முத்தமிழ் தந்த வித்தகன் சித்துக்கள் பல செய்த சித்தன் கண் விழித்துக் காக்கும் கண்ணகி எத்தனை பெருமைகள் எமதூருக்கு!! மேல் திசையில் மருத நிலம் மேலும் அழகு சேர்த்திடும் கீழ் திசையில் நெய்தல் நிலம் கிடையாத பேரின்பம் தந்திடும்.. பல் வண்ண வானவில் போல் பல்லின மக்களும் வாழ்கின்றனர் உணர்வுகள் கொண்ட உத்தம உறவுகளாய் திகழ்கின்றனர்.. கலைக்கோட்டங்கள் எம்மண்ணில் கணக்கின்றி இருக்கின்றன கல்வி நிலையங்கள் இங்கு கல்வி தானம் செய்கின்றன.. காரேறி வந்த ஊர் இது காரைமர தீவாகி நின்ற ஊரிது தொன்மைத் தமிழ் காக்க தொணடுகள் பல செய்த ஊரிது.. ஆக்கம் - புவனேந்திரன் நிரோஷன் |
[Untitled] >