[Untitled]‎ > ‎

29.12.16- ஈழக்கூத்தரங்கத்தில், 1960 களின் பின்னரான செயற்பாடுகள்..

posted Dec 28, 2016, 5:10 PM by Habithas Nadaraja
ஏறத்தாழ கி.பி 250 க்கு முற்பட்ட காலத்திலேயே கோடியர்,வயிரியர்,கண்ணுளர்,பொருநர் போன்ற கூத்தர் குழுக்கள் இருந்துள்ளனர் என்பதை சங்கஇலக்கிய Áல்களுக்கூடாக அறியமுடிகிறது.அதாவது கூத்தர்கள் சங்க காலத்திலேயே ஆற்றுகை செய்துள்ளனர் என்பதற்கான சான்றாதாரங்கள் திருமுருகாற்றுப்படை, கலித்தொகை தவிர்ந்த ஏனைய பதினைந்து கீழ்க்கணக்கு Áல்களுக்கூடாக திறமான தடயங்களை பெறமுடிகிறது.சான்றாக அகநாÁறில் வாத்தியக்கருவிகள் பற்றியும்,புறநாÁறில் அளிக்கை நிகழ்ந்ததை பற்றியும்,பட்டினப்பாலையில் மேடையமைப்பு பற்றியும் குறிப்பிடப்படுகின்றது.

இந்ல்களுக்கூடாக கூத்துக்களங்கள்,கூத்தாற்றுகைகள் நிகழ்ந்துள்ளன என்பதை அறுதியிட்டுக்கூறமுடியும்.பன்னெடுங் காலமாக ஆடப்பட்டுவரும் ஈழக்கூத்தானது சுமார் 17 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியிலிருந்து தான் ஆடப்பட்டு வந்திருக்கின்றது என்பதற்கு ஆதாரமாக “ஈழத்தின் முதல் கூத்துப் பனுவலான கணபதி ஐயரின் (1709 - 1784) வாளபிமன் கூத்துப்பிரதியை ஆதாரமாகக் குறிப்பிடலாம்.”
மரபுவழிக்கூத்தின் அடிப்படையை வைத்துக்கொண்டே 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மையாக்கம் என்ற பெயரும் அதனைத் தொடர்ந்து சிற்சில மாற்றங்களுடன் சமூக உள்ளடக்கத்துடனும் வளர்ச்சியடைந்து வரும் வேளையில் 2002 ஆம் ஆண்டிலிருந்து மீளுருவாக்கம் எனும் பரிமாணத்துடன் கூத்தரங்கானது அன்றாடம் செயற்பாடு சார்ந்து நிகழ்த்தப்பட்டவண்ணமுள்ளது.இவ்வாறு கூத்தரங்கானது இற்றை வரைக்கும் இரு பரிமாணம் பெற்று விளங்கினும் ஊர்களில் ஆடப்படும் மட்டக்களப்பு தென்மோடி,வடமோடி கூத்தரங்கானது இற்றைவரைக்கும் எந்தவித பிசகுமின்றி பாரம்பரிய இயல்புடன் ஆடப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாண பிரதேச வடமராட்சியில் காத்தான்கூத்தும்,பருத்தித்துறையில் நாட்டைக்கூத்தும் ஏனைய தென்மோடி,வடமோடி,மகிடிக்கூத்து என்பனவும் நிகழ்த்தப்பட வன்னியில் கோவலன்கூத்தும்,காத்தான்கூத்தும்,தென்மோடிக்கூத்தும் ஆடப்பட மன்னார் பேசாலையில் உடக்குபாஸ் கூத்துடன் ஏனைய வாசாப்பு,வடபாங்கு,தென்பாங்கு என்பனவும் பயில்நிலையிலுள்ளன.மலையகப் பெருந்தோட்டங்களில் காமன்கூத்து,அர்ச்சுனன் தபசு,பொன்னர் சங்கர் போன்றனவும் ஆடப்பட்டவண்ணமுள்ளன.சிற்சில இடங்களில் ஐரோப்பியர்களின் வருகை(1505 -1948) காரணமாக கூத்துக்கள் பாரம்பரியக்கூத்துக்குரிய அடிப்படை இயல்புகளை இழக்கலாயின.

இலங்கையின் பல பாகங்களிலும் ஆடப்பட்ட கூத்துக்கள் ஆரம்ப காலங்களில் இந்து,இதிகாச,புராண கதைகளை அடிப்படையாக்கொண்டிருந்தது.ஐரோப்பியர்களின் வருகையினால் இலங்கையின் யாழ்ப்பாணத்தின் கரையோரப்பகுதிகள்,மன்னார்ப்பகுதி,சிலாபம்,நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களில் ஆடப்பட்ட கூத்துக்கள் கத்தோலிக்கக் கதைகள்,கத்தோலிக்கப் பாத்திரங்கள்,மதப்பிரச்சாரம் சார்ந்து அமைந்திருந்தது.“கத்தோலிக்க மதகுருமார்களுக்கு ஆட்டமுறைகள் சிக்கலாகயிருந்ததன் காரணமாக வட்டக்களரியையும்,ஆடலம்சங்களை விடுத்து பாடலில் அதிக கவனம் செலுத்தினர்.மன்னார் பகுதியில் ஏறத்தாழ 150 க்கு மேற்பட்ட கிறிஸ்தவ கூத்துப்பிரதிகளும்,யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க செல்வாக்குமிக்க இடங்களில் 1810 – 1915 வரைக்குமான காலப்பகுதிக்குள் 74 கூத்துக்களும் ஆடப்பட்டதாக மு.சி.ஆசிர்வாதம் தாம் எழுதிய Áலொன்றில் குறிப்பிடுகின்றார்.இதிலிருந்து பாரம்பரிய ஆட்டக்கூத்தின் தன்மையை அதன் தனித்துவத்தையும் உயிர்த்துடிப்பையும்(வட்டக்களரி) மேற்கத்தேயர் அறிந்ததைக் கூட எம்மவர் பலர்( 1962 – 1998 )  அறியவில்லை எனலாம்.

கூத்து,கூத்தரங்கத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டே செம்மையாக்கம்,சமூக உள்ளடக்கம், மீளுருவாக்கம் என்ற சிந்தனைகள் மூன்றாம் உலக நாடுகளிலுள்ள எம்மவர் மத்தியிலிருந்து தோன்றிய கொள்கைகளாகவுள்ளன.ஈழத்திலே பயில்நிலையிலுள்ள கூத்து மரபானது பிரதேசத்துக்கு பிரதேசம் ஆடல்,பாடல்,மேடையமைப்பு,அவைக்காற்றுகை முறை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு பிரதேசங்களில் தத்தமக்குரிய இயல்புகளையுள்வாங்கி இன்றுவரை நிகழ்த்தப்பட்டவண்ணமுள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் வாழும் குறிப்பாக மட்டக்களப்புத்தமிழர் மத்தியிலே ஆடப்படும் பறைமேளக்கூத்து,மகிடிக்கூத்து,வசந்தன்கூத்து,வடமோடிக்கூத்து,தென்மோடிக்கூத்து போன்றவை அன்றிலிருந்து இன்று வரைக்கும் பாரம்பரிய முழுமையினை பின்பற்றி ஊர்களிலும்,நகர்ப்புறங்களிலும் ஆடப்பட்டு வருகின்றது.இத்தன்மையினை ஏனைய பிரதேசக் கூத்துக்களில் காணமுடியாதுள்ளது.கூத்தரங்குகளை மரபுவழிக் கலையெனவும்,பாரம்பரியக்கலையெனவும்,உயிரணுவின் அரங்க வடிவங்கள் எனவும் அழைக்கலாம். 

இலங்கையரங்க வரலாற்றில் கலாசார அமைச்சின் கீழ் கலைக்கழகம் 1956 இல் நிறுவப்பட்டதுடன் அதன் தலைவராக கந்தசாமி கணபதிப்பிள்ளை விளங்க 1957 - 1974 வரையான காலப்பகுதியில் தலைவராக சு.வித்தியானந்தன் அவர்கள் விளங்க 1975 இல் அதன் தலைவராக கா.சிவத்தம்பி விளங்கினார் என்றால் மிகையாகாது. வித்தியானந்தன் அவர்கள் 1957 ஆம் ஆண்டு காலத்தில் கலைக்கழகத் தலைவராக இருந்த காலப்பகுதிக்குள் கூத்தைப் பேணவும் அது பிறந்த இடமான ஊர்களிலேயே(கிராமங்கள்) செல்வாக்குப் பெறவும்,நகர்ப்புற மக்களின் செல்வாக்குப் பெறவும் உறுதுணையாக இருந்தார்.சுப்பிரமணியம் வித்தியானந்தன் அவர்கள் கூத்து செம்மையாக்கத்தின் மூலம் கூத்தை மக்கள் கலையாக மக்களிடத்தே தக்க வைத்தக்கொள்வதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டார் எனலாம்.

எமது சுதேசிய கலைகளுக்குள் ஒரு தமிழ்த்தேசிய நாடக வடிவத்தினை உருவாக்கும் நோக்கோடு ஈழத்தவர்களின் கூத்துக்களை குறிப்பாக மட்டக்களப்பு வடமோடி,தென்மோடி கூத்துக்களை அடிப்படையாக வைத்து சுப்பிரமணியம் வித்தியானந்தன் அவர்கள் தனது சிந்தனைக்கேற்ப கொழும்பு ,பேராதனைப் பல்கலைக்கழக மாணாக்கரைக்கொண்டு வடமோடியான கர்ணன் போர்(1962), தென்மோடியான நொண்டி(1963), வடமோடியான இராவணேசன்(1964), வடமோடியான வாலிவதை (1967 – 1968 ) போன்ற கூத்துக்களை பல்கலைக்கழகங்களிலும் ஏனைய பல்வேறு இடங்களிலும் மத்தியதர வர்க்கத்தினருக்காக செம்மையாக்கம் செய்து தயாரித்ததுடன் கற்றோரின் மதிப்பையும் கௌரவத்தையும் பெறச்செய்தார்.எந்தவொரு விடயத்தையும் முன்னின்று முதன் முதலாக செய்வதென்பது இலகுவான காரியமல்ல என்பதை நாமனைவரும் முதற்கண் விளங்கிக்கொள்ள வேண்டும்.ஈழத்துத் தமிழ் அரங்கப் பரப்பில் சுமார் இரண்டு Áற்றாண்டு காலமாக ஆடப்பட்டு வந்த பாரம்பரியக் கூத்துக்கலையை செம்மையாக்கம் செய்ததென்பது மிகப்பெரிய பாரியவெற்றி என்றே கூற வேண்டும். ஈழத்தமிழருக்குரிய தனித்துவமான கலை மரபு ஒன்றை வளர்த்தெடுப்பதற்கு வித்தியானந்தனின் பங்கும் பணியும் அளப்பரியதாகவிருந்தது.

தென்மோடிக்கூத்துப் பனுவலான அலங்பாரரூபன் 1962 ஆம் ஆண்டிலும் மன்னாரில் ஏட்டில் இருந்த என்டிறீக்கு எம்பரத்தோர்(1964),மூவிராசாக்கள்(1966),ஞானசௌந்தரி(1967)போன்ற கூத்துப் பனுவல்களைப் பதிப்பித்ததுடன் கூத்து சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளையும்,கூத்துப்போட்டிகளையும் நடாத்தி பிரதேசக்கூத்துக்கள் வளர பேராசிரியர் சு.வித்தியானந்தன்முன்னோடியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழுப்பு பல்கலைக்கழக இந்து மாணவர் சங்கம் சிலாபத்திலிருந்த வாளபிமன் கூத்தினையும்,மார்க்கண்டன் கூத்தினையும் 1963 இல் அச்செற்றியது.இவ்விரு கூத்துக்களையும் தொகுத்தவராக கா.சிவத்தம்பி(1932 – 2011.07.06) விளங்குகின்றார்.புலவர் மரியாம்பிள்ளை பாடிய விசயமனோகரன் நாடகத்தை மு.வி.ஆசிர்வாதம் 1968 இல் வெளியிட்டார்.

1964,1966,1969,1970 ஆம் ஆண்டுகளில் மன்னாரிலும்மட்டக்களப்பிலும் அரச ஆதரவில் இயங்கிய பிரதேச கலாமன்றங்களின் ஆதரவில் கலைக்கழகத்தின் ஆதரவுடன் அண்ணாவிமார் மகாநாடுகள் நடாத்தப்பட்டன.1969 களில் மட்டக்களப்பு பிரதேச கலாமன்றத்தின் முதற்பணியாக கூத்துப் பிரதிகள் வெளிவருவது அன்று வரவேற்கத்தக்கதாக இருந்தது.அதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் என்றால் மிகையாகாது.மன்னாரில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய திரு.தேவநேசன் நேசையா அவர்கள் அப்பகுதியிலுள்ள நாடகங்கள் பலவற்றை நேரில் பார்வையிடவும்மேடையேற்றவும் மற்றும் அச்சிட்டு வெளிப்படுத்தவும் சந்தர்ப்பம் கிடைத்ததோடு அப் பணிகளுக்கு துணையாக பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு பிரதேச கலாமன்றத்தின் நாடகத் துறையிலான பணிகள் அனைத்துக்கும் ,அரசாங்க அதிபரான திரு.தேவநேசன் நேசையா அவர்களுக்கும் ஆலோசனைகள் கூறிக்கொண்டு ஒரு நிரந்தர ஆலோசகராக பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனுவுருத்திர நாடகத்துக்கு பதிப்பாசிரியராக பண்டிதர் வி.சீ.கந்தையா (1920.07.29) பணியாற்றுவது தனிச்சிறப்பை அளிக்கின்றதென்றும் இத்தொண்டுக்கு மிகப்பொருத்தமானவர் அவரே என்றும் அவரது Áல்களாகிய மட்டக்களப்புத் தமிழகம்,கண்ணகி வழக்குரை  என்பன அவரின் தகைமைக்குச் சான்று பகருகின்றன என்றுஅனுவுருத்திர நாடக மதிப்புரையில் வீ.சி.கந்தையா பற்றி, பேராசிரியர் சு.வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளார்.இவையெல்லாம் சு.வித்தியானந்தன் கலைக்கழக தலைவராகயிருந்த காலத்திலேயே நடந்தேறியது என்பதை மனங்கொள்ள வேண்டும்.சு.வித்தியானந்தன் அவர்களால் அண்ணாவியார் மாநாடானது மட்டக்களப்பு சென்மேரிஸ் கல்Âரியில் 1969.10.10 அன்று நடந்தேறியதை பலருமறிவர்.

வித்தியானந்தன் தயாரித்த படைப்புகள் பொருவாரியாக சாதாரண மக்கள் மத்தியில் வெற்றிபெறவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்த போதும் ஊர் ஊராகச் சென்று அவதானித்து,ஊக்கம் கொடுத்து கூத்துக்கலை புத்துயிர் பெறுவதற்காக உழைத்தது என்பதை பாரிய வெற்றியாகவே கொள்ளல் வேண்டும். 1950 தொடக்கம் 1960  காலப்பகுதியில் தமிழரின் சுதேசியத்தை எவரும் வெளிப்படுத்த முன்வராத போது முதன்முதலாக கூத்து சார்ந்து பல பணிகளை செய்து தமிழரின் தமிழ்த்தேசிய சுதேசியத்தை வெளிக்கொணர்ந்த பெருமை சு.வித்தியானந்தன் அவர்களையே சாரும்.கூத்து செம்மையாக்கம் மூலம் பாரம்பரியக் கூத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக 
பாரியளவிலான முயற்சிகளை மேற்க்கொண்டார் என்பதை நாமனைவரும் முதற்கண் விளங்கிக்கொள்ள வேண்டும். 

வித்தியானந்தன் தயாரித்த கூத்துக்களில் நடித்தவரான பேராசிரியர் சின்னையா மௌனகுரு அவர்கள் முதன் முதலில் சமூக உள்ளடக்கத்தினை புகுத்தி சமூகப் பிரச்சினைகளை வித்தியானந்தனின் பாணியில் சங்காரம்(1968) எனும் நாடகமாக தயாரித்திருந்தார்.1968 1970 காலப்பகுதிக்குள் புதிய கருத்துக்களை அடித்தளமாகக்கொண்டு பல தயாரிப்புக்கள் நிகழ்ந்ததையும் மறந்துவிடலாகாது.என்.கே.ரகுநாதனின் கந்தன் கருணையானது அம்பலத்தாடிகள் குழுவினரால் காத்தான்கூத்துப் பாணியில் நாடகமாக்கப்பட்டது.அன்றைய மாவிட்டபுர கந்தசுவாமி கோயில் நிர்வாக தர்மகர்த்தாக்களுக்கு கந்தன் கருணை நாடகவாக்கத்தின் ஊடாக பலத்த எதிர்ப்பை திடப்படுத்தினர்.கந்தன் கருனை நாடகமானது யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கூட்டு முயற்சியினாலேயே மேடையேற்றப்பட்டாலும் இந்நாடகவுருவாக்கத்துக்கு(அளிக்கை) மூலகாரணமாக செயற்பட்டவர் இளைய பத்மநாதன் அவர்களாவார் என்பதை ஈழத்து தமிழ்நாடக துறைசார்ந்தவர்கள் பலரும் மறந்தவிட்டனர் போலும். 1969 இல் முருகையனின் மேடைக்கவிதை நாடகமான கோபுரவாசல் அளிக்கையும் அன்றைய சமகால பிரச்சினைகளை வெளிப்படுத்தியதாக அமைந்தது.

கந்தன் கருணை(1974,79),சங்காரம்(1980), ஏகலைவன்(1988) போன்றனபுதிய கருத்துக்களை புதிய அமைப்பிலும்,கானகம் ஏகிய இராமன்(1973),விடிவு(1985),சக்தி பிறக்குது(1986) போன்றன பரதத்துடன் கூத்தினை இணைத்த முறைமையினையும்,விழிப்பு, புதியதொரு வீடு, பொறுத்தது போதும், முறுவல், அதிமானுடன் ,மண்சுமந்த மேனியர், தியாகத் திருமணம்,உயிர்த்த மனிதர் கூத்து, மனிதனும் மிருகமும்,மாயமான், விடுதலைக்காளி, கசிப்பு, போர் மண்ணிற் புனிதத்தாய் போன்றன கூத்து மரபு கலந்த நவீன நாடகங்களாகவும் அளிக்கை செய்யப்பட்டன.வித்தியானந்தனின் செம்மையாக்கமானது பிற்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு வளர்ச்சியுறுகிறது.கூத்து மரபு கலந்த நவீன நாடகங்களுள் கூத்தாட்டங்கள்,கூத்துப்பாடல்கள்,கூத்துத் தாளக்கட்டுக்கள்,கட்டியக்காரன் பாத்திரப்படைப்பு போன்ற இன்னோரன்ன விடயங்கள் உள்வாங்கப்பட்டிருந்தது.

நம்மைப் பிடித்த பிசாசுகள்,சரிபாதி,மழை, சக்தி பிறக்குது போன்ற தயாரிப்புகளுள்கூத்தின் வடிவத்துள் சமகால பிரச்சினைகளும் ,தப்பி வந்த தாடி ஆடு,வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள்  போன்றன கூத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுவர் நாடகங்களாகவும்,போர்க்களம்,மகாகவியின் புதியதொரு வீடு,நுஃமானின் அதிமானுடன்,நா.சுந்தரலிங்கத்தின் அபசுரம் ,ஞானியின் குருN~த்ரோபதேசம் ,அயனெஸ்கோவின் தலைவர் போன்றன பாரம்பரிய வடமோடிக்கூத்தின் ஆட்டமுறைகளை உள்வாங்கிய நவீன நாடகங்ளாக, சி.மௌனகுரு அவர்களால் தயாரிக்கப்பட்டன.

சங்காரம்(1968),யாருக்குச் சொந்தம்,கும்பகர்ணன் ,சக்தி பிறக்குது,மழை,சரிபாதி,நம்மைப் பிடித்த பிசாசுகள்,போர்க்களம்,உயிர்ப்பு,பரபாஸ்,ஓர் உண்மை மனிதனின் கதை,வனவாசத்தின் பின் காண்டவ தகனம்,,சுத்தமாக்குவோம் சுத்தமாக்குவோம்,தப்பி வந்த தாடி ஆடு,வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள்போன்ற நாடகப் பனுவல்களைசின்னையா மௌனகுரு எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சு.வித்தியானந்தன் கூத்துக்களை செம்மைப்படுத்த சி. மௌனகுரு அவர்கள் தப்பி வந்த தாடி ஆடு,வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள்,நம்மைப் பிடித்த பிசாசுகள்,போர்க்களம் போன்ற நாடகங்களுக்கு கூத்தாட்டங்களைப் பயன்படுத்தி நாடகங்களை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆற்றுகைக் கலையில் செயல்முறை மற்றும் கோட்பாட்டு அறிவுள்ளவர்களாக்கி சிருஸ்டித்துவம் கொண்ட கலைஞர்களுக்கூடாக அவைக்காற்றுகைக் கலைகளில் குறிப்பாக நாடகத்தில் பல புதிய பரிசோதனைகளை 2012 ஆம் ஆண்டிலிருந்து சி.மௌனகுரு தனது மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்துக்கூடாக செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.வடமோடிக்கூத்தின் சில கூறுகளையும் ஏனைய சில நடன இசைக்கூறுகளையும் இணைத்து இராவணேசன்,காண்டவ தகனம் போன்ற நவீன நாடகங்களைசான்றாக குறிப்பிடுகிறார்.

சிரேஸ்ட விரிவுரையாளரும்,சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளருமானகலாநிதி.சி.ஜெயசங்கர், 1990 காலப்பகுதியிலிருந்து கூத்து சார்ந்து ஊர்களுக்குள் செயற்பட்டு வருவதுடன் கிரேக்கரங்கு,ரோம காலஅரங்கு,மத்தியகால அரங்கு,மறுமலர்ச்சிக்கால அரங்கு போன்ற அரங்கங்களை விட பாரம்பரியக் கூத்தரங்கானது காத்திரமான அரங்காகவுள்ளதுடன் கற்றுக்கொள்வதற்கு தேவையான நிறைய படிப்பினைகளை உட்கொண்டுள்ளது எனவும்,கூத்தரங்குக்கு ஊடாக பல்பரிமாண திறமைகளையும், நிர்வாகத்துக்கு தேவையான முழு ஆற்றலையும்,உள ஆற்றுப்படுத்தலையும் உள்வாங்கலாம் என்பதும் சி.ஜெயசங்கர் அவர்களின் கூத்தரங்கு சார்ந்த எண்ணக்கருவாகவுள்ளது.

கூத்தரங்கின் சமுதாய அரங்கப் பண்பையும்,சமுதாய பல்கலைக்கழக அம்சங்களையும் சமகாலத்திற்குரிய வகையில் கருத்தியல் ரீதியாகவும் செயற்பாட்டு முறையாகவும் ,இன்றைய சமூகத்துக்காகமுன்னெடுக்கப்படும் சமுதாய அரங்கச் செயற்பாடே கூத்து மீளுருவாக்கமெனவும் கூத்து மீளுருவாக்கச் சிந்தனையானது 2002 ஆம் ஆண்டிலிருந்து பங்குகொள் ஆய்வுச்செயற்பாட்டின் மூலமாக தொடங்கப்பட்டு இன்று வரைக்கும் தொடர்செயற்பாட்டின் ஊடாக மீளுருவாக்கக் கூத்தாற்றுகைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்றும்,கூத்தின் அடிப்படையை மாற்றாமல் அதே நேரம் கட்டாயம் மாற்ற வேண்டிய கருத்துக்களை மாற்றி மீள உருவாக்குவதே கூத்து மீளுருவாக்கம் எனசி.ஜெயசங்கர் குறிப்பிடுகிறார்.

திறந்த வெளியில் மனிதர்கள் கூடிக்களிக்கும் களங்களாக கூத்தரங்குகளை சமகால நோக்கில் காத்திரமாக பயன்படுத்துவதுடன் முழுக்க முழுக்க சமுதாய ஆதரவிலும் அர்ப்பணிப்பிலும் இயங்குவனவாகவே மீளுருவாக்கக் கூத்துக்கள் இயங்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார்.

பெண் பிள்ளைகள் கூத்தாடுவதை விரும்பாத கூத்தாடினால் இழிவாகப் பார்க்கின்ற இந்த பொதுவான சூழலில் மீளுருவாக்க கூத்தாற்றுகைகளை செய்தது மட்டுமல்லாமல் கூத்தை எழுதுகின்ற ஆளுமையாளர்களாக பலர் உருவாக்கப்பெற்றிருப்பதும்மீளுருவாக்க கூத்தின் பாரிய வெற்றியாகவேயுள்ளது.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஏனைய பல்கலைக்கழகங்களை விட வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக நுண்கலைத்துறை மாணவர்கள் அன்றாடம் செயற்பாடு சார்ந்து கல்விகற்பதனைஅதாவது களத்தில் இறங்கிஊர்களுக்குள் சென்று ,மக்களுடன் வாழ்ந்து வேலை செய்யும் தன்மையினை அண்மைக்காலமாக காணமுடிகின்றது.மனித மனங்களை ஆற்றுப்படுத்தும்,அறியும் தன்மையானது அழகியற் துறை மற்றும்உளவியற் துறை சார்ந்து வேலை செய்பவர்களிடம் மட்டுமே காணப்படுவதுடன் கிழக்குப் பல்கலைக்கழக ,சுவாமி விபுலானந்தா நுண்கலைத்துறை மாணவர்கள் அன்றாடம் பாரம்பரியக் கூத்து சார்ந்த செயற்பாடுகளில்ஈடுபட்டவண்ணமுள்ளனர் என்பதனையும் கூத்துச்சமூகங்கள் அறிந்தவண்ணமுள்ளது.
அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் கடந்த ஐந்து வருட காலமாக ஆலய முன்றலில் நான்கைந்து நாட்களுக்கு பாரம்பரிய அரங்க ஆற்றுகைகளையும்,கைப்பணிக் காட்சிக்கூடத்தினையும்நடைமுறைப்படுத்தி, கோயிற்திருவிழாவுக்கு வரும் பல்லின சமூகங்களை பண்படுத்துவதனுடன் ஊக்கப்படுத்தி மற்றும் ஆற்றுப்படுத்தி வருவதனை பலரும் கண்ணுற்றிருப்பர்.

வித்தியானந்தன் அவர்கள் தனது அறிவுக்கெட்டிய வகையில் மத்தியதர வர்க்க சமூகத்தின் தேவைக்கேற்ப கூத்தை செம்மைப்படுத்த குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள்(1931.11.15) பாடசாலை மாணக்கருக்கு ஏற்ப கல்வியியல் அரங்கு,சமூக அரங்கினை உருவாக்க சி.ஜெயசங்கர் அவர்கள் இயந்திர மயமான தற்கால சூழலுக்கேற்ப கூத்தை அடிப்படையாக வைத்து மீளுருவாக்கக் கூத்துக்களை சமூகக்கலையாக சமூகத்திடத்தே கொண்டு செல்லும் நோக்கோடு கூத்தரங்குகளை பயன்படுத்தி வருகின்றார்.
பாரம்பரியக் கலை வடிவங்களை ஆற்றுகை செய்வதுடன்,பிற சமூகம் அறியாத பாரம்பரியக்கலை வடிவங்களை(வாகரை அம்பந்தனாவெளி புலிக்கூத்து) பிற சமூகங்களும் அறிந்து அதை பார்த்து ஆராய்வதுடன் அக்கலை வடிவங்களை நிகழ்த்தஅச்சமூகத்தை அன்றாடம் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தியவண்ணமுள்ளார் என்பதும்குறிப்பிடத்தக்கது.

வித்தியானந்தன் கூத்துக்கலையை செம்மைப்படுத்த பேராசிரியர் சின்னையா மௌனகுரு அவர்கள் வித்தியானந்தனின் பாணியைப் பின்பற்றியதுடன் கூத்தின் வடிவத்துள் சமகால எரியும் பிரச்சினைகளை நாடகமாக்க அதாவது மரபுவழிக்கூத்தின் அடிப்படையில் இராவணேசன் எனும் நாடகத்தை நெறியாள்கை செய்ய குறிப்பாக வித்தியானந்தனைப்போன்று மரபுவழியரங்கப் பண்புகளையுள்வாங்கி இராவணேசனை படச்சட்ட மேடையிலேயே தயாரிக்க கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்கள் கூத்தின் உயிர்த்துடிப்போடு வட்டக்களரியரங்கில் சிம்மாசனப்போர், சீதை சூர்ப்பனகை வதை,அபிமன்யு இலக்கணன் வதம்,அல்லியின் எதிர்வாதம்,சுபத்திரை கல்யாணம் போன்ற மீளுருவாக்கக் கூத்துக்களையும் சிறுவர் கூத்தான மழைப்பழம் போன்றவற்றையும் கூத்து சமூகங்களது வரவேற்புக்கு இணங்க தயாரித்துள்ளார். 

ஊர்க்கூத்துக்கார கலைஞர்களுடனும்,ஏனைய கலைஞர்களுடனும் வருங்கால இளம் தலைமுறையினருடனும் இணைந்து பல்வேறு கலை வடிவங்களை,பல்வேறு இனங்களை சமூகத்தினுள் தேடியலைகின்றார்.அதாவது இல்லாத விடயங்களை தேடமால் விளிம்பு நிலையில் இருக்கின்ற சமூகத்துக்குமுக்கியமாக தேவைப்படுகின்ற கலையாற்றுகைகளை நிகழ்த்த பல்வேறு துறைசார்ந்து செயற்படுகின்றார்.சான்றாக புலிக்கூத்தினையும் ஆதாரமாகக் கொள்ளலாம்.  

சிவஞானம்.ஜெயசங்கர் அவர்களின் பல்வேறு செயற்பாடுகளுள் கூத்து மீளுருவாக்கம் என்பதும் ஒருசிறு உயிர்த்துணிக்கையாகவுள்ளது.அதாவது கட்டமைக்கப்பட்ட,புனையப்பட்ட புராண இதிகாச கதைகளை,பாத்திரப்படைப்புகளுக்கூடாக மீளுருவாக்கம் செய்கின்றார்.தலித்தியம்,பெண்ணியம்சார்ந்து பாத்திரப்படைப்புகளை கூத்துச்சமூகத்துடன் கலந்துரையாடி சமூகத்தின் தேவையை உணர்ந்து பன்மைத்துவ சமூகத்தின் தேவைக்கேற்ப தயாரிக்கிறார்.

கண்ணகி –பாண்டியன்,சீதை - இராமன்,பாஞ்சாலி –பாண்டவர்கள், போன்ற பல்வேறு மீளுருவாக்;க கூத்துப் பாத்திர படைப்புகளுக்கூடாக தட்டியெழுப்பி சமூதாயத்தை கேள்வி கேட்க வைக்கின்றார்.குறிப்பாக கூத்துப் பாத்திரப் படைப்புகளுக்கு ஊடாக மனித சமூதாயத்தை எதிர்க்கணைகளை தொடுக்க வைக்கின்றார்.

லாநிதி சிவஞானம்.ஜெயசங்கர் அவர்கள் (1965.12.29) கூத்தின் அழகியலை உள்வாங்கி கருத்தியல் ரீதியாக மீளுருவாக்கக் கூத்துக்களை வட்டக்களரியிலேயே அரங்கேற்ற வைக்கின்றார்.எது எவ்வாறு இருப்பினும் கூத்தரங்கத்தை சமூகங்களினுள்ளே வாழ்தலுக்காக வைத்துக்கொள்ளும் தன்மையினை மீளுருவாக்கக் கூத்துக்கள் செயற்பாடு ரீதியாக செய்த வண்ணமுள்ளது.

கூத்துக்கலையானது 17 ஆம் Áற்றாண்டில் நிகழ்ந்ததைப் போலவே இன்றும் தொடர் செயற்பாடாக ஆடப்பட வேண்டும் என்ற பரந்த நோக்கத்திலேயே பரவலாக பல்வேறு பிரதேசங்களிலும்கூத்துச் சமூகங்கள் கூத்துக்கலையை ஆடிய வண்ணமுள்ளது.இந்நிலையினை பலர் உணர்ந்து அதைச்சென்று பார்க்க வேண்டிய தேவையுமுள்ளது.
வித்தியானந்தனின் செம்மையாக்கமானது ஒரு பரிமாணமாக அமைய பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் சமூக உள்ளடக்கம் 

பிறிதொரு பரிமாணமாக அமைய கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டு பணியானது இன்னொரு பரிமாணமாக அமைகின்றது.ஈழக்கூத்தின் பரிமாணமாக பேரா.சு.வித்தியானந்தன் ,பேரா.சி.மௌனகுரு,கலாநிதி சி.ஜெயசங்கர்போன்ற மூன்று ஆளுமையாளர்களின் செயற்பாடு அமைந்துள்ள போதும் பெருவாரியாக செம்மையாக்கம்,மீளுருவாக்கம் எனும் இரு பெரும் திருப்புமுனைகளேதெட்டத்தெளிவாக தென்படுவதை கூத்து சமூகங்களும் கல்வியியலாளர்களும் பெரிதும் அறிந்திருப்பர்.இதன் பிற்பாடும் பிற்பட்ட காலத்திலும் ஆளுமையாளர்களது சிந்தனைக்கேற்ப இன்னுமொரு பரிமாணமும் தோன்றலாம்.அது இயல்பும் நியதியுமாகும். 

சுருக்கமாகக்கூறின் ஈழக்கூத்தரங்கானது ஒவ்வொரு பிரதேசங்களிலும் தத்தமக்குரிய அடிப்படைப்பண்புகளுடன் ஆடப்பட்டு வரும் வேளையில் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர்களுக்கான தேசியவுணர்வின் சொந்தப் பண்பாடு பற்றி பிரக்ஞை ஏற்பட்டதன் காரணமாகவே சு.வித்தியானந்தனால் செம்மையாக்கம் எனும் பதமும் சமூக சமகாலக் கதைகளை புகுத்தியதனால் சமூக உள்ளடக்கம் எனும் பதமும் உருவாகியது எனலாம்.

பாரம்பரியக்கலையிலக்கியங்கள்,ஆற்றுகைகள் சார்ந்து வருங்கால இளஞ்சந்ததியினர் செயற்படவேண்டும் எனவும் பாரம்பரியக் கலையாற்றுகைகள் என்றென்றும் மக்கள் மத்தியில் வாழவேண்டும் என்ற பரந்த நோக்கத்திலுமே சி.ஜெயசங்கர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார் என்றால் மிகையாகாது.

கூத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு கூத்துத் தயாரிப்புகளை உருவாக்கலாமே தவிர அடிப்படையான கூத்தரங்கத்தினை,கூத்தரங்கத்தின் கட்டுமானத்தினை,வடிவமைப்பினை மாற்றும் பொறுப்பு எவருக்குமில்லையாகும்.

பாக்கியராஜா மோகனதாஸ்(நுண்கலைமாணி)
துறைநீலாவணை




Comments