![]() என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிய வேளை, என் இதயம் இலேசாய் வலித்தது. இது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வலி. ஏனெனில், பாசத்திற்காய் ஏங்கிக் கொண்டிருக்கும் ஓர் அப்பாவி இதயத்தின் வலியல்லவா? பாசம், அன்பு இரண்டிற்கும் பாரிய வேறுபாடு உள்ளது. என்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை. பாசம்: அது இறைவனால் ஒவ்வொரு மனித உள்ளத்திலும் இயற்கையாக வைக்கப்பட்டுள்ளது. அன்பு; இது எம்மால் இன்னொன்றின் மீது ஏற்படுத்தப்படுவது. இங்கு நான் குறிப்பிடுவது பாசத்தையேயாகும். அதாவது பெற்றோர் மீதுள்ள பரிதவிப்பு. அன்றொருநாள் எதிர்பாராத விதமாய் ஒரு தந்தையைக் கண்டேன் தன் குழந்தையைப் பண்பாட்டின் சிகரமாய் வளர்த்திருக்கும் அவர், உண்மை அன்போடு அந்தக் குழந்தையை உச்சி முகர்ந்து, அள்ளிக் கொஞ்சிய அந்தக் காட்சியே அது. அந்த நெடிப் பொழுதை எண்ணுகையில், இப்போது என் நெஞ்சு வலிக்கிறது, இதயம் வேகமாய்த் துடிக்கிறது “எனக்கொரு தந்தை இப்படியில்லையே” என்ற ஏக்கம் அதனால் மனதில் ஏற்பட்ட தாக்கம் பாரியது. ஆகவே, என் அன்பர்களே! பெற்றோர்கள் உங்களுக்கு கிடைத்திருக்கும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் அவர்களின் மனது நோக நடக்காதீர்கள். அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள் என்னைப் போல் பெற்றோரின் பாசத்திற்காய் ஏங்கும் எத்தனையோ குழந்தைகளின் ஏக்கங்களை யாரால் தான் புரிந்து கொள்ள முடியும்??? என் உளத்திற்கு நெருக்கமான உறவுகளே! நீங்களாவது உணர்வுகளைப் புரிந்து, உயிர்களை மதித்து, பாசத்திற்காய் ஏங்கும் பிஞ்சு நெஞ்சங்களுக்கு உரமளியுங்கள். |
[Untitled] >