"" முத்தமிழ் வித்தகர் வாழ்க மாதோ "" (அன்புடன் கே.சீ.கே. ஜெர்மனி 15.7) சீர்மிகுந்த காரையூரின் சீராளர்; செகம்புகழும் முத்தமிழ் தந்த பேராளர்; பங்குனி இளவேனில் திருநாளில், கதிரெனவே அவதரித்தார் மயில்வாகனன் . நேர்த்தியுடன் பாநெய்த தறியாளர்; நிலையறிந்து நூலிழைத்த குறியாளர்; வித்தகர் செவ் வாய்மலர, உருவான பைந்தமிழ்ச் சொல்தங்கக் கருவூலம். கல்வியினால் காழ்ப்புதன் னிடமில்லாமல் கவிக்குலத்து முன்னவரைப் படம்பிடித்தார்; ஜாதி புல்முளைத்தே இருளடைந்த இந்நாட்டை, பொலிவாக்கும் திருப்பணிக்கே வந்துதித்தார். முந்தையரின் புகழலையில் பொருந்தியதால், முகிழ்ந்தகடற் செல்வி ஆழம் இருந்தவாறே மதங்கசூளாமணி,ஆங்கிலவாணி பாலித்தாள்; யாழ்நூல் தொடுத்ததனை மாலையிட்டார். பாவானம் பார்த்தறியா விடிவெள்ளி; ஈழத்து ஏழை பெண் கல்வி வாழ்வு தமிழ் விடுதலையின் தீக்கொள்ளி; கண்ணகி மாகாளியம் மகாசக்தி, அருட்சக்தி, முத்தமிழாய் வந்ததமிழ்ப் பெரும்சக்தி. வளர்கின்ற பொற்காலம் தமிழனுக்கே வாராதோஎன விசனிக்கின்ற பொழுதினிலே களமிறங்கித் துறைதோறுமெழுதிவைத்தார்; ஈழமதில் மனிதநேயம் நாடிநின்றார் புலர்காலைப் பொழுதுவரும் ஞாயிறுபோல், தமிழுக்கே எழுத்தாயுதப் பாயிரத்தால் தளர்வின்றிச் சமூகவானில் சிறகடித்தே, சமத்துவத்தைத் தாரணிகேட்க முரசடித்தார் செந்தமிழ்ப் பாலதினில் மொய்ம்புறவே, தேசபக்தி, தெய்வபக்தி நெய்யெடுத்தார்; வந்தனைகள் புரிந்துநலம் சூழ்ந்திடவே, வையமெலாம் விபுலர்புகழ் வாழ்கமாதோ ! அகிலமெல்லாம் வித்தகர் வாழ்கமாதோ !! |
[Untitled] >