கல்முனையில் சிறுவர் பாராளுமன்றம் விடையளிக்கிறது. இலங்கை பாராளுமன்ற அமர்வுகளைக் கண்டிருப்பீர்கள். கேட்டிருப்பீர்கள். ஆனால் அதேபோன்று சிறுவர் பாராளுமன்ற அமர்வினைப் பார்த்திருக்கிறீர்களா இல்லையேல் கற்பனை செய்துபாருங்கள். இங்கு கல்முனையில் இடம்பெற்ற சிறுவர் பாராளுமன்ற அமர்வினை உங்கள் மனக்கண்முன் கொண்டுவருகிறோம். சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி மனித அபிவிருத்தித் தாபனம் கல்முனையில் நடாத்திய சிறுவர் பாராளுமன்றம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. தாபனத்தின் சிறுவர் குழுக்களைச் சேர்ந்த சிறுவர்களே பங்கேற்றனர்.தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தயாரித்தளித்த பாராளுமன்றம் சில செய்திகளைக் கூறிநிற்கிநது. அங்கு இடம்பெற்றதை இங்கு அப்படியே தருகிறோம். சிறுவர் பாராளுமன்றம். சபைக்கு சபாநாயகர் வருகை தருகின்றார். சபாநாயகர் ; இன்றைய தினம் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான பிரேரணையை அரச தரப்பினர் முன்வைக்கவுள்ளனர். இந்த அபிவிருத்தி தொடர்பான விளக்கவுரையை அமைச்சர் கௌரவ சுபராஜ் சபைக்கு சமர்ப்பிப்பார் பொருளாதார அமைச்சர்:- சுபராஜ்:- நாட்டை அபிவிருத்தி செய்து வரும் திட்டங்களிலே சிறுவர்களின் அபிவிருத்தியே மிக முக்கியமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. • கல்வி • கலாச்சாரம் • விளையாட்டு • தொழில்நுட்பம். ஆகிய துறைகளில் வளர்ச்சி காட்ட நவீன உலகத்தோடு எமது நாட்டுச் சிறுவர்களும் சரி நிகராக இருப்பதற்கான திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதே போன்று சிறுவர்களும் எதிராக இருக்கின்ற வன்முறைகளை ஒழித்துக் கட்டுவதற்கும் எமது புதிய திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளது. • பெருந்தோட்ட இ கிராமப்புற சிறார்களை வேலைக்கு அமர்த்துதல். • கல்வியை இடை நிறுத்தல். • பாலியல் சுரண்டல்கள். • தடுத்து வைத்தல். • கடத்துதல். போன்றவற்றிற்கு இப்புதிய திட்டத்தின் மூலம் கணிசமானளவு குறைக்க முடியும். அனாதரவாக்கப்பட்ட சிறுவர்கள்இ மற்றும் விசேட தேவைகள் உள்ள சிறுவர்களை இப் புதிய திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும். பின் தங்கிய பிரதேசங்களில் விசேட பொருளாதார பொறிமுறையின் மூலம் சிறுவர்களின் கல்வியைப் பாதுகாப்பது முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பாடசாலை கல்வியை இடை நடுவே விடுபவர்கள்இ ஏனைய பொருளாதார நெருக்கடி காரணமாக கல்வியின் பால் அக்கறை காட்டாமைஇ போசாக்குத்தன்மை என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கி பெற்றோர்களிற்கு விசேட கடன் திட்டத்தையும் சலுகைகளையும் எமது அரசாங்கம் வழங்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக நோக்கும் போது 2015 ம் ஆண்டு இறுதிக்குள் எமது நாட்டின் தற்போதய நிலையில் இருந்து மூன்று மடங்கு சிறுவர்களின் அபிவிருத்தியைக் காணலாம் என நினைக்கின்றோம் சபாநாயகர்:- கௌரவ அமைச்சர் சுபராஜ் அவர்களால் இந்த சபைக்கு முன்வைக்கப்ட்ட சிறுவர் அபிவிருத்தி, கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, தொழிநுட்பம் ஆகியவற்றோடு இணைந்துள்ளது. இது தொடர்பான கருத்துக்களை எதிர் தரப்புக்களில் இருந்து எதிர்பார்க்கிறேன். எதிர்க்கட்சி உறுப்பினர் ; கௌரவ சபாநாயகர் அவர்களேஇ கௌரவ பிரதமர் அவர்களே, கௌரவ எதிர் கட்சி தலைவர் அவர்களே, ஆளும் தரப்பு அமைச்சர்களே, ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே, எதிர் கட்சி உறுப்பினர்களே உங்கள் அனைவரையும் விழித்தவனாக தங்களுடைய திட்டம் வெறும் வெள்ளைத்தாளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது.திட்டம் திட்டம் என குறிப்பிடுகின்றீர்கள் அதை நடைமுறைப்படுத்தும் உபாயங்கள் எதையும் குறிப்பிடப்படவில்லை இது அரைத்த மாவை மீண்டும் எதிர் கட்சியிடமும் நாட்டு மக்களிடமும் ஏன் சிறுவர்களிடமும் அரைக்கப் போகின்றீர்கள்? இது வெறுமனே ஒரு கொமிஸ் திட்டமாகும் இல்லா விட்டால் இதை எவ்வாறு விரிவு படுத்துவீர்கள் என தெளிவு படுத்துங்கள் ஏனென்றால் இலங்கையில் சிறுவர்களை பாதுகாப்பதற்காக அல்லது அபிவிருத்திக்காக பல அமைப்புக்கள் இயங்கி வருகின்றது. அவற்றில் எல்லாம் கூட ஒரு வார்த்தை அல்லது வசனம் கூட எழுதப்பட வில்லை நான் கௌரவ அமைச்சர் சுபராஜ் அவர்களுக்கு சவால் விடுகின்றேன் இத்திட்டத்தின் வெற்றிகளையும் விளைவுகளையும் சபைக்கு விளக்கும் படி சபாநாயகர்:- கௌரவ அமைச்சர் சுபராஜ் அவர்களே எதிர் தரப்பினரின் கருத்;து தொடர்பாக தங்களுடைய கருத்தை கூறுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அமைச்சர் சுபராஜ்;:- கனம் சபாநாயகர் அவர்களே இத்திட்டத்தின் வெற்றி விளைவு தொடர்பாக துறைசார்ந்த அமைச்சர் அதாவது மகளீர் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் கௌவரவ தர்சினி அவர்கள் சபைக்கு தெளிவு படுத்த தங்களுடைய அனுமதியை கோருகின்றேன் சபாநாயகர் . தங்களுடைய திட்டம் தொடர்பான விரிவு படுத்தும் படி அனுமதியளிக்கின்றேன். தர்சினி:- கௌரவ சுபராஜ் அவர்களே திட்டத்தின் முன்மொழிவை தான் சபையில் எடுத்துரைத்தார். இது தொடர்பான தெளிவின்மை எதிர் கட்சி உறுப்பினர்களுக்கு காணப்படுகின்றது. இத்திட்டம் பிரதான 04 விடயங்களை உள்ளடக்கியுள்ளது. கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, தொழில்நுட்பம் ஆகிய விடயங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பாகவே அமுல்படுத்தப்படும். உதாரணமாக கல்வி இடை நடுவில் விட்டு இடைவிலகின்ற மாணவர்களின் அதிகரிப்பை குறைப்பதற்கு இத்திட்டத்தின் கீழ் சிறுவர் அதிகார சபை சிறுவர் நன்னடத்தை அலகுஇ காவல் துறையினர் கிராம நிலதாரி ஆகியோரின் ஒருமைப்பட்ட செயற்பாட்டினை ஊக்குவித்திருக்கின்றது. ஒரு பிள்ளை கல்வி கற்காது அப் பிள்ளை பாதுகாவலர்கள் வைத்திருப்பார்கள் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (எ.க.உ:-நேருஜன்) -சபை குழப்பம்:- இடை விலகிய மாணவர்களின் பெற்றோர்களை சட்டத்தின் முன் நிறுத்தவுள்ளோம் என்று கடந்த பாராளுமன்ற அமர்வின் போது கூறியுள்ளீர்கள் மீண்டும் ஒரு முறை ஏன்? இது வரை எத்தனை பிள்ளைகளை மீள பாடசாலைக்கு சேர்த்துள்ளீர்கள்? இதை கடந்த 10வருடமாக கூறுகின்றீர்கள்.உங்களுக்கு வெட்கம் இல்லையா? சபாநாயகர்:- சபை அடக்கம்.சபை அடக்கம் என மூன்று முறை தட்டுதல். தர்சினி அவர்களின் உரை தொடர்ச்சி :- மேலும் அப் பெற்றோர்களின் மாத வருமானத்தை பிரதேச செயலகத்துடன் இணைந்து ஆராய்ந்து பெற்றேர்களுக்கு விசேட கடன் திட்டத்தினை அமுல் படுத்த இருகின்றோம். (எ.க.உ:- தர்சிகா) சபை குழப்பம்:- ஏன் இவ்வாறான பொய்யான பிரரனைகளை சபைக்கு கொண்டு வந்து எமது நேரத்தையும் சபை நடவடிக்கைகளையும் ஏமாத்துகின்றீர்கள். பிள்ளைகள் கல்வி கற்கின்ற 18வயதை தாண்டிய பிறகுதான் நீங்கள் பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவிகள் செய்வீர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்: எமதுமக்களுக்கு சேவை செய்யக்கூடிய திட்டங்களை கொண்டு வருவதற்கும் விடுங்கள் எமது கடமையை செய்ய விடாது சபை நடவடிக்கைகளை குழப்புவதற்காகவே இங்கே அமர்ந்து கொண்டிருக்கின்றீர்கள். சபாநாயகர்:- சபை அடக்கம் சபை அடக்கம் என மூன்று முறை தட்டுதல் எ.க.உ:- தனுசியா கனம் சபாநாயகர் அவர்களே சிறுவர் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் கூறிய விளக்கம் தெளிவாக இல்லை என்பது. எதிர் கட்சி உறுப்பினர் ஆகிய எமக்கு காணப்படுகின்றது. காரணம் சிறுவர் நன்னடத்தை சிறுவர் அதிகார சபை ஆகியன செயல் இழந்து காணப்படுகின்றதா? இல்லையே அவற்றில் கடமைபுரியும் உத்தியோகஸ்தர்களின் ஆளுமை விருத்தியை பற்றி இந்த திட்டத்தில் தெரிவித்திருக்கின்றீர்;களா? 1929 இற்கு முறைப்பாடுகள் எவரஸ் சிகரம் போல் குவிகின்றது. அதற்கு எடுத்த தீர்வுகள் உங்களால் கூறமுயுமா நீங்கள் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற அடிப்படையில் எமது நாட்டில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த சரியான தீர்வுகளை முன்வைக்கவும். சபை குழம்பம்:- எதிர் தரப்பினர் கை நீட்டி ஆரவாரம் ஆளும் தரப்;;;;;;பு உறுப்பினர்:-வினோ - இது சம்பந்தமாக உங்களிடம் தரவுகள் இருந்ததால் அதனை சமர்ப்பிக்கலாம் இது ஓர் சமூகப் பிரச்சனை எமது வரையiரைக்குள் முடியுமான சேவைகளை செய்து வருகின்றோம். ஆளும் தரப்பினர் கைதட்டி ஆரவாரம் சபை குழப்பம் :- சபாநாயகர் சபையை அமைதிப்படுத்துகின்றார். ஆளும் கட்சி உறுப்பினர் ; கௌரவ சபாநாயகர் அவர்களே எதிர் கட்சி உறுப்பினர் சென்ற ஆண்டு வட்ஜெட்டை சரியாக பார்க்கவில்லை போல் அதனை நன்கு வாசிக்கவும். அதனை நன்கு வாசித்துக் கொண்டு இவ்வாறான விவாதங்களுக்கு வர வேண்டும். கடந்த வருடம் 20.2 மில்லியன் பணம் சிறுவர் துறைசார்ந்த ஆளுமைக்கு ஒதுக்கப்பட்டது. இவ்வாண்டு அதைவிட கூடுதலான நிதி ஒதுக்கீட்டை செய்யவுள்ளோம். எ.க.உ:- சபை குழப்ப நிலை தனுசியா:- எதிர் கட்சி உறுப்பினர் கடந்த வருட வஜட்டை எடுத்து ஆரவாரித்தல். இந்த பணத்தை கொண்டு என்ன செய்யப்போகின்றீர்கள் என்பது எங்களுக்கு தெரியாது. சபாநாயர்:- சபை அமைதி அமைதி ஆளும் கட்சி துசா- வட்nஐட் மூலம்தான் குறிப்பிட்ட திட்டங்களை மேன்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது எதிர் தரப்பினர்களுக்கு இன்னும் சரியாக தெரியாது போல் ஆளும் தரப்பினர் கைதட்டி ஆரவாரம் எ.க.உ. தரிஸ்கரன் 20.2மில்லியன் பணத்தை எங்கு வைத்திருக்கின்றீர்கள் உங்களுடைய கணக்கிலா எதி.க:- எதிர் கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியா கூச்சல் இடுதலும் ஆரவாரம் செய்தலும். சபாநாய:- சபையில் அமைதி இன்மை காரணமாக சபை 20நிமிடம் மணித்தியாலயங்கள் ஒத்திவைக்கப்படுகின்றது. எதிர் க.உ:- சுஜீதா கடந்த வருட வஜட்டை அரச தரப்பு சரியாக விளங்கிக் கொள்ளவில்லை 20.2மில்லியன் ரூபா சிறுவர் அபிவிருத்திக்காக பயன்பட்டது தவிர சிறுவர் தொடர்பான அதிகாரிகளுக்கு பயன்படவில்லை ஆனால் என்ன அபிவிருத்தி நடந்திருக்கின்றது. அவசரமாக ஒரு சிறுவர் துஸ்பிரயோம் சம்பவம் ஏற்பட்டால் உடனடியாக அந்த இடத்திக்கு சென்று பார்ப்பதற்கு எந்த வசதியும் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு பெரும்பாலன மாவட்டங்களில் இன்னும் வழங்கப்படவில்லை இதுதான் தற்போதய நலமை எதிர் தரப்பினர் கைதட்டி ஆரவாரம் ஆளும் தர:-சியானி கௌரவத்துக்குரிய சபாநாயகர் அவர்களே எதிர் கட்சி உறுப்பினர் சுஜீதா அவர்கள் கடந்த 30 வருடங்களாக இலங்கையில் இருக்கவில்லை என நினைக்கின்றேன். ஆளும் தர எமது நாட்டில் நடைபெற்ற கொடுமையான யுத்தத்தைப் பற்றி தெரியாமல் பேசிக் கொண்டிருக்கின்றார். ஆளும் தர ஜீவிதா அந்த யுத்தத்தில் எமது பொருளாதாரம் பாரிய பின்னடைவுக்குள்ளானது. தற்போதுதான் அவை நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. இதன் பின்னர் சிறுவர் பராமரிப்பு அபிவிருத்திக்காக பல்வேறு அபிவிவிருத்தி திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றது. என்று கூறுகின்றேன். எதிர் க.உ:-நுஸ்ரத் - கனம் சபாநாயகர் அவர்களே இப் பிரேரணை தொடர்பாக கருத்துக் கூறுவதற்கு அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். சபாநா:- இப்பிரரனை தொடர்பான கருத்து கூறும்படி அனுமதியளிக்கின்றேன். எதிர் க.உ:-நுஸ்ரத் கனம் சபாநாயகர் அவர்களே நாங்கள் இப்பிரரனையை ஏற்றுக் கொள்ளுவதாக இருந்தால் நாங்கள் முன்வைக்கும் மூன்று செயற்பாடுகளையும் இத்திட்டத்திற்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என ஆளும் தரப்பினரிடம் கேட்கின்றோம். சபாநா:- தங்களது மூன்று செயற்பாடுகளையும் சபையில் முன்வையுங்கள் 01. சிறுவர் தொடர்பான உத்தியோகஸ்தர்களுக்கு ஆளுமை விருத்தியும் அவர்களுக்கான ஏனைய தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். 02. சிறுவர் துஷ்பிரயோகங்கள் செய்பவர்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களை குறுகிய காலத்திற்குள் வழங்க வேண்டும். 03. பாடசாலை இடை விலகலை தடுப்பதற்காக பிள்ளைகளின் குடும்பங்களுக்கும் பிள்ளைகளுக்கும் பல சலுகைகளை முன் வைக்க வேண்டும். சபாநா:- எதிர் தரப்பினரால் சபையில் முன்வைக்கப்பட்ட மூன்று செயற்பாடுகளையும் இத்திட்டத்திற்குள் சேர்த்து கொள்ள முடியுமா என்பதை அமைச்சர் சுபராஜ் அவர்களிடம் இருந்து எதிர்பார்கின்றேன். சுபராஜ் :- கௌரவ சபாநாயகர் அவர்களே எதிர்தரப்பினர் முன்வைத்த மூன்று விடயங்களும் எமது சிறுவர்களின் நலனை அடிப்படையாக கொண்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம். எமது திட்ட செயற்பாடுகளுக்குள் இதனை சேர்த்து கொள்வதற்கு சம்மதம் தெரிவிக்கின்றோம். எதிர் க.உ:- கைதட்டி வரவேற்று ஆளும் க. கைதட்டி வரவேற்று சபாநாயகர்:- இறுதியாக இப் பிரேரணை வாக்கெடுப்புக்காக விடப்படுகின்றது. சபாநாயகர்:- இப்பிரேரணைக்கு ஆதரவாக …19……. வாக்குகளும் எதிராக …04…. வாக்குகளும் அளிக்கப்பட்டது. இப்பிரேரணைக்கு 15 பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி ஈட்டுகின்றது. இச் சிறுவர் பாராளுமன்றம் அங்கு கூடியிருந்த அனைவரதும் பாராட்டுதல்களையும் கரகோசத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி: வி.ரி.சகாதேவராஜா |
[Untitled] >