[Untitled]‎ > ‎

சித்திரா பௌர்ணமி, அட்சய திருதியையின் சிறப்பு..

posted Apr 28, 2013, 11:14 AM by Web Team -A
நம் வாழ்க்கையில் மட்டும் அன்றி நம் மனங்களிலும் ஒரு குதூகலத்தை ஏற்படுத்தும் வசந்த காலத்தின் தொடக்கம் தான் இந்தச்சித்திரை மாதமாகும். மாதம் முழுவதும் பண்டிகைகளும், விரதங்களும், விழாக்களுமாக களைகட்டும் மாதம் இது. நெடுங்காலமாக மகப்பேறில்லாமலிருந்த தேவேந்திரனும் இந்திராணியும் தான தருமங்கள், கடுந்தவங்கள் என்று சிந்தையைச் சிவன் பாற்செலுத்தி தம் குறை நீக்கப் பிராத்தித்தனர். அவர்களின் தவத்தால் உளம் குளிர்ந்தார் சிவன், ஏற்கனவே பாவ, புண்ணிய கணக்கெழுதுவதற்காக தங்கப்பலகை யாகத்தை தோற்றுவித்து பின், உமையின் வேண்டுகோள்படி உருக்கொண்ட சித்திரபுத்திரனாரை தேவேந்திரன் புத்திரனாக, காமதேனு வயிற்றில் தோன்றச் செய்தார். மேலும் சித்திரைப் பௌர்ணமி நன்னாளிலேயே வழிபட்டதால் ஒரு வருடத்தின் சகலநாட்களும்  வழிபட்ட பலனை அடைவாய் என்று வாய்மொழிந்தார். ஆக, சித்திரா பூரணை அன்று சிவனைப் பூஜித்தவர்கள், வருடம் முழுவதும் பூஜித்த புண்ணியம் பெறுவர். இத்தகைய சிறப்பைப் பெற்றுத்தரக் காரணமாயிருந்த சித்திர புத்திரனாரின் கதை படிப்பும் இத்தினத்தில் நிகழ்த்தப்படும். மேலும் இத்தினத்தில் இறந்த தாயை நினைத்து செய்யும் அர்ப்பணம் உடனடியாக தேவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது ஐதீகம்.


விஜய வருடமுதலாவது கிரகணம்..

25.04.2013 வியாழக்கிழமை இரவு பார்சுவ சந்திரகிரகணம், இது இலங்கையில் பின்னிரவு 01மணி 22நிமிடத்தில் ஆரம்பித்து 01 மணி 53 நிமிடத்தில் (26.04.2013 அதிகாலை) முடிவடைந்தது.

தோச நட்சத்திரங்கள்: மிருகசீரிடம், சித்திரை, சுவாதி, விசாகம் 1ம், 2ம், 3ம்பாதங்கள், அவிட்டம், பூரட்டாதி 4ம்பாதம், உத்திரட்டாதி, ரேவதி என்பன. 
          

அட்சய திருதியையின் சிறப்பு..

அட்சயம் என்றால் பெருகுதல் என்று பொருள் இந்த நன்னாளில் நல்லவை நயம்பட நாளும் வளர்தல் வேண்டும் என்பதே எல்லோரின் அவாவாகும். குறிப்பாக பெண்கள் அட்சய திருதியை திதியில் விலை உயர்ந்த மற்றும் மங்களகரமான பொருட்களை சேர்த்திட விரும்புகின்றார்கள். ஓவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி சிறப்பு வாய்ந்தது. சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை தான் அட்சைய திருதியை எனப்படுகிறது. இவ்வருடம் மேமாதம் 13ம்திகதியில் (2013.05.13) அட்சய திருதியை வருகிறது.  அட்சயம் என்றால் வளருதல்,அள்ள அள்ள குறையாத என்று பொருள் படும். இத்தினத்தில் நகை வாங்குதல் ஓர் முக்கிய நிகழ்வாகவும் அமையப்பெறும்.

கருத்துக்களுக்கு:  க.ரவீந்திரன் காரைதீவு,  தொ.பே -0775073347



 
Comments