[Untitled]‎ > ‎

20.04.17- கவிஞர் சண்முகம் சிவலிங்கம் நினைவு தின சிறப்புக் கட்டுரை..

posted Apr 19, 2017, 6:38 PM by Habithas Nadaraja
எப்படி வாழ்வை வாழ்ந்து முடித்தோம் சண்முகம் சிவலிங்கம் நினைவு தினத்தை முன்னிட்டு - (1936-2012.04.20)

கிழக்கிலங்கையின் கல்முனையின் அருகேயுள்ள பஞ்சபாண்டவர்கள்இதிரௌபதை குடிகொண்டுள்ள பாண்டிருப்பு எனும் பழம்பதியில் 1936.12.19 அன்று சண்முகம் சின்னப்பிள்ளை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார்.இவர் தமது பெற்றோரால் மிக அன்பாகவும் செல்லமாகவும் தாலாட்டி சீராட்டி வளர்க்கப்பட்டதுடன் சிவலிங்கம் மாஸ்ரர்இஸ்டீபன் மாஸ்ரர்இசசி என்றெல்லாம் அவ் ஊர் மக்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார்.இளம் வயதிலிருந்து கலை உணர்வோடு வாழ்ந்து வந்ததுடன் தன் திறமையினால் கலை உணர்வை பல எழுத்து வடிவங்களில் வளர்த்து நிறைவாக்கினார்.

“எப்படி வாழ்வை முதலில் கண்டோம் என்பதை விட எப்படி அவ்வாழ்வை வாழ்ந்து முடித்தோம்” என்பது அவரது படைப்புகளின் மையக்கருத்தாக இருந்தது.எப்படி அவ்வாழ்வை வாழ்ந்து முடித்தார் என்பதையும்அவரது படைப்புகளின் ஸ்திரத் தன்மையையும் அவரது படைப்புகள் ஊடாகவும் நூல்களுக்கூடாகவும் ஆராய முற்படுகிறது.

1941 ஆம் ஆண்டு கத்தோலிக்க மதகுருமாரால் ஸ்தாபிக்கப்பட்ட சென்.மேரிஸ் பாடசாலையில்இவர் தனது ஆரம்பக் கல்வியை கற்ற போது அங்;கு ஆசிரியராக கடமையாற்றி அருட்சகோதரர் யு.வு.அல்போன்ஸ் அவர்களின் பருந்துப் பார்வைஇபடு சுட்டியும் படிப்பில் மட்டுமின்றி கலை நிகழ்ச்சிகளிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் அதி முதன்மையான ஆற்றலுடன் விளங்கிய சண்முகம் சிவலிங்கம் மீது விழுந்தது.இவரின் கற்றல் திறமையையும் ஏனைய திறமையும் கண்ட அருட்சகோதரர்இ சசி அவர்களை(ச.சிவலிங்கம்) ஒரு துறவியாக்க வேண்டும் எனக் கருதி அவரின் பெற்றோரிடத்தே கேட்ட போது சசியின் தாய் தந்தையர் கொஞ்சமும் விரும்பாது இறுதியாக கிறிஸ்தவ மதத்தை தழுவுவதற்கு மட்டும் சம்மதத்தை அவரது பத்தாவது வயதில் தெரிவித்தனர்.

கற்றல் திறமையையும் ஏனைய திறமையும் கண்ணுற்ற தலைமையாசிரியர் இவரை கல்முனை பற்றிமா கல்Âரியில் கற்க அனுமதி பெற்றுக்கொடுத்ததோடு அவரும் தலைமையாசிரியரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக சிறப்பாக கல்வி கற்று சாதாரண தரம்இஉயர்தரம் என இரண்டு பரீட்சைகளிலும் பெறுமதியான பெறுபேறுகளை பெற்றார்.அக்கால கட்டத்தில் கத்தோலிக்க மதத்தின் மீது இருந்த ஈடுபாட்டின் காரணமாக தனது பெயரை ஸ்டீபன் எனவும் நாமம் சுட்டிக் கொண்டார்.

அக்கால நடைமுறையில் இருந்த கேம்பிரிஜ் சீனியர் பரீட்சைக்குப் பதிலாக சிரேஸ்ட பாடசாலை தராதர பத்திர பரீட்சையில் (S.S.C)சித்தயடைந்ததன்பின்னர் வாழைச்சேனை தமிழ் மகாவித்தியாலத்தில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு கடமையாற்றினார்.அப்போது அருட்சகோதரர் அல்போன்ஸ் அவர்களின் ஆலோசணைகளுடன் 1956 இல் மேற்படிப்புக்காக இந்தியாவில் கேரள மார்இவோனியா பல்கலைக்கழகத்தில் இணைந்து உயிரியல் பட்டப்படிப்பை(B.Sc)மேற்கொண்டு நான்கு ஆண்டுகளின் பின் 1959 இல் நாடு திரும்பியவுடன் கொழும்பிலுள்ள அரசாங்கப் பாடசாலையொன்றில் ஆசிரியராக கடமையாற்றினார்.

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் குறிப்பாக சசி அவர்களுக்கு கல்விக்கான பாதையை வடிவமைத்துக் கொடுத்து துணையாக நின்று வழிகாட்டிய பெருமை அருட்சகோதரர் அல்போன்ஸ் அவர்களையே சாரும்.

1962 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து இடமாற்றம் பெற்று நாவலப்பிட்டி கதிரேசன் கல்லுரியில் ஆசிரியராக கடமையாற்றிய அவ்வருடம் மே 21 இல் இவரின் தந்தையார் சண்முகம் அவர்கள் காலமானார்.இதன் பின் 1963 இல் இடமாற்றம் பெற்று அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் கடமையாற்றியதை அடுத்து 1964 இல் நிந்தவுர்அல்அஸ்ரக் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய காலத்தில் அவ்வருடம் ஆகஸ்ட் 20 இல் பெற்றோரின் சம்மதத்துடன் பாண்டிருப்பிலுள்ள தங்கராசா தங்கரத்தினம் ஆசிரியத் தம்பதியினரின் சிரேஸ்ட புத்திரி தங்கராணியை இல்லறத் துணையாக ஏற்றுக் கொண்டு ஆறு ஆண் குழந்தைகளுக்கு தந்தையாகவும் வழிகாட்டியாகவும் சீரும் சிறப்புமாகவும் வாழ்ந்து வந்துள்ளார்.

கேரளாவில் படிக்கும் போது கம்னிச சித்தாந்தத்தில் ஈடுபாடு உள்ளவராக அதன்பால் ஈர்க்கப்பட்டு மாக்சிய கொள்கையைப் பின்பற்றியதோடு இவர் இலங்கையைச் சேர்ந்த கம்பனிசவாதி சண்முகநாதனுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.கேரளாவில் பட்டப் படிப்பை மேற்க்கொண்ட காலங்களில் அங்கு மேடையேற்றப்படும் நாடகங்களில் முன்நின்று செயலாற்றி நடிப்பதோடு உள்ளக விளையாட்டுக்களிலும்(ஐனெழழச புயஅந) தன் திறமையை வெளிப்படுத்தி பரிசில்களும் பெற்றுள்ளார்.
கேரளாவில் பட்டதாரியாகி பாண்டிருப்பு வந்து இளைஞர்களை ஒன்றினைத்து இராவணேஸ்வரன் எனும் நெடுங்காவியத்தை மேடையேற்றி இராவணேஸ்வரன் பாத்திரத்தில் வீணையுடன் தோன்றி நடித்ததோடு நெறியாள்கைஇகதைஇவசனம்இஒப்பனை. 

காட்சியமைப்புக்கள் இவேடவுடை போன்றவற்றை நாடகத்துக்கேற்ப சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார்.அதனையடுத்து அம்பாரை பிள்ளையார் ஆலயத் திருவிழாவுக்காக மனப்போர் எனும் நாடகத்தையும் தயாரித்து நெறிப்படுத்தியிருந்தார்.

1974 இல் கல்வி டிப்ளோமா கற்கை நெறியை கொழும்பு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட காலப்பகுதியிலேயே கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் புத்தக ஆக்கக் குழுவிலும் ஈடுபட்டார்.1977 இல் உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றியதை அடுத்து 1983 இல் பற்றிமாக் கல்லுரிக்கு மாற்றலாகி பின் 1990 ஆம் ஆண்டு மருதமுனை சம்ஸ் மத்திய கல்லுரிக்கும் பின் 1992 இல் அதிபராக பதவி உயர்வு பெற்று பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு அதிபரானார்.1995 இல் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற காலத்திலிருந்து 

கலை இலக்கியப் பணிகளில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
வாழ்வின் தத்துவங்களையும் அதன் உள்நோக்கான அர்த்தங்களையும் புரிந்துகொண்டு மாக்சிய சிந்தனை மூலம் தன் வாழ்க்கையில் வெற்றி கொண்டு பலருக்கு விஞ்ஞான அறிவையும் ஆங்கில அறிவையும் ஆங்கில இலக்கியத்திற்கான அடித்தளத்தையும் இட்ட பெருந்தகையாக இருந்துள்ளார்.

இவர் இலங்கையில் ஒரு தலை சிறந்த விமர்சகராகவும் இலக்கியவாதியாகவும் கதாசிரியராகவும் நடிகராகவும் கலை உலகில் பிரவேசிக்கலானார்.கவிதைகளுடன் சிறுகதைஇநாடகம்இமொழிபெயர்ப்புஇவிமர்சனம் ஆகியவற்றிலும் தன் ஆளுமையை செலுத்தி வந்துள்ளார்.ஆனால் கவிதையே அவரை ஒரு அழியாக் கவிஞனாக நிலை நிறுத்தியுள்ளது.

ஈழத்துக் கவிதை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக என்றும் நிலைத்திருக்கும் பெருமைக்குரியவர் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் ஆவார்.சண்முகம் சிவலிங்கத்தின் முதல் பிரசுரிப்புக் கவிதையானது 1966 ஆம் ஆண்டில் அழைப்பு எனும் பெயரில் வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.அழைப்பு எனும்  கவிதையானது நீர் வளையங்கள் எனும் கவிதைத் தொகுப்பினுள்உள்ளது.

சண்முகம் சிவலிங்கத்தின்  கவிதைகள் ஈழக்கவிதையுலக வரலாற்றில் அவை ஒரு தனியான தனித்துவ அடையாளத்துக்கும் வகைக்கும் உரியனவாக உள்ளதுடன்பிற ஈழக்கவிஞர்களின் தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளிலிருந்து “தனித்து வேறுபட்ட நிலையில் தனி அடையாளத்தைக் கொண்டிருப்பதுடன் மரபார்ந்த முறையின் சாயலில் நவீன வெளிப்பாட்டு முறையாகவும் அமைந்து அவரின் வாழ்க்கை மற்றும் சிந்தனைப் போக்கின் அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது”என்று பிரபல இலக்கிய நாடக விமர்சகரனஅ.யேசுராசா அவர்கள் குறிப்பிட்டுள்ளார் என்பதையும் முழுமையாக மனங்கொள்ள வேண்டும்.

ச.சிவலிங்கம் பாடசாலையில் கல்வி கற்கும் காலங்களில் முதன் முதலாக ‘ஆட்டுக்குட்டிகள்’ என்ற கதையைதனது 12 ஆவது வயதில் 1948 இல் எழுதியதோடு குறிப்பாக சொல்லப்போனால் 1950 காலப்பகுதிகளில் சிறுகதைகளை எழுத ஆரம்பித்திருக்கிறார் எனலாம். 
1964 -1965 காலப்பகுதியிலிருந்து சுமார் 50 ஆண்டு காலமாக நாங்கள் முரண்படதா நண்பர்களென்றும் 1960 -1970 களில் இராப்பகலாக இலக்கிய வேட்கையோடு அலைந்திருக்கிறோம் என்பதை “நாங்கள் இரு தும்பிகள்” என்ற கவிதை உறுதிப்படுத்த ஒருவருக்கொருவர் ஆதர்சனமாக இருந்திருக்கிறோம் என்பதை “மரியாத உயிர்ச் சுவடும் விலகிச் செல்லும் மையங்களும்” எனும் கவிதை வெளிப்படுத்துவதாக உள்ளது என ச.சிவலிங்கம் அவர்களின் இலக்கிய வரலாற்றுப் பாதையை அவருடைய நெருங்கிய  நண்பரும் சக பயணியுமான பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் ஊடாகவும்  அறியக்கூடியதாகவுள்ளது.

அறுபதுகளின் பின் அரைவாசியில் தான் முழுமையாக கவிதைத் துறையில் ஈடுபட்டு கவிதை எழுதத் தொடங்கினார்என்றும்தனது எழுத்துக்களை அவர் எப்போதும் திருத்தித்திருத்தி செழுமைப்படுத்திக் கொண்டே இருப்பதோடு திருத்தித்திருத்தி எழுதியும் திருப்தியடையாத மனதுடனும்இதனது படைப்புகளை பிரசுரிப்பதில் அதிக அக்கரையின்மையுடனும் இருந்துள்ளார் என்பதை பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்  அவர்களுக்கூடாகவே வெளிவருகின்றது.

இவரது ஆரம்ப காலக் கவிதைகள் மரபுவழி கவிதைக்கும் புதுக்கவிதை போக்கிற்கும் இடைப்பட்ட இருகரையும் தழுவி வழியும் போக்கினைக் கொண்டிருந்தது.அவரது பிற்காலக் கவிதைகள் அதாவது சிதைந்து போன தேசமும் சேர்ந்து போன மனக்குகையும் எனும் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் மரபுக்கவிதையிலிருந்து விலகியிருப்பதைக் காணலாம்.1998 இல் வெளிவந்த நீர்வளையங்கள் என்ற தொகுப்பி உடாக இலக்கியவுலகில் குறிப்பாக கவிதையுலகில் நிலையான இடத்தைப்பெற்றதோடு அதன் பிறகு 2010 இரண்டாவது தொகுதியில் தனது அல்லலையும் ஆதங்கங்களையும் சிதைந்து போன தேசமும் சேர்ந்து போன மனக்குகையும் எனும் கவிதைத் தொகுப்பில் வெளிப்படுத்துகின்றார்.இந்த இரண்டாவது தொகுப்பு ஒரு காவியம் போலவே தொகுக்கப்பட்டுள்ளது.

அவரது கவிதைகளில் கணிசமானவை அவரைப் பற்றிய கவிதையாகவுள்ளதுடன் குறியீடுகளாகவும் படிமங்களாகவும்  அமைந்திருக்கும் என பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களின் கூற்றுக்கூடாக அறிய முடிகிறது.ஒரு சுதந்திரமான தேசத்தை கணவு கண்டவர் என்பதற்கு ஆதாரமாய் 1985 இல் எழுதிய காவல் அரன் எனும் கவிதையை ஆதாரமாய் குறிப்பிடலாம்.

மீட்கப்பட்ட தமிழ் மண்ணில்
எனது சைக்கிள் உருண்டோடும்
வெறிச்சோடிய தெருக்களின் பகல் பொழுதில்
பழுத்த இலைகள் உதிர்ந்து கிடக்கும்.

அதே போல் இனங்களுக்கிடையிலான உறவுப் பாலமாய் திகழ்ந்து,1987 இல் இந்திய சிப்பாய்கள் காலடி பதித்த போது நிகழ்ந்த அநீதிகளை கவிதைகளுக்கூடாக புடம் போட்டவர்.நண்டும் முள்முருக்கம் வும், வெளியார் வருகை,ஆக்காண்டி ஆக்காண்டி, நிலவும் வழிப்போக்கனும், மறுதலை போன்ற கவிதைகள் முற்றிலும் மாறுபட்ட வெளிப்படுத்தலைக் கொண்ட கவிதைகளாக அமைந்துள்ளது.
ஆயுதப் போராட்டம் மனிதனை ஒரு மண்புழுவாக வீழ்ச்சியடைய வைத்த வரலாற்றை உருவகமாகக் கூறுவதுடன் மனிதனை மண்புழுவாகக் காணும் படிமம் எம் உள்ளுணர்வை உலுப்புவதுடன் யுத்தம் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த கவிதைகளுள் வீழ்ச்சி என்ற கவிதையும் உள்ளடங்கும்.

காய்ந்த சருகுபோல் ஒரு மண்புழு
ஊர்ந்து கொண்டிருந்தது படியோரம்
நான் மனிதன் என்ற இரக்கம் மீ
அதனைப் பார்த்து விட்டுப் போனேன் ஒரு கணம்
சுர் என்று சருகு இரைதல் போல் கேட்டது
திரும்பிப் பார்த்தேன்
மண்புழு வாலில் நின்றது…

வாயைத் திறந்தது கூரிய பல்தெரிய
நாக்கு எங்கே என நினைக்கையில்
நாக்கிலிருந்து தீச்சுவாலை பறந்தது.
மண்புழுவுக்கு பல் ஏது? நாக்கு ஏது?
நினைக்கையில் தெரிந்தது மண்புழு
உருமாறி விட்டதென்று
எனினும் அஞ்சவில்லை
குனிந்தேன் தடி எடுக்க
நிமிரும்போது
மண்புழுவின் கையில் துப்பாக்கி இருந்தது
அல்ல
ஒரு பாம்பின் கைத்துப்பாக்கி
அதுவும் அல்ல
ஒரு சிப்பாயின் கைத்துப்பாக்கி
நான் குனிந்து
பாம்பாய் நெளிந்து
காய்ந்த சருகின் மண்புழு ஆகி
ஊர்ந்து கொண்டிருக்கிறேன் படியோரம்

எகிப்தின் தெருக்களிலேஇவெளியார் வருகைஇஆக்காண்டிஇபிரியாவிடை போன்ற கவிதைகளுள் முதல் மூன்றும் அரசியற் கவிதையாக அமைவதுடன் எகிப்தின் தெருக்களிலே கவிதையானது “தெருக்களில் மக்கள் எழுச்சி பெறுவதை கருவாகக் கொள்ள”இ“அதிகாலை கனவை வெளிப்படுத்துவதாக வெளியார் வருகை” எனும் கவிதை அமைய “நாட்டார் பாடலின் தோற்றத்தில் எளிமையாய் மிக ஆழமான அர்த்தங்களோடு எழுதப்பட்ட கவிதையாக ஆக்காண்டி கவிதை அமைகிறது.

காற்றிடையே,ஆக்காண்டி ஆக்காண்டி,வெளியார் வருகை, போன்ற கவிதைகளில் மாக்சியக் கருத்துக்கள் உள்ளடக்கமாக அமைவதோடு பிரச்சாரமின்றிய கவிதையாகவும் அமைகின்றன.சண்முகம் சிவலிங்கம் என்றாலே ஆக்காண்டிப் பாடல் தான் ஞாபகம் வரும்.ஆக்காண்டி என்ற நாட்டார் பாடலில் தனது குஞ்சுகளை ஒவ்வொன்றாக இழந்த தாய்ப்பறவையின் சோகம் காற்றில் இழந்து வருவதை எல்லோரும் அறிவர்.“அதே ஆக்காண்டிப் பாடலை அடிப்படையாக வைத்து சண்முகம் சிவலிங்கம் எழுதிய பாடலும் எங்கள் வாழ்க்கையைப் பாடும் பாடலாக அமைந்திருந்தது”.1968 ஆம் ஆண்டு சசியினால் இயற்றப்பட்ட ஆக்காண்டி கவி வரியானது நீர் வளையங்கள் எனும் கவிதைத் தொகுப்பினுள் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘நீர் வளையங்கள்’(1988)‘சிதைந்து போன தேசமும் சேர்ந்த போன மனக்குகையும்’(2010) ஆகிய இரு கவிதைத் தொகுதிகள் வெளி வந்திருக்கின்றன. ‘சிதைந்து போன தேசமும் சேர்ந்த போன மனக்குகையும்’ என்ற தொகுப்பில் போருக்குப் போனாய் போ என்ற கவிதையே முதல் கவிதையாக அமைவதுடன்கவியாசிரியர் தம்மையே தம் மனக்குகையாக்கியுமுள்ளார்.

ஈழத்துக் கவிதைகள் பற்றிப் பேசுவோர் எவ்வாறு சண்முகம் சிவலிங்கத்தையோ அவரது கவிதைகளையோ தவிர்த்து விட்டுப் பேசமுடியாதோ அதேபோல் காண்டாவனத்தின் வருகையின் பின்னர் ஈழத்தின் சிறுகதைகள் பற்றிப் பேசுவோரும் சண்முகம் சிவலிங்கத்தையோ அவரது சிறுகதைகளையோ தவிர்க்க முடியாது என்பதும் உண்மையாகும்.

மருதமுனையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த முனைப்பு சஞ்சிகையில்மனிதநேயமும் மண்ணாங்கட்டியும்என்ற சிறுகதையும் விகம் சஞ்சிகையில் வெளிவந்து தடம் பதித்த “கன்னிகா” களம் சஞ்சிகையில் வேரூன்றிய “காலடி” குறுநாவல் போன்றன இலக்கியவுலகில் மெச்சக்கூடியதாய் அதிர்வு கண்டது.யாருமே தொட்டிராத வித்துவப் பணியினையும் அவருக்கான சிறப்பான தனியடையாளத்தையும் காணக்கூடியதாகவுள்ளது. 

ஈழத்தின் போர்க்காலச் சூழலை பின்னனியாகக் கொண்ட பல சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.காண்டாவனம் தொகுப்பிலுள்ள கதைகள், போர்ச்சூழலின் இன்னொரு தளத்தில் புதிய பரிமாணத்தில் எழுதப்பட்டிருக்கின்றது என்றால் மிகையாகாது.சசியின் சிறுகதைகள் அவருடைய கவிதைகள் போன்றே தனித்துவமாகவும் காத்திரமாகவும் தரமானதாகவும் விளங்குவதுடன் அவரது வாழ்க்கையாகவும் வாழ்க்கை அனுபவமாகவும் உள்ளன.அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் மனிதாபிமானத்தை அடையாளம் காட்டி நின்றது..

முக்கியமாகப் பால்நிலை மற்றும் பாலியல் தொடர்பான விசயங்களில் அவர் பல சிறுகதைகளை எழுதினார்.ஆனால் அவை விரச நோக்கத்துக்காக எழுதப்பட்டவையல்ல என்பதை மனங்கொள்வதோடு வாழ்வின் அடிப்படைகளை நோக்கிய பார்வையும் பயணமுமே சண்முகம் சிவலிங்கம் அவர்களின் எழுத்துலகப் பயணமாக அமைந்தது.

சசியின் ஆரம்ப காலக் கதைகள், சில சம்பங்கள் புனைவுத் தருக்கத்தைக் கொண்டமைந்த கதைகளாகவுள்ளன.எடுத்துக்காட்டாக மழை,அது வேறு ஆள் , நீக்கம், தொலைவும் மீட்பும் போன்ற கதைகளைக் கூறலாம். “கதை அதனுடைய புனைவுத் தருக்கத்தில் சுவாரஸ்யப்பட முடியுமானால் மாத்திரமே தன்னால் திருப்தியுற முடியுமென்று”கதையாசிரியரான சசி அவர்கள் தனது காண்டவனம் கதைகள் பற்றிய குறிப்பில் குறிப்பிடுகிறார்.

கீற்று இதழில் வெளியான அது வேறு ஆள் என்ற கதையும் அலையில் வெளியான நீக்கம் கதையும் இருப்பியல் சார்புடையதாகவேயுள்ளது.தனக்கு திடீரென ஏற்பட்டதென ஒருவன் நினைக்கின்ற தனது ஆனந்தமான சலனமற்ற நிலைக்கான காரண காரியத்தை பின்னோக்கி ஆராய்வதினால் ஏதோ ஒரு காரணத்தை கண்டுபிடித்தது போலவும் அதே சமயம் அது நழுவிப் போவதாகவும்இமனித இருத்தலுக்கும் தர்க்க நியாயத் தொடர்புக்கும் உள்ள பிளவை வெளிப்படுத்துவதாக நீக்கம் கதையுள்ளது.

மகாகவியின் “ஒரு சாதாரண மனிதனது சரித்திரத்தில்” மாத்திரம் அல்லாமல் ஏனைய பல கவிதைகளிலும் காணப்படும்  முனைவும் உழல்வும் சகிப்பும் இருத்தலின் நித்திய நிலையே எனக்கூறுவதுடன் தனது சில கவிதைகளிலும் கதைகளிலும் இருப்பியல் புலப்பாடுகளை காணக்கூடியதாக இருக்கும் என கூறுகின்றார்.மல்லிகையில் வெளியான மழை சிறுகதையானது “மழையுடன் விடிந்த ஒரு நாட் காலைப் பொழுதின் உண்மை அனுபவத்தைக் கொண்டமைவதோடு புறவியமான காரண காரிய நியாயத்தின் குறியீடாக அமைந்துஇமழைக்கும் அப்பால்தான் அவன் அன்று பாடசாலைக்குப் போகாத காரணம் உள்ளது என கூற விழைகிறார்.

சமூக அரசியல் மற்றும் போர்க்காலக் கவிதைகளை உயிரோட்டமுள்ளதாக்கியதுடன் பாட்டாளி மக்களுக்காகவும் தன் பேனா முனையினை குனிய வைத்தவர்.திசைமாற்றம்(1957)மனிதநேயமும் மண்ணாங்கட்டியும்(1980)இகாண்டாவனம்(1985) உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்(1987) காட்டுத்தோடை(1987) உட்சுழிகள்(1988)போருக்குப் போனவர்கள்(1984) வாலிவதையும் வானரச் சேனையும் (1988) மரணப்ட்டு வெளியேற்றம்(1990) பிரமாண்டம் நோக்கி(1990)படைகள் நகர்ந்த போது(1990)பிரகத்தம்(1989)தொலைந்து போன கிரகவாசி (1992) (1999)இகாலடி(1987) போன்ற சிறுகதைகள் காண்டாவனம் எனும் நுலிலுள்ள கதைகளாகும்.காண்டாவனத்திலுள்ளபதினாறு கதைகளில் (16)‘திசைமாற்றம்’,‘மனிதநேயமும் மண்ணாங்கட்டியும்’,‘காலடி’ ஆகிய கதைகள் ஏற்கனவே சஞ்சிகைகளில் பிரசுரமானவை.‘பிகாத்தம்’ என்ற கதை 2013 இல் அவரது ஓராண்டு நினைவாக வெளியிடப்பட்ட ‘நினைவுவெளி’ என்ற நுலில் இடம்பெற்றிருக்கிறது  என்பதும் குறிப்பிடத்தக்கது.ஏனையவை இதுவரை பிரசுரமாகாத கதைகளாகும்.

நீர்வளையங்கள்(1988)சிதைந்து போன தேசமும் சேர்ந்த போன மனக்குகையும்(2010) ஆகிய இரு கவிதைத் தொகுதிகளுக்கூடாகவும் காண்டவனம் எனும் சிறுகதைத் தொகுதிக்கூடாகவும்(2001),ஓராண்டு நினைவஞ்சலிக்காக வெளியிடப்பட்ட நினைவுவெளி எனும் Áலுக்கூடாகவும்நண்பர்களுக்கூடாகவும் சண்முகம் சிவலிங்கம் அவர்ளின் கலையிலக்கிய வரலாற்றுப் பதிவை அறியக்கூடியதாகவுள்ளது.  

நாட்டில் அவ்வப்போது தோன்றிய அவசரகால அசாதாரண நிலைமைகளின் போது தனது கவிதைகள்இசிறுகதைகள் பலவற்றை எடுத்துஎரித்துச் சாம்பலாக்கியதோடு 1978இல் கிழக்கிலங்கையில் வீசிய சூறாவளியினாலும் அவரது பல படைப்புக்களின் கையெழுத்துப்பிரதிகள் அநேகம் மழைக்காற்றில் கரைந்து அழிந்து விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் மிக முக்கியமானவை.அதாவது “அலை”யில் வெளிவந்த இருப்பியல் வாதம் பற்றிய கட்டுரை போன்றன விமர்சனத்தின் புதிய போக்குகளை இனங்காட்டத்தக்கவையாக இருக்கின்றது.சண்முகம் சிவலிங்கம் அவர்கள் மரணம் பற்றி எழுதிய கவிதையானதுஇமனிதன் ஒருவன் இறந்த பின்னர் நிகழும் யாதார்த்த நிலைமையினை புடம்போட்டுக் காட்டுகின்றது.இக்கவிதை யாவருக்கும் பிடித்தமான கவிதையாக அமைகிறது என்றால் மிகையாகாது.

நான் மறைந்து விடுவேன்
நான் இருந்தேன் என்பதற்கு 
எந்தத் தடயமும் இருக்காது
ஆனால்
எனது இருப்பு
காற்றுக்குள் ஊதியிருக்கும்
அதை நீங்கள் காணமாட்டீர்கள்
எனது இருப்பின் வன்மம்
அவலங்களின் சின்னமாய் இருக்கும்

அதை நீங்கள் அறியமாட்டீர்கள்
தொலைக்காட்சியில்
வானொலியில்
புகைப்படத்தில்
அல்லது ஒரு பாராட்டுக்கூட்டத்தில்
என்னை மலினப்படுத்த முடியாது
ஒன்றும் இல்லாமைக்குள்
எனது ஒரு கண்
என்றும்… சிவப்பாய் இருக்கும்

“யாருக்கும் தெரியாமல் நடுநிசியில் மறைந்து விடுவேன் என்னைக் காணமாட்டீர்கள்” எனும் கவி வரியினை எழுதியது மாத்திரமல்லாமல் 2012.04.20 அன்று தனது எழுபத்தைந்தாவது வயதில் இயற்கையாக மரணத்தைத் தழுவிக்கொண்டார்.அவரின் வெற்றிடம் இற்றைவரைக்கு எவராலும் நிரப்பப்பட முடியாத இடமாகவேயுள்ளது.

சுருக்கமாகக் கூறுவதாயின் இலக்கிய ஆர்வலர்கள்இகலைரசனையாளர்கள் நிச்சயமாக கற்க வேண்டிய ஆளுமைகளுள் இவருமொருவராகும்.எந்த விடயத்திலும் பிரச்சாரத்தை விரும்பாததன் காரணமாகவே இவர் தன் படைப்புகளை பிரசுரிப்பதில் தயக்கம் காட்டினார் என்பதை அவரது நண்பரான பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் கூறுவதிலிருந்து புலப்படுகின்றது.இவர் தனது கவிதைஇசிறுகதைபோன்ற இலக்கிய படைப்புகளுக்கூடாக போர்க்காலச் சூழலை (1971 இல் கொழும்பு இனக் கலவரம்1983 லைக் கலவரம்) குறிப்பாக இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக் கெடுபிடிகளை புடம்போட்டுக் காட்டிய பெருமையும் இவரை மாத்திரேமே சாரும்.

கிழக்கிலங்கையில் குறிப்பாக சமூகத்தின் யதார்த்தப் பிரச்சினைகளை, மக்கள் எதிர்கொண்ட நடப்பியல் பிரச்சினைகளை ஒளிவு மறைவின்றி தனது கவிதைகளுக்கூடாகவும் சிறுகதைகளுக்கூடாகவும் கூறியது அவரின் இலக்கிய அரசியல் விமர்சன மேதாவிலாசத்தை இலக்கிய ஆர்வலர்களுக்கு எடுத்துரைப்பதாகவுள்ளது.

கிழக்கிலங்கையில் ஊடகங்கள் பேசத் தயங்கிய பல விடயங்களை எந்தவித தயக்கமுமின்றி தனது கவி வரிகளுக்கூடாகவும் கதைகளுக்கூடாக பெரும்பான்மையினரின் அட்டூழியங்களை வெளிச்சத்திற்கு வெளிப்படுத்தியிருந்தார்.கிழக்கில் இலக்கியத்தில் ஈடுபட்டவர்களிற் பெரும்பாலானவர்கள் சண்முகம் சிவலிங்கம் அவர்களை ஆதர்சமாகக் கொண்டுள்ளனர் என்றால் மிகையாகாது.
ஒரு வகையில் நாடறிந்த நாடகக்காரரான குழந்தை ம.சண்முகலிங்கத்தையும் (1931.11.15 -),தேசமறிந்த இலக்கியக்காரரான சண்முகம் சிவலிங்கத்தையும் (1936-2012.04.20 ஒப்பு நோக்;கக்கூடியதாகவுள்ளது.

யாழ்ப்பாண திருநேல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட கு.ம.சண்முகலிங்கம் அவர்கள் தனது நாடக எழுத்துருக்களுக்கூடாக தம் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் சவால்களையும் பாத்திரங்களுக்கூடாக வெளிப்படுத்த கிழக்கிலங்கையில் தம் மண்ணின் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை தனது கவி வரிகளுக்கூடாகவும் கதைகளுக்கூடாகவும் வெளிப்படுத்தியிருந்தார்.இவ்விருவரையும் போர்க்கால உளவியல் படைப்புகளை சமூகத்துக்காக படைத்தளித்த பெருந்தகைகளாக கொள்வதில் எந்தவித வியப்புக்குரிய விடயமுமல்ல.இவ்விருவரும் எக்காலத்துக்கும் போற்றப்படவேண்டியவர்களாவதுடன் ஆய்வுக்கூட்படுத்த வேண்டியவர்களுமாவர்.

முற்றும்
பாக்கியராஜா மோகனதாஸ்(நுண்கலைமாணி)
துறைநீலாவணை


Comments