சர்வதேச மனித உரிமை தினம் இன்று டிசம்பர் மாதம் 10ஆம் திகதியாகும்.அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது. மனித உரிமையும் கல்வி சிறுவர் உரிமைகளும் சர்வதேச மனித உரிமை தினம்; இன்று டிசம்பர் மாதம் 10ஆம் திகதியாகும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிப்போம் என்பது இவ்வருட சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் தொனிப்பொருளாகும். இனி கட்டுரைக்குள் நுழைவோம். மனித உரிமை மனித உரிமை என்பது எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் ஆகும். இந்த உரிமைகள் 'மனிதர்கள் மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான விட்டுக் கொடுக்க இயலாத மறுக்க முடியாத சில உரிமைகளாக'கருதப்படுகின்றன. இனம் சாதி நிறம் சமயம் பால் தேசியம் வயது உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள் மனிதர் சுதந்திரமாக சுமூகமாக நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள் வாழும் உரிமை சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் சட்டத்தின் முன் சமநிலை நகர்வுச் சுதந்திரம் பண்பாட்டு உரிமை உணவுக்கான உரிமை கல்வி உரிமை என்பன முக்கியமானவை. அடிப்படை மனித உரிமைகள் எவை அடிப்படை மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன. அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட உலக மனித உரிமைகள் சாற்றுரைகள் அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும் பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் ஐவெநசயெவழையெட ஊழஎநயெவெ ழn நுஉழழெஅiஉஇ ளுழஉயைட யனெ ஊரடவரசயட சுiபாவள என்ற சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் செயல்முறைக் காரணங்களுக்காக ஏதாவதொரு அரசாங்கத்திற்கு மக்களின் சகல மனித உரிமைகளையும் சட்டத்தினால் நன்கு பாதுகாக்கமுடியாது.மனித உரிமைகளுள் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ள உரிமைகள் மாத்திரம் அடிப்படை உரிமைகள் என அறிமுகமாகிறது. அதாவது உலக மனித உரிமைப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சகல மனித உரிமைகளும் இலங்கை அரசினால் செயற்படுத்தமுடியாது என்பதுடன் 1978 ம்; ஆண்டு அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மாத்திரமே மக்களுக்கு உரித்தானதாகும். உதாரணமாக உலக மனித உரிமைப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 3ம்பிரிவு உயிர் வாழும் உரிமை பற்றிக் கூறுகின்றபோதிலும்; இலங்கை அரசின்; 1978 ம்; ஆண்டு அரசியலமைப்பின்கீழ் இது அடிப்படை உரிமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இலங்கை அரசின் 1978 ம்; ஆண்டு அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் 1978 ம்; ஆண்டு அரசியலமைப்பின்கீழ் இது அடிப்படை உரிமைகளத் தயாரிப்பதற்கு ஜக்கிய நாடுகளின் உலக மனித உரிமைகள் பிரகடனத்தைப் பின்பற்றியுள்ளது. உதாரணம் . அடிப்படை உரிமைகள் பற்றி 1978 ம்; ஆண்டு அரசியலமைப்பின் 3ம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 3ம் அத்தியாயத்திலுள்ள 10வது 11வது 12 வது 13 வது 14வது 15வது உறுப்புரைகள். அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் கல்வி 1948 டிசம்பர் 10ம் திகதி ஜக்கிய நாடுகள் பொதுச்சபை அனைத்துலக மனித உரிமை பிரகடனத்தை ஏற்றுச் சாற்றியது.மொத்தமாக 30 உறுப்புரைகள் உள்ளன. அதில் உறுப்புரை 26 நேரடியாக கல்வி உரிமையைப் பற்றிச் சொல்கிறது. உறுப்புரை 26 . (1) ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது தொடக்க அடிப்படைக்கட்டங்களிலாவது கல்வி இலவசமாயிருத்தல் வேண்டும்.தொடக்கக்கல்வி கட்டாயமானதாயிருத்தலவசியம்.தொழினுட்பக்கல்வியும் உயர்தொழிற்கல்வியும் பொதுவாக பெறக்கூடியதாயிருத்தல் வேண்டும்.உயர்கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக்கூடியதாக்கபடுதலும் வேண்டும். (2) கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி செய்யுமுகமாகவும் மனித உரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்டுத்துமுகமாகவும் ஆற்றுப்படுத்தப்படல் வேண்டும். அது சகல நாடுகளுக்குமிடையேயும் இன அல்லது மதக் குழுவினருக்கிடையையேயும் மன ஒத்திசைவு பொறுதியுணர்வு தோழமை ஆகியவற்றை மேம்படுத்துதல் வேண்டும் என்பதுடன் சமாதானத்தைப் பேணுவதற்காக ஜக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளை மேற்கொண்டு செல்லுவதற்குதவவும் வேண்டும். பொருளாதார கலாசார உரிமைகள் சமவாயத்தில் கல்வி பொருளாதார கலாசார சிவில் உரிமைகள் சர்வதேச சமவாயத்தில் 15 உறுப்புரைகள் உள்ளன.அவற்றில் 13வது 14 வது உறுப்புரைகள் கல்வியைச் சார்ந்ததாகும். கல்வியோடு சம்பந்தப்பட்ட சிறுவர் அணி பற்றியும்; அவர்களது உரிமைகள் பற்றியும் சற்று பார்க்கலாம். சிறுவர்கள் என்ற தரப்பினர் இரண்டாம் உலக மகா யுத்தம் வரையில் கவனத்தில் கொள்ளப்படாத குழுவினராக காணப்பட்டனர். சிறுவர்களுக்கு பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியன மிக மிக அத்தியவசியமான தேவையாகும். இச் சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் பாதுகாக்கப்படுதல் என்பது 1948ம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் வருகையுடனே ஆரம்பித்தது. குறிப்பாக சிறுவர் உரிமைகள் தொடர்பில் 1989ம் ஆண்டு சிறுவர் உரிமை சாசனம் கொண்டுவரப்பட்டமை ஒரு மைல் கல்லாகும். 1989ம் ஆண்டு பொதுச் சபையினால் கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமைகள் சாசனம் உயிர் வாழ்தல் பாதுகாப்பு அபிவிருத்தி பங்குபற்றல் ஆகிய பிரதான உரிமைகளை உள்ளடக்கிருந்தது. இலங்கை அரசு 1991ம் ஆண்டு சிறுவர் உரிமை சாசனத்தை ஏற்று அங்கீகரித்த போதிலும் கடந்த காலத்தின் அத்தியாயத்தை புரட்டிப் பார்க்கையில் யுத்தம்பொருளாதார நெருக்கடிகள் போசாக்குப் பற்றாக்குறை போன்ற பல காரணங்களாலும் சிறுவர்களை கடத்தல் மற்றும் மோசடி போன்ற காரணங்களாலும் பாலியில் ரீதியான வன்முறைகளாலும் சிறுவர் தொழில் போன்ற சுரண்டல்களாலும் ஆயிரக்கணக்கான சிறார்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்கள் பல்வேறு வடிவங்களில் தலைதூக்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் கடந்த வருடங்களில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்ற போக்கை அவதானிக்க கூடிய அதேவேளை மலையகத்தை எடுத்துக் கொண்டால், சிறுவர்கள் தொழிலாளர்களாக்கப்படுவதால் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படுகின்ற அதே நேரம் தொடர்ச்சியான மர்ம மரணங்கள், சிறுவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றதுடன் இலங்கைச் சமூகம் எதிர்நோக்கும் ஒரு புதிய பிரச்சினையாகவும் மாறியுள்ளது. அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அண்மையில் அரச மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து சிறுவர்களுக்கெதிரான தொடர்ச்சியான வன்முறை பற்றிய கலந்துரையாடலை மேற்கொண்ட போது சிறுவர் உரிமை மீறல்களுக்கு பிரதான காரணங்களாக பின்வருவன இனங்காணப்பட்டன. 1. பெற்றோர் பாதுகாவலரின் கவனமின்மை 2. துஸ்பிரயோகத்தை மேற்கொள்வதற்கான சூழல் அல்லது சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் 3. குற்றவாளிக்கு அதிகாரிகள் அல்லது ஒரு சில சமூகப்பெரியோர்கள்; மூலம் பாதுகாப்பு வழங்கல். 4. சிறுவர் உரிமைகள் மீறப்படும் போது வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாக விழிப்புணர்வின்மை 5. கலாசார காரணிகள் பொதுவாக இன்றைய பொருளாதார நெருக்கடியுடன் பிள்ளைகளை சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்காக பாடுபடும் பெற்றோர்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதில் கூடுதலான கவனத்தை காட்டுகின்றனர். இதனால் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகுகின்றது. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளை எடுத்துக் கொண்டால், அதிகளவில் துஸ்பிரயோகங்களுக்குள்ளாகுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமை சாசனமானது 18 வயதுக்குட்டபட்ட சகலரும் சிறுவர்கள் என்று வரையறுத்த போதிலும் இலங்கையை பொறுத்தளவில் கட்டாயக்கல்வி என்பது 14 வயது வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பல பாடசாலைகள் ஆரம்பக் கல்வியை மாத்திரம் கொண்டு அமைந்திருப்பதாலும் மேலும் பல்வேறு காரணிகளாலும் மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிச் சென்று சிறுவர் தொழிலாளர்களாக உருவாகும் சிறார்களின் நிலைமைகளை நோக்கும்போது தலைவிதி மரணத்தில் முடிவடைந்துள்ளது. மேலும் இன்றைய சிறார்களை ஆட்டிப்படைக்கும் இன்னொரு காரணியாக கல்விக் கூடங்களில் சிறுவர்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகளைச் சுட்டிக் காட்டலாம். பாடசாலைகளிலும் தனியார் வகுப்புகளிலும் சென்று மாணவர்கள் ஆசிரியர்களால் பாலியல் ரீதியான சுரண்டல்களுக்குள்ளாகின்றனர். எனவே இத்தகைய நிலமைகளின் போது குற்றவாளிகளாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள் உயர் மட்ட அதிகாரிகளினால் பாதுகாக்கப்படுகின்றனர். இன்று இவ்வாறான பல சம்பவங்களை நாம் அவதானிக்க முடிகின்றது. சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளின் அசமந்த போக்கின் காரணமாக குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர். உதாரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சட்ட உதவியை நாடுகின்ற போது தேவைப்படும் ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதனை தாமதமாக்குதல் உரிய ஆவணங்களை வழங்க மறுத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம். கலாசார ரீதியான காரணிகள் இன்று சிறுவர் உரிமை மீறல்களை வெளிக் கொணர்வதில் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுவர்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் குடும்பத்தின் கௌரவம் அந்தஸ்து பிள்ளையின் எதிர்காலம் ஆகிய காரணிகளைக் கருத்திற் கொண்டு வெளிக்கொணரப்படுவதில்லை. இலங்கை போன்ற நாடுகளில் சிறுவர் உரிமை மீறல்களுக்கு ஏதுவான காரணிகளுள், மக்கள் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வில்லாதிருப்பதையும் அதேபோல் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படும் போது விதிக்கப்படும் தண்டனைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவின்மையையும் குறிப்பிடலாம். சிறுவர் துஸ்பிரயோகம் என்பது வேறு தரப்பினரால் சிறுவர் சட்டபூர்வமற்ற ஒரு செயலுக்காக ஈடுபடுத்துதல் . சிறுவர் துர்நடத்தை என்பது சிறுவனாலேயே செய்யப்படுகின்ற சட்டபூர்வமற்ற செயல்களாகும். இவ்விதமாக இரு விதங்களில் உந்தவொரு செய்கையும் சட்டத்தின் பிரகாரம் தண்டனை பெறக்கூடிய குற்றமாகும். முக்கிய விடயங்கள் 18 வயதைப் பூர்த்தி செய்தவரின் சட்டப்படி பராயமடைந்தவராகக் கருதப்படுவார். ஒரு பெண்ணுக்கு அல்லது ஒரு ஆணுக்கு திருமணம் செய்து கொள்வதற்கான குறைந்த வயது 18 ஆகும்.(முஸ்லிம் விதிவிலக்கு) 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளையுடன் அவரின் விருப்பத்துடனோ அல்லது இல்லாமலோ பாலியல் தொடர்பு கொள்ளும் ஒருவர் தண்டனைச் சட்டக்கோவையின்படி பாரதூரமான குற்றத்தைச் செய்தவராகிறார். 13 வயதுக்கு குறைவான சிறுவனை வேலைக்கமர்த்தினால் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். 14 வயதுக்கு குறைந்த பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புதல் கட்டாயமாகும்.1997ஆம் ஆண்டின் 100-35 இலக்க அரச வர்த்தமானி கூறுகிறது. பாடசாலைச் சிறுவர்களுக்கு உடல் சார்ந்த தண்டனையளித்தல் கல்வியமைச்சின் 2005-17ம் இலக்க சுற்றுநிருபம் கூறுகிறது. ஊசுஊ - வுர்நு ஊழுNஏநுNவுஐழுN ழுN வுர்நு சுஐபுர்வுளு ழுகு வுர்நு ஊர்ஐடுனு ஜக்கிய நாடுகளின் சிறுவர்உரிமைகள் பற்றிய உடன்படிக்கை என்பது உலகிலுள்ள சகல சிறுவர்களுக்கும் வழங்கப்பட்ட உரிமைகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாசனமாகும்.இது 1989 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ் உடன்படிக்கைக்கு இன்று வயது 101 ஆகும்.இதில் 54 பிரிவுகள் உள்ளன.முதல் 42 பிரிவுகள் சிறுவர் உரிமை பாதுகாப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.மீதி 12ம் அந்த அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படவேண்டியவதம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டவமைப்பினுள் சிறுவர் உரிமைகள் இலங்கையில் 1883 ல் முதல்முறையாக சிறுவர்க்கான தண்டனைச்சட்டக் கோவை(PநுNயுடு ஊழுனுநு) அறிமுகப்படுத்தப்பட்டது.பின்பு 1995 இலும் 1998இலும் திருத்தம் செய்யப்பட்டது. ஐ.நா சிறுவர் உரிமைகள் சாசனம் 18 வயதிற்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்று கூறுகிறது.. உலகில் வாழ்கின்ற மக்களில் 1ஃ3 பங்கினர் சிறுவர்களாகக் காணப்படுகின்றனர். சிறுவர்கள் நாளைய தலைவர்கள். அவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் தங்கி வாழ்கின்றவர்களாகவும் காணப்படுகின்றனர். உலக நாடுகளில் இடம்பெற்ற யுத்தங்கள், கலவரங்கள், இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றில் அதிகமாக பாதிப்புக்குள்ளானவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர். எனவே தான் ஒவ்வொரு நாடுகளும் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விபுலமாமணி தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா |
[Untitled] >