இன்று 26ம் திகதி புதன்கிழமை சுனாமிக்கு வயது எட்டாகும். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது. சுனாமிக்கு வயது எட்டாகியும் மக்களுக்கு எட்டாத குடியிருப்பு வாழ்க்கை தெற்காசியாவை 2004 இல் உலுக்கிய சுனாமிக்கு வயது இன்று எட்டாகும். ஆம் இலங்கையிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி மாறாத வடுக்களையும் ரணங்களையும் விட்டுச் சென்றது. அன்று இதே போன்றொரு தினத்தில் உடுத்த உடையோடு உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு கிலியோடு இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் எட்டு வருடங்கள் கடந்த நிலையில் இன்றும் சொந்த வீடில்லாமல் சுனாமி தகரக் கொட்டில்களில் வாழ்ந்துவருவோரைப் பலர் அறியாமலிருக்கலாம். ஆனால் அப்படி வாழ்கிறார்கள். ஒரு உதாரணத்தை இவ்வண் குறிப்பிடலாம். இலங்கையில் சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருதுப் பகுதியில் பெரிய பள்ளவாசலுக்குப் பின்னால் இன்றும் சுனாமி அகதிகள் தகரக் கொட்டில்களில் வாழந்து வருகிறார்கள்.(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன).ஆம். 38 குடும்பங்கள் அங்கு காலத்தைக் கடத்தி வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் கல்முனைப் பிராந்தியத்தில் மட்டும் சுமார் 600 குடும்பங்கள் இன்னும் சொந்த இடங்களில் முpள்குடியேற்றப்படாமல் சொந்தபந்தங்களின் வீடுகளிலும் கொட்டில்களிலும் காலத்தைக் கடத்திவருகின்றனர்.இவர்கள் கடலோரத்தில் 65 மீற்றர் பாதுகாப்பு பிரதேசத்தில் வாழ்ந்து அனைத்தையும் இழந்தவர்களாவர். இவ்வாறு மேலும் பலர் பல இடங்களில் வாழ்ந்துவருகிறார்கள். யுத்தத்தால் இடம்பெயர்ந்த சம்பூர் மக்கள் கிளிவெட்டியில் தகரக் கொட்டில்களில் காலத்தைக் கடத்தி வருவதும் தெரிந்ததே. அக்கரைப்பற்றில் சுனாமி வீடமைப்புத்தொகுதி வீணாக அழிகிறது. அக்கரைப்பற்றில் சுனாமியால் வீடிழந்தவர்களுக்கென முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் காலத்தில் அவரது முயற்சியால் சவூதி அரேபிய அரசின் நிதியுதவியுடன் 500 வீடுகளை அமைக்கும் திட்டம் இடம்பெற்றது.2009 இல் சுமார் 293 வீடுகள் அமைக்கப்பட்ட நிலையிர் இவ் வீடமைப்புத் தொகுதி திறந்துவைக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை ஒரு குருவி கூட குடியேறாமல் வீணாக நாசமாகி வருகிறது என்ற அதிர்ச்சி செய்தி சுனாமியால் வீடுகளை இழந்து கொட்டில்களில் வாழ்வோர் மத்தியில் பெரும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கு முஸ்லிம்களை மாத்திரம் குடியேற்றமுடியாது அனைவரையும் குடியேற்றவேண்டுமென கூறி நீதிமன்றம் வரை வழக்கு தொடுக்கப்பட்டு நடந்தேறியது. தீர்ப்பும் வழங்கப்பட்டாயிற்று. ஆனால் இதுவரை 03 வருடங்கள் கடந்தும் சுனாமிக்கு எட்டு வயதாகியும் யாரும் குடியேறவில்லை என்பது வேதனையான வெறுப்பூட்டும் செய்திதான். எனவே இன்றைய தினத்தில் சுனாமி பற்றி சில தகவல்களை அறிந்துகொள்வோம். சுனாமி என்றால் என்ன? சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை (வுளரயெஅiஇ யப்பானிய மொழி: 'துறைமுக அலை') என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாக பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும். சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள ஒரு வார்த்தை. சூனாமி என இரண்டும் சேர்ந்துதான் சுனாமி என்றாகியது. சு என்றால் துறைமுகம் என்றும் னாமி என்றால் பேரலை என்றும் ஜப்பானில் அர்த்தமாகும். சுனாமி என்பது துறைமுக பேரலை என்று சொல்கிறார்கள். இது சில நிமிடங்களிலிருந்து சில நாட்கள் வரை கூட இருக்கக் கூடியது. மேலும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடிய தன்மையுடையது இந்த சுனாமி யாகும். சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டது ஜப்பான் நாடு தான். 2004ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் மிக மோசமான ஆழிப்பேரலை காரணமாக 2,30,000 மக்கள் உயிரிழந்தனர். சுமித்ரா பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் அங்கு சுனாமிக்கான வாய்ப்புகள் அதிகம். அசாதாரண பூகோள நிகழ்வாகிய சுனாமி பற்றிய பீதி பல காலமாக மனிதரிடையே இருந்து வருகின்றபோதிலும் இந்த நூற்றாண்டில் வாழும் அனைவரையும் பீடிக்கும் அளவிற்கு 2004 ம் ஆண்டு பேரழிவு வரலாற்றில் இடம்பிடித்து விட்டது. கடந்த 40 வருடங்களில் நடந்திருக்க கூடிய மிகப்பெரும் இயற்கை பேரழிவாக பேசப்படும் டிசம்பர் 26 ம் திகதிய சுனாமி 150, 000 மேலான மனித உயிர்களை பலிகொண்டும் இ பல பில்லியன் டொலரிலும் மேலான பொருளாதார நஷ்டத்தினையும் ஏற்படுத்தியிருந்தது. 1960 ம் வருடத்தின் பின்பு நிகழ்ந்த மிகப்பெரிய சுனாமி என வரலாற்றில் மட்டுமல்ல பூகோள ரீதியிலும் புதிய பதிவுகளையும் வடுக்களையும் பதித்துவிட்ட இயற்கைப் பேரழிவுடன் தொடர்புள்ள தகவல்கள் வருமாறு உள்ளது. 2004 ஆம் ஆண்டில், டிசம்பர் 26 ஆம் நாளன்று யுரேஷியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பர்மா நிலத்தட்டும், இந்தோ-ஆஸ்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகிய இந்திய நிலத்தட்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்திரா தீவில் கடலுக்கடியில் மோதியது. அதனால் ஏற்பட்ட பூகம்பத்தால் தோன்றிய அலைகள் தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது. இதுவே 2004 ஆம் ஆண்டின் மிகப்பெரிய இயற்கை அழிவாகக் கருதப்பட்டது. இது 2004 ஆம் ஆண்டு - இந்தியப் பெருங்கடலின் பூகம்பமும், ஆழிப்பேரலையும் எனப்படுகின்றது. தமிழ் மக்களின் பண்டய இலக்கியங்களில் ஆழிப்பேரலை அல்லது கடல்கோள் என்பது சுனாமியை அர்த்தப்படுவதாக அறியப்படுகின்றது. அத்துடன் இது மூலமாக பழங்கால தமிழர்களினாலும் இத்தகைய பேரழிவுகள் எதிகொண்டதினை அறியமுடிகின்றது. சுனாமி தொடர்பிலான தகவல்களும் நிகழ்வுகளும் கடந்த 4000 வருடம் காலமாக மிகவும் அறியப்பட்டும் பேசப்பட்டும் வந்தபோதிலும் சர்வதேசரீதியில்1963 ம் வருடம் நடந்த அனைத்துலக விஞ்ஞான மாநாட்டில் அகிலத்திற்கும் பொதுவான 'சுனாமி' எனும் சொல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இயற்கை பேரழிவு பற்றிய பதிவுகள் ஆரம்பித்த காலத்தில் இருந்து (4000 வருடங்கள்) இன்றுவரை பதிவாகிய மிகப்பெரிய சுனாமிகள் முறையே 1883 (36,000 பேர் பலி), 1998 ஜுலை (36,000 பேர் பலி), 2004 ம் டிசம்பர் (150,000 பேர் பலி) என்பன அதிக மனித உயிகளை காவுகொண்ட பேரழிவுகளாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. இந்த நூற்றாண்டில் 2004 ம் டிசம்பர் 26 ம் திகதிய கடுமையான சுனாமியில் 11 நாடுகளைச் சேர்ந்த 150இ000 மக்களின் உயிகளை உடனடியாகவும் மேலும் பல நூறு உயிகளை அடுத்த சில நாட்களிலும் பறித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் குறிப்பாக இந்தோனேசிய நாட்டின் தீவுகளில் ஒன்றாகிய சுமத்திரா எனும் பகுதியில் கடலுக்கடியில் நிகழ்ந்த மிகப்பெரிய பூமியதிர்வு காரணமாக உருவாகிய ஆழிப்பேரலை (சுனாமி) பலிகொண்ட பன்நாட்டு மக்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு. இந்தோனேசியா 80,246 இலங்கை (ஸ்ரீலங்கா) 28,627 இந்தியா 8, 955 தாய்லாந்து 4,812 சோமாலி 142 மலேசியா 66 பர்மா 53 தான்சனியா 10 பங்களாதேஷ் 2 சீசெல் 1 கென்யா 1 சுனாமிஎப்படிஉருவாகிறது? முதலில் பூகம்பம் ஏற்படுகிறது. இந்த பூகம்பம் நிலப்பகுதியிலோ அல்லது கடல் பகுதியிலோ அல்லது மலைப்பகுதியிலோ முதலில் ஏற்படும். நிலப் பகுதியில் வந்தால் நிலத்தில் அதிர்ந்து சேதம் ஏற்படுகிறது. மலையில் பூகம்பம் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது. கடலில் பூகம்பம் வந்தால் கடலின் ஆழப்பகுதி பாதிக்கப்படுகிறது, கடலுக்கு அடியில் ஏற்படக்கூடிய பூகம்பத்தினால் கடல் நீர் உந்த்படுகிறது. இதனால் மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன். இவை கரையைத்தாண்டி சேதத்தை ஏற்படுத்து கின்றன. இப்படி கடலு்க்கடியில் பூகம்பம் ஏற்பட்டு கடல் நீரானது நாட்டிற்குள் புகுவதைதான் சுனாமி என்று நாம் சொல்கிறோம். உற்பத்தி முறைகள் சுனாமி உண்டாவதற்கு முக்கிய காரணம், கடலில் ஒரு கணிசமான அளவு நீர் இடப்பெயர்ச்சி ஆவதே ஆகும். நீர் இடப்பெயர்ச்சி ஆவதற்கு நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள்இபனிப்பாறைகள் காரணம். மிக அரிதாக சில நேரங்களில் விண்கற்கள் மற்றும் அணு சோதனைகள் மூலமும் சுனாமி உருவாகும். இவற்றால் உண்டாகும் அலைகள் பின்பு ஈர்ப்பு சக்தியால் நீடிக்கிறது. அலைகள் சுனாமி உருவாவதில் எந்தப் பங்கும் வகுப்பதில்லை. • கடலாழத்தில் ஏற்படும் எந்தப் பாதிப்பின் போதும் வரும். • கடலாழ பூகம்பத்தினால் வரும். • கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும். • மலையில் எரிமலை உண்டாகி அதனால் வரும். • வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை) • கடலில் இயற்பியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும். பண்புகள் சுனாமிகள் இரு வழிகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது. பெருமளவு சக்தியுள்ள பெரிய அலை (நீரலை) அதிக வேகத்தில் செல்வதாலும், அலைகள் பெரிய அளவு இல்லாவிட்டாலும் நிலப்பகுதியை மொத்தமாக அழித்து, எல்லாப் பொருட்களையும் தன்னுடன் எடுத்துச் சென்று விடுவதாலும் பெரும் சேதம் ஏற்படுகிறது. சாதாரண காற்று அலைகள் 100 மீட்டர் அலை நீளமும், 2 மீட்டர் உயரமும் உடையவை. ஆழமான பெருங்கடலில் ஒரு சுனாமி 200 கிலோ மீட்டர் அலை நீளமும், மணிக்கு 800 கிலோ மீட்டர் பயணிக்கும் சக்தியும் உடையது. அதன் மகத்தான அலைநீளம் ஒரு சுழற்சியை முடிக்க 20 அல்லது 30 நிமிடங்கள் எடுத்து 1 மீட்டர் அலை அலைவு கொண்டதாக உள்ளது. இதனால் ஆழ்கடல் பகுதியில் சுனாமியை அறிய முடிவதில்லை. அரிதாகக் கப்பல்கள் சுனாமி அலை கடப்பதை உணர்கின்றன. சுனாமி கரையை அணுகும் போதும், நீர் ஆழமற்ற இடத்திலிருக்கும் போதும் அதன் வேகம் ஒரு மணிக்கு 80 கிலோ மீட்டருக்குக் கீழ் குறைகிறது. அதன் அலைநீளமும் 20 கிலோ மீட்டராகக் குறைகிறது. ஆனால் அதன் வீச்சு மிகுந்த அளவில் வளரும். சில நிமிடங்களில் சுனாமி அதன் முழு உயரத்தை அடைந்து விடும். மிகப்பெரிய சுனாமியைத் தவிர, நெருங்கிய அலைகளை உடைக்க முடியாது. மாறாக ஒரு வேகமாக நகரும் அலைகளின் துவாரம் போன்று தெரியும். விரிகுடாக்கள் மற்றும் மிகவும் ஆழமான நீர்அருகில் சுனாமிகள் உண்டானால் அவை சுனாமியை ஒரு படிக்கட்டு போன்றும்இ ஒரு செங்குத்தான அலையாகவும் மாற்றுகிறது. இதன் காரணமாகத் தான் ஜப்பானிய மொழியில் இதனை 'துறைமுக அலை' என்று கூறுவர். சில நேரங்களில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், மீன்பிடிக்கும் போது எந்த அசாதாரண அலையையும் உணராமல், கரைக்குத் திரும்பி வந்த பின் கிராமமே பெரிய கடலலையால் அழிவுற்றதைக் கண்டுள்ளனர். சுனாமியின் உச்ச அலை கரையை அடையும் போதுஇ கடல் மட்டம் தற்காலிகாக உயரும். இதை 'ரன்' என்று குறிப்பிடப்படுகிறது. இவை கடல் மட்டத்திற்கு மேலிருந்து அளக்கப்படுகிறது. அலை உச்சிகளுக்கு இடையில் பலமடங்கு அலைகள் பலமணி நேரங்கள் தொடர்ந்து வந்தால், அதைப் பெரிய சுனாமி என்கிறோம். கரையை அடைந்த முதல் அலை உயர்ந்த ரன் இல்லை, சுனாமிகள் சுமார் 80ரூ பசிபிக் பெருங்கடலில் ஏற்படுறது. ஏரிகள் உள்ளிட்ட பெரிய நீர்ப்பரப்பு பகுதிகளிலேயே சுனாமி ஏற்படுகிறது. அவை பூகம்பங்கள்இ நிலச்சரிவுகள்இ எரிமலை வெடிப்புகள்,பனிப்பாறைகள் நகர்வு போன்றவைகளால் உருவாகிறது. வரலாறு கி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்ஸ், சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை 'பிலோப்போனேசியப் போர் வரலாறு' என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன்முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும். பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என குறிப்பிட்டுள்ளார். கி.பி. 365 இல் அலெக்சாண்டிரியாவில் மிகப் பெரிய அழிவுக்குப்பின் ரோமன்வரலாற்றாசிரியர் அம்மியனஸ் மாசில்லினுஸ் சுனாமி என்பது, நிலநடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து ராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்றார். அதாவது, நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது. மலையில் எரிமலையாக உருவெடுகிறது.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல்நிபுணர்கள் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி கி.மு. 365 ஆம் ஆண்டு சூலை 21 ஆம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் ஏற்பட்ட சுனாமி தாக்குதல்கள் இதுவரை உலகில் சுனாமி அலைகளின் தாக்குதலால் ஏராளமான உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அவை: 1700 ஜனவரி: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா, ஓரிகன், வாஷிங்டன் மற்றும் கொலம்பியா நகரங்களை பூகம்பம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோளில் 9 புள்ளிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது. 1730 ஜூலை: சிலி நாட்டில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள். 1755 நவம்பர்: போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் பலியானார்கள் 1868 ஆகஸ்ட்: சிலியில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள்இ தென் அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர். 1906 ஜனவரி: ஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில் ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள் 1946 ஏப்ரல்: யுனிமாக் தீவுகளில் ரிக்டர் அளவில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்கஇ 165 பேர் பலியானார்கள். 1960 மே: தெற்கு சிலியில் ரிக்டர் அளவில் 9.5 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1716 பேர் பலியானார்கள். 1964 மார்ச்: அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.5 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன்காரணமாக அலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில் சிக்கி இறந்தனர். 1976 ஆகஸ்ட்: பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர் பலியானார்கள். 2004 டிசம்பர்: இந்திய பெருங்கடலில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியாஇ இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள். 2007 ஏப்ரல்: சாலமன் தீவுகளில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள். 2009 செப்டம்பர்: தெற்கு பசிப்பிக் பகுதியில் ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர் பலியானார்கள். 2010 ஜனவரி: ஹெய்தியில் ரிக்டர் அளவில் 7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள். அக்டோபர்: இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர் பலியானார்கள். 2011 மார்ச்: ஜப்பானில் ரிக்டர் அளவில் 8.9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியது. ஆக்கம்: விபுலமாமணி தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா |
[Untitled] >