வான் நதியிது என்றும் வழிநடுவே நின்றிடுமோ……? ஆயிரம் தடை வரினும் ஆழியடையாமல் சென்றிடுமோ…? தடைபல கடந்தோடிய தன்மான நதியன்றோ…….? தவளைகள் ஒலி கேட்டு தளர்வுகள் கண்டிடுமோ…….? வளைந்து செல்வதனால் வலிதற்றது ஆகிடுமோ…..? வலிகள் தரும் உமக்கும் வளம் சேர்த்து ஓடுமல்லோ…..? காரைமண் கண்ட இணையநதி இமயம்வரை எம்மவர் புகழை இசைந்து கூறிடாமல் இடைநடுவே நின்றிடுமோ……? |
[Untitled] >