சேவையே நோக்கமென்று ஆரம்பித்தீர் இணையமொன்று அத்தனை தடையும் வென்று ஐந்தாண்டு பூர்த்தியின்று கலைநயத்தோடு புகைப்படமும் கலாச்சாரம்பேண எவ்விடமும் உண்மை தமிழ் உணர்வுடனும் சேவைகள்தான் புரிந்தீர் மழலை செல்வங்களின் புலமை பாராட்டி மங்காத புகழ்கொண்ட காரைமண் நிழல்காட்டி கண்காணா தொலை மக்களுக்கு நினைவூட்டி மகத்தான சேவையேதான் புரிந்தீர் உண்மைகளை உரத்துச் சொல்லி தீமைகளை விலக்கித் தள்ளி மக்களின் விடிவினை எண்ணி விபுல வான் மிளிரும் விடி வெள்ளி துரோகங்கள் துவண்டுவிட எதிர்ப்புக்கள் எரிந்துவிட கடந்த இந்த ஐந்தாண்டைவிட ஆயிரம் ஆண்டுகள் புகழ் மட்டும் கேட்டுவிட வாழ்த்துக்கள்...... ஆக்கம் : நிறோஷன் |
[Untitled] >