சுவாமி நடராஜானந்தர் சுவாமி நடராஜானந்தர் கிழக்கிலங்கையின் காரைதீவில் பிறந்து பின்னாளில் இராமகிருஷ்ண மடத்துத்துறவியாகிய பெரியாராவார். சேவையின் சின்னம் எனப் போற்றப்பட்ட இத்துறவி மட்டக்களப்பு பிரதேச இராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகியாக பலகாலம் பணியாற்றியவர். சித்தானைக்குட்டி சுவாமிகள் இவரது இயற்பெயர் கோவிந்தசாமி என்பதாகும். தமிழ் நாடு, இராமநாதபுரம் மாவட்டம் பெருநாளி சமஸ்தானத் தலைவரின் புதல்வர் என்றும் கூறுவர். தமது சமஸ்தானத்தில் ஏற்பட்ட தொற்றுநோயைத் தடுக்க முயன்றநவநாத சித்தரையும் பெரியானைக்குட்டி சுவாமிகளையும் சந்தித்தவர் அவர்களோடு கொழும்பு வந்தார். குருவான பெரியானைக்குட்டி சுவாமிகளின் ஆணைப்படி முன்னேஸ்வரம் சென்று அங்கு தங்கி பல சித்த சாதனைகள் புரிந்தார். தனது குரு சமாதியடைந்ததைத் தொடர்ந்து அவர் கதிர்காமம் சென்று திஸ்ஸமகாராமைஎன்ற இடத்தில் சிறிது காலம் தங்கி மட்டக்களப்பை அடைந்தார். சமாதி: காரைதீவிலே 1951 ஆம் ஆண்டில் சமாதி அடைந்தார். அவருடைய சமாதி கோயிலில் ஆண்டு தோறும் ஆடிச் சுவாதி நட்சத்திரத்தில் அன்னாரின் நினைவாக குருபூசை சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிவாச் சித்தர் சிவாச் சித்தர் இலங்கையின் மட்டக்களப்பின் தெற்கே உள்ள காரைதீவு எனும் கிராமத்தில் சமாதியடைந்தசித்தர்களுள் ஒருவராவார். எனினும் தமது பெயருக்கு ஏற்ப இவர் சித்துக்களை பெரிதும் வெளிக்காட்டிக் கொண்டவரல்லர். அமைதியும், சாந்தமும் தவழும் முகத்தினரான சுவாமிகள் மக்களால் சிவாச் சுவாமிகள் எனவும் அழைக்கப்பட்டவர். கதிர்காம பாதயாத்திரை வந்த வழியில் காரைதீவில் தங்கிக் கொண்ட சுவாமிகள் அங்கேயே தனது அருளாசியை வழங்கி சமாதியும் அடைந்தவர் ஆனார். இவரது சமாதி ஆலயம் காரைதீவு பொதுமயானத்தை அண்மித்ததாய் பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு அருகில் அமைந்து காணப்படுகின்றது. |
[Untitled] >