காரைதீவு (Karaitivu) இலங்கையின் பாரம்பரிய தமிழர் நிலமாகும். இப்பெயரை உடைய ஊர்கள் இலங்கையின் வடக்குஇ கிழக்குஇ மேற்கு என தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற மூன்று பிரதேசங்களிலும் உண்டு. அவை பின்வருமாறு: 1. காரைதீவு (அம்பாறை) - அம்பாறை மாவட்டத்தின் கிழக்குக் கரையோரமாய் அமைந்துள்ள ஒரு கிராமம். 2. காரைநகர் - யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். இத்தீவு தற்போது காரைநகர் என்று அழைக்கப் படுகின்றது. 3. கரைத்தீவு - புத்தளம் மாவட்டத்தின் மேற்குக் கரையோரமாய் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இத்தீவு தற்போது கரைத்தீவு என்று அழைக்கப்படுகின்றது. காரைதீவு... இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் கிழக்குக் கரையோரமாய் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தைச் சுற்றி ஆறொன்று ஓடுவதாலும், முற்காலத்தில் காரைமரங்கள் நிறைந்து காணப்பட்டமையாலும் இது காரைதீவு என அழைக்கப்பட்டது. காரைதீவில் 18000 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமியால் இது மிகவும் பாதிக்கப்பட்டது. சுமார் 2000 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் கிழக்குக் கரையோரமாய் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தைச் சுற்றி ஆறொன்று ஓடுவதாலும், முற்காலத்தில் காரைமரங்கள் நிறைந்து காணப்பட்டமையாலும் இது காரைதீவு என அழைக்கப்பட்டது. சுவாமி விபுலானந்தர், சுவாமி நடராஜானந்தர், பிறந்து வாழ்ந்ததுடன், சித்தானைக்குட்டிச் சித்தர், சிவாச் சித்தர் போன்ற ஆன்மீகப் பெரியார்கள் வாழ்ந்த பெருமைவாய்ந்த கிராமம் இக்கிராமமாகும். ஆக்கம்: லிரோஸ் |
[Untitled] >