"" காரைதீவு நியூஸ்.கொம் "" இணைய தள சேவைக்கு நான்காண்டு என நினைத்தேன்.... என்னதான் எழுதலாம் என சிந்தித்தேன்.... நான் அறிவாளியாக இருந்திருந்தால்.., சொற்கள் என்ன தேடி வந்திருக்கும்...! நானோ "" தெருப்புலவர் "" என் கவிதையோ "" சுவர்க் கவிதை "" அதையே செய்தேன் எழுத்தாக ..., அனுப்பவில்லை என் உடலில் நலம் குறைந்துபோனதால்.... தாமதித்துவிட்டேன் . இன்றுதான் முடிந்ததை எண்ணி மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டு காரைதீநியூஸ்.கொம் வாழ்க வளத்தோடும்...., நலத்தோடும்...., அழிவற்ற உயர்வோடும்.., சுயநலக் கொள்கையற்றவனாய் வாழ்ந்திட வாழ்த்தும் நான்.++ என்குடும்பத்தாரும்......, அதற்காக எனது பாணியில் சிந்தித்து எழுதியதை சிந்திக்க வைக்கிறேன் !! காரைதீவுநியூஸ்.கொம் ஆண்டுகள் கடக்கும் பொது கடந்துவந்த பாதையை ஒரு ஆலயத்துக்கு விரதமிருந்து பயணிக்கும் நிகழ்வாகவே கருதுகின்றேன். அதில் பிறந்த இந்த தெருப்புலவரின் துளிகளாக...... அன்போடு கே.சீ.கே. குமாரும் குடும்பமும். ஜெர்மனி. "" பிறந்தநாள் வாழ்த்துக்கள் "" ஒரு கருப்பைக்கு நன்றி சொல்லச் செல்லும் செய்திகளின் ராஜ பயணமே … கடலைத்தேடி நதிகள் தான் நடந்து போகும் ! ஆனால் … காரைதீவுநியூஸ்.கொம் தேடி தொப்புள் கொடிகள் படர்கின்றது நல் மாதத்தில் பிறந்த பல ஆண்டுகள் காணப் போகிறதே … ! அது காரைதீவுநியூஸ்.கொம் மொழிகள் பலவானாலும் பலலட்சம் பேர்களின் இயலிசைநாடகம் ஏழைகளின் வாழ்வு அங்கே விபுலரிடம் ததும்பி வழியும் ! வழிகாட்டலோடு சமத்துவம் கைகுலுக்கும் ! வசதிக்கும் தொழிலுக்கும் பாசக் குடை விரிக்கும் ! சந்திக்கும் இதழ்களிலெல்லாம் … புன்னகையே – விரியும் ! கடந்த அந்தச் சுவடியை நிறுத்தி நினைவு காட்டும் காரைதீவுநியூஸ்.கொம் ஊரார் இளைப்பாறும் … நிழலோ ? வெள்ளைப் பறவைகளின் கரைச்சைப் பள்ளமோ, எதையும் ஏற்கும் தோணாவோ... லட்சக் கணக்கான நம்மூர் கண்கள் பார்த்தும் ரசித்தும் கொஞ்சமும் குறையாத … அழகோ ? மிடுக்கோ..? காரைதீவுநியூஸ்.கொம் இணையத்தில் ஏற்றுமதியான போது,ஓடோடிப் போய் திறந்து ஆவலுடன் இதயங்கள் வாங்கிக் கொண்டன இலவசமாகவே …! தனக்காகச் சுவாசித்ததை விட ஆரம்பம் அன்று முதல் … காரைதீவானுடன் பலரையும் சேர்த்தே சுவாசித்தான் ! ஊரார் ஒன்றுகூடியே செய்திகளை சேர்ந்த்தே சுவாசித்தார்கள் ! வசதியற்ற வசதியானவர்களுக்கே தங்களின் பெருமை மிகு வாய்ப்பு ! – அதுவும் காரைதீவுநியூஸ்.கொம்மை தான் நாடியபேர்களுக்கு மாத்திரமே, இன்றி அந்த நல்ல வாய்ப்பை அருள்கிறான் ! ஆனால் பரந்துபட்ட ஊராரின் செய்தி இதுபற்றி உயர்த்தாத அறிவின் அசைவுக்கு புருவங்கள் இல்லை ! புதியதாய் ஒவ்வொரு நாளும் காரைதீவை நினைப்போரின் அறிவோருக்கான அடைக்கலம் ! இது ஊராரின் ரட்சகனான வல்ல காரதீவுநியூஸ்.கொம் ஏழை எளியவர்களுக்காகச் சும்மாவே தந்த அருட்கொடை ! படிக்கும் இடம் வேறுபட்டாலும் இதயங்கள் நோக்குவது என்னவோ … அந்த காரைதீவு நியூஸ்.கொம் தானே ! மொத்தத்தில் வாழ்த்து என்பது, வெறும் சடங்கல்ல ;- அது மனித வாழ்க்கையின் சம்பூரணம் ! வாழ்ந்த வாழ்வின் அர்த்தம் ! அழகு என்றும் சொல்லலாம் ! படிக்க வாய்ப்பு கிடைத்தவர்களே பாக்கியவான்கள் ! வல்லமையான உண்மை பாச முகவரிகள் ! நம் ஊரின் கடவுள் அவர்களின் நேசத்திற்குரிய செய்திகள் எனும் கனிகள் ! வெள்ளை நிற மல்லிகையின் வாசம் வாழ்க வாழ்கவே நீ நீடூழி ! |
[Untitled] >