அதனை ஒழிக்கமனம் கொள்வர்.கி.பி 7 ஆம் 8 ஆம் நூற்றாண்டில் கிரேக்கநாட்டில் விளையாட்டில் சேருவோர் குழு மூலமாக பலவாறு அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டனர்.இது வேபகிடி வதையின் ஆரம்பம் என்று கூறுவர்.காலப் போக்கில் இதன் வடிவங்கள் மாற்றமடைந்து இராவணுவத்துக்குள் அறிமுகம் செய்யப்பட்டது.அங்கிருந்து தான் ஐரோப்பியக் கல்வி நிறுவனங்களுக்குள் இக்கலாசாரம் ஊடுறுவியது.போர்களின் முடிவின் பின்னர்; இராணுவத்தினருக்கு உயர்க்கல்வி நிறுவனங்களில் பயிலும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டபோது இவர்கள் அங்கு';பகிடிவதைகலாசாரத்தைஅறிமுகம் செய்தனர்.';பகிடிவதையினுடாகத் தனக்கெனச் சிந்திப்பதைவிடுத்து குழு மனப்பான்மைபெறஉதவும் என்பது பகிடிவதை செய்வோரின் எண்ணமாகும்.அதுமட்டு மல்லாது இன்றையகல்விச்சூழலிலேபகிடிவதைசெய்வோர் கூறும் நியாயம். பகிடிவதைமாணவர்களைசமூகமயப்படுத்தஉதவும் என்றும் பகிடிவதைசெய்யாவிட்டால் புதியமாணவர்கள் தம்மைமதிக்கமாட்டார்கள். நமக்குகட்டுப்படமாட்டார்கள் என்பதோடுதாம்; பகிடிவதைபுரியாதபோதுகையால் ஆகாதவன் என புதியமாணவர்களும் ஏனையவர்களும் கருதுவர் என்னும் வினோதமானகருத்தை கூறுகின்றனர்.ஆனால் மிலேச்சத்தனமானமுறையில் புதியமாணவர்களைவரவேற்கும் முறையேபகிடிவதைஎன்பதை இவர்கள் மறந்தவிட்டனர். உயர்க்கல்வி நிறுவனங்களில் அனுமதிபெறும் இராணுவவீரர்களின் எண்ணிக்கைகுறையக் குறையமற்றவர்கள் நோக்கங்களை அறியாது பகிடிவதை செய்வதை ஒருபொழுதுபோக்காகக் கொண்டு கொடூரமான நடவடிக்கைகளில் இறங்கினர். இது பிரித்தானியாவில் இருந்து,இந்தியா முதலியநாடுகளுக்கும் பரவி ஒரு மோசமான நடவடிக்கையாக இலங்கை, இந்தியா பல்கலைக்கழகங்களில் மாறிவிட்டது. பகிடிவதை எங்கு தொடங்கியதோ அங்குஅ து இன்று அவ்வளவுகடுமையாக இல்லை. வளர் முகநாடுகளிலேயே அது கடுமையாகதாக்கம் செலுத்துவதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே 'பகிடிவதை' என்பது மேலை நாடுகளின் கலாச்சாரத்தலிருந்து பிறந்த குழந்தை அது எமது இலங்கை போன்ற பல்லின சமூகம் கொண்டதும் பல சமூகநாட்டுக்கு பொருத்தமானது அல்ல என்பதையும் எமது மாணவர்கள் புரிந்து கொள்ளவேண்டும. ஏனெனில் உலகிலேயே பகிடிவதையின் மூலம் மிகமோசமாகபாதிக்கப்பட்டநாடு இலங்கையாகும். இது ஆய்வாளர்களின் கருத்து. எமது பல்கலைக்கழகங்களில் புதியமாணவர்கள் அனுமதிபெறும் போது அவர்களை பல்கலைக்கழக சூழலுக்கு பொருத்தப்பாடுடையவர்களாக மாற்றும் முகமாகவும் பல்கலைக்கழகம் சார் சமூகத்துடன் இணைந்துசெயல்படும் திறனைபெறும் நோக்கிலும் அவர்களுக்கு 'பகிடிவதை' செய்யவேண்டும் என்னும் போர்வையிலே மூத்தமாணவர்கள்;; பல்வேறுசந்தர்ப்பங்களில் தொந்தரவுகளை செய்கின்றனர். உதாரணமாககடும்சொல் பயன்பாடு.கிராமத்தில் இருந்துவரும் மாணவர்களைஅவர்களது மனம் நோகும்படியானசொல் சார்ந்தவார்த்தை துஸ்பிரயோகம்; மற்றும் உடல் சார்நதுதாக்குதல் மது அருந்தச் செய்தல் புகைக்கச்செய்தல் மற்றும் உடற் குறைபாடுடைய மாணவர்களை ஆடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுத்தல் போன்றசெயல்கள் மாணவர்களைதுன்புறுத்தப் பயன்படுத்தப்படுகிறார்கள். இதனால் படுமோசமாக பாதிக்கப்பட்டு மாணவர் மரணமான சம்பவங்களும் இலங்கையிலுண்டு. இச் செயற்பாடுகள் சிலசிரேஸ்ட மாணவர்களால் நன்கு திட்டமிட்டு பிடிபடாதவகையில் இடம் பெறுகின்றன. இப் 'பகிடிவதை'யினால் அதிகமாகபாதிக்கப்படுவோர் கிராமபுரங்களிலிருந்துவரும் பொருளாதார கஸ்டங்களுக்கு உள்ளான மாணவர்களே. ஆய்வுகளின் முடிவுகளின் படிபல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களில் பெருந்தொகையினர் கிராமப்புற பொருளாதார கஸ்டங்களைஎதிர்நோக்கும் மாணவரேகாரணம் அவர்களுக்கே'கல்வியின் பெறுமதி'தெரியும் இதமக்கு ஏற்படடுள்ள வறுமை போன்ற துன்பங்களை நிரந்தரமாக வேதுரத்தியடிக்க கல்வி என்னும் முதலீடே சிறந்தது என்பதை விளங்கிக்கொன்டுள்ளார்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அதிகப்படியாகதெரிவுசெய்யப்படும் மாணவர் தொகைகலைப்பிரிவிலிருந்தே தெரிவுசெய்யப்படுகிறது. இதன்காரணம் நகர்புறஉயர் பாடசாலைக்கு சென்று விஞ்ஞான,கணித,வர்த்தகபிரிவுகளில் படிக்கபொருளாதார வசதி இல்லை. திறமை கொண்ட மாணவர்கள் தமது கிராமத்திலிருந்து கலைப்பிரிவில் கல்வி கற்கபல்வேறுஎ திர்பார்புடனும் கனவுகளைசுமந்தவண்ணமும் பல்கலைக்கழக வாசலை அடைகின்றனர்.அங்குசென்றதும் 'பகிடிவதை'யினால் துன்புறுத்தப்படுகின்றனர்.கல்வி எனும் முதலீட்டை மட்டும் கொண்டு பல்வேறு உளதாக்கங்களோடு பல்கலைக்கழகத்தை நாடும்போது 'பகிடிவதை' என்னும் துன்பத்தை கொடுத்து அவர்களை நோகடிப்பது சரியா? அவர்களது எதிர்காலத்தை குட்டிச்சு வராக்குவது முறையா? சம்மந்தப்பட்டவர்களே சற்றுசிந்தியுங்கள். புகிடிவதையை நிறுத்துங்கள் பகிடிசெய்யுங்கள் வதை செய்யாதீர். பலமாணவர்கள் 'பகிடிவதை'எனும் போர்வையில் பாலியல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர். இவற்றைஅறியும் பெற்றோர் பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்வதைவிரும்பமாட்டார்கள். அவமானம் பயம் பதகளிப்புஎன்பவற்றால் பலஅழுத்தம் ஆளுமைக் குறைபாடுகள் என்பவற்றுக்கு உள்ளாகின்றனர். பலமாணவர்கள் விரக்திஅடைந்து பல்கலைக்கழகக் கல்வியையேகை விடுகின்றனர். இலங்கையில் 15 பல்கலைகழகங்கள் உண்டு;. அதில் 14 மரபுவழிப் பல்கலைக்கழகங்கள் ஒருதிறந்தபல்கலைக்கழகம் 14 பல்கலைக்கழகங்களிலே 67000க்கு மேல் உள் வாறியமாணவர்கள் பயில்கின்றனர். இவர்களை விட பகுதி நேர உயர் பட்டபின் படிப்பு வெளிவாரிமாணவர்கள் பயில்கின்றனர். இன்றைய சுழலிலே பல்கலைக்கழககல்வி வேலைவுலகிற்கும்,தொழில் சந்தைக்கும் ஏற்;றதிறன் கொண்டவர்களை உருவாக்குகின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இப்ப கிடிவதை என்னும் செயலும் பல்கலைக்கழகத்தின் தரத்தைகேள்விக்குள்ளாக்கிறது. அத்துடன் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் இவ்வாறான பகிடிவதை போன்றவன் செயல் காரணமாக அவை மூடப்படும் நிலைஏற்படுகின்றது.இது உயர் கல்விக்குஒதுக்கப்படும் வளங்களைவிரயமாக்குவதுடன் மாணவர்களது பட்டப்படிப்புக்கான காலத்தையும் வீணடிக்கின்றது. உதாரணமாக நான்கு வருடத்தில் கற்றுமுடிக்கும் பாடநெறி 5 அல்லது 6 ஆறு வருடமாகும்.போது குறிப்பிட்ட வயதி லேபட்டம் பெறமுடியாதுபோய் பலஉயர் பரீட்சைள் எழுதும் வாய்ப்பை இலக்க நேரிடுகின்றது.இது மாணவர்களது வாழ்வையே சூனியமாக்குகிறது.அது மட்டு மல்லாது அண்டு தோறும் ஒதுக்கப்படும் (பல்கலைக்கழகங்களுக்கு) நிதி 1400 கோடிரூபாய் ஒரு மாணவனுக்கு ஆண்டு ஒன்றுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் கல்விக்காக அரசு செலவு செய்கிறது. பகிடி வதையானது மரபாகத் தொடரக் காரணம் பகிடிவதைபெற்றவர் அடுத்த வருக்குதாமும் பகிடிவதை செய்ய வேண்டும் என்னும் பழிவாங்கும் எண்ணம் ஆகும்.ஆனால் பகிடிவதைசெய்வர் இங்குபழிவாங்கப்படுவதில்லை.மாறாகஎதுவும் அறியாத புதிய மாணவன் பாதிக்கப்படுகின்றான்.அத்துடன பகிடிவதையினால் தமக்குகீழ் பணிந்து நடக்கும் ஒரு கூட்டம் உள்ளது.என்று பகிடிவதை செய்யும் மாணவன் நினைக்கிறான்.மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் மனோபாவத்தை வளர்கிறது.பகிடிவதை என்பது தமக்கு கழிப்பையும் பயனையும் தருகின்றது.என பகிடிவதைபுரியும் மாணவன் கருதுகிறான்.இதை விடுத்து பல நன்மை தரும் செயற்பாடுகளை செய்வதன் ஊடாக புதிய மாணவரை சமூகமயப்படுத்த முடியும் என்னும் விளிப்புணர்வுசில மூத்தமாணவரிடம் இல்லைஎன்பதுஆய்வாளர் கூறும் கருத்தாகும். மூத்த மாணவரிடையே பகிடிவதையை எதிர்போர் இல்லை என்று கூற முடியாது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கழைக்கழக மாணவன் சமந்தவிதானகே பகிடிவதைக்கு எதிராக போராடிய போது கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்து. எனவேசிலர்தான் பகிடிவதையை ஆதரித்து செயல்படுகின்றனரிவர்களும் உணர்ந்து செயற்பட்டால் பகிடிவதை என்பது ஒழிக்கப்படும். இன்று பல்கலைக்கழகங்களில் உள்ள பகிடிவதைக்ககு எதிரான சட்டங்களின் படி பகிடிவதை செய்வோர் பல்கலைக்கழகங்களிலிலிருந்து முற்றாக நீக்கப்படக் கூடியநிலை உள்ளது. இதனை 1998ம் ஆண்டில் பாலராளுமன்ற உயர்கல்வி நிலையங்களில் வன் செயல்களையும் துன் புறுத்தல்களையும் தடைசெய்யும் 20ஆம் இலக்க சட்ட நிறைவேற்றம் கூறுகின்றது.1998ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பகிடிவதைக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் பின்வருவன தண்டணைக்குரிய குற்றங்களாக கூறப்படுகின்றன. பகிடிவதை செய்யும் போது மாணவர்கள் பாலியல் துன்புறுத்ததல்களுக்க அல்லது மோசமான காயங்களுக்கு உட்படல் பேச்சு அல்லது எழுத்து மூலமாக பயமுறுத்துதல் அல்லது துன்புறுத்தல் மற்றவர்களின் தனிப்பட்ட சுதந்திரம்,நடமாடும் சுதந்திரம் என்பனவற்றைமீறும் வகையில் நடத்தல் இஒருவர் தான் செல்லவிரும்பும் இடத்திற்கு செல்லவிடாது இடையூறு செய்தல் உயர் கல்வி நிறுவனந்களின் கட்டடங்களில் அனுமதியின்றி தங்குதல் என்பன குற்றங்களாக கருதப்படும். இச்சட்டத்தின் படிபாதிக்கப்பட்டோர் மாணவராகவொ அல்லது ஆசிரியராகவோ இருக்கலாம். இவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் போது முதலில் குற்றம் புரிபோருக்கு பிணைகிடயாது. அத்தோடு 10 ஆண்டுகாலம் கடும் காவல் தண்டனைவிதிக்கப்படலாம். மேலும் இச்சட்டஏற்பாடுகளின் படிகுற்றம் நிருபிக்கப்பட்டால் குற்றம்; புரிந்தவர் பல்கலைக்கழகத்திலிருந்து அகற்றப்படவும் முடியும். அவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு நஸ்டஈடு வழங்கவும் சட்டத்தில் ஏற்பாடுகள் உண்டு. ஆக்கம்:வேலாயுதபிள்ளை பகீரதன் (தேத்தாத்தீவு) விரிவுரையாளர் ஸ்ரீபாததேசியகல்வியியல் கல்லூரி.
|
[Untitled] >