[Untitled]‎ > ‎

24.08.14- கடந்தது மூன்றாண்டு கடக்க வேண்டும் பல நூற்றாண்டு!

posted Aug 24, 2014, 10:07 AM by Unknown user

கடந்தது மூன்றாண்டு
கடக்க வேண்டும் பல நூற்றாண்டு

காரைநகர் பெருமையதை
கலைநயத்தோடு கனிவாக
வலைப்பின்னல் தானதிலே
வளமாய் தந்த புகழ் உனதே!

கடல்தாண்டிய எம்மவர்
கண்முன்னே இனிய
கலாசார நிகழ்வுகளை
காணொளியாக நீ தந்தாய்

சின்னஞ்சிறு சிட்டுக்களின்
சிறப்பான சிறுயிசைபோல்
இனிதான செய்திகளை
இடரின்றி நீ தந்தாய்

ஆக்கங்கள் பிரசுரித்தாய்
அறிவியலும் தானுரைத்தாய்
அடிவானின் விடிவெள்ளியாய்
அடையாளம் தான்கொண்டாய்

இளமையின் துணிவோடும்
இறைவனின் துணையோடும்
கடந்தது மூன்றாண்டு
கடக்க வேண்டும் பல நூற்றாண்டு
                                                  
                                                                   ஆக்கம்:- புவனேந்திரன் நிரோஷ​ன்

Comments