[Untitled]‎ > ‎

17.11.2012- எங்களுக்காக நீங்கள் கேளுங்கள்….

posted Nov 17, 2012, 3:06 AM by Web Team
எங்களுக்காக நீங்கள் கேளுங்கள்….

 

இடம் பெயர்ந்த பறவைகளே கொஞ்சம் நில்லுங்கள்

இந்த விபுல கலைஞன் பாடும் கவிதை  கேட்டுச் செல்லுங்கள்…..

 

நம் ஊர் மரங்கள்  எல்லாம் உம் காற்றை தேடுது

உம் பாதச் சுவடுகளை எம் முற்றம்  நித்தம் சுமக்குது…….

 

நீ கற்றறிந்த பள்ளிக்கூடம் உனைப் பகிர்ந்து கொள்ளுது

உன் உற்றமும சுற்றமும் உனைப் பற்றியே பேசுது…..

 

நீ காற்று வாங்கிய கடற்கரையும்
கை கூப்பி தொழுத ஆலயங்களும்  புது நிமிர்வோடு…..

 

பழகிய நண்பர்களும் பாசமான உன் உறவுகளும் - நித்தமும்

கனவில் உன் வரவோடு…..

 

தேரோடும் வீதிகளும் பெயர் பெற்ற புதுச் சிறு பாதைகளும்

விபுலபுரியிலே புது மிளிர்வுடன்……

 

இத்தனையும் இங்கு சிறப்புடன் பாருங்கள்….

உம் மண் சிறக்க மேலும் இறைவனிடம் வரம் கேளுங்கள்…….

 

ஒரு விண்ணப்பம் கலைஞர்களுக்கு முகவரியும் வேண்டும்; என்பதை

அந்த கடவுளுக்கு நீங்களாவது எடுத்துச் சொல்லுங்கள்…..

 

கடவுள்  குடிசைகளை மறந்துவிட்டான் என்பதால்

நீங்கள் கேளுங்கள்……..

 

 

காரைதீவு- சி..கதன்

Comments