[Untitled]‎ > ‎

28.07.15- துணிவு..

posted Jul 28, 2015, 3:31 AM by Unknown user

   """ துணிவு """

எத்தனையோ இடர்பாடுகள்
நம் இருள்சூழ்ந்த நாட்கள்..
தனிமையான தருணங்கள்
அத்தனையும் வென்றிடலாம்
நாம் துணிவுடன் செயல்பட்டால் !

ஜாதியால் அடிமைப்பட்ட தமிழர்களை 
தன் அன்பு + அறிவால் வென்று 
ஜாதி வெறியரிடமிருந்து  மீட்டது 
வித்தகர் விபுலரின் துணிவு !

வறுமையென்று வாடிடாமல்
அயராத உழைப்பால்
அணுச்சக்தியைக் கண்டுபிடித்தது
அப்துல்கலாமின் துணிவு !

துணிந்த மனதிற்கு துன்பமில்லை !
தோல்வியென்பது துணிந்தவனுக்கில்லை !
சொல்லில் துணிவு வேண்டும் !
சோர்ந்திடும் நேரங்களில்
மனதில் துணிவு வேண்டும் !

பேச்சில் துணிவு வேண்டும் !
பெரும்வெற்றி அடையும் வரை - அது
நிலைத்திட வேண்டும் !

சிந்தனையில் துணிவு வேண்டும் !
சிகரமடையும் வரை - அது
தொடர்ந்திட வேண்டும் !

வாழ்நாளெல்லாம் துணிவுடன்
வாழ்ந்திட வேண்டும் - அது
மற்றவர்களை வாழவைத்து
சிறப்பித்திட வேண்டும் !

சுயநல அழிக்கும் சக்திகளுக்குத்
துணைபோக வேண்டாம் - 
துணிவு ஆக்கங்களை உருவாக்கி
ஊக்கமுடன் செயல்படவேண்டும் !
     நம் துணிவு !

துணிச்சலுடன்..குமார் 
கே.சீ.கே.-ஜெர்மனி.
Comments