அண்மையில் நிந்தவூரிருந்து உம்ராஹ் யாத்திரைக்காக சென்ற சகோதர் ஒருவர் தனது உம்ராஹ் யாத்திரையை முடித்துவிட்டு சவூதிஅரேபியா ஜித்தா விமான நிலையத்திலிருந்து தனது சொந்த நாடான இலங்கைக்கு திரும்பும் வேளையில் நடந்த பரிதாப சம்பவம். நிந்தவூர் சகோதரர் அவர் தனது குடும்பத்தினரோடு உம்ராஹ்வுக்கு சென்று உம்ராஹ் கடமையினை முடித்துவிட்டிருந்தபோது அங்கு தனது சொந்த ஊர்காரர் ஒருவரை எதார்த்தமாக சந்திக்க நேரிட்டதையடுத்து இருவரும் ஊரவர்கள் என்றவகையில் சந்தோசமாக பேசிக்கொண்டு நட்புறவினை வளர்த்துக்கொண்டனர் பின்னர் அந்த ஊருக்காரர் அந்த சகோதரரிடம் கூறினார் நீங்கள் நாடு திரும்பும் போது சொல்லுங்கள் வீட்டில் கொடுப்பதற்கு ஏதாவது பொருளொன்று தருகின்றேன் கொடுத்துவிடுங்கள்லென்றார். சகோதரரும் ஆமென்று கூறி கொண்டுவாருங்கள்லென்று கூறியபோது அந்த ஊருக்காரர் ஒரு “சொக்லட் பக்கெட்” கொண்டுவந்து கொடுத்து இதை வீட்டில் கொடுங்கலென்று அந்த சகோதரரும் அதை வாங்கிக்கொண்டு நாடு திரும்புவதற்காக சவூதி அரேபியா ஜித்தா விமான நிலையத்துக்கு வந்தார், அங்கு பயணிகளின் பொருட்களை சுங்க அதிகாரிகளினால் “ஸ்கேன்” இயந்திரத்தினால் பரிசோதிக்கப்பட்டபோது அந்த சகோதரரின் பொருட்கள் அடங்கிய பொட்டிக்குள் எதோ சொக்லட் பக்கெட்” ஒன்றினுள் சந்தேகிக்கத்தக்க வகையில் பொருளென்று இருப்பதாக ஸ்கேன் இயந்திரத்தில் பதிவாகிள்ளது. பின்னர் உடனே சுங்க அதிகாரிகளால் அந்த சந்தேகிக்கத்தக்க பொதியை வெளியில் எடுக்கப்பட்டு பரிசோதனைகுட்படுத்திய போது அந்த பொதியினுள் ஒரு சொக்லட் பக்கெட்டினுள் 24 தங்க வளையல்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த பொதிக்கு சொந்தக்காரரான உம்ராஹ் யாத்திரைக்கு வந்திருந்த சகோதரரை பொலிசார் உடனே அழைத்துச்சென்று விசாரனைகுட்படுத்திய போதுதான் அந்த சகோதரருக்கும் தெரியவந்தது அதனுள் இருப்பது சொக்லட்” அல்ல 24 தங்க வளையல்கலென்று அதிர்ச்சியடைந்த சகோதரரை தொடர்ந்து விசாரனைகுட்படித்திய போது எனது ஊர்காரர் ஒருவர்தான் என்னிடம் சொக்லட் பக்கெட் எனக்கூறி அதனை வீட்டில் கொடுத்துவிடும்படி தந்தார் அதனை நானும் பாராமல் சொக்லட் பக்கெட்” என நினைத்து கொண்டுவந்தேன் இந்த தங்க வளையலுக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று போலிசாரிடம் கெஞ்சினார் அந்த சகோதரர். பின்னர் அந்த தங்க வளையலுக்கான “ரசிதை”ஐ (invoice) பரிசோத்தித்தபோது அதுவும் உம்றாஹ் யாத்திரைக்கு வந்திருந்த சகோதரரின் பெயரிலேயே எடுக்கப்பட்டிரிந்ததையிட்டு போலிசாரின் சந்தேங்கள் மேலும் அதிகரித்து பின்னர் அந்த சகோதரை தீவிர விசாரனைக்கு உட்படுத்தி விசாரித்தபோது இதனை சவூதி அரேப்பியாவில் பணிபுரியும் அந்த ஊருக்காரரே இந்த சகோதரை இப்படி ஏமாற்றி அந்த தங்க வளையல்ளை அனுப்பி வைத்தமை தெரியவந்தது பின்னர் அந்த தங்க வளையலுக்கு சொந்தமான நபரின் தொலைபேசிக்கு தொடர்புகொண்டபோது அவரின் தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்ததையடுத்து பொலிசார் இந்த சகோதரரை மேலும் விசாரனைக்கு உட்படுத்திய போது இதன் உண்மையை தெரிந்துகொண்ட போலிசார் விமானம் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்கள் மாத்திரமே இருந்தவேளையில் அந்த சகோதரரை விடுவித்திருந்தனர். உண்மையில் இது ஒரு நம்பிக்கை துரோகமும் ஒரு ஈனச் செயலும்கூட வெளிநாடுகளுக்கு சென்று அதிகளவான பணத்தினை குறுகிய காலத்துக்குள் சம்பாதித்து பணக்காரர்களாகவேண்டுமென்ர நோக்கமே இந்த திருட்டும் தங்க வியாபாரிகளின் நோக்கம் இவர்களைப்போன்றவர்கள் எந்த வகையிலாவது பணத்தை சம்பாதிப்பதற்கு தயங்கமாட்டார்கள். புனித உம்றாஹ் யாத்திரைக்கு செல்லும் சகோதரர்களை ஏமாற்றி அவர்கள்மூலமாகவே இதுபோன்ற கள்ளக்கடத்தல்களில் ஈடுபடுவதற்கு நமது நாட்டவர்களே அதிலும் நமது ஊருக்காரர்களே நிறைய பேர் சவூதி அரேபியா ஜித்தா விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆகையால் உம்றாஹ் யாத்திரைக்கு செல்லும் உறவினர்கள் இதுபோன்ற கள்ளக்கடத்தல் வியாபாரிகளிடம் மாட்டிக்கொள்ளாமல் உங்கள் உம்ராஹ் கடமைகளை ஒழுங்கான முறையில் செய்துகொண்டு நாடுதிரும்புங்கள். முஹம்மட் ஜெலீல் நிந்தவூர். |
[Untitled] >