[Untitled]‎ > ‎

18.11.14- அரச மருத்துவமனைகளில் கேள்விஞான சிகிச்சைமுறை!

posted Nov 18, 2014, 2:22 AM by Unknown user

இலங்கையில் அரச மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறையையடுத்து நமது பிரதேசங்களில் உள்ள அரச  மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை சற்று அவதானித்தபோது வைத்தியர்கள் நோயாளிகளிடம் கேள்விஞானத்திலேயே சிகிச்சை வழங்கப்படும் முறையை கையாழுகின்றார்கள்.

அதாவது ஒரு நோயாளியை வைத்தியை பரிசோதனைக்குட்படுத்தும் போது வைத்தியர்கள் நோயாளிகளிடம் சாதாரணமாக கேட்பது என்வென்றால். உடலில் என்னவகையான அறிகுறிகள், மாற்றங்கள், வாந்தி, பேதி போன்ற நிலை ஏற்படுகின்றதா என்றெல்லாம் கேட்டு தெரிந்துகொண்டு சிகிச்சையளிப்பது வழக்கம் இதுதான் அதற்குரிய சரியான முறையும்கூட என்று நினைக்கின்றேம்,

ஆனால் இது தவிர டாக்டர்கள் நோயாளியிடம் கேட்பது என்வென்றால் இதற்கு முதல் எப்போது நோயேப்பட்டது, கடைசியாக எந்த “டாக்டரிடம்” பரிசோதிதீர்கள், அந்த டாக்டர் என்னவகையான நோயென்று கூறினார், அவர் என்னவகையான மருந்து மாத்திரைகள் கொடுத்தார் என்றெல்லாம் கேட்டு சிகிச்சையளிப்பதென்று ஒரு வகையில் சரியான முறையாக இருந்தாற்கூட  இன்னொரு விதத்தில் இது ஒழுங்கு முறையற்ற சிகிச்சை முறையாகவே பார்க்கப்படுகின்றது.  

காரணம் ஒரு சாதாரண மனிதன் தொடர்ந்து ஒரு வைத்தியசாலைக்கே  நோயாளியாக செல்லும்போது அந்த நோயாளியிடம் டாக்டர்கள் அவரின் நோயின் அறிகுறிகளை கேட்டு தெரிந்து கொண்டு சிகிச்சையளிப்பதென்பது முறையான சிகிச்சையாகும். ஆனால் ஏற்கனவே சுகவீனமுற்று எடுக்கப்பட்ட மருந்து மாத்திரைகளின் விவரங்களை நோயாளியிடம் கேட்டு தெரிந்துகொண்டு  சிகிச்சையளிப்பதென்பது முற்றிலும் மாறுபட்ட சிகிச்சை முறையாகும்

அதாவது ஒரு நோயாளியிடம் டாக்டர்கள் கேட்பது. ஏற்கனவே எப்போது நோயேற்பட்டது, என்னவகையான மாத்திரைகள் சாப்பிட்டீர்கள் என்றெல்லாம் கேட்பது ஒரு சாதாரணமான நோயாளியால் ஞாபகதில் வெய்த்திருக்க முடியாத விடையமாகும். இதனால் நோயாளிகளுக்கு ஒழுங்கான முறைப்படி சிகிச்சையளிப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றது.

இதில் நமது பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இரண்டு வகையான சிச்கிசைமுறை கையாளப்படுகின்றது, ஒன்று வாராந்த மருத்துவச்சிகிச்சை குறிப்பிட்ட நாட்களில் "கிளினிக்" செல்லும் நோயாளிகளுக்கு பதிவுக் கோப்புகள் (Fஇலெ)  வழங்கபட்டு அதில் அவர்களின் நோய், சிகிச்சை சகிதம் அவர்களுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் சமந்தமான விவரங்கள் பதிவுசெய்யப்பட்டு ஒழுங்கான முறையில் சிகிச்சையளிக்கபட்டுவருகின்றது.     

இரண்டாவது சில நோயாளிகள் வாராந்த மருத்துவச்சிகிச்சை “கிளினிக்” அல்லாமல் உடல் நிலை சுகவீனமற்ற போது மாத்திரமே சிகிச்சைக்காக செல்வோரும் இருக்கின்றார்கள் இவர்களிடம்மும் நோய்யை கேட்டு தெரிந்து கொண்டு சிகிச்சை அளிப்பததென்பது சரியானதொரு சிகிச்சை முறையாக இருந்தாலும். இது தவிர ஏற்கனவே சுகவீனமற்று எடுக்கப்பட்ட மருந்து மாத்திரைகளின் விவரங்களை நோயாலிடம் கேட்டு தெரிந்து கொண்டு சிகிசையளிப்பதென்பது முற்றிலும் மாறுபட்ட சிகிச்சை முறையாகவே கருதப்படுகின்றது.

இதில் மேலே குறிப்புட்டுள்ள ஒழுங்கு முறையற்ற சிகிச்சை வளங்கப்படுவதென்று கூறிய விடையம் என்னவென்றால் எந்தவெரு நோயாளியும் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு செல்லும் போது அந்த நோயாளிக்கு முதலில் ஒரு தனிப்பட்ட பதிவு கோப்பு (File) ஆரம்பிக்கப்பட்டு அதில் அவரில் முழு விவரங்கள் சகிதம் அவரின் நோய், மருந்து மாத்திரை சமந்தமான விடையங்கள் அனைத்தும் அட்டவணைப்படுத்தி பதிவுசெய்து வெய்த்துகொள்வதோடு அந்த பதிவு கோப்பு (File) தொடர்பான ஒரு தொடர் இலக்கத்தினையும் வழங்கினால் அந்த நோயாளி மீண்டும் நோயாளியாக இவ் வைத்தியசாலைக்கு செல்லும் போது ஏற்கனவே அந்த நோயாளியை பரிசோதித்த வைத்தியர் இல்லாவிடின் வேறு ஒரு வைத்தியர் பரிசோதிக்கும் சூழ்நிலை ஏற்படும்போது அந்த டாக்டர் நோயாளியிடம் ஏற்கனவே நோயுற்று எடுக்கப்பட்ட மருந்து மாத்திரைகளில் விவரங்களை நோயாளியிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அந்த நோயாளிக்குரிய தொடர் இலக்கங்களின் மூலம் அவரின்  பதிவு கோப்பை (File) தேர்ந்தெடுத்து அதில் அவரின் நோய் சமந்தமான விவரங்கள் பதியப்பட்டிருப்பின் அதனை பரிசித்த பிற்பாடே நோயாளிக்கு சிகிச்சை வளங்கப்படுமாயின் அதுவே ஒழுங்கு முறையான சிகிச்சை முறை என்பதை கருதிக்கொள்ளலாம். 


ஆக்கம்:முஹம்மட் ஜெலீல் 
         நிந்தவூர்.
Comments