[Untitled]‎ > ‎

17.05.15- போாில் உயிர் நீத்த உறவுகளின் நினை வேந்தல்..

posted May 16, 2015, 7:13 PM by Unknown user
போாில் உயிர் நீத்த உறவுகளின் நினை வேந்தல் தினத்தை ஒட்டி போரினால் இடம் பெயர்ந்த உறவுகளுக்காய் வடித்த வரிகள்..

உறவுகளே.....!

உறவுகளே வாரீர்...!
ஒளிவிடும் தேசம் அழைக்கிறது
பிறந்த தேசம் விட்டு பிரியாமல் 
பிரிந்த உறவுகளை தேடி
மீண்டும் வருவீர் மீண்டு வருவீர்

இருண்டதேசம் இனமதபேதம்
இனி இங்கு இல்லை
தாங்கமாட்டாத் துயர் தாண்டியது
பல்கோடி மயில் தூரம்
தாயகம் தாரை வார்த்த உறவுகளே வாரீர்

செந்தமிழ் புலவன் செப்பிடும் ஓசையும்
அலைகடல் மலைகுயிலின் இனிய
கீதமும் கேளாமல் தேம்பிய
கவலை தனை நீக்கிட மீண்டும்
கேட்டிடுவோம் மீண்டும் வருவீர்


அன்பாய் பேசிய நண்பர்களை விட்டு
அறிவொளி புகட்டிய ஆசான்களை விட்டு
அறிவுரை கூறிய அயலவர்களை விட்டு
அயலகம் சென்ற உறவுகளே
மீண்டும் வருவீர் மீண்டு வருவீர்

காலம் கடந்தது
கனவுகள் கண்ணீராய்
வடிந்தோடி வறறிப் போக 
கண்ணிரை 
கடன் வாங்கிய கணகள்

உப்புக் கண்ணீரை
சீனிக் கண்ணீராய் மாற்றிட
மீண்டும் வருவீர் மீண்டு வருவீர்
கனவுகள் மெய்ப்படவே....!

நன்றி:சுபராஜ்,காரைதீவு
Comments