[Untitled]‎ > ‎

எழுத்தும் இயற்கையும்..

posted Nov 26, 2012, 2:55 AM by Web Team
எழுத்தும்  இயற்கையும்


எழுதுபவன் எல்லாம்
எழுத்தாழன்
ஆகியிருந்தால்
ஏழ் கடல்களும்
இன்னேரம் வற்றியிருக்கும்
காகித உற்பத்தியால்

நீல வானம் கூட
இடிந்து வீழ்திருக்கும்
எழுது கோல்களுக்கு
மை கொடுத்து

உண்மை என்னும்
விண்மீனை
இன்னேரம்
போட்டி போட்டு
உண்டு முடித்திருக்கும்
அந்த
எழுத்து வட்ட
நிலாக்கள்

வெண்தாமரை
வீற்றிருந்து
கல்விக்கடல்
ஆழ்பவளே
உனக்கு
நன்றியம்மா
இயற்கையை
காத்ததுக்காய்           
                   
              காரைதீவு சி.ம.கதன்
Comments