மனிதன் பிறக்கும் போது சுதந்திரமாகப் பிறக்கிறான்.ஆனால் அவன் பல்வேறு நிலைகளில் பல்வேறு தடைகளால் கட்டுப்பட்டுள்ளான் என்பதே உண்மை நிலையாகும் என்கிறார் மொன்டெஸ்கியூ . சுதந்திரம் என்பது ஒரு மனிதன் தடைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டு ஏனையவர்களின் சுதந்திரத்திற்குப் பங்கம் ஏற்படாத வகையில் தான் விரும்பியதைச் செய்வதற்குள்ள உரிமைகளே எனலாம். ஒரு மனிதனின் விருப்பமே சுதந்திரம் என்கிறார் ஜீன் ஜக்ஸ் ருசோதனக்குப் போதுமானது என்ற உணர்வினால் ஒருவனுக்கு ஏற்படும் உளத்துணிவு நிலையே சுதந்திரமாகும் என்கிறார் ஹெகல். பிறருடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகியிருப்பதே சுதந்திரம் என்கிறார்போசன்ருவேட் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் ஒரு கூறாக உள்ளனர். அம்மக்கள் ஐக்கியமாக இயங்கினாலன்றி எந்த ஒரு சமூகமும் தனித்து முன்னேற்றமடைய முடியாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இந்தக் கொள்கையை எமது தேசிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் அன்றைய காலத்தில் உணர்ந்து செயல்பட்டிருப்பதை எமது வரலாற்றினூடாககாணக்கூடியதாகவுள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்தில் சேர் பொன் இராமநாதன் சேர் பொன் அருணாசலம் ரி. பி. ஜாயா ராசிக் பரீட் டீ. எஸ். சேனநாயக்கா எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்க ஆகியோர் ஒன்றாக இணைந்தே செயற்பட்டுள்ளனர். இதனையே இன்றைய அரசியல் பொருளாதார கலாசார நிலைகள் உணர்த்திநிற்கின்றன. எமது இன ஒற்றுமை சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய விழுமியங்களுள் ஒன்றாகும். இந்த விழுமியங்கள் வளர்ந்து செல்ல வேண்டிய ஒரு கூறாகும். ஆனால் சுதந்திரத்திற்குப் பின்னர் தலைமுறை தலைமுறையாக நாம் காத்து வந்த ஒற்றுமையைப் பேணிப் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. நாம் அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளாகியுள்ளன. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தேசிய வீரர்களை எமது இன்றைய இளம் சமுதாயம் நினைவுபடுத்துவது அவசியமாகும். எமது நாடு பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டதாகும். ஆசிய ஜோதியான புத்தபெருமானின் காலடி பட்ட பாக்கியமும் இங்கைக்கு உண்டு. அதேசமயம் பல்வேறு மதங்களையும் எமது நாடு போற்றிப் பாதுகாத்து வந்துள்ளது. இந்து மதத்தை எடுத்து நோக்கினால் கண்ணகி வழிபாடு பரவிய நாடு இலங்கை ஆகும். கண்டி வரலாற்றுப் புகழ்மிக்க எசல பெரகரா இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றையும் கொண்ட பெருமைக்குரியதாகும். சோழ மன்னர்கள் இலங்கையை ஆண்ட போது அவர்களுக்கு எதிராகப் போராடி நாட்டை மீட்ட பெருமையும் இந்த நாட்டுக்கு உண்டு. இலங்கை வளம் மிகுந்த நாடென்பதில் சந்தேகமில்லை. அதனாலேயே வெளிநாட்டார் இங்கு வந்து நமது நாட்டைக் கைப்பற்றினர். இலங்கையை அவர்கள் ஆட்சி செய்தது மட்டுமன்றி தேயிலை இறப்பர் கோப்பி போன்ற பயிர்களையும் பயிரிட்டனர். நீண்ட காலமாக விவசாய நாடாக திகழ்ந்த எமது நாட்டில் பெருந்தோட்டத் துறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்காரணமாக அக்காலத்தில் வேறு நாடுகளிலிருந்து உணவுத் தேவைக்கான பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைமை ஏற்பட்டது. இலங்கையில் மட்டுமன்றி ஐரோப்பியர் ஆட்சி செய்த நாடுகளில் எல்லாம் இந்நிலையே ஏற்பட்டது. 1505ம் ஆண்டு கரையோரப் பகுதியை கைப்பற்றிய ஐரோப்பியர்களான போர்த்துக்கேய கத்தோலிக்கர் மதத்தினைப் பரப்பும் பணியிலும் ஈடுபட்டனர். போர்த்துக்கேயரை விரட்டிய ஒல்லாந்தர் புரட்டஸ்தாந்து மதத்தினை பரப்பினர். 1815ல் பிரித்தானியர் மத்திய மலைநாடு முதல் சகல பிரதேசங்களையும் கைப்பற்றி முழு இலங்கையையும் தமதாக்கினர். இவர்கள் 152 வருடங்கள் இல்கையை ஆட்சி செய்தனர். 1948ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி சுதந்திரம் பெற்ற காலம் வரை 152 வருடங்கள் பிரித்தானியர் ஆட்சி செய்துள்ளனர். நான்கு நூற்றாண்டு காலப் பகுதிக்கு மேலாக எமது நாடு அந்நியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்த நான்கு நூற்றாண்டுகள் எமது மூதாதையர் சுதந்திரத்துக்காகப் போராடியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் எமது மூதாதையரது வீரப் பண்புகள் வீரச் செயல்கள் வரலாற்றில் புகழ் வாய்ந்தவையாகும். இந்த வீரர்களை நினைவுகூருவது இன்றியமையாததாகும். அவர்கள் தம்மை அர்ப்பணித்தமையால் நாம் இன்று சுதந்திரமாக வாழ்கின்றோம். ஆங்கிலேயரிடமிருந்து நாட்டை மீட்பதற்காக இலங்கையர் அனைவரும் இன மத மொழி பேதமின்றி போராடியுள்ளனர். இந்து மதத்தினையும்இ பெளத்த மதத்தினையும் காக்க இவர்கள் அரும்பாடுபட்டுள்ளனர். ஒன்றாக கைகோர்த்து செயற்பட்டுள்ளனர். இவர்களை நினைவுகூருவதும் எம் அனைவரது கடமையாகும். இன்றைய சுதந்திர தினத்தில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அனைவரும் பேதமின்றி இதனை கருத்தில் கொள்வது முக்கியம். எமது தாய் நாட்டின் பெருமையை உலகறிய திடசங்கற்பம் பூண வேண்டும். கடந்த கால யுத்தத்தினால் ஐக்கியம் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது மக்கள் மத்தியில் நல்லுறவு வலுப்பெற்று வருகின்றது. யுத்தம் ஓய்ந்த பின்னர் மீண்டும் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஒற்றுமையினை தொடர்ந்தும் பாதுகாப்பது தமிழ் சிங்கள மொழிகளை பேசும் சகலரதும் கடமையாகும். அப்போதே நாம் உண்மையான சுதந்திரத்தினை அனுபவிக்க முடியும். 'எங்கேமனம்பயமற்றிருக்கிறதோ தலைநிமிர்த்தப்பட்டிருக்கிறதோ எங்கேஅறிவுகட்டுப்பாடற்றுள்ளதோழூ எங்கே உலகம் குறுகிய சுவர்களைக்கொண்டு துண்டாடப்படவில்லையோ எங்கே வார்த்தைகள் உண்மையின் ஆழங்களிலிருந்து வருகின்றனவோ எங்கே அயராத வேட்கை தன் கரங்களை முழுமை நோக்கி நீட்டுகிறதோ எங்கே பகுத்தறிவு எனும் வெள்ளோடைசெத்த பழக்கங்களெனும் பாலைக்குவழிதவறவில்லையோ எங்கே மனம் உம்மால் என்றும் பரந்துபடும்எண்ணங்களுக்கும் ஆக்கத்திற்கும்அழைத்துச்செல்லப்படுகிறதோ... அந்த சுதந்திர சொர்க்கத்தில் இறைவா என் நாட்டை எழச்செய்' —தாகூர் இலங்கையில் கருத்துச் சுதந்திரம் தொடர்ந்தும் பலவீனமாகவே காணப்படுகின்றது என மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம்அறிவித்துள்ளது. 2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவடைந்த போதிலும் தொடர்ந்தும் கருத்துச் சுதந்திர உரிமை பலவீனமாகவே தொடர்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனித சுதந்திரம் விலை பேசமுடியாத ஒன்று பன்மைத்துவம்: போரின் எதிரி – அமைதியின் நண்பன் ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரமான சிந்திப்பு முறை உண்டு சுதந்திரமான வாழ்வு முறைத் தெரிவு உண்டு வாழ்வு வசதிகளை விடவும் தனி மனித சுதந்திரம் பெறுமதியானது சுதந்திரம் கேட்டுப் பெற வேண்டிய ஒன்றல்ல.. அது பிறப்புரிமை என்று ஐக்கிய நாடுகள் சாசனம் சொல்கிறது அதிகாரம்: தோல்வி குறித்த அச்சத்திலேயே தன் அமைதியைக் குலைக்கிறது வன்முறையை வளர்க்கிறது பூமியை அதன் அழகை-வனப்பை அது அழிக்க இலங்கைத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வெகுவிரைவில் வரும் என எதிர்வுகூறி இருக்கிறார் கனேடிய பழமைபேண் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பற்றிக் பிரவுண்.உலகின் பழமைவாதம் தழுவிய ஆட்சியாளர்கள் சுதந்திரத்தின் பக்கம் திரும்புகின்றனர் என்பதைக் கண்டு கொண்டிருக்கிறோம். வரலாறு மீண்டும் சுழன்று ஜனநாயகத்தின் பக்கம் வருகிறது. இலங்கைத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வெகுவிரைவில் வரும் என்றார் அவர். தனி மனித சுதந்திரம் நம்பிக்கை வழிபாட்டுச் சுதந்திரம், ஒரு இனம் அழிக்கப்படாமல் வாழ்வதற்குச் சுதந்திரம் ஒரு நாட்டிற்குச் சுதந்திரம் என சுதந்திரம் பல முறைகளில் தேவைப்படும் ஒரு வாய்ப்புஆகின்றது இதையார்வழங்குவது? யார்பெறுவது? யார்பாதுகாப்பது?. என்று கேட்கும்போது 'தனிமனித சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்த ஒரு சமுதாயக் கூட்டு வாழ்க்கை தேவை என்று விடை கிடைக்கும். பிரான்சு நாட்டு அரசியல் சிந்தனையாளர்களான ரூசோ ஹாப்ஸ் லாக் ஆகிய மூவரும் ஏறத்தாழ ஒரே முறையில் சமூக உடன்பாட்டுத் தத்துவம் என்று எழுதினர். பல்வேறு கேள்விகளுக்கும் கிண்டலுக்கும் ஆளானது. ரூசோவின் ஒரு வரி இன்றும் மேற்கோளாகக் காட்டப் படுகின்றது. 'மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் வாழும்பொழுது சங்கிலிகளால் கட்டுப்பட்டே காணப்படுகின்றான்.' என்பதாகும். மனிதன் தன் அடிப்படைத் தேவைகளைப் பற்றிய கவலைகளில் இருந்து விடுபடுவதே சுதந்திரம்' என்று மார்க்ஸ் கூறினார். சமுதாயத்தின் ஒரு துளிதான் மனிதன். அவன் உண்ணும் உணவு அவனால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டது அல்ல. விளைவித்த இடம் துவங்கி சமைத்துப் பறிமாறிய இடம் வரை எத்தனை பேரின் உழைப்பு- பங்கு இருக்கிறது என்பது புரியும். எனவே இந்த சமூக அமைப்பிற்கு சுதந்திரம் கிடைப்பதுதான் தனி மனித சதந்திரத்தை வழங்குவதற்கு வாய்ப்பைத் தரும். உலகைக் காக்க என்ன செய்யலாம்? முதளாளித்துவம் என்ற அழிக்கும் சமுதாய அமைப்பை மாற்றி சமதர்ம ஆட்சி அமைத்தால்தான் உயிரினம் காக்ககப்படும். உலகம் காக்கப்படும் உலக சமாதானம் உணரப்படுமா? இவ்வாண்டின் தொனிப்பொருள் நிரந்தர எதிர்காலத்திற்கு நிரந்தர சமாதானம் என்பது ஆகும். உலக சமாதானத்தை – நாகரிகத்தை வளமுறச் செய்வது நமது குறிக்கோள். இதை அடைய நாம் நமது வாழ்வை அற்பணிப்போம். ஒவ்வொருவருக்கும் இடையே உள்ள அன்பைக் கூட்டுறவைப் பலப்படுத்த முயலுவோம். உலக ரீதியில் சமாதானத்தின் அவசியம் உணரப்பட்டால்தான், சாந்தியும் சமாதானமும் – உலகில் நிலைக்க முடியும். நாடுகள் சுதந்திரம் பெற்றுஇ நாடுகள் தோறும் உள்ள மக்கள், விடுதலையும், சம உரிமையும், பாதுகாப்பும் பெற்றால்தான் சமாதானம் நிலைக்க முடியும். வெறித்தனம் – வன்முறைச் செயல்கள், வெறுப்பையும் வேதனையையும்தான் வளர்க்குமே தவிர, சாந்தியையும் – சமாதானத்தையும் வளர்க்க மாட்டா. இன்றைய உலகம் சண்டை சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கிறது. தேசீயம் – சர்வதேசம் பற்றி சண்டைகள், இன – மத சச்சரவுகள், வர்க்க -வகுப்புப் பூசல்கள் ஆகிய இவற்றை அலட்சியப்படுத்துவதோ, இல்லை என்று மறுத்துரைப்பதோ முட்டாள் தனமானது. இற்றிற்கு நாம் சமாதான முறையிலேயே தீர்வுக்காண வேண்டும். போர்க் கருவிகள் தடைப்படுத்தப்பட வேண்டும். படைபலம் படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும். என்ற தீர்மானம் உடனடியாக – ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டாக வேண்டும். அதுதான் சர்வதேச நல்லுறவு நிலைக்கச் சரியான வழியாகும். எல்லா நாடுகளுடனும் நல்லுறவு கொள்ளுவது உலக சமாதானத்துக்காக உழைப்புத் என்பதுதான் நமது வெளிநாட்டுக் கொள்கை. ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைக்காக – நிறவெறிக் கொடுமைகளை நீக்குவதற்றாக நாம் பாடுபடுகிறோம். துன்பமும் துயரமும் நிறைந்ததாக இன்றைய உலகம் இருக்கிறது. அச்சமும், சந்தேகமும் மனித மனத்தைக் கப்பிக் கொண்டிருக்கின்றன. இவைகளைப் போக்க நாம் எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும், உலக நன்மைக்காகச்செய்கிற சிறந்த காரியம் ஆகும். பல்வேறு பண்பாடுகளின் சங்கம பூமியாக இருந்த வந்த இந்தியாவின் சென்ற காலப்பெருமை இருந்ததைப் போலவே இன்றும், எதிர்காலத்திலும் உலக ஒற்றுமைக்கும் – சமாதானத்தக்கும் இணைப்புப்பாலமாக இருபது இந்தியாவின் தனி உரிமையாகி விட்டது. ஒன்றாகி வரும் இன்றைய உலகில் நம்முடைய ஒவ்வொரு முயற்சியாலும், சர்வதேச நல்லுறவை, நேச மனப்பான்மையை வளர்ப்பதுதான் உலக சமாதானத்தைக் காப்பதற்கான ஒரே வழியாகும். சமாதானம் ஒரு பண்பு. அது ஒரு மார்க்கம். அது ஒரு சாதனை – அடைய வேண்டிய ஒரு லட்சியம். ஆனால் சமாதானத்தைப் பற்றிப்பேசிக் கொண்டே சண்டைக்கு ஆயத்தம் செய்வோமானால் நாம் பேசிகிற சமாதானத்திலேயே ஏதோ தவறு இருக்கிறது என்றுதான் அர்த்தம். எல்லா நாடுகளிலேயும் உள்ள மிகப் பெரும் பான்மையான மக்கள் உலக சமாதானத்துக்காக நாம் உழைக்க வேண்டும் – வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறாரகள். நாம் சிறியவர்களாயினும் பெரியவர்களாயினும் சரி! மனித சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றி மிக முக்கியமான இந்தப்பிரச்சினையை நாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது. மற்ற எல்லாப் பிரச்சினைகளும் இந்தப் பிரச்சினைக்கு அடுத்தபடிதான். இந்தப் பிரச்சினையையும் நாம் போர் மூலமாகவோ போரை எதிர்நோக்கிச் செய்யப்படும் போர் முஸ்தீபுகள் மூலமோ தீர்த்துவிட முடியுமென்று நான் நிச்சயமாக நம்பவில்லை. நன்மைகள் பெற வேண்டுமானால் நல்ல வழிகளையே நாம் பின்பற்ற வேண்டும். இணைய ஊடகவியலர்கள் மற்றும் இணைய தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோர் இதுவரையில் எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இணைய கருத்து சுதந்திரம் தொடர்பில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. கருத்துச் சுதந்திரம் தொடர்பில் சர்வதேச தர நிர்ணயங்கள் பின்பற்றப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரம்: தோல்வி குறித்த அச்சத்திலேயே தன் அமைதியைக் குலைக்கிறது வன்முறையை வளர்க்கிறது பூமியை அதன் அழகை-வனப்பை அது அழிக்க இலங்கைத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வெகுவிரைவில் வரும் என எதிர்வுகூறி இருக்கிறார் கனேடிய பழமைபேண் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பற்றிக் பிரவுண். உலகின் பழமைவாதம் தழுவிய ஆட்சியாளர்கள் சுதந்திரத்தின் பக்கம் திரும்புகின்றனர் என்பதைக் கண்டு கொண்டிருக்கிறோம். வரலாறு மீண்டும் சுழன்று ஜனநாயகத்தின் பக்கம் வருகிறது. இலங்கைத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வெகுவிரைவில் வரும் என்றார் அவர். கனேடிய நாடாளுமன்றத்தில் மனிதவுரிமை கண்காணிப்பகத்துடன் இணைந்து சிறிலங்காவின் கொலைக் களம் விவரணத்தைத் திரையிட்டவர் பிரவுண். 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தர இவர் முயன்ற வேளை அவருக்கு விஸா தர கொழும்பு அரசு மறுத்துவிட்டது. கனடிய மனிதவுரிமை மையத்துடன் நடந்த சந்திப் பில்இ இலங்கை தொடர்பான தனது அனுபவங்களை பிரவுண் பகிர்ந்து கொண்டார். 2009இல் இலங் கைக்குப் பயணம் செய்ய நான் முயன்றதில் இருந்து கொழும்புவின் வரம்பு மீறிய அழுத்தத்தைச் சந்தித்து வருகிறேன். எனினும் இந்த விவகாரத்தில் விட்டுக் கொடுக்கப்போவதில்லை. என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அளவுக்கு இங்குள்ள இலங்கைத் தூதரகம் எனக்கு அழுத்தங்களைக் கொடுத்துள்ளது என்றார். இலங்கை அரசு ஏதோ ஒன்றை மறைப்பதால் தான் இவ்வாறு தனக்கு மிரட்டல்களை விடுகிறது என்பதைத் தான் உணர்ந்து கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார்.தான் சார்ந்திருந்தும் கன்சவேட்டிவ் கட்சி சிறீலங்கா விவகாரத்தில் மிகவும் அழுத்தமான நடவடிக்கைகளை எடுப்பதையிட்டு தான் மிகவும் சந்தோசமடைவதாகவும் கனேடியப் பிரதமர் காப்பர் 'மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றம் காணாவிட்டால் 2013ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டு கொழும்பில் நடைபெற்றால் கலந்து கொள்ளப்போவதில்லை' என்று தெரிவித்தது மிகவும் சக்திவாய்ந்த ஒரு எச்சரிக்கை என்று தான் கருதுகிறார் எனவும் பற்றிக் பிரவுண் தெரிவித்தார். தனி மனித சுதந்திரம் நம்பிக்கை வழிபாட்டுச் சுதந்திரம் ஒரு இனம் அழிக்கப்படாமல் வாழ்வதற்குச் சுதந்திரம் ஒரு நாட்டிற்குச் சுதந்திரம் என சுதந்திரம் பல முறைகளில் தேவைப்படும் ஒரு வாய்ப்பு ஆகின்றது சமகாலத்தில் சமாதானம் (Pநுயுஊநு)என்ற பதம் பலராலும் பல மட்டத்திலும் சர்வதேசத்திலும் பேசப்பட்டு வருகிறது. சமாதானம் என்றால் என்ன? என்பதற்கு அறுதியான ஒரு வரைவிலக்கணத்தை யாரும் கூறாவிட்டாலும் பலர் பல கோணங்களில் பல்வேறு வரைவிலக்கணங்களைக் கூறியுள்ளனர். பெற்றிகா மேயர் என்பார் கூறுகையில் சமாதானம் வாழ்வின் எந்நிலையிலும் சாத்தியமாகக் கூடியதே: மனிதன் தனது விதியா அல்லது யுத்தத்தின் பயங்கரங்களால் துன்புறுவதா எனத் தேர்ந்தெடுப்பதிலேயே இது தங்கியுள்ளது.இன்று மனிதன் தைரியம் தீர்மானம் மற்றும் கற்பனைகளுடன் இதனைத் தெரிவுசெய்வதற்கான சந்தியொன்றிலேயே இருக்கிறான் என்று குறிப்பிடுகிறார். சமாதானம் குறிப்பாக நான்கு நிலைகளில் ஆதிக்கம் செலுத்துவதைக் காணலாம்.பொருளாதாரம் அரசியல் இராணுவம்-எதிர் சமுக ஒற்றுமை இன்றைய உலகில் இத்தனை கொடுரங்களா?எனக் கேட்குமளவிற்கு புதிதாக இவ்வுலகில் ஜனனிக்கும் குழந்தைகள் கேட்கின்றன.மனித வாழ்வியல் வெறுமனே உயிர் பிழைத்தலுக்காக துன்பத்திற்குள்ளாகிறது.இதற்கு அடிப்படைக் காரணம் நிரந்தர சமாதானமின்மையே. ஆக்கம்: விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா |
[Untitled] >