[Untitled]‎ > ‎

26.12.2013- தசாப்தத்திற்குள் நுழையும் ஆழிப்பேரலை..

posted Dec 26, 2013, 2:35 AM by Unknown user
இற்றைக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்றொரு தினத்தில் இடம்பெற்ற சம்பவத்தை இன்று உலகமே நினைவுகூருகிறது. ஆம் தெற்காசியாவை உலுக்கிய ஆழிப்பேரலையே அச்சம்பவமாகும்.இந்த துன்பியல் சம்பவத்தை இன்று நினைத்தாலும் நித்திரை வராதோர் உள்ளனர். அதனை நேரடியாக சந்தித்தோரில் சிலர் இன்னும் சுயநினைவுக்கு திரும்பாமலுள்ளனர் அல்லது வழமைக்குத் திரும்பாமலுள்ளனர். 
2004 இந்திய பெருங்கடல் நிலநடுக்கத்தின்விளைவாக ஏற்பட்ட சுனாமியினால்  தென்கிழக்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பாலும் பல நாடுகளில் இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மாலத்தீவு, சோமாலியா, மியான்மர், மலேஷியா, சீசெல்சு மற்றும் பல நாடுகள் பாதிக்கப்பட்டன. எனினும் இந்தோனேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகள் பாரிய பாதிப்பை சந்தித்தன.

பாதிப்பு

இந்தோனேசியா சுமாத்ராக் கடற்பரப்பில் பூகம்பம் ஏற்பட்டு 3 மணிநேரமாகியபோதிலும் இலங்கையில் அனர்த்த பிரிவினர் அதனை துல்லியமாக கூடிய கவனத்தோடு தெரிவிக்காதமை பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொள்ளக் காரணமாயமைந்ததை இன்றைய தினம் மீண்டும் வேதனையோடு நினைவுகூரவேண்டியுள்ளது. உரியவேளையில் தெரிவித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்குமென்பது வெள்ளிடைமலை.
 
இலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்திய சுனாமி தனியாக அம்பாறை மாவட்டத்தில் மட்டும் சுமார் 5,000 பேரை காவுகொண்டது. திருகோணமலை கடற்படை தளம் நீரில் மூழ்கியதாக கூறப்பட்டது.  சுமார் 1000 மேலும் இறந்த கணக்கிடப்படுகிறது முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கிழக்கும் பாதிப்புக்குள்ளானது.
 
2004 இலங்கை சுனாமி ரயில் பேரழிவு வரலாற்றில் நீர்நிலைகளிலும் பாரிய பாதிப்பு ஏற்பட்டது. பெரலிய  ரயில் பேரழிவு இருந்ததை அதில் பயணிதத் பயணிகள் அறிந்திருக்கமாட்டார்கள்.. ஒரு நெரிசல் மிகுந்த பயணிகள் ஒரு கடலோர ரயில் மீது அழிக்கப்பட்ட போது இது நிகழ்ந்தது.

ரயில் வரலாற்றில் வாழ்க்கையில் மிக பெரிய இழப்பை ஏற்படுத்தியது. 1700 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். முந்தைய ரயில் பேரழிவு விட அதிகமாக இருந்தது. அதாவது 1981 ல் இந்தியா பீகார் ரயில் பேரழிவு பெரிதாகவிருந்தது..

ரயில்விபத்தில்  ஒரு சில பேர் தப்பி பிழைத்தனரென  மதிப்பிடப்பட்டுள்ளது இறப்பு எண்ணிக்கை குறைந்தது 1700 பேர், மற்றும் அநேகமாக 2,000 க்கும் மேற்பட்டோரில் 900   உடல்கள் மட்டுமே அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் என்றாலும் பலர் கடலுக்குள் என்று உறவினர்கள் மூலம் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் அன்று தெரிவிக்கப்பட்டன.

இலங்கையில் எதிர்பாராதவிதமாக இப்பேரழிவு  பெரிய அளவில் இடம்பெற்றதன் காரணமாக, இலங்கை அதிகாரிகளால் சமாளிக்க முடியவில்லை. வெளிநாட்டு உதவிகள் தேவைப்பட்டன.

இலங்கையிலேற்பட்ட  சுனாமி அனர்த்தத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் முரண்பாடாக காணப்பட்டபோதிலும் பின்னர் அதிகாரிகள் 30196 உறுதியாக  தெரிவித்தனர்..

பல்லாயிரக்கணக்கான வீடுகள் முற்றாக நாசமாக்கப்பட்டன.பல லட்சம் வீடுகள் பகுதியாக சேதமாக்கப்பட்டன. சில கிராமங்கள் குறிப்பாக  தம்பட்டை, அக்பர் கிராமம் போன்றன முற்றாக கபளிகரம் செய்யப்பட்டன.

இன்று அவற்றில் 95 வீதமானவை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தவிர வீடுகளில் இருந்து, பல ஹோட்டல்கள், அதே போல் கடைகள் சேதமடைந்துள்ளன தெரிவிக்கப்பட்டது.  தென் கடற்கரை விடுதகளில் அறுகம்பை விடுதிகளில் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மரணித்தமையையும் இவ்வண் குறிப்பிடதத்க்கது.

கிறிஸ்துமஸ் வார இறுதியில்.  இருபது ஆயிரம் படையினர் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவினர். இடையிடையில் சூறையாடல் பிறகு சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்; ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டன..மரணித்தவர்களின் மத்தியிலிருந்த நகைநட்டுக்களை திருடிய சம்பவங்களும் ஆங்காங்கே இடம்பெற்றுத்தான் இருந்தன. அதைவிட கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெற்றன.
 
இந்திய கடற்படை மருத்துவ குழு சுனாமி தாக்கி மணி நேரத்திற்குள் கொழும்பு வந்தது.  இறுதியில் இந்தியா 14 கப்பல்கள், கிட்டத்தட்ட 1000 இராணுவ அதிகாரிகள் மற்றும் பல ஹெலிகாப்டர்கள் அனுப்பி  நிவாரண முயற்சிகளைச் செய்தது.

மூன்று அமெரிக்க கடற்படை கப்பல்கள்  இலங்கைக்கு உதவவந்தது. ஜனவரி 6, 2005 இல், கனடிய 150 உறுப்பினர்கள் அனர்த்த உதவி பதில் குழு ஒரு கனடிய படைகள் குழு, இலங்கை வந்தடைந்தார். அணி நான்கு நீர் சுத்திகரிப்பு அலகுகள் கெர்ண்டு மருத்துவ, பொறியியல் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் வழங்கப்பட்டன.  மற்றொரு 50 உறுப்பினர்கள் ஜனவரி 8 ம் தேதி வந்தார். 

2004 இந்திய பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பூமியின் மேற்பரப்பில் ஏற்படுத்திய ஆற்றல் 1.1 × 10 17 என மதிப்பிடப்பட்டுள்ளது . இந்த ஆற்றல் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட  அணுகுண்டைவிட 1500 மடங்கு ஆகும்.

சுனாமி என்றால் என்ன?

சுனாமி என்பது ஜப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் 'துறைமுக அலை' என்று பொருள் சுனாமி சில நேரங்களில் பேரலைகள் எனக் குறிப்பிடப்படுகிறது. சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை, கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாக பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.

சுனாமி உண்மையில் அலைகள் இல்லை, ஏனெனில் சமீபத்திய ஆண்டுகளில்இ இத்தொடர் அறிவியல் சமூகத்தில் பயனிழந்து உள்ளது. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த இந்த வார்த்தை அதன் பொதுவான தோற்றத்திலிருந்து பெறப்பட்டது. இங்கு 'பேரலை' என்பது ஒரு நம்ப முடியாத உயர்அலை போன்ற தோற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பெயராகும். சுனாமி, கடலலை இரண்டும் கடலில் அலையை உருவாக்கி நிலத்தை நோக்கி செலுத்துகிறது. இதில் சுனாமியால் ஏற்படும் கடல் நீர் ஏற்றம் பெரிய அளவினதாகவும், அதிக நேரம் நீடிக்கக் கூடியதாகவும், அதனால் உண்டாகும் இயக்கம் மிகவும் அதிகமாகவும் இருக்கும்.

'அலை' என்ற வார்த்தைக்கு 'போல' அல்லது 'அதே தன்மை கொண்ட என்ற பொருளும் உண்டு. சுனாமி என்பது துறைமுகங்களில் ஏற்படும் அலை அல்ல என்று புவியியலாளர்கள் மற்றும் கடலியலாளர்களும் கருதுகின்றனர். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உண்டு.

தமிழில் 'ஆழிப்பேரலை என்று உள்ளது. ஆக்கினஸ் மொழியில் சுனாமியை 'பியுனா' அல்லது 'அலோன்' புலூக் என்பர். 'அலோன்' என்ற வார்த்தைக்கு பிலிப்பைன்ஸ் மக்களின் மொழியில் 'அலை' என்று பெயர். இந்தோனேசியாவின் மேற்கு சுமித்ரா கடற்கரையில் உள்ள சிமிலி தீவில் உள்ள மொழியில் 'சுமாங்' என்றும் சிகுலி மொழியில் 'எமாங்' என்றும் அழைப்பர்.

உற்பத்தி முறைகள்

சுனாமி உண்டாவதற்கு முக்கிய காரணம், கடலில் ஒரு கணிசமான அளவு நீர் இடப்பெயர்ச்சி ஆவதே ஆகும். நீர் இடப்பெயர்ச்சி ஆவதற்கு நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள் காரணம். மிக அரிதாக சில நேரங்களில் விண்கற்கள் மற்றும் அணு சோதனைகள் மூலமும் சுனாமி உருவாகும். இவற்றால் உண்டாகும் அலைகள் பின்பு ஈர்ப்பு சக்தியால் நீடிக்கிறது. அலைகள் சுனாமி உருவாவதில் எந்தப் பங்கும் வகுப்பதில்லை.

கடலாழத்தில் ஏற்படும் எந்தப் பாதிப்பின் போதும் வரும்.

கடலாழ பூகம்பத்தினால் வரும்.

கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.

மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.

வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)
 
கடலில் இயற்பியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும்

அதிர்வினால் உருவாக்கப்பட்ட சுனாமி

கடல் படுகையில் திடீரென ஏற்படும் மாற்றதால் மேலிருக்கும் தண்ணீர் செங்குத்தாக இடமாற்றம் அடைவதால் சுனாமி உருவாகும். டெக்டானிக் நிலநடுக்கங்கள், பூமியின் புவி ஓடு உருக்குலைவதால் உண்டாகும், இது கடலுக்கு அடியில் ஏற்படும் போது சிதைக்கப்பட்ட பகுதியிலுள்ள தண்ணீர், சமநிலையில் இருந்து இடம் பெயர்கிறது. டெக்கான் தட்டுகளின் தவறான சுழற்சி காரணமாக, செங்குத்தாக நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது. இயக்கத்தில் ஏற்படும் சாதாரண தவறுகளாலும் கடல் படுகையில் இடப்பெயர்ச்சி ஏற்படும். ஆனாலும் இவை பெரிய சுனாமியை உண்டாக்குவது இல்லை. சுனாமிகள் ஒரு சிறிய அலை வீச்சும், மிக நீண்ட அலை நீளமும் உடையவை சாதாரண கடல் அலை 30 அல்லது 40 மீட்டர் அலைநீளம் உள்ளவை. ஆனால் சுனாமி அலைகள் சில நூறு கிலோ மீட்டர் நீளம் உடையவை. இவை கடல் பரப்பைவிட 300 மில்லி மீட்டர் மேலே சிறிய வீக்கம் போன்று உருவாகும். அவை தாழ்வான நீலை அடையும் போது மிக அதிக உயரமாக மேலெழுகிறது.
 
சுனாமியின் சிறிய அலைகூட கடலோரப்பகுதியை மூழ்கடித்து விட முடியும். ஏப்ரல் 1946 அலாஸ்காவில் அலேடன் தீவுகளுக்கு அருகில் 7.8 ரிக்டர் அளவுகள் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் 14 மீட்டர் உயரத்திற்கு அலை மேலே எழுந்து ஹவாய் தீவில் உள்ள ஹிலோ என்ற இடத்தையே அழித்து விட்டது. பசிபிக் பெருங்கடல் தரையில் அலாஸ்கா கீழ்நோக்கித் தள்ளப்பட்டதால், உண்டான பூகம்பமே இதற்குக் காரணம். குறுகும் எல்லைகளில் இருந்தும் ஸ்டாரிக்கா என்ற இடத்தில் 8,000 வருடங்களுக்கு முன் சுனாமி தோன்றியது. கிராண்ட் பேங்க் 1929, பப்புவா நியு கினியா 1998 (டப்பின் 2001) சுனாமிகள் ஏற்படக் காரணம் பூகம்பத்தின் மூலம் உண்டான வண்டல் கடலில் சென்று கலந்ததால் உண்டானது. ஸ்டாரிக்கா வண்டல் தோல்விக்கு சரியான காரணம் தெரியவில்லை. அதிகப்படியான வண்டல்கள், ஒரு நிலநடுக்கம் அல்லது எரிவாயு ஹைட்ரேட் வெளியானது(மீத்தேன் போன்ற வாயுக்கள்) காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாம். 1960 வால்டிவியா பூகம்பம் (9.5 ஆறு), 1964 அலாஸ்கா பூகம்பம் (9.2 ஆறு), 2004ல் இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் 2011ல் தோஹூ பூகம்பம் (9.0 ஆறு) போன்றவை சமீபத்தில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நீள் ஊடுருவு பூகம்பங்கள். ஜப்பானில் சிறிய (4.2 ஆறு) பூகம்பம் ஏற்பட்டு அருகிலுள்ள கரையோரப் பகுதிகளை ஒரு சில நிமிடங்களில் பாழ்படுத்தியது

வரலாறு
கி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்ஸ், சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை 'பிலோப்போனேசியப் போர் வரலாறு' என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன்முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும். பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என குறிப்பிட்டுள்ளார். கி.பி. 365 இல்  மிகப் பெரிய அழிவுக்குப்பின் ரோமன் வரலாற்றாசிரியர் அம்மியனஸ் மாசில்லினுஸ் சுனாமி என்பதுஇ நிலநடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து ராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்றார். அதாவதுஇ நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது.

கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது. மலையில் எரிமலையாக உருவெடுகிறது.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு. 365 ஆம் ஆண்டு சூலை 21 ஆம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டது ஜப்பான் நாடு தான். 2004ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் மிக மோசமான ஆழிப்பேரலை காரணமாக 230,000 மக்கள் உயிரிழந்தனர். சுமித்ரா பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் அங்கு சுனாமிக்கான வாய்ப்புகள் அதிகம்.2004 ஆம் ஆண்டில், டிசம்பர் 26 ஆம் நாளன்று, யுரேஷியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பர்மா நிலத்தட்டும், இந்தோ-ஆஸ்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகிய இந்திய நிலத்தட்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்திரா தீவில், கடலுக்கடியில் மோதியது.

அதனால் ஏற்பட்ட பூகம்பத்தால் தோன்றிய அலைகள் தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது. இதுவே 2004 ஆம் ஆண்டின் மிகப்பெரிய இயற்கை அழிவாகக் கருதப்பட்டது. இது 2004 ஆம் ஆண்டு - இந்தியப் பெருங்கடலின் பூகம்பமும், ஆழிப்பேரலையும் எனப்படுகின்றது.

பண்புகள்

சுனாமிகள் இரு வழிகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது. பெருமளவு சக்தியுள்ள பெரிய அலை (நீரலை) அதிக வேகத்தில் செல்வதாலும், அலைகள் பெரிய அளவு இல்லாவிட்டாலும் நிலப்பகுதியை மொத்தமாக அழித்து, எல்லாப் பொருட்களையும் தன்னுடன் எடுத்துச் சென்று விடுவதாலும் பெரும் சேதம் ஏற்படுகிறது. சாதாரண காற்று அலைகள் 100 மீட்டர் அலை நீளமும், 2 மீட்டர் உயரமும் உடையவை. ஆழமான பெருங்கடலில் ஒரு சுனாமி 200 கிலோ மீட்டர் அலை நீளமும், மணிக்கு 800 கிலோ மீட்டர் பயணிக்கும் சக்தியும் உடையது. அதன் மகத்தான அலைநீளம் ஒரு சுழற்சியை முடிக்க 20 அல்லது 30 நிமிடங்கள் எடுத்து 1 மீட்டர் அலை அலைவு கொண்டதாக உள்ளது. இதனால் ஆழ்கடல் பகுதியில் சுனாமியை அறிய முடிவதில்லை. அரிதாகக் கப்பல்கள் சுனாமி அலை கடப்பதை உணர்கின்றன. சுனாமி கரையை அணுகும் போதும், நீர் ஆழமற்ற இடத்திலிருக்கும் போதும் அதன் வேகம் ஒரு மணிக்கு 80 கிலோ மீட்டருக்குக் கீழ் குறைகிறது. அதன் அலைநீளமும் 20 கிலோ மீட்டராகக் குறைகிறது. ஆனால் அதன் வீச்சு மிகுந்த அளவில் வளரும். சில நிமிடங்களில் சுனாமி அதன் முழு உயரத்தை அடைந்து விடும். மிகப்பெரிய சுனாமியைத் தவிர, நெருங்கிய அலைகளை உடைக்க முடியாது. மாறாக ஒரு வேகமாக நகரும் அலைகளின் துவாரம் போன்று தெரியும்.

விரிகுடாக்கள் மற்றும் மிகவும் ஆழமான நீர்அருகில் சுனாமிகள் உண்டானால் அவை சுனாமியை ஒரு படிக்கட்டு போன்றும், ஒரு செங்குத்தான அலையாகவும் மாற்றுகிறது. இதன் காரணமாகத் தான் ஜப்பானிய மொழியில் இதனை 'துறைமுக அலை' என்று கூறுவர்.

சில நேரங்களில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், மீன்பிடிக்கும் போது எந்த அசாதாரண அலையையும் உணராமல், கரைக்குத் திரும்பி வந்த பின் கிராமமே பெரிய கடலலையால் அழிவுற்றதைக் கண்டுள்ளனர். சுனாமியின் உச்ச அலை கரையை அடையும் போது, கடல் மட்டம் தற்காலிகாக உயரும். இதை 'ரன்' என்று குறிப்பிடப்படுகிறது. இவை கடல் மட்டத்திற்கு மேலிருந்து அளக்கப்படுகிறது. அலை உச்சிகளுக்கு இடையில் பலமடங்கு அலைகள் பலமணி நேரங்கள் தொடர்ந்து வந்தால், அதைப் பெரிய சுனாமி என்கிறோம். கரையை அடைந்த முதல் அலை உயர்ந்த ரன் இல்லை, சுனாமிகள் சுமார் 80ரூ பசிபிக் பெருங்கடலில் ஏற்படுறது. ஏரிகள் உள்ளிட்ட பெரிய நீர்ப்பரப்பு பகுதிகளிலேயே சுனாமி ஏற்படுகிறது. அவை பூகம்பங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள் நகர்வு போன்றவைகளால் உருவாகிறது.

இனியாவது அனர்தத் முன்னெச்சரிக்கைகளைப் பேணி உயிர் உடைமைகளைப் பாதுகாப்போமாக.

 
ஆக்கம்: வி.ரி.சகாதேவராஜா
Comments