ஜனவரி பிறக்கும் போது ஜகமதில் அமைதி வேண்டும் நினைவினில் மகிழ்ச்சி பொங்க நின்று நாம் வரவேற்போமே ! சிந்தனையில் தெளிவு வேண்டும் சிறந்தநல் உறவு வேண்டும் சந்தததும் வாழ்வில் என்றும் சந்தோஷம் திகழ வேண்டும் சொந்தங்கள் சேர்ந்து என்றும் சுகமெலாம் பகிர்தல் வேண்டும் நொந்திடச் செய்யும் எண்ணம் நுடங்கியே போக வேண்டும் எண்ணிடும் எண்ணம் எல்லாம் இயல்புடன் நடக்க வேண்டும் மண்ணிலே வாழும் வாழ்வில் மாசெலாம் ஒழிதல் வேண்டும் கண்ணிலே கருணை வெள்ளம் கரைபுரண் டோட வேண்டும் உண்மையின் வழியில் என்றும் உழைத்துமே உயர்தல் வேண்டும் பெண்மையும் ஆண்மை யோடு பிணக் கொழிந்திருக்க வேண்டும் மண்ணிலே உள்ளார் எல்லாம் மனங்களில் நிறைவு வேண்டும் ஆங்கில வருடம் பார்க்க அனைவரும் ஆவல் கொள்வோம் அவரவர் வாசல் நின்று அமைதி யாய் வரவேற்போமே ! அன்போடு, கொந்திராத்து காசுபதி மகன் குமார். (கே.சீ.கே ) ஜெர்மனி |
[Untitled] >