[Untitled]‎ > ‎

14.01.2014- இன்று தைத் திருநாள் சுப நேரத்தில் பொங்கலிடல் சிறப்பு..

posted Jan 13, 2014, 5:39 PM by Web Admin
இந்து மக்கள் அனைவரும் இன்று மலர்ந் திருக்கின்ற தைத் திருநாள் பொங்கல் பண்டிகையை மிகச் சிறப்பாகவும் உற்சாகத்துடன் புத்தாடை அணிந்து பட்டாசு வெடி ஒலிக்க மிகுந்த சந்தோஷ த்துடன் கொண்டாடுகின்றனர். பொங்கல் பண்டிகையானது சூரியன் தெற்கிலிருந்து வடக்காகப் பூமத்திய ரேகையை கடக்கும் போது தனு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம்மாறுகின்றது. இந்த இடப்பெயர்ச்சியை மகர சங்கராந்தி என்றும் உத்தராயணம் என்றும் கூறுவர். அதாவது சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் கால தொடக்கம் திருநாளே பொங்கல் பண்டிகை, இக்காலம் உழவர்களுக்குச் சாதகமான காலநிலையை ஏற்படுத்துகின்றது. இது விவசாய அறுவடைக்கு உகந்த காலம் ஆகும். தனுர் என்னும் மார்கழி மாதம் முடிவடைந்து தை மாதம் முதலாந்தினம் பொங்கல் பண்டிகையாகும், இந்த தைமாதமானது இன்று மாலை 4 மணிக்குபின் புதன் பிறக்கின்றது. இது தெளிவாக பஞ்சாங்கங்களில் மகர சங்கிரமண புண்ணிய காலம் என எழுதப்பட்டுள்ளது. இக்காலம் அதாவது 3 மணி முதல் 4.30 மணிவரையான காலம் ராகு காலம் ஆகும். அத்துடன் சூரியன் மேற்கு நோக்கி சாய்ந்த பின் சூரியனுக்கு பொங்கலிடல் அவ்வளவு நல்லதல்ல. எனவே நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரையான சுபநேரத்தில் பொங்கலிடல் சிறப்பானதாக சோதிடர்கள் கூறுகின்றனர். இக்காலம் மிக சிறப்புடையது எனவும் இக்காலத்தில் பால் பொங்கல் பொங்குவது நம் வாழ்விலும் பால் வார்த்த மாதிரி செல்வமும் செளபாக்கியமும் நிலவும் எனவும் கூறுகின்றனர் சோதிட ஆய்வாளர்கள்.


Comments