பாட்டுக்கொரு புலவன் பாரதி புதுக்கவிதையின் முன்னோடி சுப்ரமணியப் பாரதியார் அவர்கள் தந்தை சின்னச்சாமி அய்யர் அவர்களுக்கும் தாய் லெட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 டிசம்பர் 11இல்,மூல நட்சத்திரத்தில்துத்துக்குடி மாவட்டத்திலுள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பிறந்தார்.பாரதியாரின் இளமைப் பெயர் சுப்பிரமணியன் ஆகும்.சுப்ரமணியனை எல்லோரும் செல்லமாக சுப்பையா என்றே அழைக்கலாயினர்.இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமை பெற்றுத் திகழ்ந்தார்.ஏழு வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுது கவிதைகளை எழுதத் தொடங்கினார். பாரதியார் கவிஞராகவும்,எழுத்தாளராகவும்,பத்திரிகையாசிரியராகவும்,விடுதலை வீரர் மற்றும் சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். 1887 ஆம் ஆண்டளவில் சுப்பையாவின் தாயான லெட்சுமி அம்மாள் மரணமடையும் போது சுப்பையாவுக்கு வயது ஐந்து ஆகும். தாயார் மரணமடைய அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.1889 இல் தந்தையான சின்னச்சாமி அய்யர் அவர்கள் மனைவி இறந்ததன் காரணமாக மறுமணம் புரிகிறார்.அதே ஆண்டில் சுப்பையாவுக்கு உபநயனம் இளைஞன் அருட்கவி பொழிகிறான்.1893 இல் 11 வயதுச் சிறுவனான சுப்பையாவை எட்டயபுர எட்டப்ப நாயக்க மன்னர் அவர்கள் சமஸ்தான புலவர்கள் அடங்கிய பெருஞ்சபையில் சோதித்து சுப்பையாவின் கவித்திறனை வியந்து “பாரதி” (கலைமகள்) என்ற பட்டம் அளிக்கின்றார்.அன்று முதல் சுப்பிரமணிய பாரதியார் என அழைக்கப்பெற்றார். 1894-1897 வரையான காலப்பகுதியில் திருநேல்வேலி இந்து கல்லுரிப் பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை படித்துக்கொண்டிருக்கும் பொழுதே தமிழ்ப் பண்டிதர்களுடன் சொற்போர்கள் (இலக்கண, இலக்கிய வாதப்பிரதி வாதங்கள்) நிகழ்த்திய காலமாக அமைகிறது.அதன் பிற்பாடு சுப்பையா அவர்கள் 1896 êன் இல் 14 வயதாக இருக்கும் போது ஏழு வயது செல்லம்மாவை திருமணம் செய்கிறார்.1898 ல்தந்தையான சின்னச்சாமி அய்யர் மரணமடைந்ததனால் பெருந்துயர் அடைந்தார்.தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு வறுமை நிலையினை அடையலானார். 1898 இல் தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார்.இதனை எட்டயப்புர மன்னருக்கு தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.எட்டயப்புர அரண்மனையில் பணி கிடைத்ததும் சில காலத்திலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார்.1898-1902 வரையான காலப்பகுதியில் காசியிலுள்ள சுப்பையாவின் அத்தையான குப்பம்மாளுடன் வசித்துஇபடித்து வந்தார்.அலகாபாத் சர்வகலாசாலையில் பிரவேசப் பரீட்சையில் தேர்வு எழுதினார்.காசி இந்து கலாசாலையில் ஸமஸ்கிருதம், ஹிந்தி,ஆங்கிலம்,வங்காள மொழி போன்ற மொழிகளை பயின்று புலமை பெற்றதுடன் பிற மொழி இலக்கியங்களை மொழிபெயர்க்கவும் செய்துள்ளார்.இக்காலப்பகுதியிலிருந்து கச்சம்,வாழ்விட்ட தலைப்பாகை,மீசைப்பழக்கம் என்பன பாரதியின் உருவத் தோற்றமாகிவிட்டது. 1902-1904 வரையுள்ள காலப்பகுதியில் எட்டயபுரத்திலுள்ள மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனையொன்றில் வாழ்ந்தார்.குறிப்பாக மன்னருக்குத் தோழராக,அரசசபைக் கவிஞராக பணியாற்றி திகழ்ந்தார்.இந்நிலை பாரதிக்கு விருப்பமில்லாத வேலையாக இருந்தது.ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்த பின்னர் 1904ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் “விவேகபாநு”இதழில் “தனிமை இரக்கம்” என்ற முதல் பாடல் அச்சேறுகிறது.வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராக பணியாற்றியதுடன்1904 ஆகஸ்ட் -நவம்பர் மாதங்களில் மதுர சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக தமிழ்ப் பண்டிதராகவும் கடமையாற்றினார். 1904 நவம்பர் -1906 ஆகஸ்ட் வரை இல் சென்னை “சுதேச மித்திரன்” உதவியாசிரியராகப் பணிபுரிந்ததுடன் ஜி.சும்பிரமணிய அய்யரிடமும் பயிற்சியும் பெற்று“சக்கரவர்த்தினி”என்ற மகளிர் மாதப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றினார்.வாழ்நாளின் இறுதியிலும் 1920ஆகஸ்ட் -1920 செப்டெம்பர் வரை அவ்விதழின் உதவியாசிரியராகப் பணியாற்றி மறைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.“ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்”என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை பாட்டின் மூலம் வெளிப்படுத்தியவரான பாரதி தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவராவார். 1905 இல் வங்கப் பிரிவினை ஏற்பட்டதனால் சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்ததோடு அரசியல் தீவிரவாதியுமாகிறார்.காசிக் கங்கிரஸ் சென்று திரும்புகையில் விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா தேவியை சந்தித்து தனது ஞானகுருவாக ஏற்றுக்கொள்கிறார். 1905 மே - 1906 ஏப்ரல் வரை சென்னையில் புரட்சிகரமான “இந்தியா” வாரப்பத்திரிகை தோற்றம் பெறுவதோடு அப்பத்திரிகையில் பாரதி பொறுப்பாசிரியராகவும் திகழ்கிறார்.சுதந்திரப்போரில் பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய்இ காட்டுத் தீயாய் இசுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச்செய்தது.பாரதியார் இந்தியப் பத்திரிகையின் மூலம் மக்களிடையே விடுதலையுணர்வை துண்டும் வகையில் பல எழுச்சிதுட்டும் கட்டுரைகளை எழுதினார்.பாரதியின் எழுச்சிக்கு தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஸ் ஆட்சி இந்தியப் பத்திரிகைக்கு தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது.அது மட்டுமல்லாமல் விடுதலைப் போராட்டக்காலத்தில் தேசியவுணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக அனைவராலும் போற்றப்பட்டார். 1907 ஆண்டு காலப்பகுதியில் பழுத்த மிதவாதி வி.கிருஸ்னசாமி அய்யர் பாரதியின் தேசிய கீதங்களில் மோகித்துப்போகிறார். “சுதேச கீதங்கள்” என்ற தலைப்பில் மூன்று பாடல்கள் கொண்ட நாலுபக்கப் பிரசுரம் நிறைய வெளியிட்டு இலவசமாய் விநியோகிக்கிறார்.1908 சென்னை தீவிரவாதிகள் கோட்டை “சுயராஜ்யதினம்” சென்னையில் பாரதியாலும்துத்துக்குடியில் வ.உ.சி. சுப்பிரமணிய சிவாவினாலும்இசுதேசி பத்மநாபய்யங்கார் முதலியோராலும் கொண்டாடப்படுகிறது. 1908 சுதேச கீதங்கள் என்ற கவிதைத் தொகுதியை பாரதி வெளியிடுகிறார்.இது பாரதி வெளியீட்ட முதல்லாகவுள்ளது.1908 -1910 இந்தியா வாரப்பத்திரிகை புதுவை வந்து பிரேஞ்சிந்திய எல்லைக்குள்ளிருந்து பிரி;ட்டிஸ் அரசாங்கத்தின் மீது நெருப்பு மழை பொழிகிறது. பத்திரிகையின் செல்வாக்கு அதிகரிப்பது கண்டு அது பிரிட்டிஸ் இந்தியவாரப்பத்திரிகை நுழையாத படி பிரிட்டிஸ் சர்க்கார் தடுக்கின்றனர். இந்தியா வாரப்பத்திரிகைநின்று போகிறது.1909 ஜன்மயுமி என்ற பாரதியின் இரண்டாவது கவிதைத் தொகுதி வெளியீடப்படுகிறது.1910 இல் “விஜயா”இ“தினசரி”, “சூர்யோதயம்”இ“வாரப்பதிப்பு பால பாரதா”,“ஆங்கில வாரப்பதிப்பு கர்மயோகி” மாதப்பதிப்பு - யாவும் நின்று போகின்றன. 1910 ஏப்ரலில் பாரதி ஏற்பாடு செய்ய அரவிந்தர் புதுவை வருகிறார்.வேதநூல் ஆராய்ச்சி நடைபெறுகிறது.1910 நவம்பர் இல் கனவு என்ற ஸ்வசரிதை முதலிய பாடல் அடங்கிய மாதா மணிவாசகம் வெளியீடப்படுகிறது.அதற்குவ.வே.சு.அய்யர் வருகை தருகிறார்.1912 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாரதிக்கு உழைப்பு மிக்க வருடமாக அமைகிறது.கீதையை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தார். “கண்ணன் பாட்டு”,“குயில்’;,“பாஞ்சாலி சபதம்”,“புதிய ஆத்திசூடி” போன்ற புகழ்பெற்ற காவியங்கள் பாரதியாரால் எழுதப்பெறுகின்றன.இக்காலப்பகுதியிலேயே பாஞ்சாலி சபதம் முதல் பாகம் பிரசுரமாகின்றது. 1913-1914 காலப்பகுதியில் “சின்னச்சங்கரன் கதை” கையெழுத்துப்பிரதி மறைந்து போகிறது.சுப்பிரமணிய சிவத்தின் “ஞாபனபாநு” பத்திரிகைக்கு பாரதியார் செய்திகள் அளிக்கின்றார்.தென் ஆபிரிக்கா தேடலில் “மாதா மணிவாசகம்”Áல் பிரசுரமாகின்றது. இக்காலப்பகுதியில் முதல் மகாயுத்த ஆரம்பமானதால் புதுவையில் தேசபக்தர்களின் தொல்லைகள் அதிகரிக்கின்றது.1917 இல் “கண்ணன் பாட்டு” முதல் பதிப்பு பரலி சு.நெல்லையப்பர் அவர்களால் வெளியிடப்படுகிறது.1918 இல் புதுவை வாசம் சலித்துப் போய் புதுவையை விட்டு நவம்பர் 20 ந் தேதி பாரதி வெளியேறுகின்றார்.கடÂர் அருகே கைது செய்யப்பட்டு ரிமாண்டில் 34 நாள் முடிவில் வழக்கில்லையென விடுதலையாகுகின்றார்.நேரே மனைவியின் ஊர் கடயத்துக்கு செல்கிறார். 1918 தொடக்கம் 1920 காலப்பகுதியில் கடயம் வாசம் செய்கிறார். திருவானந்தபுரம்இஎட்டயபுரம்இகாரைக்குடிஇகானாடுகாத்தான் போன்ற ஊர்களுக்கு சென்று வருகிறார். 1919 இல் சென்னைக்கு விஜயம் செய்து ராஜாஜி வீட்டில் காந்திஜியை சந்திக்கின்றார்.1920 டிசம்பர் இல் சென்னையில் “சுதேசமித்திரனில்” மீண்டும் உதவி ஆசிரியர் வேலை செய்கிறார்.“சுதேசமித்திரனில்” ஏ.ரங்கசாமி அய்யங்கார் பொறுப்பாசிரியராக பணிபுரிகிறார்.இந்தக் காலத்தில் பாரதி கட்டுரைகள் நிறைய எழுதுகிறார். 1921 யுலை-ஆகஸ்ட் இல் திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்றபோது எதிர்பாராதவிதமாக அந்த கோயில் யானை பாரதியை Àக்கியெறிந்ததால் பலத்த காயமுற்று நோய்வாய்ப்பட்டதோடு அதிர்ச்சியால் நோயுறுகிறார்.1921 செப்டெம்பர் இல் அதிர்ச்சியால் ஏற்பட்ட நோயிலிருந்து குணமடைந்தாலும் வயிற்றுக்கடுப்பு நோய் பாரதியை பீடிக்கிறது.1921 செப்டம்பர் இல் நோய்க் கடுமையினால் மருந்துண்ண மறுப்பதோடு 1921 செப்டம்பர் 12 நள்ளிரவு தாண்டி காலை சுமாh 1.30 மணி;யளவில் நோயின் கடுமையினால் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார்.மறைவாகும் போது பாரதிக்கு வயது 39 நிறைவு பெறவில்லை. பாரதியார் பிறந்ததில் இருந்து மரணவாயிலை அடைந்தது வரையிலான காலப்பகுதிக்குள் நிகழ்ந்ததான ஒவ்வொரு சம்பவங்களையும் பருந்துப் பார்வை போல வெகு சுருக்கமாக பார்க்க முடிந்தது. மக்கள் சமுதாயத்தைப் பற்றி மகாகவி பாரதி சிந்தனைகள் பல செய்து அவர் தம் சீரிய கருத்துக்களை உரைநடை வடிவில் அரிய பல கட்டுரைச் செல்வங்களாக வழங்கியுள்ளார்.பாரதியின் உரைநடை மிக வலிமையானது மக்களை சிந்திக்க Àண்டவல்லது.மக்கள் நலம் பெறஇநாடு நலம் பெற அவர் சி;ந்தித்த சிந்தனைகளும் அவர் வழங்கிய அறிவுரைகளும் என்றும் போற்றிப் பார்க்கவல்லது.சொல்லிலே உணர்வும் நடையிலே எளிமையும் சிந்தனையிலே தெளிவும் கருத்திலே செறிவும் தரக்கூடிய அற்புதமான உரைநடைச் செல்வமான பாரதியின் கட்டுரைகளை என்றும் படித்தாலும் சலிக்கவே சலிக்காது. பாரதியாரின் கட்டுரைகளை பொதுவாக மூன்று பிரிவாக வகைப்படுத்தலாம்.அவற்றுள் தத்துவம்இகலைகள்இசமூகம் சார்ந்தததாக அமைவதுடன், அக்கட்டுரைகள் யாவும் நாம் படித்து பயன்பெறுவதற்காகவே எழுதப்பட்டுள்ளன என்று பாரதியாரே கூறியுள்ளார் என்பதை மனங்கொள்ளல் வேண்டும். பாரதியாரின் தத்துவம் சார்ந்த கட்டுரைகளுள் யாரைத் தொழுவதுஇசக்தி தர்மம்இமஹாலக்மி,உண்மை,புராணங்கள்சிதம்பரம்அமிர்தம் தேடுதல்,மூடபக்தி,நம்பிக்கை,தைரியம்,வாசக ஞானம் ஜன வகுப்பு,ஏசு கிறிஸ்துவின் வார்த்தை, இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை,சிதம்பரம்,உண்மை,அடங்கி நட,உயிரின் ஒலி,புனர்ஜன்மம்,உலக வாழ்க்கையின் பயன்,உழைப்பு, கொள்கைக்கும் செய்கைக்கும் உள்ள Àரம் போன்றவை முக்கியமான கட்டுரைகளாகவுள்ளன. கலைகள் சார்ந்த கட்டுரைகளுள் தமிழருக்கு தியானங்களும் மந்திரங்களும், சிடுக்குருவி இசந்திரத்தீவு,நெல்லிக்காய்க்கதை,இந்துக்களின்சிறப்பு,ராகவசாஸ்திரியின் கதை,ரத்தனமாலை,தமிழரின்நிலை,Áலாசிரியர் பாடு பஞ்சாங்கம்,அபிநயம்,மாதர்,பெண்,முகமதிய ஸ்திரிகளின் நிலைமை,தமிழ்நாட்டின் விழிப்பு,பதிவிரதை,பெண் விடுதலைக்கு தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது?,தமிழ்நாட்டு நாகரிகம்,பெண் விடுதலை,தென் ஆபிரிக்காவின் பெண் விடுதலை,திருவிளக்கு,தமிழ்நாட்டு மாதருக்கு போன்றவை பயனுறுதியுடைய முதன்மையான கட்டுரைகளாக விளங்குகின்றன. சமூகம் சார்ந்த கட்டுரைகளுள் குணமது கைவிடேல்,தேசீயக்கல்வி,ஆசாரத் திருத்த மகாசபை, நாற்குலம், பறையர், பஞ்சமர், ஜாதிக் குழப்பம்,ஜாதிபேத விநோதங்கள்,பிராமணன்யார்? மதிப்பு,வருங்காலம்,தொழிலாளர்,உடம்பு,பழையஉலகம்,விசாரணை,அனத்தசக்தி, ஓநாயும் வீட்டுநாயும்,ஸ்வர்ண குமாரி வீரத்தாய்மார்கள் போன்ற ஒவ்வொரு கட்டுரைகளும் முக்கியமானதும் முதன்மையானதுமான கட்டுரைகளாக அமைகின்றன. மீசைக் கவிஞன் என்றும் முண்டாசு கவிஞன் என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார் தமிழ் மொழியின் மீது பற்றுடையவராக திகழ்ந்தார். பாரதி தமிழ்க்கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.தமிழ், தமிழர் நலன் ,இந்திய விடுதலை, பெண் விடுதலை,சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் போன்றவை பற்றி கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.தம் எழுத்துக்கள் மூலமாக மக்கள் மனதில் விடுதலையுணர்வை ஊட்டியவராவார்.இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவராவார். இயன்ற வரை தமிழே பேசுவேன்இதமிழே எழுதுவேன்இசிந்தனை செய்வது தமிழிலே செய்வேன்.எப்போதும் பராசக்தி… முழு உலகின் முதற்பொருள் - அதனையே தியானஞ் செய்து கொண்டிருக்க முயல்வேன்.அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன். பொழுது வீணே கழிய இடங்கொடேன்.லௌகீக காரியங்களை ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன். உடலை நல்ல காற்றாலும் இயன்றவரை சலிப்பதாலும் ய்மையுறச் செய்வேன். மறைத்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன்.மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றி பொய் உண்டாக இடங்கொடேன். சர்வ சக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகச்செய்து எனது தொழில்கள் எல்லாம் தேவர்களின் தொழில் போல் இயலுமாறு சூழ்வேன். பொய்மை,ரட்டுறமொழிதல் ,நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருளீட்டிய பிழைத்தல் நாய் பொழைப்பென்று கொள்வேன். இடையறாத தொழில் புரிந்து இவ்வுலக பெருமைகள் பெற முயல்வேன்.இல்லாவிடின் விதிவசமென்று மகிழ்ச்சியோடிருப்பேன். எப்போதும் மலர்ந்தமுகம் இனிய சொல் தெளிந்த சித்தம் இவற்றோடிருப்பேன். இவையெல்லாம் பாரதியாரின் உறுதி மொழிகளாக அமைகின்றன.பாரதியாரின் உறுதி மொழிகளை எம் வாழ்வில் நாமும் பின்பற்றி ஒழுகுவோமானால் நாம் அனைவரும் மகான்களாகஇமேதைகளாகஇமகாத்மாக்களாக திகழலாம்.பாரதியாரின் உறுதி மொழிகள் யாவும் எமக்காக கூறப்பட்டவையே என்பதை நாம் மறந்துவிடலாகாது. இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப்போராகவும் பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி படைத்த படைப்புதான் பாரதியாரின் பாஞ்சாலி சபதம்.அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகின்றது.பாரதி அவர்கள் பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவராவார்.பாட்டுக்கொரு புலவனான பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெரிந்தவராவார்.இலக்கணச் சட்டங்களை தகர்த்தெரிந்த பாரதி புதுக்கவிதை எனப் புகழப்படும் எளியவரும் கேட்டுணரும் வசனகவிதையைத் தந்தவராவார்.கேலிச்சித்திரம் எனப்படும் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்.பெண்களின் கல்வியறிவுக்காக சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்ட பாரதி சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதி படைக்கவும் பெண்கள் தகுதியுடையவர்கள் என்று கண்டார். எட்டயபுரத்திலும் சென்னையிலுள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொது மக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது.இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதியின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டு பாரதியாருடைய திருவுருவச்சிலையும் வைக்கப்பட்டுள்ளது.பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் இவருடைய திருவுருவச்சிலையும் இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குயில் பாட்டுஇகண்ணன் பாட்டுஇசுயசரிதைஇதேசிய கீதங்கள்,பாரதி அறுபத்தாறு ,ஞானப்பாடல்கள்,தோத்திரப் பாடல்கள்,விடுதலைப் பாடல்கள்,விநாயகர் நான்மணிமாலை,பாரதியார் பகவத் கீதை(பேருரை), பதஞ்சலியோக சூத்திரம் ,நவதந்திரக் கதைகள் ,உத்தம வாழ்க்கை,சுதந்திரச் சங்கு,ஹிந்து தர்மம்(காந்தி உபதேசங்கள்),சின்னஞ்சிறு கிளியே,ஞான ரதம் ,பகவத் கீதை, சந்திரிகையின் கதை பாஞ்சாலி சபதம்இ புதிய ஆத்திசூடி இபொன் வால் நரி இஆறில் ஒரு பங்கு என்பன பாரதியாரின் படைப்புகளாகவுள்ளன. கவிதை எழுதுபவன் கவியன்று.கவிதையே வாழ்க்கையாக உடையோன் வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவிபாரதி பாரதியார் இறந்த தினம் - 1921 செப்டம்பர் 12 பாரதியார் பிறந்த தினம் - 1882 டிசம்பர் 11 பாக்கியராஜா மோகனதாஸ்(நுண்கலைமாணி) துறைநீலாவணை |
[Untitled] >