[Untitled]‎ > ‎

19.07.15- சுவாமி விபுலாநந்தர் அவர்களின் 68 வது வருடாந்த நினைவு தினம்..

posted Jul 18, 2015, 6:40 PM by Unknown user   [ updated Jul 18, 2015, 9:48 PM ]
உலகத்தமிழறிஞர் சுவாமி விபுலாநந்தர் அவர்களின் 68 வது வருடாந்த நினைவு தினம்
1892-03-27 – 1947-07-19


மட்டக்களப்பு காரைதீவில் 1927 மார்ச் 27ந்திகதியன்று பிறந்து தமிழ் உலகத்தின் தனிப்பெரும் முத்தமிழ் அறிஞராக விளங்கியவர் சுவாமி விபுலாநந்த அடிகள். 

விபுலாநந்தர் பிறந்திலரேன்: பாரதியார் யார்? என உலகம் அறிந்திராது. பாரதியாரின் சிறப்பு மிக்க பாடல்கள் வெளிகொணரப்பட்டிருக்காது. 

விபுலாநந்தர் பிறந்திலரேன்: இலங்கை பல்கலைக்கழகத்தில் தழிழ்மொழித்துறை ஆரம்பிப்பதற்கு பல ஆண்டுகள் கடந்திருக்கும்.

விபுலாநந்தர் பிறந்திலரேன்: தமிழர்களின் பல்லாயிரம்காலத்து யாழ் மறைந்துபோய் தமிழிசை குன்றி இல்லாமல் போயிருக்கும்.

விபுலாநந்தர் பிறந்திலரேன்: தமிழ் மக்களிடையே சமூக மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்காது.

விபுலாநந்தர் பிறந்திலரேன்: தமிழ்மக்கிடையே காணப்பட்ட சாதிக் கொடுமை விஸ்வரூபம் எடுத்து பல கசப்பான சம்பங்கள் நடந்திருக்கும்.

விபுலாநந்தர் பிறந்திலரேன்: கல்லடியிலுள்ள சிவாநந்தா தேசியக் கல்லூரி நிறுவப்பட்டிருக்கவே மாட்டாது.

விபுலாநந்தர் பிறந்திலரேன்: கிழக்கிலங்கை மட்டுமன்றி யாழப்பாணம் மலைநாட்டு தமிழர்களின் கல்வி இவ்வாறு சிறப்புற்றிருக்க மாட்டாது?

இவை யாவற்றிற்கும் காரணகர்த்தாவான மிகச்சிறந்த தமிழ் அறிஞர்  சுவாமி விபுலாநந்தர் அவர்களின் நினைவாக கடந்த 13 வருடங்களாக கனடா ரொரன்ரோவில் இயங்கிவரும் சுவாமி விபுலாநந்தர் கலைமன்றம் அன்னாரின் கல்வி, சமூக,மொழி பற்றிய செயற்பாடுகளை இங்குள்ள தமிழ் மக்களுக்கு நினைவு படுத்தி வருகின்றது. அதேவேளை தமிழர்களின் கலை பண்பாட்டு இலக்கிய விழுமியங்களுக்கு ஏற்ப வருடந்தோறும் போட்டி நிகழ்ச்சிகளையும் நினைவு விழாவினையும் விபுலாநந்தர் நினைவாக நடத்தி வருகின்றது.

 தமிழுலகம் போற்றி வணங்கவேண்டிய மிகச் சிறந்த தமிழ் மகன் விபுலாநந்த அடிகள் நம்மை மிக்க துயரில் விட்டுச் சென்று இன்றுடன் 68 வருடங்கள் ஆகின்றன. தமிழ் மக்களுக்கும் மொழிக்கும் அவர் செய்த மகத்தான சேவையை நினைவு கூர்ந்து வருடா வருடமாவது தவறாமல் அவருக்கு நன்றி தெரிவித்து அவர் புகழ்பாடுவோமாக.
  
ஆக்கம்:அஜந்தா ஞானமுத்து,கனடா
Comments